அத்தியாயம் 5
கடந்த கால வாழ்க்கையினுள் சுழன்று கொண்டிருந்தவளை ரயிலின் சத்தமும் திடீரென ஏற்பட்ட சலசலப்பும் நிகழ்காலத்திற்கு அவளை இழுத்து வந்தது.
என்ன நடக்கின்றது என்று புரியாமல் சில நொடிகள் கவனித்தவளுக்கு ரயில் அதன் இலக்கை அடையப்போவதை உணர்ந்தாள். எழுந்து சென்று தன்னுடைய உடை மற்றும் முடியை சரி செய்து கொண்டு வந்து அமர்ந்தவள் தான் இறங்கப் போவதற்கு ஆயத்தமானாள். அடுத்த சில நிமிடங்களில் இரயில் அதன் இலக்கை வந்து அடைந்ததும் அதிலிருந்து இறங்கியவள் தன்னை அழைக்க வந்தவனை தேடிப்பார்த்தாள். அவளை அழைப்பதற்கு என்று அங்கு நின்று கொண்டிருந்தவன் ராம்தான். அவளை பார்த்ததும் மெலிதாக சிரித்தவன் அவள் அருகில் வந்தான்.
“எப்படி இருக்க ஆதினி? டிராவல் எல்லாம் ஓகேதானே?” என்றான்.
அதற்கு அவ்வளும் மெலிதாக சிரித்து ஆமாம் என்று ஒரு தலையசைத்தாள். பிறகு ராமே தொடர்ந்து
“சரி வா நாம நம்ம வீட்டுக்கு போய் எதுனாலும் பேசிக்கலாம்” என்றான்.
அதற்கு ஆதினியோ இல்ல ராம் நாம அப்புறமா கூட வீட்டுக்கு போகலாம் இப்போ நேரா ஹாஸ்பிட்டல் போலாம்” என்றாள்.
“இப்பதான ஆதினி வந்த அதுக்குள்ள அங்கே போகணுமா என்ன?” என்றான்.
அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்க்கஅவனோ
“சரி நீ முடிவெடுத்ததை யாராலும் மாத்த முடியாது ஹாஸ்பிடல் போயிட்டே நாம வீட்டுக்கு போவோம்” என்றான்.
மருத்துவமனைக்கு செல்லும் வழி எல்லாம் ராம் ஆதினியிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தான் ஆனால் ஆதினி அதற்கெல்லாம் பெரிதாக பதில் கூறுவதாகவே இல்லை. என்னதான் அவனுடன் வந்தாலும் அவளது மனம் அங்கு இல்லை என்பதை ராம் நன்கு அறிவான்.
அவன் நினைத்ததை போலவே ஆதினியின் மனம் அப்போது அங்கு இல்லைதான். அது மீண்டும் கடந்த காலத்திற்குள் நுழைந்து கொண்டது.
ரம்யாவின் கேள்விக்கு ராம் எதுவும் பதில் கூறாமல் நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆனால் ரம்யா விடுவதாக இல்லை.
“உன்கிட்டதான கேள்வி கேட்டேன் எப்படி ஆதினி வர வரைக்கும் வெயிட் பண்ண போறியா?” என்றாள்.
“இல்ல ரம்யா.. இது ஆதினிக்கும் எனக்கும் இப்ப இருக்க நட்பையும் பாதிச்சிருமோன்னு பயமா இருக்கு. இத சொன்னா அவ எப்படி எடுத்துப்பான்னு கூட எனக்கு தெரியலையே!” என்றான்.
“கண்டிப்பா அதுக்கப்பறம் உன் மூஞ்சில முழிக்க மாட்டா அது மட்டும் உறுதி.” என்றாள் ரம்யா.
“அதுதான் என்னோட பயமும் ரம்யா” என்றான் ராம்.
ஒரு சில நொடிகள் இருவருமே பேசவில்லை. அங்கு அமைதி நிலவியது அந்த அமைதியை உடைத்து முதலில் பேசியது ராம்தான்.
“நம்ம காலேஜ் ஸ்டார்ட் பண்ணி ரெண்டு நாள்லயே எனக்கு ஆதினிய ரொம்ப பிடிச்சிருச்சு” என்றான்.
அதற்கு ரம்யா “ஓ.. என்ன!!! ரெண்டு நாளிலேயே வா!!” என ஆச்சரியப்பட்டாள்.
“ஆமா ஆரம்பிச்ச ரெண்டாவது நாள்ல ஆதினி கடல் நீல கலர்ல ஒரு சுடிதார் போட்டுட்டு வந்தா அது அவளுக்கு ரொம்ப அழகா இருக்கும். அதோட அன்னைக்கு தான் அவ என்கிட்ட பஸ்ட் பேசுனா” என்றான்.
“ அப்படியா? அப்படி என்ன பேசினா” என்றாள் ரம்யா.
“என்னோட புக் ஒன்னு நான் கீழ போட்டுடேன் அதை எடுத்து கொடுத்தா” என்றான்.
“அடப்பாவி அதுக்கலாமாடா லவ் வரும்?” என்றவளிடம்
“இல்ல என்ன அப்போ சீனியர்ஸ் ராகிங் பண்ணிட்டு இருந்தாங்க அப்போ என் கையில இருந்த புக்க மாடியில இருந்து கீழே விட்டுடேன். அதை அவங்க எடுக்கவும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க அன்னைக்கு மழை வேர தூர ஆரம்பிச்சுருச்சு அவ எல்லாத்தையும் பார்த்துட்டு மாடியில இருந்து எனக்காக ஓடிப் போய் புக்க எடுத்து வந்துருக்கா. அவளே அத வச்சிக்கிட்டு காலேஜ் முடிஞ்சதும் என்கிட்ட கொண்டு வந்து கொடுத்தா. இல்லனா அவங்க என்னை விட்ட நேரத்துக்கெல்லாம் அந்த புக்கு மழைல நினைஞ்சி கிழிஞ்சு போயிருக்கும். அது மட்டும் இல்லாம அது எனக்கு ரொம்ப பிடிச்ச புக்கு” என்றவனைப் பார்த்து
“புக்கில என்னடா புடிச்ச புக்கு? என்றவள் பிறகு அவளே தொடர்ந்து “ஆமா ஆமா நீ படிக்கிற புள்ளல நா அதை மறந்துட்டேன்” என்றாள்.
“இல்ல அது படிக்கிற புக் இல்ல பாரதியாரோட கவிதை புக்குதான். ஆனா அது எனக்கு கொடுத்தவங்க ரொம்ப முக்கியமானவங்.” என்றான்.
ஓ! என்றவளிடம் அவனே தொடர்ந்து கேட்காத கேள்விக்கு பதிலாக
“அந்த புக்கை எனக்கு பிளஸ் டூல கிளாஸ் எடுத்த ஒரு சார் கொடுத்தாரு. ஆனால்.. நம்ம காலேஜ் ஆரம்பிக்கிறதுக்குள்ளேயே அவர் தவறிட்டாரு. அதனால தான் இந்த புக் எனக்கு ரொம்ப முக்கியம் என்றேன.”.
“அப்ப அந்த புக்கை காப்பாத்துனதுனாலதான் அவ மேல உனக்கு லவ் வந்துச்சா? என்றாள்.
“அதுக்காக அவ மேல எனக்கு பாசம் தான் வந்துச்சி பட் லவ் அதனால வரல. அன்னைக்கு தான் என்கிட்ட ஃபர்ஸ்ட் டைம் பேசினான்னு சொன்னேன். ஆனா அன்னைக்கு காலையில வந்ததும் எனக்கு அவள ரொம்ப புடிச்சிருச்சி. அந்த டிரஸ் அவளுக்கு ரொம்பவே அழகா இருக்கும்.” என்றவனின்கண்களில் அவனுக்கு ஆதினியின் மேல் இருந்த காதல் ரம்யாவிற்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் அவன் கூறிய காரணங்கள் தான் அவ்வளவாக அவளுக்கு புரியவில்லை.
ராம் தனது காதலை தொடக்கத்தில் இருந்து ரம்யாவிடம் கூறிக் கொண்டு இருந்த பொழுது இன்னொரு பக்கம் சூர்யாவும் அப்பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர்.
சுவாதி சூர்யாவிடம் “இந்த பொண்ணு ஆதினியை தானே நீ லவ் பண்ற?” என்றாள்.
அவள் அப்படி திடீரென்று கேட்கவும் சூர்யா பதறிப் போய் சுற்றி முற்றியும் பார்த்தான். நல்ல வேலையாக அப்பொழுது அனைவரும் கிளம்பி இருந்தனர். அவர்களுக்கு அருகில் பெரிதாக யாரும் இல்லை யார் காதிலும் அது விழுந்திருக்காது என்று தெரிந்த பிறகு அவளை திரும்பி பார்த்து முறைக்க தொடங்கினான்.
“இப்ப எதுக்கு முறைக்கிற? உண்மையதான கேட்டேன்! நான் யாரும் இல்லை என்கிறத கவனிச்சுட்டுதான் கேட்டேன். அந்த அளவுக்கு நான் ஒன்னும் சின்ன புள்ள கிடையாது” என்றாள்.
“நல்லா கேட்ட..” என்றான்.
“சரி நீ சமாளிக்காம பதில சொல்லு” என்றாள்.
அவள் விடுவதாக இல்லை என்று தெரிந்த பிறகு சூர்யாவின் வேறு வழியின்றி ஆமாம் என்று தலையாட்டினான்.
“ஏன்டா அப்போ அவ கிட்ட சொல்ல வேண்டியதுதான? அவ பாக்க அழகாதான் இருக்கா அப்புறம் ஏன்டா சொல்ல மாட்ற? என்றவளை இடைமறித்து
“சுவாதி நம்ம காலேஜ்ல இருக்கோம் என்ன பேச்சு பேசிட்டு இருக்க?” என்றான்.
“எப்படி? காலேஜ்ல ஒரு பொண்ண லவ் பண்றது பெருசில்ல அதை பத்தி இங்க பேசுறது தப்பாடா!” என்றாள்.
“காலேஜ்ல பேசுறது இல்ல லவ் பண்றதும் தப்புதான்” என்றவனை அவள் வித்தியாசமாக பார்க்க சூர்யாவே தொடர்ந்தான்
ஒருவேளை ஆதினிய ஃபர்ஸ்ட் காலேஜ்ல தான் பார்த்திருந்தா அவளை நான் எப்படி பார்த்திருப்பேன்னு எனக்கு தெரியல.. ஆனா நான் அவளை இங்க பாக்கலையே!” என்றான்.
“அதுவும் சரிதான். ஆனால் இந்த விஷயத்தை எல்லாம் நீ அவளிடம் எப்பதான் சொல்ல போற? எனக்கே இத நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. பாரு அவ கூட ஒருத்தன் இருந்தானே அவன் பெயர் என்ன?” என்றாள்.
“ராம்” என்று சூர்யாவிடம் இருந்து பதில் வரவும் சுவாதி “அந்த ராம். அவனுக்கும்அவ மேல இண்டரெஸ்ட் இருக்கு போல?” என்றாள்
“நீயா ஏதாவது சொல்லாத” என்றான் சூர்யா.
“என்ன? நானா சொல்றேனா! அவன் அவளை பார்க்கறது, அவ கிட்ட பேசுறத வச்சு உனக்கு தெரியலையா? இல்ல தெரிஞ்சும் அத ஒத்துக்க மறுக்கிறியா?” என்றாள்.
“ராமுக்கு வேணும்னா அப்படி ஐடியா இருக்கலாம். ஆனா ஆதினி பொருத்தவரைக்கும் அவன் வெறும் பிரண்டுதான்” என்றான்.
“அப்படின்னு உன்கிட்ட சொன்னாளா? ஒரு வேலை அதுவே உண்மையா இருந்தாலும் அது எத்தனை நாளைக்கு அப்படியே இருக்கும் நினைக்கிற?” என்றவளிடம்
“நான் இந்த காலேஜுக்கு வந்து ஒரு வருஷம் ஆகுது இதுக்கு முன்னாடியும் நான் ஆதினிய பார்த்துகிட்டு தான் இருக்கேன் இந்த காலேஜுக்கு வந்ததுக்கு அப்புறமும் நான் அவள பாத்துட்டு தான் இருக்கேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அதினியோட மனசுல என்ன இருக்குன்னா ஒரு பொண்ணு பையனும் எப்பவுமே பிரண்ட்ஸா மட்டுமே இருக்க முடியும். அப்படி நினைக்கிறவ அவ. அதனால அவளுக்கு ராம் மேலலாம் நிச்சயமா காதல் வராது” என்றவனிடம்
“அதுக்கு சொல்லல சூர்யா நீ எப்பவா இருந்தாலும் இந்த விஷயத்தை சொல்லித்தான் ஆகணும். அதை இப்பவே சொன்னா என்ன?” என்றாள்.
“உன்கிட்ட நான் ஃபர்ஸ்ட் சொன்னதுதான் காலேஜ்ல பசங்களுக்குள்ள லவ் வரது வேற அது வயசுல வரலாம் இல்ல உண்மையான காதலா கூட இருக்கலாம். ஆனா நான் இங்க ஒரு சாரா இருக்கேன் நான் போயிட்டு என்னோட ஸ்டூடண்ட லவ் பன்னா.. அது தப்பான உதாரணமா ஆயிடக்கூடாது. அதனால எதுனாலும் காலேஜ் முடியட்டும். அவளுக்கு இன்னும் கொஞ்சம் மாசம்தான் இருக்கு. அதுக்கு அப்புறம் நான் போய் சொல்லிப்பேன.” என்றான்.
“அது சரி அப்போ மட்டும் உனக்கு ஸ்டுடென்ட் இல்லையா என்ன?அதோட இல்லாம சாரும் ஸ்டூடெண்டும் லவ் பன்றதே இல்லையா என்ன?” என்றாள் சுவாதி
“அப்போவும் அவ எனக்கு ஸ்டுடென்ட்தான் ஆனா அவ எனக்கு ஸ்டூடன்ட் ஆனதுக்கு அப்புறம் நான் அவளை லவ் பண்ணலையே? அதோட இல்லாம சாரும் ஸ்டூடெண்டும் லவ் பன்னி நாம கேள்வி பட்டுருக்கோம்தான் ஆனா எதிக்ஸ்னு ஒண்ணு இருக்குல்ல? அது ஒரு ஒரு ஆளுக்கும் மாறு படுதே!” என்று மீண்டும் ஆரம்பத்திலேயே வந்து நின்றான் சூர்யா.
“உன்ன எல்லாம் திருத்தவே முடியாது. நான் கிளம்புறேன் சீக்கிரமா இன்விடேஷன் அடிக்கணும் டேட் மட்டும் கொஞ்சம் சொல்லிடு ப்ளீஸ்” என்று அங்கிருந்து கிளம்பினாள் சுவாதி.
கடந்த காலத்தில் ஆதினியின் மனம் சுழன்று கொண்டிருக்க மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது ராமின் குரல்
“ஆதினி… ஹாஸ்பிடல் வந்துருச்சு” என்றான்.
மருத்துவமனைக்கு வந்ததும் காரில் இருந்து இறங்கிய ஆதினி சில நொடிகள் மருத்துவமனையை வெரித்துக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ முடிவு எடுத்ததை போல வேகமாக உள்ளே சென்றவளை ராம் வழிநடத்திக் கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வந்த பிறகு அதன் கண்ணாடி வழியே உள்ளே இருந்த அந்த ஆளைக் காட்டினான்.
அங்கு இருந்தவரின் முகம் அவ்வளவு சரியாக தெரியவில்லை. கால்கள் மேலே கட்டப்பட்டிருந்தது எனவே அது முகத்தை மறைத்திருந்தது. உடல் முழுவதும் பல கட்டுகள் போட பட்டிருந்தது.
“என்ன சொல்றாங்க?” என்றாள் ராமிடம். அவளாது குரலில் நடுக்கம் தெரிந்தது.
“உனக்கு வந்த அதே நியூஸ்தான். காப்பாத்துறது ரொம்பவே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. இன்னும் சொல்லனும்னா இன்னைக்கு தாண்டுறதே கஷ்டம்தானு சொல்லி இருக்காங்க..” என்றான்.
அதற்கு மேல் ஆதினியால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் தேம்பி தேம்பி அள ஆரம்பித்தாள். அவளது அழுகை நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அது அவளது கடந்த ஐந்து வருடத்தின் அழுத்தமா அல்லது அவள் எடுத்த முடிவை நினைத்து வந்த அழுகையா என்று அவளுக்கே தெரியவில்லை. ஐந்து வருடங்களுக்கும் சேர்த்து அழுவதை போல் அவள் அழுதுக் கொண்டிருந்தாள். எத்தனை நேரங்கள் அப்படி அழுதாலோ அவளுக்கே தெரியவில்லை.
திடீரென இரு கரங்கள் அவளை தொட்டு அணைத்து கொண்டது. அந்த கரங்கள் அவளுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. அது அவளை அதுக்குள் இழுத்து அணைத்துக் கொண்டது. எங்கு இருக்கின்றோம் என்ன செய்கின்றோம் என்று ஒன்றும் புரியாமல் அந்த கரங்களின் செயலுக்கு இவளும் பொம்மை போல எழுந்து அதனுள் அடங்கிக் கொண்டாள். அந்த கரங்களுக்குள் அடைப்பட்டதும் அவள் நீண்ட காலங்கள் ஏங்கிய ஒன்று நடப்பதை போல உணர்ந்தாள். நீண்ட நேரம் தன் தாயை காணாமல் ஏங்கி கொண்டிருந்த குழந்தை தன் தாயை கண்டது போல அந்த கரங்களுக்குள் அடைபட்டு அழத் தொடங்கினாள். அவளது அழுகை அதிகம் ஆனது. நீண்ட நேரம் அப்படியே அழுது கொண்டே நின்றவள் திடீரென சிந்தனை வந்தவளாக நிமிர்ந்து பார்த்தாள். அந்த கரங்களுக்கான முகத்தை பார்த்ததும் அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நொடி அவளை தவிர இந்த பூமியே சுற்றுவதை போல இருந்தது. அடுத்த நொடி அந்த பூமி அப்படியே இருட்டானது.