செல்வராஜ் ஆதர்ஷினி வீட்டில் பதினைந்து நாட்களில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று பேசினார்.
அதற்கு அவர்களுக்கு எந்தவித மறுப்பும் இல்லாமல் இருந்தாலும், சமர் வீட்டில் உள்ள பெரியவர்கள் சம்மதம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தனர். அதனால் வீட்டில் கலந்து ஆலோசித்து முடிவை கூறுமாறு கூறிவிட்டனர்.
அவர்கள் கூறியதற்கு "சரி" என்று தலை அசைத்து வீட்டிற்கு வந்த செல்வராஜ், அங்கு அப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வந்து இருந்த அருளைப் பார்த்தார்.
"டேய் இன்னும் 15 நாள்ல ஒரு நல்லநாள் இருக்கு, அன்னைக்கே உன்னோட அண்ணனுக்கும் கல்யாணம் முடித்து விடலாம் அப்படின்னு யோசிக்கிறேன். அதுக்கு மேல நாள் தள்ளி போனால், நிச்சயமா உன்னோட அண்ணன் சும்மா இருக்க மாட்டான்! ஏதாவது ஒரு பிரச்சனை உண்டு பண்ண வாய்ப்பு இருக்கு. நீ என்ன சொல்ற வீட்ல உள்ள எல்லார்கிட்டயும் சொல்லி விடுவோமா?" என்று கேட்டார்.
"யூ ஆர் சோ ஸ்வீட் சித்தப்பா! நீங்க சொல்றத வச்சு பார்த்தா இன்னும் 15 நாள்ல அண்ணன் நம்ம கூட வந்து இருக்க போறான், நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு! வீட்ல கண்டிப்பாக ஏதாவது லூசு மாதிரி பேசுவாங்க. அது எதையுமே நாம காதுல வாங்க வேண்டாம். 15 நாள்ல கல்யாணம் முடிவு பண்ணி இருக்கேன், அப்படின்னு மட்டும் சொல்லுங்க, வேற எதுவும் சொல்ல வேண்டாம். அதுக்கு அவங்க என்ன சொன்னாலும் சமாளிக்கலாம்" என்று மகிழ்ச்சியாக கூறினான்.
அவன் கூறியது செல்வராஜ் மனதிற்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. 'கூடிய சீக்கிரம் குடும்பம் வந்து சேரப்போகிறது. யாரெல்லாம் சமரைப் பற்றி தவறாக பேசினார்களோ! அவர்கள் அனைவரும் அவனை கொண்டாடப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்று நினைத்து மகிழ்ந்தார்.
அதே மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் சென்றார். அங்கே அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டு வந்தனர், அந்த வீட்டுப் பெண்மணிகள். அவர்கள் முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து சிரித்துவிட்டு அனைவரையும் பார்த்தார்.
அனைவருமே வீட்டில் இருந்த காரணத்தினால் பொதுவாக "இன்னும் 15 நாள்ல ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கு! அன்னைக்கு கல்யாணத்த வச்சிக்கலாம், அப்படின்னு முடிவு பண்ணி இருக்கோம். எந்த ஒரு வேலையையும், நீங்க யாருமே பார்க்க வேண்டாம். அது எல்லாத்துக்குமே ஆள் போட்டாச்சு! வந்து கல்யாணத்த சிறப்பா செஞ்சு குடுத்துட்டு போங்க! எதுவும் குழப்பமும் பண்ணாம இருங்க" என்று கூறி முடித்தார்.
அங்கிருந்த சிலர் மனதில் "என்ன சொல்றான், 15 நாளில் திருமணமா! அது எப்படி செய்ய முடியும். எவ்வளவு வேலைகள் இருக்கிறது, அது எல்லாத்தையும் யாரோ பாத்துப்பாங்க அப்படின்னு சொல்றது, எல்லாம் நல்லாவா இருக்கு. நம்ம வீட்டு கல்யாணம் நம்ம தானே பார்த்து பார்த்து செய்யணும்' என்று மறுத்துக் கூற வாய் திறந்த அவர்கள், அங்கே சந்தோஷத்தின் உச்சியில் நின்று கொண்டு இருந்த அருள் முகத்தை பார்த்துவிட்டு சம்மதமாக தலையசைத்தனர்.
அனைவரும் எதற்காக தலையசைத்தார்கள், என்பது அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். செல்வராஜ் அதை உணர்ந்து கொண்டு ஒரு நக்கல் சிரிப்போடு அனைவரையும் பார்த்துவிட்டு, ஆதர்ஷினி வீட்டிற்கு போன் செய்து திருமண தேதி முடிவான விஷயத்தை ப்பற்றி பேசுவதற்காக சென்றுவிட்டார்.
வெளியே சென்று போனை எடுத்தவர், பாண்டியனுக்கு அழைத்துவிட்டு, அவர் போனை அட்டன் செய்யும்வரை அமைதி காத்தார். அவருடைய காத்திருப்பதாக உடனடியாக அந்தப் பக்கம் போன் அட்டென்ட் செய்யப்பட்டது.
ஏனென்றால் திருமண தேதியை பற்றி செல்வராஜ் பேசி சென்று இருந்த காரணத்தினால், நிச்சயமாக போன் செய்வார் என்று அனைவரும் அதற்காக காத்துக் கொண்டுதான் இருந்தனர். அதனால் உடனடியாக போனை அட்டென்ட் செய்தனர்.
"ஹலோ சொல்லுங்க வீட்ல எல்லாரும் என்ன சொன்னாங்க! 15 நாள்ல கல்யாணம் வச்சுக்கலாமா? இல்ல மூன்று மாதம் கழித்து வைத்துக்கொள்ளலாமா? எல்லாருக்கும் எது சம்மதம்!" என்று கேட்டார்.
"யாரும் எந்தவித மறுப்பும் சொல்லலை, அதனால 15 நாள்ல கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம். எல்லாத்துக்கும் தேவையான ஏற்பாடு கவனித்துக்கொள்ள நிறைய ஆட்கள் இருக்காங்க! உங்களுக்கும் யாராவது உதவிக்கு தேவைப்பட்டால் தயங்காம சொல்லுங்க, ஆள் அனுப்பி வைக்கிறேன். ரொம்ப சந்தோஷமா எல்லாத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம்" என்று வார்த்தையில் மிகவும் மகிழ்ச்சி மற்றும் துள்ளலோடு கூறினார் செல்வராஜ்.
அவருடைய மகிழ்ச்சி அங்கிருந்த அனைவருக்கும் தொற்றிக்கொள்ள "எல்லாருமா சேர்ந்து வேலைய பாக்கலாம், எப்படியும் கல்யாணம் கோவில்ல வச்சு தான் பண்ணனும், அதன் பிறகு மாலை ரிசப்ஷன் மண்டபத்தில் வைத்து பண்ற மாதிரி இருக்கும். எல்லா வேலையும் எல்லாரும் ஆளாளுக்கு பிரித்து பண்ணினா! ரொம்பவே சுலபமாக இருக்கும் நிறைவாக இருக்கும்" என்று கூறினார் பாண்டியன்.
"சரி சம்மந்தி எல்லாத்தையும் நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம். முகூர்த்த பட்டு எடுப்பதற்கு நிச்சயமா சமர் வர மாட்டான். அதனால அவனை தொந்தரவு பண்ண வேண்டாம் உங்க வீட்டுக்கு ஜவுளி கடை காரர்களை அனுப்பி வைக்கிறேன். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சத எடுத்துக்க சொல்லுங்க! எத்தனை வேணும்னாலும் எடுத்துக்க சொல்லுங்க! எந்த பிரச்சினையும் கிடையாது. இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு உங்களுக்கு நான் போன் பண்றேன் " என்று கூறிவிட்டு அவர்களுடைய பதிலுக்காக காத்திருந்தார்.
"சரி சம்மந்தி நாங்களும் போய் வேலை எல்லாத்தையும் ஆரம்பிக்கிறோம்" என்று கூறிவிட்டு போனை கட் செய்தார் பாண்டியன்.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தை அனைத்தையும், போன் ஸ்பீக்கர் மூலமாக கேட்டுக்கொண்டிருந்த சிறியவர்கள் அனைவருக்கும் ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் கவலையாகவும் இருந்தது.
கார்த்திக் தன்னுடைய சகோதரிகள் இருவரையும் பார்த்து "இன்னும் 15 நாள்ல நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்து போயிடுவீங்க! இனிமே உங்க தொல்லை இருக்காது அப்படின்னு நினைச்சு சந்தோஷப்பட வா! இல்ல இனி உங்க கூட ஒண்ணா சந்தோஷமா சண்டை போட்டு விளையாடிக்கிட்டு இருக்க போற நாள், இந்த பதினைந்து நாள்தான் அப்படின்னு நினைச்சு வருத்தப்பட வா! ஒண்ணுமே புரியல" என்று சிறிது மகிழ்ச்சி கலந்த கவலையாகவே கூறினான்.
அவனை இருபுறமும் அணைத்த ஆதர்ஷினி மற்றும் கார்த்திகா ஒரே குரலில் "கவலையே படாதே! நாங்க ரெண்டு பேரும் உன்னை தொல்லை பண்றதுக்கு அடிக்கடி இங்க வருவோம். அதே மாதிரி நீயும் அங்கே அடிக்கடி வரணும், வராம மட்டும் இருந்தா நாங்க என்ன பண்ணுவேம்னு எங்களுக்கே தெரியாது, புரியுதா" என்று மிரட்டுவது போல் பேச முயன்றாலும், அவர்களுடைய குரலும் சிறிது கவலையாகவே இருந்தது.
இவர்களின் பாசப் போராட்டத்தை கவனித்தபடியே உள்ளே வந்த ஆதவன், அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு அங்கே இருந்த இரு வீட்டு பெற்றோரும் பார்த்தான்.
அவனைப் பார்த்த அவருடைய தந்தை தங்கவேல் "தம்பி இன்னும் 15 நாள்ல பாப்பா ரெண்டு பேருக்கும் கல்யாணம். அதுவரைக்கும் நீ வீட்டுக்கு வர வேணாம், சமர் கூட உதவியாய் இரு. எப்படியும் அவன் தனியாக தான் இருப்பான். நீ அவன் கூட இரு கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நலங்கு வைக்கும் போது, நாங்க எல்லாரும் அங்க வருவோம். வேலை எல்லாத்தையும் பார்த்துக் கொள்வதற்கு ஆள் ரெடி பண்ணிக்கலாம். உன்னால முடிஞ்ச சின்ன சின்ன உதவிய அங்க இருந்தே பண்ணு! முடிஞ்ச அளவுக்கு சமரை தனியா விடாம பார்த்துக்கோ" என்று கூறினார்.
"சரிப்பா நான் உங்களுக்கு உதவி செய்ய ஆட்கள் எல்லாரையும் ரெடி பண்ணி கொடுத்துட்டு, சமர் கூடவே போய் இருக்கேன். எப்போ ஏதாவது அவசரம் இல்ல உதவி தேவைப்பட்டா மறக்காம கூப்பிடுங்க" என்று அவர் கூறியதற்கு சம்மதத்தை கூறிவிட்டு வந்து அமர்ந்தான்.
கார்த்திக் சென்று அவன் அருகில் அமர்ந்து கொள்ள, பெண்கள் இருவரும் தங்களுடைய அறைகளுக்குள் நுழைந்தனர்.
ஏற்கனவே கார்த்திகாவிடம் அருள் "கார்த்தி கண்டிப்பா இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் நமக்கு பேசுவதற்கு நேரம் இருக்க வாய்ப்பு இல்லை. அதுக்காக நீ கவலைப்பட கூடாது. அதேமாதிரி என்னோட வீட்டில் எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும், உன்னோட அக்காவுக்கு எதிராகத் திரும்பவே கூடாது. எப்பவும் உன்னோட அக்காவுக்கு நீ சப்போட்டா இருந்தா மட்டும்தான், எல்லாருக்கும் நல்லது. இத மட்டும் உன்னோட மனசுல பதிய வச்சுக்கோ! என்கிட்ட பேச முடியல அப்படின்னு வருத்தப்படாத, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்" என்று கூறி இருந்தான்.
அவன் கூறியது போலவே இதோ 15 நாளில் கல்யாணம் நடக்கப் போகிறது. அதுபோலவே பெண் பார்த்து விட்டு சென்ற பிறகு, இன்னும் அருள் அவளிடம் பேசவில்லை. அவனுக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டவள், அவனை தொந்தரவு செய்யாமல் தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்தாள்.
அதேநேரம் ஆதர்ஷினி மனதில் 'இன்னும் 15 நாள் தான் இருக்கு, கல்யாணம் வரைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாம போய்விடும். ஆனா கண்டிப்பா கல்யாணத்துக்கு சமர் முகத்தில் சிரிப்பை பார்க்கிறது ரொம்பவே கஷ்டம்! அதுக்கு பிறகு அவனோட வீட்டுக்கு போறதுக்கு அவன் எப்படி சம்மதிக்க போறான்? அவனை எப்படி சம்மதிக்க வைக்கிறது, ஒன்னுமே புரிய மாட்டேங்குது! வேற எந்த விஷயத்தை நான் பண்ணாலும் அமைதியாக இருப்பான். ஆனா அவனோட வீட்டுக்கு போகணும் அப்படின்னு நான் சொன்னா, கண்டிப்பா நீ மட்டும் வேணா போயிட்டு வா! அப்படின்னு சொல்லிக்கிட்டே போய்கிட்டே இருப்பான். ஏதாவது ஒரு பிளான் பண்ணனும், அதுவும் கல்யாணம் அன்னைக்கு தான் பண்ணனும். அதுக்கு முன்னாடி ஒண்ணுமே பண்ண முடியாது கடவுளே நீ தான் ஏதாவது வழி காட்டணும்' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆதவன் தன்னுடைய நண்பர்கள் ஒருசிலருக்கு அழைத்து "டேய் மாப்ள நம்மளோட சமருக்கு இன்னும் 15 நாள்ல கல்யாணம். உங்களுக்கே தெரியும் அவன் கல்யாணம் பண்ணிக்க சுத்தமா விருப்பம் இல்லாம இருக்கான். அதனால நான் அவன் கூடவே இருந்தாகணும், நீங்க எல்லாரும் கல்யாணத்துக்கு கொஞ்சம் உதவி செய்வீங்களா? மாப்பிள்ளை வீட்டுக்கு அவங்க பாத்துப்பாங்க, சமர் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு வேற யாரும் இல்ல! என்னோட தங்கச்சி ஆதர்ஷினி தான். அதனால பொண்ணு வீட்டுக்கு உங்களால முடிஞ்ச உதவி செய்ய முடியுமா" என்று கேட்டான்.
அந்தப்பக்கம் இருந்தவனும் "ஆளே கிடைக்காமலா அந்த வாயாடி போய் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற? சும்மாவே அவனை கல்யாணம் அப்படின்னு சொன்னா தெறித்து ஓடுவான். இதுல நல்ல வாயாடி தான் கல்யாணம் பண்ணி வைக்க போறே! ஆனாலும் இந்த வாயாடிக்கு
நம்ம சமர் மேல காதல் இருக்கு அப்படிங்கிற விஷயம் ஊருக்கே தெரியும். அந்த ஒரு காரணத்துக்காக நாங்க எல்லாரும் போய் உதவி செய்கிறோம் ,15 நாள்ல என்ன? 5 நாளிலேயே கல்யாணம் சிறப்பாக செய்யலாம். எங்களுக்கு அதிகமாகவே நாள் இருக்கு எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ! அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ எதுக்கும் கவலைப் படாத" என்று கூறினான்.
அவன் கூறியதை கேட்டு சிரித்த ஆதவனும் "சரிடா உங்களால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணுங்க, நான் இப்ப போய் சமரை பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய நண்பனை பார்த்து சென்று விட்டான்.
அங்கே அப்போதுதான் சமருக்கு போன் செய்த செல்வராஜ் அவன் அட்டென்ட் செய்தவுடன் "இன்னும் 15 நாள்ல உனக்கு கல்யாணம். கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி அருள கூட்டிக்கிட்டு உன்னோட வீட்டுக்கு வந்து விடுவேன். அங்க வச்சு ரெண்டு பேருக்கும் நலங்கு வச்சாலும் சரி! இல்ல நீ இங்க வந்து உனக்கு நலங்கு வச்சாலும் சரி! ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல தான் நலங்கு வைக்கணும். உன்ன நம்பி எல்லா விஷயத்துலயும் இறங்குகிறேன்.
கண்டிப்பா இந்த சித்தப்பா அவமானப்பட்ட மாதிரி நீ எதுவும் பண்ண மாட்ட, அப்படி என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு எதைப் பற்றியும் யோசிக்காமல் அமைதியா நல்லதுதான் நடந்துக்கிட்டு இருக்கு" என்று கூறிவிட்டு சமர் பதிலுக்காக காத்து இருந்தார்.
இந்த பக்கம் செம பெரிதாக எந்தவித பதிலையும் கூற நினைக்கவில்லை "சரி" என்று மட்டும் கூறியவன், வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவனுடைய மௌனத்தை புரிந்து கொண்டவர்.
"எதுவும் யோசிக்காம போய் வேலையை பாரு" என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். அவர் கூறியதை யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஆதவன் வந்து சேர்ந்தான்.
ஆதவன் முகத்தை பார்த்தவன்" வா மாப்ள! என்ன இப்பதான் உன் கிட்ட இன்னும் இன்னும் 15 நாள்ல எனக்கு கல்யாணம் அப்படிங்கற விஷயத்தை சொன்னாங்களா? அதான் இந்த பதினைந்து நாள் என்ன தனியா விடாம, என் கூடவே இருக்கிறதுக்கு கிளம்பி வந்துட்டியா" என்று சரியாக கேட்டான்.
"இல்லனா மட்டும் உன்னை விட்டு நான் தனியா தான் இருக்கேன் பாரு, எப்ப பாரு உன் கூடவே தான் இருக்கேன். தூங்குறதுக்கு, எப்பவாச்சும் சாப்பிடுறதுக்கு மட்டும் தான் வீட்டுக்கு போறேன். இந்த பதினைந்து நாள் அதுக்கும் போகாம உன் கூடவே இருக்க போறேன், அவ்வளவுதான் வித்தியாசம். எதுவும் பெருசா போட்டு யோசிக்காத, எல்லாம் பழைய மாதிரி தான் இருக்கு அதான் ஞாபகம் வச்சுக்கோ" என்று கூறிவிட்டே தன் நண்பன் வீட்டிற்குள் நுழைந்தான்.
ஆனாலும் அவன் மனதில் 'நீ எவ்வளவு அறிவாளியாக இருக்க கூடாது மாப்பிள! எல்லா விஷயத்தையும் கரெக்ட்டா புரிஞ்சுகிட்ட! ஆனா உன்னோட காதல் விஷயத்தை மட்டுமே நீ தப்பா புரிஞ்சுகிட்ட! அதையும் புரிய வைக்க ஆள் வரப் போகுது' என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
சமரும் சிரித்துக்கொண்டே தன் நண்பனை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்றான். அவனுக்கும் தெரியுமே' இனி நம்ம நினைத்தது எதுவும் நடக்கப் போவதில்லை! அதனால என்ன நடக்குதோ அதுபோலவே நடக்கட்டும். ஆனா நிச்சயமா என்ன கல்யாணம் பண்ணினதுகாக தர்ஷி வருத்தப்படுவா' என்று எண்ணிக் கொண்டே சென்றான்.
அதன்பிறகு வந்த நாட்கள் ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது. செல்வராஜ் கூறியதுபோல ஜவுளிக்கடை மற்றும் நகை கடையில் உள்ளவர்கள் தர்ஷினி மற்றும் கார்த்திகா வீட்டிற்கு சென்று, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வைத்தனர். அதில் தங்களுக்கு பிடித்தமான சிலதை இருவரும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
அங்கேயே பெண்களுக்கு தேவையான நகைகளையும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வாங்கிக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் இப்படியே ஒவ்வொரு விதமாக மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.
இந்த நாட்களில் ஆதர்ஷினி சமரை பார்க்க வரவில்லை. அவளுக்கு வருவதற்கு அனுமதி கிடைக்காது என்பது அனைவருக்குமே தெரியும். அதை புரிந்து கொண்ட அவள் யாரிடமும் அவனை பார்க்க செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் இல்லை.
சமர் மனதில் குழப்பம் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. அதை அனைத்தையும் ஆதவன் கவனித்துக் கொண்டே இருந்தாலும் எதையும் அவனிடம் புரிய வைக்க முடியாமல் அமைதியாக இருந்தான்.
அருள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண மேடையில் மகிழ்ச்சியாகவே கலந்து கொண்டனர். அவர்கள் அனைவர் மனதிலும் இருந்த ஒரு விஷயம் 'சமருக்கு மட்டும் திருமணம் அல்ல, தங்களுடைய செல்ல பேரன் , மகன் அருளுக்கும் திருமணம் என்ற விஷயம் தான் இருந்தது. அதனால் அவர்களும் எந்தவித பிரச்சனையும் செய்யாமல் திருமண வேலைகளில் ஆர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.'
இதை அனைத்தையும் கவனித்த நல் உள்ளங்களும், தங்களுக்குள் சிரித்துக் கொண்டு மற்ற வேலைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தனர்.
இதோ திருமண வீடுகள் மிகவும் பரபரப்பாகவும், ஜொலிக்கவும் ஆரம்பித்தது. ஏன் என்றால் இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற நிலை வந்துவிட்டது. எப்படி நாட்கள் சென்றது என்று தெரியாமல் கண் மூடி திறப்பதற்குள் செல்வது போல் சென்று விட்டது.
திருமணத்திற்கு முந்தைய நாள் நலங்கு வைக்க வேண்டும் என்ற நிலையில் சமர் வீட்டிலுள்ளவர்கள் பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர்.
அது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
அடுத்த அத்தியாயத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருப்பதால் அனைவரும் வந்து மணமக்களை ஆசீர்வதித்து மறக்காமல் மொய் வைத்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.