அத்தியாயம் 8
அவன் வெளியில் செல்லவும் வேகமாக உள்ளே நுலைந்தாள் ஆதினியின் அக்கா. அவளை பின் தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே வர ஆதினியின் அக்காதான் அவளிடம் முதலில் பேசத் தொடங்கினாள்.
“நான் பயந்து போயிட்டேன் ஆதினி” என்றவளிடம் ஆதினி “ஏன்கா?” என்று கேட்க்க அவளோ “இல்ல நா டேரெக்டா கேக்குறேன்.. உனக்கு இதுல இஷ்டம் இல்லையா? எதுனாலும் என்கிட்ட சொல்லு டா..” என்றாள்.
ஆதினியோ “அதெல்லாம் இல்லக்கா எனக்கு ஓகேதான்” என்றாள் சிறு வெட்கத்துடன். அவள் அப்படி கூறியதுமே ஆதினியின் அக்கா முகம் மகிழ்ச்சியில் பிரகாசமானது. உடனே
“சரி சரி ஆதினி நீ உன் ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இரு.. உன் சார் வேற இருக்காரு.. நான் வீட்டுக்கு சொல்லிறேன் இப்போ நீ சரியாயிட்டேன்னு.. எல்லாரும் வர வரன்னு சொன்னாங்க வேண்டாம் நானே அழைச்சிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு வரேன்” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் வெளியில் சென்ற அடுத்த நொடி வள்ளி ஆதிணியை பார்த்து “இங்க என்னதான் டி நடக்குது!!” என்றாள். அவளால் அதற்கு மேல் பொறுமை காக்க இயலவில்லை. அதனால் அவளுடன் சூரியாவும் இருப்பதையே அவள் மறந்து போனாள்.
“வள்ளி.. எனக்கு உன்கிட்ட ஒண்ணு சொல்லனுமே..” என்று ஆதினி இழுக்கவும்
“அது தெரியுது.. அதுதான் என்னனு கேக்குறேன்” என்றாள் வள்ளி.
இதற்குமேல் இவளிடம் மறைக்க முடியாது என்று ஆதிணிக்கு தெளிவாக புரிந்தது. எனவே கடந்த இரண்டு நாட்களில் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.
“அதுவந்து வள்ளி.. சனிக்கிழமை லீவுனு நா லேட்டா தான் தூங்கி ஏந்திருச்சேன்..” என்று அவள் கூறவும் கடுப்பான வள்ளி
“நீ எழுந்த அப்பறம் என்னடி சாப்டியா?” என்றாள் கடுப்பாக
ஆதினி எதுவும் சொல்லாமல் வள்ளியை பாவமாக பார்க்கவும் “சரி சரி.. அப்படி பாக்காத.. ஒழுங்கா என்னணு சட்டுனு சொல்லுடி” என்றாள்.
“இல்லடி அன்னைக்கு திடிருனு தாத்தா வந்து நாளைக்கு உண்ண பொண்ணு பாக்க வராங்கனு சொல்லிட்டாறு.. எனக்கு ஒண்ணுமே புரியல.. வீடே பரபரப்பா மாறிட்டு.. தத்தாவோட ஃப்ரெண்ட் ஒரு தாத்தா எப்போதும் வருவாரு.. அவரோட பேரணு மட்டும்தான் சொன்னாங்க.. அப்பறம் நேத்து பொண்ணு பாக்க வந்தாங்க.. என்ன நடக்குதுனு நா புரிஞ்சிக்கிறதுக்குள்ளையே கல்யாணம் வரை பேசி தேதி வச்சிட்டாங்க” என்றாள்.
அவள் கூறுவதையே இமைக்கோட்டாமல் கேட்டு கொண்டிருந்த வள்ளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதே நேரம் அங்கு நின்று கொண்டிருந்த சூரியாவுக்கும் ராமிற்குமோ அது பேரதிர்ச்சியாக இருந்தது.
வள்ளி “என்னடி திடிருனு இப்டி சொல்லி உடனே டேட்லாம் பிக்ஸ் பண்ணிட்டாங்களா?!” என்றாள்.
“ஆமா டி.. அதான் எனக்கு ரொம்ப குழப்பமா போச்சு..” என்று அவள் இழுக்கவும் வள்ளி
“ஆதினி. உனக்கு பிடிக்கலானா ஒத்துக்காத..” என்று கூறியவளை இடைமறித்த ஆதினி “அப்படிலாம் இல்லடி ஒரு சின்ன குழப்பம் இருந்துச்சிஆனா இப்போ அதுவும் இல்ல” என்றாள்.
அவள் கூற வருவது வள்ளிக்கும் புரிந்தது. அது புரிந்ததும் வள்ளிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என்னதான் இருந்தாலும் உயிர் தோழிக்கு ஒரு பெரிய விசேஷம் என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி தானாக மனிதர்களை தொற்றிக்கொள்ளதானே செய்கின்றது.
ஆனால் சூரியாவிற்கும் ராமிற்குமோ நிலமை அப்படி இல்லை இந்த உலகமே இருளில் மூழ்கி போனதுபோல இருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் முதலில் தனக்கு திருமணம் என்று கூறியது மட்டுமே அவர்களது நினைவில் இருந்தது அதை தாண்டி அவள் கூறிய வேறு எதுவுமே அவர்களுக்கு எட்டியதாக தெரியவில்லை.
மீண்டும் ஆதினியின் அக்கா உள்ளே வரவும் தான் இருவரும் நிதானதுக்கே வந்தார்கள். பெரிதாக எதுவும் பேசாமல் அவள் வந்ததும் சூரியாதான் விடைபெற முயற்சி செய்தான்
“சரி அதுதான் ஆதினி இப்போ நல்லா இருக்காங்களே நாங்க அப்போ கிளம்புறோம்” என்றான்.
ஆதினியின் அக்காவோ “கொஞ்சும் வெய்ட் பண்ணுங்க சார்.. டீ வாங்க போய்ருக்காங்க.. இப்போ வந்துருவாங்க” என்று அவள் கூறவும் தற்போது சூரியாவுக்கு உதவியாக ராம் வந்தான்
“இல்லக்கா.. லேட் ஆனா அப்பறம் காலேஜ் பஸ்ஸ மிஸ் பன்னிடுவோம் அப்பறம் தேவ இல்லாத பிரச்சன.. நாங்க இன்னொரு நாள் வந்து பாக்குறோம்” என்று அவன் கூறவும் அதற்கு மேல் அவள் தடுக்கவில்லை.
சூரியாவும் ராமும் கிளம்பவும் வேறு வழியின்றி வள்ளியும் அவர்களோடு கிளம்ப வேண்டியாகிவிட்டது. மீதி கதையை சீக்கிரம் காலேஜ் வந்து சொல்லணும் என்று கூறி விடைபெற்றுக் கொண்டாள்.
மூவரும் காரில் செல்லும் பொழுது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராம் வழியிலேயே “சார் என்ன இங்கேயே இறக்கி விட்டுடுங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.
சூர்யா எதுவும் பேசாமல் ஒரு ஓரமாக காரை நிறுத்தி அவனை இறக்கி விட்டவன் பின் ஏதோ தோன்றியவனாக “அப்புறம் எப்படி காலேஜுக்கு வருவ? என்று கேட்கவும்
“காலேஜ் தான் முடிய போதே சார் நான் இப்படியே வீட்டுக்கு போயிடுவேன்” எனவும்
“இல்ல நான் தான் உன்னை காலேஜ்ல இருந்து கூட்டிட்டு வந்தேன் உன்ன பத்திரமா சேக்குறதும் என்னோட பொறுப்புதான்” என்றான் சூர்யா.
ராமும் “இல்ல சார் நான் பத்திரமா வீட்டுக்கு போயிடுவேன்” என்றவன் தொடர்ந்து “நான் இங்க பஸ் ஏறி போய்க்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல சார்.. என் பாக் பிரண்டு எடுத்துட்டு போக சொல்லிட்டேன்.. நாளைக்கு எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு நாளைக்கு காலேஜ் வரமாட்டேன் அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல சார்” என்றான். ராமனின் நிலைமை சூர்யாவுக்கு புரியதான் செய்தது அதனால் அவன் எதுவும் கூறாமல் ராமின் தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டான். வாங்கிக் கொண்டு அவனது தொலைபேசி எண்ணையும் அவனிடம் கொடுத்தான்.
“நீ வீட்டுக்கு போனதும் கால் பன்னி எனக்கு சொல்லிரு இல்லனாலும் நான் கால் பண்ணுவேன் அட்டென்ட் பன்னி வீட்டுக்கு போயிட்டேன் மட்டும் சொல்லு எனக்கு அது தெரிஞ்சு ஆக வேண்டும்.” என்றான் கண்டிப்பாக சார் என்று ராமன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
சூர்யாவும் வள்ளியும் மட்டும் கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சூர்யா நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவனது கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவனால் தடுக்கவே முடியவில்லை. அதை வள்ளி கவனிக்காமல் தொடைத்துக் கொண்டுதான் இருந்தான் ஆனால் அது எப்படியோ வள்ளியின் கண்களில் பட தான் செய்தது. வள்ளி சூர்யாவிடம்.”சார்!” என்றாள்.
வள்ளிக்கும் ஓரளவு நிலைமை புரியத்தான் செய்தது. வள்ளிக்கு ராமின் கதை தெரியாது என்றாலும் கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் சூரியாவின் காதல் ஓரளவு தெரியும். அது காதல் என்று தெரியவில்லை என்றாலும் சூர்யா ஆதிணியை பார்க்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் வள்ளி சார் என கூப்பிட்டு எதுவும் கேட்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சூர்யா “கண்ணுல தூசி விழுந்துருச்சு வேற ஒன்னும் இல்ல” என்றவுடன் வள்ளியால் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் இருக்க முடியவில்லை.