அத்தியாயம் 7
அவன் கேட்ட கேள்விக்கு அவள் எதுவும் கூறாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் என்ன பேசுகின்றான் என்று ஆதினியின் அக்காவைதவிற அங்கிருந்த வேறு யாருக்கும் புரியவில்லை. அவள் எதுவும் பதில் கூறாமல் இருக்கவும் அவனே மீண்டும் “ஆதினி! வேணும்னா இது எதுவும் வேண்டானு நான் வீட்டில சொல்லிடவா? நீ இந்த அளவுக்கு கஷ்டப்படுற! நீ நேத்தே என்கிட்ட சொல்லி இருக்கலாமே? நான் அப்பவே எல்லார்கிட்டயும் பேசி இருப்பேன்” என்றான்.
அதற்கு ஆதினியோ “அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்றாள் மெதுவாக. அவள் அப்படி கூறவும் அவனது கண்களில் ஒரு நொடி ஒளி தெரிந்து மறைந்தது. மெல்லிய சிரிப்புடன் அவளது அருகில் சென்றவன். “வேற எப்படி?” என்றான். அவள் எதுவும் கூறாமல் வேறு புறம் திரும்பிக் கொள்ளவும் “சரி சரி கோச்சுக்காத.. நான் சும்மா கிண்டல்தான் பன்னேன்..” என்றவன் தொடர்ந்து “ஆதினி நான் இப்ப சீரியஸாவே கேட்குறேன். எதனால உனக்கு ஃபீவர் வந்துச்சு?” என்றான்.
அவள் மெதுவாக “நீங்க வரத்துக்கு முன்னாடியே எனக்கு பீவர் வந்துச்சு” என்றாள்.
“அது சரி. அது எப்படி இந்த அளவுக்கு மாறுச்சு லீவ் போட்டு இருக்கலாமில்ல” என்றான்.
“எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு அதான் ஒரு சேஞ்சா இருக்கும்னு போன” என்றவளைப் பார்த்து
“அப்படி உனக்கு என்ன குழப்பம்?” என்று கேட்க்கவும் அவள் எதுவும் கூறாமல் அவனையே பார்க்க அவன் அவளை புரிந்துகொண்டு ஆதினியின் அக்காவிடம் திரும்பி “நான் ஆதிணிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. ஒரு அஞ்சி நிமிஷம் கொடுக்கிறீர்களா? ப்ளீஸ்..” என்றான்.
அவளும் சரி என்று மற்றவர்களையும் வெளியில் அழைத்து சென்றாள். அங்கிருந்த வேறு யாருக்குமே என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. புரியாமல் அனைவரும் வெளியில் வந்து அதநியுடைய அக்காவை பார்க்க ஆதினியின் அக்காவோ “கொஞ்ச நேரத்துல ஆதினியே எல்லாம் சொல்லுவாள் அது நல்ல நியூஸா இல்ல கெட்ட நியூஸானுதான் எனக்கு தெரியல” என்றவள் அவளது கைபேசி அழைக்கவும் அத எடுத்துக் கொண்டு பேச தனியாக சென்றுவிட்டாள்.
சூர்யாவும் ராமும் ஏதோ அபாயம் வர போவதாகவே உணர்ந்தார்கள். இவர்களது நிலை வெளியே இப்படி இருக்க உள்ளே அவனும் ஆதினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் வெளியே சென்ற செல்லவும் மீண்டும் அவன் ஆதினியை பார்த்து கேள்வி கேட்க தொடங்கினான்.
“சொல்லு ஆதினி? உனக்கு என்னை பிடிக்கலைன்னா நேத்து என்கிட்ட சொல்லி இருக்கலாமே! அத சொல்லாம என்ன குழப்பத்திலிருந்த?” என்றவனப் பார்த்து
“நான் அப்படி எதுவும் சொல்லலையே!” என்றாள்.
“யார் நீ?? பின்ன வேற எப்படி சொன்ன?? இன்னைக்கு உன் கிளஸ்ஸ்ல உன்னை நான் அப்படி பார்த்ததும் என் உயிரே போய்ட்டு தெரியுமா??” என்றான்.
“இல்ல எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு” என்று மீதும் அதையே சொன்னவளிடம்
“என்ன குழப்பம்? என்ன பிடிக்குதா பிடிக்கலையானு குழப்பமா?” என்றான்.
அதற்கு அவள் இல்லை என்று பதிலளிக்கவும்
“வேற என்னதான் ஆதினி உன் பிரச்சனை? சொன்னாதான நீ என்ன நினைக்கிறனு எனக்கு தெரியும்” என்றான்.
ஆதினி சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் பேச தொடங்கினாள்
“இல்ல நான் படிச்சிட்டு வேலைக்கு போகணும்னு நினைச்சேன்” என்றவளிடம்
“போ அதுல என்ன பிரச்சனை? எனக்கு புரியலையே!” என்றான்.
“இல்ல திடீர்னு.. நானும் படிச்சு முடிக்கல திடீர்னு தாத்தா எனக்கு கல்யாணம்னு சொல்லவும் எனக்கு ஒண்ணுமே புரியல..” என்றாள்
அவன் ஆதினியையே சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு “இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்றியா?” என்றான்.
ஆதனியோ “இல்ல எனக்கு இப்போ கல்யாணம் நடக்கும்னு நான் நினைச்சே பாக்கல.. நான் படிச்சு வேலைக்கு போய் அப்புறமா கல்யாணம் நடக்கும்னு நினைச்சேன் திடீர்னு கல்யாணம்ன்னு சொல்லவும்” என்றவளை இடைமறித்து “குழம்பிட்டியா?” என்றான். அதற்கு அவளோ
“இல்ல பயந்துட்டேன்” என்றாள்.
“என்ன பயந்துட்டியா??” என்று அவன் ஆச்சரியமாக கேட்க
“எனக்கு என்னனு தெரியல திடீர்னு எனக்கு கல்யாணம்னு சொல்லி உங்களை காட்டவும் நான் ரொம்ப பயந்துட்டேன்” என்றவளிடம்
“என்ன பாத்தா அவ்ளோ பயமாவா இருக்கு?” என்றான் மீண்டும் கிண்டலாக.
“இல்ல எனக்கு கல்யாணம்னு சொன்னதே பயமா இருந்துச்சு..” என்றவளிடம் “அப்போ என்ன பாத்தா பயமா இல்லையா என்றான் மெதுவாக. அவனது அந்த குரல் அவளை ஏதோ செய்தது. இல்லை என்பதை போல அவள் தலையை மட்டும் அசைக்க அவன் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு பேச தொடங்கினான்
“ஆதினி உன்னோட காலேஜ் முடிச்ச அப்புறம்தான் நமக்கு கல்யாணம் வைக்கப் போறாங்க.. அதனால நீ படிச்சு முடிச்சிடுவ. அதுக்கப்புறம் நீ உனக்கு வேலைக்கு போகணும்னா போ அதுல எந்த பிரச்சனையும் கிடையாது. அது உன்னோட முடிவுதான். அது நம்மளோட கல்யாணத்துனால எந்த விதத்திலும் பாதிக்காது. அது பஸ்ட் நீ நல்லா தெளிவா புரிஞ்சுக்கணும். இப்போ எல்லாம் எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலைக்கு போறாங்க நீ எந்த காலத்துல இருக்க?” என்றான்.
ஆதினியோ அதற்கு எதுவும் கூறாமல் அமைதியாகவே இருக்கவும் அவனே மீண்டும் தொடர்ந்தான்
“இத யோசிச்சு இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகிக்க வேண்டியது இல்ல ஆதினி. ஆனா வேலைக்கு போறது மட்டும்தான் உனக்கு பிரச்சனையா?” என்றான்.
ஆதனி “வேலைக்கு போறது தான் பிரச்சனைனு நான் சொல்லல.. ஏன்னா இப்போ கல்யாணம் பண்ணிட்டு கூட எல்லாரும் வேலைக்கு போறாங்கன்னு தெரியும்.. ஆனா எங்க வீட்டிலேயே இருந்துட்டு திடீர்னு வேற ஒரு வீட்டுக்கு வரது எல்லாமே எனக்கு புரியாத ஒரு பயமா இருந்துச்சு. நான் அதைப்பத்தி இதுவரைக்கும் யோசிக்கவே இல்லைங்கறதுனால கூட இருக்கலாம்.” என்றாள்.
ஆதினியின் மனநிலை அவனுக்கு தெளிவாக புரிந்தது எனவே அவனே தொடர்ந்து பேசினான்.
“திடீர்னு கல்யாணம்னு சொல்ற எல்லாருக்குமே வர உனர்வு தான் உனக்கும் ஆதி. சில பசங்களுக்குமே திடீர்னு உனக்கு கல்யாணம் பொண்ணுலாம் நாங்க பிக்ஸ் பண்ணிட்டுதான் உனக்கே சொல்றோம்னு சொன்னா அந்த பையனுக்கும் இப்படி பயம் வரதான் செய்யும். அவங்க எப்படி இருப்பாங்க என்ன நம்ம பாக்கவே இல்ல திடீர்னு பொண்ணுனு சொல்றாங்க அப்படினுலாம் கேள்வி வரும்.
இவ்ளோ ஏன் எனக்கும் எங்க வீட்ல நாங்க பொண்ணு பேசிட்டு வந்துட்டோம்னுதான் சொன்னாங்க. உன்னை பார்க்கிற வரைக்கும் எனக்குள்ளேயும் நிறைய கேள்விகள் இருந்துச்சு. நீ எப்படி இருப்ப? நீ எப்படி இருப்பனா நீ அழகா இருப்பியா இல்லையாங்கிறது இல்லை நீ என்ன கேரக்டரில் இருப்ப எதுக்கு கொச்சிப்ப எதுக்கு சந்தோஷப்படுவ? எதுவுமே எனக்கு தெரியாதே! ஆனா திடீர்னு நீ தான் பொண்ணுன்னு சொல்றாங்க நான் உன்னை பார்த்தது கூட இல்லை. உன்னை பார்க்க வரவரைக்கு இந்த மாதிரி பல கேள்வி எனக்குள்ளே ஓடிட்டு தான் இருந்துச்சு. ஆனா உன்ன பாத்து உன் கிட்ட பேசின அப்புறம் அதுல பாதி கேள்விக்கு பதில் கிடைத்திருச்சுன்னுதான் நினைக்கிறேன். அதே மாதிரி தான் இப்போ உனக்கு இருக்கும் என்கிட்ட பேச பேசதான் உனக்கு இதெல்லாம் புரியும்.” என்றவன் ஆதினி அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவன் சட்டென்று “இன்னும் கொஞ்ச நேரம் நீ ரெஸ்ட் எடு ஆதினி நல்லா யோசி உன்னை யாரும் கம்பெல் பண்ண மாட்டாங்க அதுக்கு நான் பொறுப்பு நீ நான் ஓகேவா என்று யோசிச்சேன்னா நான் ஓகே இல்லை என்றாலும் சொல்லு இல்ல கல்யாணத்தை நினைச்சு மட்டும் தான் உனக்கு பயமா இருக்குனா நான் இப்போ சொன்னதுலாம் யோசிச்சு பாரு இல்ல வேணும்னா உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணுமோ அது வரைக்கும் நாம வெயிட் பண்ணுவோம்.” என்றான்.
ஆதிணிக்கு அவனது அந்த வார்த்தையே அவளது பயத்தை சற்று குறைத்தது போல இருந்தது இருப்பினும் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென ஏன் பாதியில் நிருந்தி மீண்டும் தொடர்பில்லாமல் பேசினான் என்று அவளுக்கு புரியவில்லை.
“இல்ல இப்போ அந்த அளவு பயம் இல்ல.. நேத்து பேசுனது பேசுனதாவே இருக்கட்டும்” என்றாள் அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி. ஆதினியின் பதில் முடிவான அவர்களது திருமணத்தை மாற்ற வேண்டாம் என்பதுதான் என்பதை புரிந்துக் கொண்டவன் ஒரு பெல்லிய சிரிப்புடன்
“சரி ஆதிமா நீ இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடு.. வெளில உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வெய்ட் பண்றாங்க அவங்கள்ட வேற நீ பேசணுமே..” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
அவனது ஆதி என்ற அழைப்பில் தன்னை தொலைத்தவள் அவனது அடுத்த சொல்லைக் கேட்டு மீண்டு வந்தாள். அப்போதுதான் அங்கு வள்ளி இருந்ததே அவளது நினைவுக்கு வந்தது. அவளது நிலையை நினைத்து ஒருபுறம் அவளுக்கு வெட்க்கமாக இருந்தாளும் தற்போது தனது தோழியை எப்படி சந்திப்பது.. அவளிடம் வேற இதைபற்றியெல்லாம் கூற வேண்டுமே என்று நினைக்கும் பொது வெட்க்கம் இன்னும் அதிகம் ஆனது.
அவன் அந்த அறையை விட்டு வெளியில் வரவும் ஆதினியின் அக்கா அவனிடம் வந்து “என்ன தம்பி? என்ன சொன்னா?” என்று கேட்டாள் பதற்றமாக. அதற்கு அவனோ
“நம்ம நேத்து பேசி முடிவு பன்னதுதான் அதுல எதுவும் மாறால” என்றான். அப்பொழுது தான் அவளுக்கு உயிரே வந்தது.
“நா ரொம்ப பயந்துட்டேன்” என்றவளிடம் அவன் “நானும்தான்” என்று கூறிவிட்டு “சரி நீங்க பாருங்க நா போய் எல்லாருக்கும் டீ போல ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்று கூறி அங்கிருந்து சென்றான்.

Last edited: