• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 14

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
திருமணம் முடிந்து ஒரு வழியாக சமரையும் அனைவருடன் ஒன்றாக இருக்கும் படி அவன் வீட்டில் குடியிருக்க வைத்துவிட்டாள் ஆதர்ஷினி. அவளுக்கு ஆதரவாக இருந்ததோ அந்த வீட்டின் செல்ல வாண்டுகள். சமர் தான் தான் என்ன மனநிலையில் இருக்கும் என்று புரியாமல் குழம்பித் தவித்து கொண்டிருந்தான்.


ஜோடிகள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் புனிதா "வாங்கம்மா வந்து பூஜை அறையில் இரண்டு பேரும் விளக்கேத்தி சாமி கும்பிடுங்க" என்று கூறினார்.


ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் புனிதா சொல்லை ஏற்று உள்ளே செல்ல, அவர்கள் கணவன்மார்கள் யாரும் எதுவும் கூறாமல் இருந்த பிறகும் அவர்கள் பின்னே பூஜை அறைக்குள் சென்றனர். ஆனால் இவர்கள் செல்வதைப் பார்த்த பரிபூர்ணம் பாட்டி மனதில் 'போங்க போங்க அங்க ஒரு விளக்கு தான் தயாராயிருக்கும் ஏன்னா என்னோட செல்ல பேரனுக்கு மட்டும்தான் இன்னைக்கு கல்யாணம் அவனுக்கு வரபோற பொண்டாட்டிக்கு மட்டும்தான் நாங்க விளக்கு தயாராக இருக்கும் அந்த மேனாமினுக்கி என்ன பண்ண போறா அப்படி என்று பார்ப்போம்' என்று எண்ணிக் கொண்டிருந்தார்.


அவர் முகத்தைப் பார்த்து சிரித்த விஜயா 'அய்யோ அத்தை உங்களைப் பத்தி எங்களுக்கு தெரியாதா எப்போ நீங்கள் எல்லாரும் கோயிலுக்கு கெளம்புனீங்களோ நாங்களும் அந்த நேரம் உங்க கூட வரது மாதிரி வந்திருச்சு, அப்புறமா யாருக்கும் தெரியாமல் புனிதா அக்காவை கூட்டிட்டு வந்து இந்த குடும்பத்துக்கு வரப்போற ஒரு மகாலட்சுமி மட்டுமே விளக்கேற்ற வேண்டிய பாரம்பரிய விளக்க எடுத்து சுத்தமா கழுவி தயார் செய்து வைத்து விட்டோம். அதனால நீங்க இப்ப மனசுல நினைக்கிறது எதுவுமே நடக்காது' என்று எண்ணிக்கொண்டே புன்னகைத்தார்.


பூஜை அறைக்கு வந்தவுடன் பெண்கள் இருவரும் சாதாரணமாக இருக்க ஆண்கள் இருவரும் அந்த விளக்கை பார்த்து ஆச்சரியமடைந்தனர். ஆனால் அதை யார் ஏற்ற போவது என்று எதிர்பார்ப்பு இருவருக்குமே இருந்தது அவ்வளவு சாதாரணமாக அந்த விளக்கை என் வீட்டு மருமகள் யாராலும் ஏற்ற முடியாது என்பது காலங்காலமாக அவ்வீட்டில் இருக்கும் ஒரு நம்பிக்கை.


அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்த ஆதர்ஷினி அந்த விளக்கில் ஏதோ ஒரு சிறப்பு உள்ளது என்பதை உணர்ந்து கொண்டாள் அதனால் தன் தங்கையின் கையை பிடித்தவள் இருவருக்கும் சேர்த்தே தீக்குச்சி எடுத்தாள். அக்கா செய்வது வினோதமாக இருந்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணிய கார்த்திகா அவள் கையிலிருந்து தன் கையை உருவிக் கொள்ளாமல், அவள் கையுடன் சேர்ந்து அந்த தீக்குச்சியை பற்ற வைத்து அவள் ஏற்றிய விளக்கில் அவளுடன் சேர்ந்து ஏற்றினாள்.


அதன்பிறகு இருந்த மற்றொரு விளக்கை இவ்வாறு இவர்கள் ஏற்றினார்கள்.இந்த விஷயத்தை பார்க்கும்போது சமரை பிடிக்காமல் இருந்தவர்களுக்கும் ஒருநிமிடம் அதிர்ச்சியாகி ஆச்சரியமானது. மற்றவர்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தென்பட்டது. அதன்பிறகு மனநிறைவோடு அனைவரும் இறைவனை கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.


விளக்கு ஏற்றிய சடங்கில் நடந்ததை பார்த்து மிகவும் மனமகிழ்ந்து போன அருள் தன் அண்ணனை இறுக்க கட்டிக் கொண்டான்.


அவனும் பதிலுக்கு அணைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் தங்கள் மனைவியுடன் அமர்ந்தனர். நடந்த அனைத்தையும் பார்த்து பரிபூரணம் பாட்டிதான் கொதித்துப் போயிருந்தார்.
அதன்பிறகு பாலும் பழமும் வழங்கப்படாது எந்த வித மறுப்பும் கூறாமல் அதையும் சாப்பிட்டு விட்டு அமர்ந்தனர்.


"பசங்களா நாலுபேரும் பார்க்க ரொம்ப சோர்வா தெரியிற மாதிரி இருக்கு சமர் அருள் ரெண்டு பேரும் உங்க உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க நீங்க ரெண்டு பேரும் எங்க கூட வாங்கலாம்" என்று கூறி அழைத்து சென்றார் புனிதா.


அவ்வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களோ தங்களுடைய அறைகளில் அடைந்துகொள்ள சிறியவர்கள் நேராக அருளை இழுத்துக்கொண்டு சமர் அறைக்கு சென்றனர். அங்கு அவன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அவன் மேலே வந்து மொத்தமாக விழுந்தனர்.


"சும்மாவே இதுங்க எல்லாம் குரங்கு கூட்டம் மாதிரிதான் ஆடிக்கிட்டு இருக்கும் அதுக்காகவே இவங்க எல்லாருக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்திருப்பேன் இப்போ குரங்கு கூட்டத்தோட தலைவியே இவங்களுக்கு அண்ணியாக வந்து இருக்கா இனி இவங்க எல்லாரையும் அடக்க முடியுமா கடவுள்தான் எல்லாரையும் காப்பாத்தனும்" என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டே அனைவரையும் பிடித்து அமரவைத்தான்.


"அண்ணா உண்மையாவே எங்க எல்லாரோட மனசுலயும் இன்னைக்கு தான் ரொம்ப நிறைந்து போய் இருக்கு இவ்வளவு நாள் நாங்க என்ன தான் இந்த வீட்டுல சந்தோஷமா இருந்தாலும் நீ எங்க கூட இல்ல அப்படின்னு இருக்குற எங்க எல்லாரோட மனசுலயும் இருந்துக்கிட்டே இருந்துச்சு ஆனா இன்னைக்கு அந்த குறையும் காணாம போயிடுச்சு வி ஆர் சோ ஹாப்பி" என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
அவர்களுடைய மகிழ்ச்சியை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சமர்.



அதேநேரம் இங்கே புனித அறையில் இருந்த பெண்கள் இருவரையும் பரிபூரணம் பாட்டி சந்திக்க வந்தார். வந்தவர் நேராக "அடியே மேனாமினுக்கி என்ன வந்த கொஞ்ச நேரத்துல இருந்தே இந்த வீடு உன்னோட கட்டுப்பாட்டில் இருக்கிற மாதிரி நடந்துக்கிற கொஞ்சம்கூட உனக்கெல்லாம் புத்தியே கிடையாதா? போயும் போயும் அவனை கல்யாணம் பண்ணதுக்கு போய் இந்த ஆட்டு ஆடிக்கொண்டிருக்க இதுல உனக்கு ஏதாவது ஒரு நல்ல ராசி உள்ள பையன் கிடைச்சா கையில பிடிக்க முடிஞ்சு இருக்குமா! ஒழுங்கு மரியாதையா அவனையும் கூட்டிக்கொண்டு அந்த வீட்டுக்கு போய் சேர்ற வழியை பாரு இந்த வீட்டில இராஜ்யம் பண்ணலாம் அப்படின்னு நினைச்ச உருத்தெரியாமல் அழித்து விடுவேன்" என்று தான் கிழவி ஆகி விட்டோம் என்பதையும் மறந்து சவால் விட்டார்.


"அய்யோ கெழவி நீ சொல்ற வரைக்கும் எனக்கு இந்த வீட்டை ராஜ்யம் பண்ற ஐடியாவே கிடையாது. ஆனா நீ சொன்னதை கேட்கும் போது அப்படி பண்ணினா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு அதனால நாளையிலிருந்து இந்த வீட்டோட ராஜ்யத்தை என்னோட கட்டுப்பாட்டில் கொண்டு வரேன். முக்கியமா என் புருஷனை பத்தி தப்பா பேசினா இந்த வாயில வசம்பு வைத்து தேய்கிறேன் இரு" என்று கூறியவள் விறுவிறுவென்று கிச்சன் பக்கம் சென்றாள்.


கிச்சனில் வேலையாக இருந்த பெண்கள் பட்டு புடவை கூட மாற்றாமல் கிச்சன் பக்கம் வந்த ஆதர்ஷினியை கேள்வியாக பார்த்தனர்.


"அத்தை எனக்கு இப்போ உடனடியா மிளகாய் வத்தல், வசம்பு ரெண்டும் வேணும் ஏன் எதுக்குனு கேட்டா நீங்க ஒரு சூப்பர் சோ பாக்கணும்னா என் பின்னாடியே வாங்க"
யாரோ ஏதோ செய்துள்ளார்கள் அதனால்தான் அவள் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அமைதியாக எடுத்துக் கொடுத்தனர்.


அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவள் காதில் விழுந்ததோ "இங்க பாரு மா ராசாத்தி உங்க அக்கா கூட சேராத உங்க அக்கா புருஷன் ராசி இல்லாதவன், கூட இருந்தாலே வாழ்க்கையில கஷ்டம் ஒழுங்கா நல்ல பிள்ளையா பொழைக்கிற வழிய பாரு உங்க அக்கா கூட சேர்ந்து தேவையில்லாமல் நீயும் பிரச்சனைகளுக்கு மாட்டிக்காத. நாங்க உன் மேல ரொம்ப பாசம் வைத்திருக்கோம் அதனால நாங்க சொல்ற படி கேட்டு நடந்து கொள்" என்று கூறிக்கொண்டிருந்த பரிபூரனத்தின் வார்த்தைகளை தான்.
நேராக பரிபூரணம் பாட்டியின் முன்பு நின்றவள் "என்ன கிழவியை என் தங்கச்சியை என் கிட்ட இருந்து பிரிக்கவா பாக்குற" என்று கூறிக்கொண்டே தன் கையிலிருந்த மிளகாய் மற்றும் வசம்பு இரண்டையும் அவர் தலையை அழுந்தப் பிடித்து வாயில் வைத்து நன்றாக தேய்த்து விட்டாள்.


காரம் மற்றும் கசப்பு சுவை தாங்க இயலாமல் அடியே அடியே விடுடி என்று வாய்க்குள்ளேயே கத்திக் கொண்டிருந்தார். ஏனென்றால் வாயைத் திறப்பதற்கு தர்ஷினி விடவில்லையே அழுத்திப் பிடித்து தேய்த்துக் கொண்டே அல்லவா இருந்தாள்.


அவர் கார்த்திகா புறம் திரும்பி இவளாவது தன்னை காப்பாற்ற மாட்டாளா என்ற ரீதியில் பார்க்க "என்னோட அக்கா கிட்ட இருந்து என்ன பிரிக்க பார்த்தது மட்டும் இல்லாம என்னோட மாமாவையா தப்பா பேசுறீங்க உங்களோட இந்த வாய்க்கு இது தேவைதான் நல்ல அனுபவிங்க" என்று கூறி கைகட்டி நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


கீழே தண்ணீர் குடிக்க வந்த கணேஷ் நடக்கும் அனைத்தையும் பார்த்துவிட்டு மேலே அனைவரிடமும் கூற மகிழ்ச்சியாக ஓடினான்.

"அண்ணா அண்ணா கீழ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயம் நடக்குது நம்ம பாட்டியோட வாயில அண்ணி ப வசம்பையும் மிளகாயையும் வச்சு தேச்சு விடுராங்க. ஏதோ பேசி இருக்காங்க சின்ன அண்ணி நீ எங்க அக்கா கிட்ட இருந்து என்னை பிடிக்கவா பார்க்கிற அப்படின்னு சொல்றாங்க கிழவி நல்லா வாசமா போய் சிக்கி இருக்கு வா நான் அந்த ஷோ பார்த்து என்ஜாய் பண்ணலாம்"


அனைவரும் கிளம்புவதற்கு முன்பே என்னானதோ ஏதானதோ என்றதே எடுத்து ஓடியது சமர் தான்.
இன்னும் அவள் செய்து கொண்டிருப்பதை பார்த்தவன் விரைந்து சென்று அவளைத் தன் பாட்டியிடம் இருந்து பிரித்தான். "என்னடி நெனச்சிட்டு இருக்க வயசுல பெரியவங்களா பின்னும் கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா எதுக்காக இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணுவேன்" என்று கேட்டான்.



ஏற்கனவே பெண்கள் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, சிறுவர்கள் அனைவரும் ஓடி வருவதைப் பார்த்து மற்ற ஆண்களும் வெளியே வந்துவிட்டனர். இவர்கள் அனைவரையும் பொதுவாக பார்த்த ஆதர்ஷினி


"இங்க பாரு என் முன்னாடி இல்ல இந்த வீட்ல இருக்க பசங்க முன்னாடியே உன்ன பத்தி தப்பா பேசினா கண்டிப்பா என்னோட காதுக்கு அந்த விஷயம் வந்துரும். அப்படி ஏதாவது என்னோட காதுக்கு வந்தா அப்படி பேசினவங்களை நான் சும்மா விடமாட்டேன். இன்னைக்கு மொத நாள் அப்படிங்கிற காரணத்தினாலே தப்பா பேசினா குழந்தைக்கு வாயில வச்சி தேய்கிற மாதிரி பேசிட்டு இருக்கேன் ஆனா இதே மாதிரி நடந்து கிட்டே இருந்தா என்னோட ட்ரீட்மென்ட் ஒன்னு ஒன்னும் வேற மாதிரி இருக்கும். நாளையில இருந்து நானும் இந்த வீட்டில் சமைக்க தான் போறேன். நம்மள என்ன பண்ணிடு வா அப்படின்னு உன்னோட அப்பா சித்தப்பா தாத்தா எல்லாம் நெனச்சா சாப்பிடுற சாப்பாடை சாப்பிட முடியாத மாதிரி ஏதாவது பண்ணி வச்சிருக்வேன் என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும் இவங்க எல்லாரையும் அமைதியா இருக்க சொல்லு" என்று கூறிவிட்டு கை கழுவச் சென்றுவிட்டாள்.


"என்னம்மா இது நீயாவது உங்க அக்காவ தடுத்து இருக்கலாம் இல்ல" என்று அவன் கார்த்திகாவை கேட்க "மாமா அக்கா பண்ணதுல எந்தவித தப்பும் கிடையாது வயசுக்கு தகுந்த மாதிரி பேசணும் இவ்வளவு வருஷம் இவங்க எல்லாம் வாழ்ந்து என்னத்த கண்டாங்க. பேசுற பேச்சு அவ்வளவு மோசமா இருக்கு ஒழுங்கா சொல்லி வைங்க இதுல என்னையும் என்னோட அக்காவையும் பிரிக்கப் பாக்குறாங்க தேவை இல்லாம இந்த மாதிரி வேலை பார்த்தா நாங்களும் வேற மாதிரி ஏதாவது வேலை பார்க்க வேண்டி வந்துரும்" என்று கூறி விட்டு அமைதியாக கைகட்டி நின்று கொண்டாள்.


இதுல நான் எதுவுமே பண்ண முடியாது என்ற ரீதியில் சமர் கிளம்பிவிட அருள் தன் மனைவியைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு சென்றான். மற்றவர்களும் ஒருபுறம் மகிழ்ச்சியாக சென்றுவிட கடுப்பில் இருந்தவர்கள் அப்படி என்னதான் செய்து விடுவாங்க அப்படின்னு பார்த்திடலாம் என்று வீராப்பில் கிளம்பி சென்றனர்.
அதன்பிறகு நேரங்கள் கடக்க இரவு சடங்குக்கான நேரமும் வந்தது. சம்பிரதாயத்திற்காக தங்களை அலங்கரித்துக் கொண்ட பெண்கள் தங்கள் மூன்று அத்தைகளையும் பார்த்து "தயவுசெஞ்சு எங்களை மன்னிச்சிடுங்க நீங்க ஆசைப்படுற மாதிரி இன்னும் ஒரு வருஷத்துல இந்த வீட்ல பேரக்குழந்தை வர்றது எல்லாம் ரொம்ப கஷ்டம். சமர் இந்த வாழ்க்கையை ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும் அதே மாதிரி சமர் சந்தோஷமா இல்லாம எங்க யாராலயும் சந்தோஷமா இருக்க முடியாது அதனால மன்னிச்சிடுங்க" என்று கைகூப்பி மன்னிப்புக் கோரினார்கள்.


"எங்க பையன் இந்த வீட்ல எங்க எல்லார் கூடவும் சேர்ந்து இருக்கிறதே எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். இதுக்கு மேல அவனோட வாழ்க்கைல சந்தோஷத்தை கொடுக்க அவனோட பொண்டாட்டி தம்பி, தம்பி பொண்டாட்டி தங்கச்சி னு எல்லாரும் இருக்கிறது நினைக்கும் போது எங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்போ ஆண்டவனே இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு கொடுக்கணும்னு நினைக்கிறானோ அப்ப கொடுக்கட்டும் நீங்க சந்தோஷமா போய் தூங்குங்க" என்று கூறி அனுப்பி வைத்தனர்.


ஏற்கனவே அருள் கார்த்திகா இருவரும் பேசி வைத்திருந்த காரணத்தினால் கார்த்திகா வந்தவுடன் "இன்னைக்கு எங்க பாட்டிக்கு அண்ணி ஆப்பு வச்சாங்க போல நீயும் ரொம்ப சந்தோஷமா என்ஜாய் பண்றது மாதிரி இருந்துச்சு. இந்த மாதிரி இன்னும் நிறைய அந்த வீட்டில் நடக்கும் போல நிறைய சுவாரசியமான விஷயங்களை பார்க்க நானும் ரொம்ப ஆவலா இருக்கேன்" என்று புன்னகையுடன் கூறி அவளை அணைத்துக்கொண்டான்.



"நீங்க சொல்லும் போது கூட இந்த அளவுக்கு உங்க பாட்டி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல ரொம்ப ஓவரா தான் பேசுறாங்க முதன் முதலில் வந்து எங்க அக்கா கிட்ட வாய் கொடுத்தாச்சு இனி அவ விட்டு பாப்பா கண்டிப்பா விடமாட்டா நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணலாம் கவலையே படாதீங்க இப்போம் காலையிலிருந்து நடந்தது எல்லாம் சேர்ந்து ரொம்ப சோர்வா இருக்கு தூங்குவோமா" என்று கேட்டாள்.
அவனும் சோர்ந்து போய் இருந்த காரணத்தினால் இருவரும் அமைதியாக படுத்து உறங்க ஆரம்பித்தனர்.
இங்கோ சமர் தன்னுடைய அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் அவன் முகத்தை பார்த்த ஆதர்ஷினி "எப்படிடா இவங்க எல்லாரும் பேசினது கேட்டுட்டு இவ்வளவு வருஷம் இந்த வீட்டில் இருந்த, இடையில கொஞ்ச வருஷம் மட்டும் தானே நீ தனியா போய் நிம்மதியா இருந்த அப்பவும் உன்னை பாக்குற இடத்தில் எல்லாம் இவங்க அசிங்கப்படுத்தி தானே இருந்து இருப்பாங்க. இனி உன்னோட வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே நாங்க எல்லாரும் உனக்கு தருவோம் டா" என்று கூறி மென்மையாக அவன் நெற்றியில் இதழ் பதித்து விட்டு பக்கத்தில் படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டாள்.



அவள் நன்றாக அசந்து தூங்கி விட்டாள் என்று உணர்ந்த பிறகு அவள் வந்ததும் கண் விழித்தாலும் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த சமர் கண் விழித்து "நீ என்னோட வாழ்க்கையில சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கணும்னு நினைக்கிறேன். ஆனா இவ்வளவு வருஷம் என் மனசுல இருக்க ஆறாத வடுக்கள் எல்லாம் ஆழுமா அப்படியே ஆறுனாலும் அதோட தழும்பு என் மனசுல மறையாமல் தானே இருக்கும் அந்த தழும்பு எல்லாம் உன்னை கஷ்டப்படுத்துமோ அப்படின்னு நினைச்சு எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ஏன் என்னோட வாழ்க்கையில வந்த உன்னை எப்படி என்னோட வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டு போக போறேன் அப்படின்னு எனக்கு தெரியல. ஆனா முடிஞ்ச அளவுக்கு என்னோட வாழ்க்கையை விட்டு வெளியே அனுப்பிய தீருவேன்" என்று மனதிற்குள்ளேயே பேசியவன் அவள் இதமாக கொடுத்த நெற்றி முத்தத்தில் கை வைத்து தடவி கொண்டே தூங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலை மிகவும் அமைதியாகவே விடிந்தது. முதலில் கண் விழித்த ஆதர்ஷினி தன் அருகில் அமைதியாக துயில் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி விட்டு தன்னை ரீஃபிரஷ் செய்து விட்டு கீழே சென்றாள்.



அவள் கீழே சென்ற நேரத்தில் தான் ஒவ்வொருத்தராக எழுந்து வர ஆரம்பித்தனர். தன் தங்கையை பார்த்தவள் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றால் மற்றவர்கள் புரியாமல் பார்க்க அக்கா தங்கை இருவரும் வீட்டின் முன்னே சுத்தம் செய்து அழகாக கோலமிட ஆரம்பித்தனர். அவர்கள் கோலத்தை பார்த்து மிகவும் மகிழ்ந்த சரண்யா இருவரும் ஓடிச்சென்று "அண்ணி நாங்களும் இந்த கோலத்திற்கு உங்க கூட சேர்ந்து கலர் கொடுக்கவா" என்று கேட்டனர். அதற்கு பெண்கள் இருவரும் புன்னகை முகமாக தலையசைக்க நால்வரும் ஒன்றாக சேர்ந்து மிகவும் அழகான கோலத்தைப் போட்டு முடித்தனர்.



காலத்தை முடித்தவர்கள் சமையலறையில் தங்களுடைய அத்தைக்கு நல்ல மருமகளாக உதவி செய்ய ஆரம்பித்தனர். ராதிகா இருவரையும் பார்த்து "டேய் பொண்ணுங்களா எல்லாருக்கும் காபி கலந்து எடுத்துக் கொண்டு குடுத்துட்டு வர்றீங்களா? இந்த வீட்டு ஆம்பள பசங்க எல்லாம் காபியை குடிச்சுட்டு தான் வருவாங்க கொஞ்சம் எல்லாருக்கும் குடுத்துட்டு வர்றீங்களா டா" என்று கேட்டார்.



"சின்ன பசங்களுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும் சேர்த்தே காபியை கொடுங்க நாங்க கொடுக்கும்போது எல்லாரோட முகத்தில் வரக்கூடிய ஒரு மரண பயத்தை பார்க்க ரொம்பவே ஆவலாக காத்துகிட்டு இருக்கேன்" என்று ஒரு புன்சிரிப்புடன் கூறியவளைப் பார்த்து அவர்களும் சிரித்து விட்டனர்.



அதற்குள் பெரியவர்கள் அனைவரும் வந்து விட புனிதா அனைவருக்கும் காபி கலந்து கொடுத்தார். காலை உணவை அமைப்பதிலும் அனைத்து பெண்களும் ஒன்றாக ஈடுபட முதலில் பெரியவர்கள் சாப்பிட்டு சென்ற பிறகு மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர் பல நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. சமர் எதுவும் பேசவில்லை என்றாலும் தன் தம்பி தங்கை முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து புன்னகைத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அதன் பிறகு மறு வீட்டு விருந்து என்று நாட்கள் செல்ல முதல் நாள் பிரச்சனைகளுக்கு பிறகு வேறு எந்தவித பிரச்சனையும் சமர் வீட்டில் வரவில்லை புதுமலர் ஜோடிகளும் விருந்து என்று ஒவ்வொரு இடமாக சுற்றிக் கொண்டிருந்த காரணத்தினால் வீட்டில் பெரிதாக தவிர சண்டை சச்சரவுகளும் வராமல் சென்றது.

ஆனால் இப்படியே இருந்து விட நான் அனுமதிப்பேன் என்ற ரீதியில் செல்லையா தாத்தா ஒரு பிரச்சினையைக் கிளப்ப அவருக்கு அதிர்ச்சி கொடுத்த பதிலடி இளவட்டங்கள் தங்களை மறந்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari