• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் 4

MK25

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
14
11
3
Tiruppur
அத்தியாயம் 4:
கேண்டீன் சென்று அவர்களுக்கு தேவையான உணவை வாங்கிவிட்டு அமர இடம் தேடினால் அன்று அவர்களுக்கு இடமே கிடைக்கவில்லை. ஒரே ஒரு டேபிள் தான் காலியாக இருந்தது அதில் மொத்தம் எட்டு பேர் அமரலாம். அதில் ஏற்கனவே இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர் அது வேறு யாரும் இல்லை சூர்யாவும் அந்த புதிதாக வந்த பெண்ணும்தான். அவர்களுடன் சேர்ந்து எப்படி அமர்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே சூர்யா அவர்களைப் பார்த்து விட்டான்.
“ராம் இங்க வாங்க.. இங்க வந்து உக்காந்துக்கோங்க வேற எங்கயும் இடம் இல்ல போலிருக்கு” என்றான்.
வேறு வழியின்றி அவர்களோடு சென்று அமர்ந்துக் கொண்டனர். அந்த நால்வரும் பெரிதாக எதுவும் பேசாமல் உணவு உட்கொண்டிருக்க சூர்யாவும் அப்பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர்.
“நீ எப்படி திருச்சிக்கு வந்த இங்க யாரையுமே உனக்கு தெரியாதே?” என்றான் சூர்யா.
அதற்கு அவளோ “என்ன யாரையும் தெரியாதா! அப்ப நீ எங்க இருக்க?” என்றாள்.
“அது சரி.. இப்ப என்ன சொல்ல வர என்ன பாக்க தான் இங்க வந்தேன்னு சொல்ல போறி..?!” என்று கேட்டவனிடம்
“பின்ன? நான் வேற என்ன சொல்லுவேன் நீ நினைக்கிற? உன்ன பாக்க தான்டா வந்தேன் லூசு” என்றாள்.
“இது நான் கிளாஸ் எடுக்கிற காலேஜ் இங்க இவ்வளவு மரியாதையா என்கிட்ட பேசினா அப்புறம் எப்படி என்னோட ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் என்ன மதிப்பாங்க? பாரு பக்கத்திலேயே வேற உக்காந்து இருக்காங்க” என்றான் சூர்யா.
அவர்களிடம் திரும்பியவள் “நீங்க எல்லாம் இவனோட ஸ்டூடண்ட்ஸா? என்ன சார்னு ரொம்ப பந்தா காட்றாங்னா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க இவன ஒரு வழி ஆக்கிடுவோம்” என்றாள் விளையாட்டாக.
அதற்கு ரம்யா “ஐயோ எங்க சார் அப்படி எல்லாம் இல்ல மேடம் ரொம்ப நல்லவரு” என்றாள்.
அதற்கு அந்த பெண் ஏதும் கூறாமல் சிரித்துவிட்டு சூர்யாவை பார்த்து “நல்ல பேர் எல்லாம் எடுத்து வச்சிருக்க போல?” என்று கேட்டவள் தன் விளையாட்டு தனத்தை விடுத்து மிகவும் தீவிரமான குரலில் சூரியாவிடம் பேச தொடங்கினாள்.
“நான் வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாரு.. இன்விடேஷன் செலக்ட் பண்ணனும்னு அம்மா சொன்னாங்க. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்ணனுமா நீ இன்னும் டேட் கூட கொடுக்காம இருக்க! நீ என்ன ஐடியாலதான் இருக்க?” என்று கேட்டாள்.
“அதுதான் நான் சொல்லும்போது பண்ணிக்கலானு சொன்னேனே இப்ப என்ன அவசரமா?” என்றான் சூர்யா.
அதற்கு அவளும் “ஏற்கனவே முடிவானது தானே? இதுல இன்னும் டிலே பண்ண என்ன இருக்கு!” என்றாள் சற்று கோவமாக.
அவளது குரலில் கோவத்தை கவனித்த சூர்யா “எதுக்கு கோவப்படுற! சரி சரி விடு.. நான் பேசுறேன் சீக்கிரமா டேட் பிக்ஸ் பண்ணிடுறேன்” என்றான் சற்று பதட்டமாக.
“சரி சரி நம்புறேன்” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே
நால்வரும் சாப்பிட்டு முடித்து கிளம்ப தயார் ஆனார்கள். ஆனால் அவளோ அவர்களை விடாமல் “உங்க பேர்லாம் கூட சொல்லாம போறீங்களே” என்றாள்.
நால்வரும் அவர்களது பெயரை கூறியதும் “ஓ! என் பேரு சுவாதி” என்று அவளையும் அறிமுகம் செய்துக் கொண்டாள்.
அதன்பிறகு நால்வரும் அங்கிருந்து கிளம்பினர். ஆனால் சூரியாவும் அப்பெண் சுவாதியும் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
நால்வரும் தூரமாக வந்த பிறகு ரம்யா கேட்டாள் “ஏண்டி.. ஏதோ இன்விடேஷன். பத்திலா பேசினாங்கல?” என்றவளுக்கு
வள்ளி “ஆமா பேசினாங்க..” உடனே ரம்யா கேட்டாள்
“ஒருவேளை கல்யாணம் இன்விடேஷனா இருக்குமோ?! அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா இருக்குமோ?” என்றாள்
வள்ளி “அது நமக்கு எப்படி டீ தெரியும்? ஆனா அவங்க பேசியதை பார்த்தா அப்படித்தான் இருந்துச்சு” என்றாள்.
ராம் அதற்கு “எதுவா இருந்தா உங்களுக்கு என்ன? அவங்க ஏதோ பேசிட்டு போறாங்க நம்ம போய் நம்ம ப்ராஜக்ட் வேலையை பார்ப்போம்” என்றான். நால்வரும் நேராக லைப்ரரிக்கு சென்றனர். அங்கு சென்று அவரவர்கள் அவரது ப்ராஜெக்டின் வேலைகளை செய்ய தொடங்கினர். சிறிது நேரத்தில் ஆதினியும் வள்ளியும் அவர்களுக்கான புத்தகங்களை தேடி உள்ளே செல்லவும் அங்கு ரம்யாவும் ராமும் மட்டும் தனியாக இருந்தனர். நீண்ட நேரமாக ராம் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை போலவே இருந்தது. அதை ரம்யா கவனிக்காமல் இல்லை எனவே அந்த தனிமையை பயன்படுத்தி ராமிடம் பேச தொடங்கினாள்.
“என்னடா கேண்டின்லயிருந்து வந்ததுல இருந்து உன் மூஞ்சே சரியில்லையே! ஏதோ யோசிச்சிட்டு இருக்க அப்படி என்ன யோசிக்கிற?” என்றாள்.
அதற்கு ராம் “ஒன்னு இல்லையே! நான் எதுவும் யோசிக்கல” என்று கூறினான்.
ஆனால் ரம்யா விடுவதாக தெரியவில்லை “இல்ல பரவால்ல சொல்லு என்ன யோசிக்கிற? ஏன்னா எனக்கும் சில டவுட் இருக்கு அதனால தான் கேட்கிறேன். எப்படியும் நான் யோசிகிறதுதான் நீயும் யோசிச்சிட்டு இருப்ப” என்றவளிடம்
“நான் என்ன யோசிக்கிறேனு உனக்கு என்ன தெரியும்?” என்றான் அதற்கு ரம்யா பதில் ஏதும் கூறாமல் அவனையே பார்க்கவும் ராம் வேறு வழியின்றி
“இல்ல நம்ம சூர்யா சார் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான். ரம்யா அதற்கு “நினச்சேன். நானும் அவரை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன.. சரி சொல்லு நீ என்ன யோசிக்கிற?” என்றாள்.
ராம் அதற்கு “இல்ல நீ பஸ்ட் சொல்லு” என்றான் ரம்யாவும் “இப்படியே மாத்தி மாத்தி சொல்லிட்டு இருந்தோம்னா அவங்க ரெண்டு பேரும் வந்துருவாங்க ஒழுங்கா சொல்லு என்ன யோசிக்கிறேன்னு” என்றாள்
ராம் அதற்கு “இல்ல நீ கேட்டது போல எனக்கும் சூர்யா சாரும் அவங்களும் பேசிக்கிட்டதை பார்த்தா அவங்களுக்கு கல்யாணம் இன்விடேஷன் ரெடி பண்றத பத்தி பேசிட்டு இருந்தது போலதான் இருந்துச்சு.”
அதற்கு ரம்யா “ஆமா அப்படித்தான் இருந்துச்சு” என்றாள்.
ராம் அதற்கு “ஏற்கனவே அந்த பொண்ணோட கல்யாணம் பேசி முடிஞ்சி இருந்துச்சுன்னா அப்புறம் எதுக்காக அவர் ஆதினிய பார்த்துகிட்டே இருந்தாரு?” என்றான்.
‘உனக்கு உன் கவலையாடா!!’ என்று நினைத்தவள் அதை வெளியில் காட்டாமல்
“ஆமா அதான் நானும் யோசிச்சேன் ஆனா ஒருவேளைஅவரு சும்மா கூட பார்த்திருக்கலாம் இல்ல?” என்றாள் ரம்யா
அதற்கு ராம் “அவர் சும்மாலாம் பாக்கல ஆதினிய பிடிச்சு தான் பார்த்தாரு.. அது எல்லாருக்குமே தெரியும். ஒருவேளை.. அவங்க சார் கிட்ட டேட் கொடுக்கலைன்னு சொல்லிட்டு இருந்தாங்கல அது ஆதினிய பிடிக்கிறதுனால அவங்கள மேரேஜ் பண்ணிக்க யோசிக்கிறாரோ?” என்றான்.
ரம்யாவும் அதற்கு “அடப்பாவி ஏன்டா இவ்ளோ யோசிக்கிற! அதெல்லாம் இருக்காது.” என்றாள்.
ராம் அதற்கு எதுவும் கூறாமல் எதையோ யோசித்துக் கொண்டே இருக்கவும் ரம்யாவே தொடர்ந்தும்
“ஏன் ராம்.. நான் ஒன்னு கேக்குறேன் கோச்சிக்க கூடாது? அதே நேரத்துல உண்மையை சொல்லணும்” என்றாள்.
ராமும் “நான் கோச்சுக்க என்ன இருக்கு கேளு” என்றான்
“இல்ல இது உன்னோட பர்சனல்தான்.. ஒரு பிரண்ட.தான் கேட்கிறேன.. இப்ப நாம பேசுறது நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும்தான் இருக்கும்.
ராம் அதற்கு “என்னன்னு சொல்லு இழுக்காத” என்றான்.
ரம்யா சிறிது யோசித்து விட்டு தொடர்ந்தால் “இல்ல சூர்யா சார் ஆதினிய பாக்குறது எல்லாருக்குமே தெரியும்தான்..”
ஆமா என்றான் ராம்
“நான் கவனிச்ச வரைக்கும் உனக்கும் அது மாதிரி ஏதாவது இன்ட்ரெஸ்ட் இருக்கா?” என்றாள்.
“என்ன!” என்றான்
“இருக்குன்னா இருக்குன்னு சொல்லு இல்லன்னா இல்லன்னு சொல்லு” என்றாள்.
ராம் எதுவும் கூறாமல் அவளை பார்த்து திருதிருவென முழிக்க ரம்யா மீண்டும் தொடர்ந்தாள்
“ஆதனி கிட்ட பேச விடாம நீ பண்ணதுல இருந்து எனக்கு உன்ன தெரியும். நான் அப்பவே ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன் யாரும் நம்பல அதுக்கு அப்புறம் நான் அதை பத்தி பேசுறத விட்டுட்டேன் அதான் கேட்கிறேன்” என்றவளிடம்
ராம் வேகமாக “என்ன! ஏற்கனவே சொன்னியா? யாறுக்கிட்டா சொல்லி இருக்க?” என்றான்
ரம்யா “ஆமா நாங்க மூணு பேரும் தான் பேசிட்டு இருந்தோம் அப்பல்லாம் உன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி” என்றாவளை இடைமறித்த ராம்
“அப்போ ஆதினி என்ன சொன்னா?” என்றான்.
“நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலையே!” என்றாள் ரம்யா.
ராம் அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் யோசித்துக் கொண்டே இருந்தான்.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஏற்கனவே கல்யாணம் பேசி முடிவு செஞ்சு தேதி மட்டும் முடிவாகாம இருக்க... எதுக்கு ஆதினிய சூர்யா பார்த்திட்டு இருக்கான்🤔

சுவாதி இன்விடேஷன் தேதி பத்தி பேசும்போது பதட்டம் வேற 🧐 இவங்க நாலுபேருக்கும் தெரிஞ்சிடுமேன்னா 🤔
 
  • Love
Reactions: MK25

MK25

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
14
11
3
Tiruppur
ஏற்கனவே கல்யாணம் பேசி முடிவு செஞ்சு தேதி மட்டும் முடிவாகாம இருக்க... எதுக்கு ஆதினிய சூர்யா பார்த்திட்டு இருக்கான்🤔

சுவாதி இன்விடேஷன் தேதி பத்தி பேசும்போது பதட்டம் வேற 🧐 இவங்க நாலுபேருக்கும் தெரிஞ்சிடுமேன்னா 🤔
Intha angle la naaney yosikalaiyee.. awww..