அத்தியாயம் 3
அவன் திடிரென்று அங்கு வந்து நிற்கவும் தோழிகள் இருவரும் முழிக்க அவனோ “ஆதினி.. சாரி ஆதினி.. என் தப்பு தான்” என்றவனை இடைமறித்த வள்ளி,
“என்ன! என்ன உன் தப்பு? நீ என்ன பன்ன?” என்றாள்.
அவன் பதில் ஏதும் கூறாமல் ஆதினியையே பார்த்துக் கொண்டு நின்றான்.
அவளோ “ஹே எனக்கு பசிக்குது நான் கேண்டீன் போறேன் வர்றீங்களா இல்லையா டீ?” என்றாள்.
ரம்யா “சரி வா போவோம்” என்று ராமை பார்த்து முறைத்துக் கொண்டே அங்கிருந்து எழுந்தாள்.
அவர்கள் மூவரும் கேண்டீனை நோக்கி நடக்க பின்னாடியே சென்ற ராம் ஆதினியின் கைகளைப் பிடித்து நிறுத்தி
“ஆதினி.. பிலிஸ்..” என்கவும்
வள்ளி “ஏய்ய்ய்… என்ன பன்ற!” என்று சற்று சத்தமாகவே கேட்டாள்.
அதற்குள் அதினியே பேசத் தொடங்கி விட்டாள்
“நா உன்ன ஒரு நல்ல ஃபிரண்ட்னு நினைச்சேன்.” என்றாள்.
“ஆதினி நா கேட்டது தப்பு தான்.. இன்னும் சொல்லனும்னா நா தப்பான என்னத்துல கேட்கல” என்றவனைப் பார்த்து,
“ஓ!” என்றாள் நக்கலாக.
தோழிகள் இருவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் விடுப்பு எடுத்த ஒரு வாரத்தில் ஏதோ நடந்து இருக்கிறது அதனால் ஆதினி ராமின் மீது சரியான கோபத்தில் இருக்கிறாள் என்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.
ராமிற்கும் வேறு வழியே இல்லை முழுதாக சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது அதனால் ராம் “ஆதினி.. எனக்கு வேற வழி தெரியல. நான் முழுசா சொல்றேன் நீயே கேளு. சூர்யா சார் வந்ததுல இருந்தே உன்ன பாக்குறாருன்னு நம்ம காலேஜ்ல எல்லாருக்குமே தெரியும். எப்ப எல்லாம் டைம் கிடைக்குதோ அப்ப எல்லாம் உன்கிட்ட பேசவும் ட்ரை பண்ணுவாரு ஆனா நீ எப்பவுமே அவர் பேசும் போதெல்லாம் அங்கம்பர்ட்டபலா பீல் பண்றது போல எனக்குத் தெரியும். அதனால நானே நிறைய தடவை அவர் பேசும்போது நடுவுல டவுட் கேக்குற மாதிரி வந்து அவரைப் பேச விடாமல் பண்ணி இருக்கேன். ஆனா எனக்குள்ளே ஒரு டவுட் இருந்துச்சு”
என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது,
ரம்யா வள்ளியை பார்த்து ‘நான் தான் அப்பவே சொன்னேன்ல நீ என்ன நம்பல’ என்பதைப் போல முறைக்கத் தொடங்கினாள்.
ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ராம் இல்லை. அவனுக்கு ஆதினியுடன் இருக்கும் சண்டை சரி ஆனால் போதும் போல இருந்தது.
ராம் தொடர்ந்து பேசத் தொடங்கினான்.
“ஆனால் எனக்கும் ஒரு டவுட் இருந்துச்சு.. நீ ஏன் அவரை ஃபுல்லா அவாய்ட் பண்ணல ஒருவேளை உனக்கும் அவர் மேல இன்ட்ரஸ்ட் இருக்குமோ.. அது தெரியாம நான் வந்து இப்படி பண்றேன்னு தோணுச்சு என் மேல என்ன தப்பு இருக்கு சொல்லு? நான் உன்கிட்ட பேசினது கூட இல்ல அதான் சரி கன்பார்ம் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்தேன் ஆனா அது எப்படி உன்கிட்ட டைரக்டா கேட்கிறது என்று தெரியல. அதுதான் ஆதினி அப்படி கேட்டேன்” என்றான்.
ஆதினி அதற்கு எதுவும் பேசாமல் சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் வள்ளியோ “உனக்கு அத பத்தி என்ன கவலை?” என்றாள் சந்தேகமாக. அவளுக்கு ரம்யா கூறியது எவ்வளவு சரி என்று அப்போதுதான் தோணியது.
அதற்கு ராமோ “ஏன்! நான் கவலை பட கூடாதா?! ஆதினியும் நானும் ஒண்ணாதான படிக்கிறோம்? அப்போ அவளும் எனக்கு ஃப்ரெண்ட்தான? அவ அன்கம்பர்டபிலா இருக்கப்போ என்னால முடிஞ்ச ஹெல்ப நா பண்ணக் கூடாதா?” என்றான்.
“அப்பறம் ஏன் அவளும் விரும்புறாளானு சந்தேகப்பட்ட” என்றாள் ரம்யா.
அதற்கு ராமிடம் பதில் வரவில்லை.
ஆதினி என்ன கூற போகிறார்களோ என்ற பயம் ராமின் கண்களில் தெளிவாக தெரிந்தது.
ஆனால் ஆதினியோ மிகவும் பொறுமையாக மூவரையும் பார்த்து “நான் உங்க மூணு பேரையும் பிரண்டா தான் பார்க்கிறேன். ஆனா நீங்க தான் என்ன அப்படி பாக்குறது இல்லையோன்னு தோணுது!” என்றாள்.
அதற்குள் வள்ளியும் ரம்யாவும் “என்ன ஆதினி பேச்சு இது! உனக்கு உண்மையாவே அப்படி தோணுதா?” என்றார்கள்.
ஆதினி “பின்ன நான் வேற எப்படி சொல்றது எப்ப பாத்தாலும் இந்த பேச்சு.. அடிக்கடி வந்துகிட்டே இருக்கு. நான் தெளிவா சொன்னாதான் உங்களுக்கு எல்லாம் புரியுமா என்.? அவர் வந்துட்டு நமக்கு சார் அவ்வளவுதான். ஏன் இந்த மாதிரி பேசுறீங்கனு எனக்கு புரியுது அவர் என்கிட்ட பேச ட்ரை பண்றாரு, பாக்குறாரு. அதுலாம் இல்லவே இல்லைனு நான் சொல்ல மாட்டேன். எனக்கு தெரியுது.. ஆனா என்கிட்ட அவரு டைரக்டா அதப் பத்தி பேசினாதான் நான் இல்ல அப்படின்னு என்னோட பதில் சொல்ல முடியும். ஒன்னுமே சொல்லாம இருக்க அவர்கிட்ட நானா போயிட்டு நீங்க என்ன பாக்கறீங்களான்னு கேட்க முடியுமா? என்ன? முடியாது தானே? அதுக்கு அர்த்தம் எனக்கு அவரு மேல விருப்பம் இருக்குன்னு கிடையாது. நல்லா கேட்டுக்கோங்க என்னோட கல்யாணம் எங்க வீட்ல என்ன சொல்றாங்களோ அதுபடி தான் நடக்கும். அதோட இல்லாம மேரேஜ் பத்தி யோசிக்கிற வயசு நமக்கு இன்னும் வரலன்னு தான் நினைக்கிறேன் நாம இன்னும் படிச்சு முடிக்கல ஒழுங்கா இப்ப நடக்குற ப்ராஜெக்ட்ட.. ப்ராஜெக்ட்ல கவனம் செலுத்துவோம் காலேஜ் முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போவோம் அதுக்கப்புறம் இதைப்பத்தி எல்லாம் யோசிக்கலாம்” என்று பேசி முடித்து விட்டாள்.
மூவருக்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை..
”சாரி ஆதினி. நீ.. நீ என்ன நினைக்கிறனு தெரியாம நான் அப்படி பேசினது தப்புதான்.. ஐ அம் ரியலி சாரி” என்றான் ராம்.
கூட ரம்யாவும் வள்ளியும் “என்னடி நாங்க விளையாட்டுக்கு தான் சொன்னோன்னு உனக்கு தெரியும்ல? ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குற நாங்க பேசுனது உன்ன இவ்ளோ ஹர்ட் பண்ணி இருந்தா ரொம்பவே சாரி டி.. இனிமே அப்படி பேச மாட்டோம் அதுக்காக உன்னை புரிஞ்சுக்காம எல்லாம் இல்ல” என்றார்கள்.
ஆதினிக்கு சில நிமிடங்கள் ஆனது அவளை அவள் மனதை சமாதானம் செய்து கொள்ள. சில நொடிகள் எடுத்துக் கொண்டாள். பிறகு.
“சரி நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். இத பத்தி நாம இனிமே பேச வேண்டாம் வாங்க நாம சாப்பிட போலாம்.” என்று அவள் கூறவும்,
ரம்யா “அப்பாடா.. ஒரு வழியா சாப்பிட போறோம்” எனவும்,
தோழிகள் இருவரும் சிரித்துக்கொண்டே “உனக்கு உன் பிரச்சனை” என்றார்கள்.
“ஆமா பின்ன பசிக்கும்ல?” என்று அவள் கூறவும் நால்வருக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை. அதன்பிறகு ஒருவழியாக நால்வரும் சேர்ந்தே கேண்டீனை நோக்கி சென்றார்கள்.
அவர்களது கடைசி வருடம் மிகவும் அழகாக கடந்து கொண்டிருந்தது. முன்பு மூவராக சுற்றியவர்கள் இன்று ராமையும் சேர்த்து நால்வராக சுற்றத் தொடங்கினர். மற்றவர்களது ப்ராஜெக்டிற்கும் ராம் உதவி செய்ய தொடங்கினான். இதை சூர்யாவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். நாட்கள் ஆக ஆக ஆதினியும் இராமனும் மிகவும் நெருங்கி பழகுவதாகவே நினைத்தான் சூரியா.
ஒரு நாள் சூர்யா அவர்களது வகுப்பில் இருந்த பொழுது அவனைப் பார்க்க ஒரு அழகான பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.
பாடம் எடுத்துக் கொண்டிருந்த சூர்யா யாரோ வருவதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கு வந்து நின்றாள் அவள்.
“ஹேய்!! நீ என்ன இங்க?” என்று சூர்யா அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியுடனும் கேட்க.
“உள்ளே வரலாமா சார்? என்றாள் அவள்.
அதற்கு சூரியாவோ
“நான் கிளாஸ் எடுத்துட்டு இருக்கேன்” என்று கூறவும்,.
“சரி.. ச.... நான் வெளியிலேயே வெயிட் பண்..... இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் கிளாஸ் முடிய?” என்றாள்.
“இன்னும் ஒரு 10 மினிட்ஸ்ல கிளாஸ் முடிஞ்சிடும்” என்றான் சூர்யா.
“சரி அப்போ ஓகே.” என்றவள் தன் கைபேசி எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டாள்.
சூர்யாவின் முகத்தில் அப்போது தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை யாராக இருக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டனர். பத்து நிமிடங்கள் கழித்து சூர்யா வேகமாக வெளியில் சென்று விட்டான். எப்பொழுதும் ஆதினியை ஒருமுறையாவது பார்த்து செல்பவன் அன்று அவளை கூட கவனிக்கவில்லை. ரம்யா இதை கவனிக்க தான் செய்தாள் ஆனால் அதை கூறி யார் ஆதினியிடம் திட்டு வாங்குவது என அதை கூறாமல் விட்டாள். ஆதனியிடம் திரும்பி
“அந்த பொண்ணு யாராடி இருக்கும்? என்றவளிடம்
“என்கிட்ட கேட்டா எனக்கு எப்படிடி தெரியும்?” என்றாள் ஆதினி.
“ரொம்ப அழகா இருக்காங்க இல்ல?” என்றாள் ரம்யா.
ஆதினியும் “ஆமாம்” என்கவும்.
வள்ளி “அவங்க யாரா இருக்கும்?” என்றாள் மீண்டும்.
“இதேதானடி நாங்களும் பேசிட்டு இருக்கோம்?” என்றாள் ஆதினி.
ரம்யா “நான் ஒன்னு சொன்னா ஆதினி நீ கோவிச்சுக்க கூடாது? என்றாள்.
“என்ன சொல்லு.” என்றாள் ஆதினி.
“இல்ல உன்ன விட அவங்க செமையா இருக்காங்கள?” என்றவளிடம்.
ஆதினி “இதுக்கு ஏன் டி நா கோச்சிக்க போறேன்?
உன்மாயவே அவங்க அழகா இருக்காங்க” என்றாள்.
வள்ளியோ “ஆமாண்டி இந்த விஷயத்துல ரம்யா சொல்றத நான் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” என்றாள்.
“சரி எனக்கு இப்ப பசிக்குது நம்ம அப்படியே சாப்பிட போவோம். போற வழியில அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பார்ப்போமா?” என்றாள் ரம்யா.
அவளைப் பார்த்து ஆதினி முறைக்கவும் “சரி சாப்பிடவாது போகலாம் டி.. பசிக்குது” என்றாள்.
“சரி.. சரி.. வா.. என்று மூவரும் கிளம்ப எதிரில் வந்த ராம்,
“எங்க என்ன விட்டுட்டு போறீங்க? மூணு பேரும் சாப்பிட தான?” என்றான்.
“ஆமா எப்படி கரெக்டா கண்டுபிடிச்ச?” என்றாள் வள்ளி. “ரம்யா உன் கூட வரானா கண்டிப்பா அது சாப்பிடவா தான் இருக்கும்” என்றான்.
ரம்யா அவனை பார்த்து முறைத்து விட்டு
“எனக்கு பசிக்குது நான் சாப்பிட்டு வந்து உன்ன பேசிக்கிறேன்” எனவும் அனைவரும் சிரித்துக் கொண்டே கேண்டீனை நோக்கி நடந்தனர்.