அத்தியாயம் 6
சனி, ஞாயிறு என இரு நாட்கள் விடுமுறையில் இருந்து விட்டு திங்கட்கிழமை வேலைக்கு அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு செல்வது என்றாலே அலுப்புதான் அதிகம் வந்து விடுகிறது. அப்படித்தான் அந்த திங்கட்கிழமையும் அனைவரும் மிகவும் அழுப்புடன் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். தூரத்தில் வந்து கொண்டிருந்த ஆதினியை பார்த்ததும்
“அதில் சீக்கிரம் வா..” என்று கத்தினார்கள் வள்ளியும் ரம்யாவும்.
ஆனால் அவளோ மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“என்னடி உடம்பு எதுவும் சரியில்லையா என்ன?” என்றாள் வள்ளி.
“லைடா ஃபீவர் டி” என்றாள் ஆதினி. “அப்போ ஏன் டி வந்த?” என்று ரம்யா கேட்டதற்கு “அதுலாம் பரவாயில்லை ஒன்னும் பெருசாலாம் இல்ல பாத்துக்கலாம்” என்று விட்டாள்.
மூவருமாக அவர்களது வகுப்பறைக்கு வந்து அமரவும் சற்றென்று ஏதோ தோன்றியவளாக ரம்யா திரும்பி பார்க்க அங்கு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.
ரம்யா திரும்பியதும் ஆதினிக்கு என்ன என்பது போல ராம் சைகை காட்ட ரம்யாவும் ஃபீவர் என்று செய்து காட்டினாள்.
அன்று மதியம் வரையும் ஆதினி மிகவும் சோர்வாகதான் காணப்பட்டாள். அவளது நிலையை பார்த்து வள்ளி “பேசாமல் வீட்டுக்கு போறியா ஆதினி? லீவு சொல்லிக்கலாம் ரொம்ப முடியாதது போல தெரியிறியே” என்றாள்.
ஆதினியோ அதற்கும் மறுத்து விட்டாள்.
ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் ஆதினி அமர்ந்த இடத்திலேயே மயங்கி விட என்ன செய்வது என்று பதறி போனார்கள் வள்ளியும் ரம்யாவும்.
அவளை எழுப்ப என்ன முயற்சி செய்தும் அவள் கண்கள் விழிப்பதாக தெரியவில்லை. வேறுவழியின்றி ஆசிரியர் அலுவலகத்திற்கு ஓடினாள் வள்ளி.
அங்கு அமர்ந்திருந்த அவர்களது கணக்கு வாத்தியாரிடம் “சார் ஆதினி மயங்கி விழுந்து விட்டாள். என்ன பண்ணாலும் எழுந்திருக்கவே இல்லை சார்” என்றாள் பதற்றமாக..
திடீரென்று அவள் ஓடிவந்து பதட்டமாக கூடியதும் முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை அவர் சுதாரித்து நிலைமையை புரிந்து கொள்வதற்குள் அங்கு இருந்த சூர்யா வேகமாக தன் இருக்கையை விட்டு எழுந்தவன் “என்ன சொல்ற? எப்படி ஆச்சு. என்ன ஆச்சு வா சீக்கிரம்” என்று வள்ளியை தாண்டி வேகமாக முன் சென்றான்.
வகுப்பறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் பட்ட காட்சி ஆதனி கண்கள் மூடி எந்தவித அசையும் இல்லாமல் படுத்திருந்ததுதான். அவளை சுற்றி நின்றவர்களை வழி விடுங்க நான் கொஞ்சம் காத்து வரட்டும் என்றவன் “தண்ணீர் தெளிச்சு பார்த்தீங்களா?” என்றான்.
தறைகளில் இருந்த தண்ணீரே அவர்கள் அதிகமாக தண்ணீரை தெளித்தும் அவள் கண்களை திறக்கவில்லை என்பதற்கு சாட்சியாக இருந்தது. என்ன செய்வது என்று குழம்பி நின்றவன் ‘இப்படியே அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று விடுவோமா’ என்று கூட ஒரு நொடி யோசித்தான். ஆனால் அடுத்த நொடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்க தொடங்க அதற்குள் பின்னாடியே வந்த அவர்களது கணக்கு வாத்தியார்
“உங்ககிட்ட அவ வீட்டு போன் நம்பர் இருக்கா? உடனே வீட்டுக்கு கால் பண்ணுங்க” என்றவர்
“நம்ம கார்ல கூட்டிட்டு போயிருவோமா சார்” என்று சூரியாவைப் பார்த்து கேட்டார். அதற்குள் ரம்யா “இல்ல சார் அவங்க வீட்டுக்கு போன் பண்ணியாச்சு அவங்க அக்காதான் எடுத்தாங்க அஞ்சு நிமிஷத்துல வந்துருவேனு சொன்னாங்க” என்றாள்.
சூர்யாவும் “இல்ல அவங்க வரவரைக்கும் எப்படி வெயிட் பண்றது? அவ கண்ணகூட தொறக்கலையே?” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே வேகமாக உள்ளே நுழைந்தாள் ஆதினியின் அக்கா. அதை பார்த்த வள்ளி
“இதோ வந்துட்டாங்க சார்.” என்றாள்.
எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தார்கள்? என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதற்கு பதிலாக அவளே “நாங்களே ஆதனியை கூட்டிட்டு போகதான் சார் வந்தோம் கரெக்ட்டா போன் பண்ணி ஆதிணிக்கு ரொம்ப முடியலன்னு சொன்னாங்க” என்றவளிடம்
“ஏன் கூட்டிக்கிட்டு போக வந்தீங்க? என்றான் சூரியா.
“ஆதிணி காலைல இருந்தே உடம்பு முடியாம இருந்தா அதான் சார்” என்றவள் பதில் கூறிக்கொண்டே அதிணியை எழுப்ப முயன்றாள். ஆனால் அதினியின் உடலோ நெருப்பை விடவும் அதிகமாக கொதித்தது. ஆதிணியை கூப்பிட கூப்பிட எந்தவித பதிலும் அவளிடமிருந்து வரவில்லை.
அதற்குள் சூர்யா “ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிடலாமா?” என்று அருகில் நெருங்க அவளது அக்காவோ சூர்யாவுக்கு பின் இருந்த வகுப்பரையின் நுழைவாயிலை பார்த்து உள்ளே வருமாறு யாருக்கோ தலையசத்துக் கொண்டிருந்தாள். யாரோ உடன் வந்திருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்ட சூரியா திரும்பி பார்க்க அங்கிருந்து வேகமாக 6.2’ அடிக்கு ஒருவன் உள்ளே வந்து கொண்டிருந்தான். அவன் வந்த வேகத்திற்கு ஆதினியிடம் சென்றவன்
“ஆதி.. ஆதிமா.. ஆதி..” என்றான். அதுவரை யாருக்கும் பதில் அளிக்காதவள் அவனது குரலுக்கு மட்டும் மெளிதாக ஏதோ முணுமுணுத்தாள். சட்டென யாரும் எதிர்பாராத நேரத்தில் அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான். ஆதினியின் அக்காவும் அவனது பின்னாடியே செள்ள ஆயத்தமானபோது சூர்யா சற்று நிதானித்து
“இல்ல காலேஜ்ல இப்படி ஆனதுனால நாங்களும் கூட வரோம்” என்றவனிடம் வள்ளி “சார் நானும் கூட வர சார் ப்ளீஸ்” என்றாள். அவனும் சரி என்று வள்ளியையும் ராமையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
மருத்துவமனையில் அவளை சோதித்த மருத்துவர்கள்
“அவங்களுக்கு ரொம்ப பீவர் இருக்கு அதோட சரியா சாப்பிடாம வேற இருந்துருப்பாங்கனு நினைக்கிறேன். ரொம்ப டிஹைட்ரேஷனா வேற இருக்காங்க.. அதனால தான் அவங்களுக்கு இப்படி ஆயிருக்கு நாங்க மருந்து கொடுத்து இருக்கோம் கொஞ்ச நேரத்துல கண்ண தொறந்துடுவாங்க. ஆனா இந்த அளவுக்கு எப்படி திடீர்னு ஃபீவர் வந்துச்சு ஸ்டார்ட்டிங்லயே மெடிசன் எடுத்து இருந்தீங்கன்னா இவ்ளோ பிரச்சனை இல்லையே? என்றார்.
“இல்ல சார் காலையில் ஃபீவர் இருந்திச்சுதான் அதோட சொல்ல சொல்ல கேட்காம காலேஜ் போய்ட்டா” என்றாள் ஆதிணியின் அக்கா.
“சரி பாத்துக்கொங்க” என்று அங்கிருந்து கிளம்பினார் அந்த மருத்துவர்.
அவர் பேசிவிட்டு அங்கிருந்து விலக அப்பொழுதுதான் அங்கு இருந்த அனைவருக்கும் மூச்சே வந்தது. சூர்யாவுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்ல. ஆனால் ஆதினியிடம் பேசியே ஆக வேண்டும் போல இருந்தது. அதனால் அங்கயே முழித்துக் கொண்டு நின்றான்.
வள்ளியோ “ஏன்கா இவ்ளோ பீவேரோட அவள காலேஜ்க்கு அனுப்சீங்க?” என்று கேட்க்க
“எங்க எங்களோட பேச்சை கேட்கிறா அவ? அவளை பத்திதான் உனக்கு தெரியுமே நாங்க சொல்ல சொல்ல கேட்காம தான் இன்னைக்கு வந்துட்டா.. சரி அவளுக்கும் கொஞ்சம் மனசு மாரும்னு நினைச்சி நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்” என்று கூறவும் வள்ளிக்கு ஒன்றுமே புரியவில்லை.
“மனசு மாறுமா? எதுல இருந்துகா?” என்றாள் புரியாமல்.
“உங்ககிட்ட ஒண்ணுமே சொல்லலையா?” என்றாள்.
“இல்லையே” என்று வள்ளியிடம் இருந்து பதில் வரவும் ஆதினியின் அக்கா சிறிது யோசித்துவிட்டு
“சரி அப்போனா அவளே சொல்லுவா மா “ என்று முடித்துவிடாள்.
வள்ளிக்கு ஒன்றுமே புரியவில்லை ஆனால் அதற்கு எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. சரி ஆதினியே எதுவாக இருந்தாளும் கூறட்டும் என்று விட்டுவிட்டாள்.
அதன் பிறகு ஆதினியின் அக்கா சூர்யாவிடம் திரும்பி
“நாங்க உங்களுக்கு வேற சிரமத்தை கொடுத்துட்டோம்.. இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்..” என்று கூறிக் கொண்டிருந்தவளை இடைமறித்த சூர்யா “எங்களோட ஸ்டூடண்ட் தானே அவ.. அதுவும் காலேஜ்ல இருக்கும்போது இப்படி ஆயிட்டுனா எல்லா பொறுப்பும் எங்களோடதுதானே? நாங்க வந்துதான் ஆகணும். எதுக்கும் கண்ணு முழிச்சதுக்கு அப்புறம் நாங். பார்துட்டே போறோம்” என்ரான்.
ராமும் அவனோட சேர்ந்துகொண்டு “ஆமா அக்கா ஆதினி கண்ணு முழிச்சபிறகு போறோம்” என்று கேட்கவும் சரி என்று அதற்கு மேல் அவள் எதுவும் சொல்லவில்லை. அனைவரும் காத்திருக்க சிறிது நேரத்தில் ஆதினி மெளிதாக கண்களை திறந்தாள். அப்போது அவளது காய்ச்சலின் அளவு சற்று குறைந்ததை போல இருந்தது. அவள் கண்களை திறந்ததும் முதலில் பேச தொடங்கியது அந்த வளர்ந்த மனிதன் தான்.
“என்ன பாத்து ஃபீவர் வர அளவுக்கா பயந்துட்ட?!” என்றான்.