திருமணம் முடிந்து நாட்கள் ஒரு சீராகவே சென்று கொண்டிருந்தது. மறுவீடு விருந்து மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்கு செல்வது என்று ஒவ்வொரு நாளும் எந்தவித மாற்றமும் இல்லாமல் மகிழ்ச்சியாக முடிந்து மாலை நேரத்தில் சமர் தன்னுடைய தோட்டத்தை பார்க்க சென்று விடுவான்.
ஆதவன் ஆனால் இந்த நாட்களில் அங்கே வர முடியாத காரணத்தினால் சமர் மட்டுமே ஒரு முறை சென்று சிறிது சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்து விடுவான். அவன் எப்போது வீட்டிற்கு வருவான் என்று காத்திருக்கும் அவனது தம்பி தங்கைகள் சிறிது நேரம் அவனிடம் அரட்டை அடிப்பார்கள், பின்பு அனைவரும் சாப்பிடுவிட்டு தூங்க சென்று விடுவார்கள்.
ஆதர்ஷினி அவனது வேலைகளையும் பார்த்தாலும் பெரிதாக இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லை. அவள் அதை கண்டு கொள்ளவும் இல்லை. இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் செல்லையா தாத்தா அருளை தனியாக அழைத்தார்.
"பேராண்டி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இங்க வா"
"என்ன தாத்தா என்ன பேசணும் எதுக்காக என்ன தனியா கூப்பிடுறீங்க அவ்வளவு முக்கியமான விஷயமா?" என்று கேட்டான்.
"ஆமாடா பேராண்டி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே அந்த சமர் பய கூட சேராதே! அதுதான் உனக்கும் உன்னோட எதிர்காலத்துக்கு நல்லது. அதே மாதிரி உன்னோட பொண்டாட்டியும் சமர் பொண்டாட்டியும் அக்கா தங்கச்சியாக இருந்து இருக்கலாம், ஆனா இப்ப அவ உனக்கு பொண்டாட்டி அவ அவளோட மனசுல ஞாபகம் வச்சுக்க சொல்லு. எப்ப பாரு அவ பின்னாடியே சுத்திகிட்டு இருக்கா அவ என்ன சொன்னாலும் கேட்டுக் கேட்டு அதற்கு ஆமா சாமி போட்டுட்டு இருக்கா, இது எல்லாம் நல்லதுக்கு இல்ல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவங்க ரெண்டு பேரையும் அவங்க தோட்டத்து வீட்டுக்கு அனுப்பி விட்டு நீங்க இங்க சந்தோஷமா இருக்க பாருங்க" என்று கூறினார்.
தன் தாத்தா பேசியது மிகவும் வருத்தமாக இருந்தாலும், எந்த காரணத்தினால் அண்ணனின் மீது இந்த அளவுக்கு வெறுப்பு வந்தது என்று அறிய ஆவல் கொண்டான். அதனால் "தாத்தா நீங்க இவ்வளவு தூரம் அண்ணன வெறுக்க காரணம் என்ன? உங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் நாங்க அண்ணன் தம்பி எல்லாரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து நீங்க சந்தோஷம்தான் படனும் ஆனா நீங்க எங்களையும் அவன் கூட சேர விடாமல் பார்த்துக்கொள்கிறீங்க அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் அந்த காரணம் என்னன்னு சொல்லுங்க" என்று நிதானமாக கேட்டான்.
ஏற்கனவே இவர்கள் பேச ஆரம்பிக்கும்போதே மற்றவர்கள் அங்கே கூடிவிட்டனர். ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் எதிர்பாராத விதமாக அப்பக்கம் வந்தவர்களும் நடந்த விஷயங்களை கேட்டு அங்கேயே நின்று கவனிக்க ஆரம்பித்து விட்டனர். ஏதோ வேலையாக வெளியே சென்று வந்த சமர் கூட இவர்கள் பேச்சில் அதற்குமேல் நகரமுடியாமல் இறுகிப் போய் நின்று விட்டான். ஆகமொத்தம் வீட்டில் உள்ள அனைவரும் ஆக அவர் கூறுவதைக் கேட்க ஆயத்தமானார்கள்.
"டேய் உங்க எல்லாருக்கும் நாங்க சொல்றது புரியாது டா நீங்க எல்லாரும் இப்போ அவன் மேல பாசத்துல இருக்கீங்க. ஆனா என்னைக்காவது ஒரு நாள் அவன் ராசியால உங்களுக்கு ஒரு கெட்டது நடந்தால் தான் உங்களுக்கு புத்தி வரும். முதல் முதல்ல அவன் இந்த வீட்டில பிறக்கும்போது அளவுக்கு அதிகமா சந்தோஷப்பட்டது நானாதான் இருக்கும். ஆனா உன் பாட்டிய நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த புதுசுல ஒரு சொத்து மேல கேஸ் போட்டோம், அதுவும் உன்னோட பாட்டி சொல்லி தான் அந்த கேச நாங்க நடத்த ஆரம்பித்தோம்.
அதுவரைக்கும் நாங்க கேஸ் போட்ட நிலம் எங்களுக்கு உரிமையானது அப்படினு எங்களுக்கு தெரியவே தெரியாது. ஆனா உன் பாட்டி சொன்ன காரணத்தினால் நாங்களும் நிறைய விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது எங்களுக்கு அதுல உரிமை இருக்குமோ அப்படி என்றுதான் ஆரம்பிச்சது. அதனால் நாங்களும் கேஸ் போட ஆரம்பிச்சோம், பல வருஷங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு வருடங்கள் கடக்க கடக்க எங்களுக்கு அந்த நிலத்தில் எங்களுக்கு உரிமை இருக்கு அப்படிங்கிற எண்ணம் வளர ஆரம்பித்தது.
அப்படி எங்களுக்கு உரிமை இல்லை அப்படின்னு சொன்னா ஆரம்பத்திலேயே அந்த கேஸ் முடிந்து போயிருக்கும். ஆனா எங்களுக்கு உரிமை இருந்த காரணத்தினால் தான் இவ்வளவு வருஷம் அந்த கேஸ் போச்சு. உன் அண்ணன் பிறந்து கொஞ்ச நாளிலேயே அந்த கேசத்தை ஒரு தீர்ப்பு வந்தது. எங்க வீட்டு பேரன் பிறந்த நேரம் அந்த சொத்து எங்களுக்கே வந்துரும் அப்படின்னு நாங்கள் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?
அந்த ஆசைகளை எல்லாம் மண்ணள்ளி போடுற மாதிரி அந்த கேஸ் எங்களுக்கு சாதகமாக முடியாமல் எதிர் தரப்பினருக்கு சாதகமாக முடிந்தது. அப்ப எங்களுக்கு எல்லாம் எவ்வளவு கோபம் வரும் இவனோட ராசியினால் தான் எங்களோட சொத்து எங்க கைய விட்டு போச்சு இதே மாதிரி உங்களுக்கும் ஏதாவது நடக்க வாய்ப்புகள் இருக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்" என்று கூறினார்.
அங்கிருந்த பலரின் மனதில் 'அட லூசு மனுஷா ஒரு சொத்து கிடைக்காமல் போன காரணத்துக்காக இவ்வளவு பகையை மனசுல வச்சிக்கிட்டு இருக்கீங்க. எந்த ஒரு சொத்துக்காக கேஸ் போட்டாலும் அதற்கு உடனடியாக எங்கய்யா தீர்ப்பு வந்திருக்கு வாய்தா வாய்தா போட்டு வருஷக்கணக்கா இழுத்து அடிக்க தான் செய்வாங்க. அதை எல்லாம் நம்பி அந்த சொத்து இவங்களுக்கு வரும்னு நினைச்சாங்களாம், அதனால சமர் மேல கோபப்பட்டாங்களாம் இவங்கள எல்லாம் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினா என்ன' என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.
ஏற்கனவே இது அனைத்தையும் அறிந்திருந்த அவன் மனதில் ஒரு விரக்தி தான் வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரம் ஆதர்ஷினி "ஐயோ தாத்தா இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட புருஷன் பிறந்த நேரமும் இல்ல என்னோட புருஷன் ராசியும் இல்ல உங்க பொண்டாட்டி வந்த நேரம் தான் காரணம்" என்று கூறி நிறுத்தினாள்.
இவ என்ன புது கதை சொல்லப் போறா என்ற ரீதியில் அனைவரும் பார்க்க சமர் மனதில் மட்டும் பக்கென்று இருந்தது. இவ்வளவு நேரம் இருந்த விரக்தி அவனுக்கு நொடியில் காணாமல் போனது தான் விந்தை, ஆனால் அதை உணரும் நிலையில் அவன் இல்லை.
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் பரிபூரணம் பாட்டி அவளைப் பார்த்து "அடியே மேனாமினுக்கி என்ன தைரியம் இருந்தா நான் இந்த வீட்டுக்கு வந்த ராசிதான் பிரச்சனைக்கு ஆரம்பம் அப்படின்னு சொல்லுவ. உன்னை எல்லாம் இந்த வீட்டுக்குள்ள வர விட்டதே தப்பு முதல்ல ஒழுங்கா உன்ன இந்த வீட்டைவிட்டு அடிச்சு துரத்தனும்" என்று கூறி அவளை அடிக்க வந்தார். ஆனால் அவரின் கையை தர்ஷினி பிடிப்பதற்கு முன்பு சமர் வந்து பிடித்தான்.
அவரை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன் "இங்க பாருங்க என்னோட பொண்டாட்டிய அடிக்கிறதுக்கு உங்களுக்கு கொஞ்சம் கூட உரிமை கிடையாது. இவ்வளவு நாள் நீங்க எல்லாரும் பேசினாத கேட்டுக்கொண்டுதான் இருந்தேன், என்னோட ராசி சரி இல்ல என்னோட பிறப்பு சரி இல்ல நான் பிறந்த நேரம் தான் இவ்வளவு கஷ்டம் வந்துச்சி அப்டின்னு ஒவ்வொரு தடவையும் நீங்க எல்லாரும் குத்தி காட்டும் போதும் நான் அமைதியாக ஒதுங்கிப் போனேன். அதே மாதிரி அவ என்ன சொல்கிறாளோ அதை அமைதியா கேளுங்க அதுக்குப் பிறகு அதுக்கு பதில் பேசுங்க. இப்படி கை நீட்டுற பழக்கம் எல்லாம் இங்க வேணாம் நீங்க வயசானவங்களா இருக்க போய் அமைதியா பேசிட்டு இருக்கேன். இதே இது வேற யாராவது கை நீட்ட வந்து இருந்தா என்னோட பேச்சு வேற மாதிரி இருந்திருக்கும்" என்று கூறியதைக் கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் வாய்பிளந்து தான் போனார்கள்.
பாட்டியைப் பார்த்து நக்கலாக சிரித்தவள் தாத்தாவைப் பார்த்து "நான் சொல்வது எல்லாம் உண்மை தான் உங்க பொண்டாட்டி வந்த நேரம் தான் இந்த வீட்டோட பிரச்சனை ஆரம்பம். நீங்களே சொல்றீங்க உங்க பொண்டாட்டி வந்து சொன்ன பிறகுதான் அந்த சொத்துக்கு ஆசைப்பட்டு கேஸ் போட்டேன் அப்படின்னு ஏன் உங்களோட அப்பா அம்மாவுக்கு தெரியாதா பரம்பரை பரம்பரையாய் எல்லா சொத்தையும் பார்த்து நிர்வாக செஞ்சுகிட்டு வர்றவங்களுக்கு எந்த சொத்து நமக்கு உண்டு! எந்த சொத்து நமக்கு கிடையாது,! மேல நமக்கு உரிமை உண்டு அப்படின்னு தெரியாதா? உண்மையாவே அந்த சொத்து மேல உங்களுக்கு உரிமை இருந்தா உங்க அப்பா அம்மாவே கேஸ் போட்டு அந்த சொத்தை வாங்கி இருக்க மாட்டாங்க.
உங்க கல்யாணம் முடிஞ்ச புதுசில உங்க பொண்டாட்டி மேல இருந்தா ஆசையினாலே உங்க பொண்டாட்டி சொன்ன காரணத்தை கேட்டுகிட்டு நீங்க போய் கேஸ் போட்டா உடனே அந்த சொத்து உங்களுக்கு சொந்தம் ஆயிடுமா? சும்மாவே சொத்து சம்பந்தமா ஒரு கேஸ் கொண்டுபோய் போட்டா அது முடியவே எத்தனை தலைமுறை ஆகும் அப்படின்னு தெரியாது. இதுல என் புருஷன் பிறந்த நேரத்தில் தீர்ப்பு வந்ததே பெரிய விஷயம். இதுக்குமேல சொத்தில் நமக்கு உரிமை இல்லை அப்படி என்று சந்தோஷமா விலகிப் போகாமல், என் புருஷனை காரணம் காட்டுறீங்க? என் புருஷனை கஷ்டபட வைத்திருக்கக்கூடாது எப்போ உங்க பொண்டாட்டி ஆசைகாட்டி நீங்க போய் கேஸ் போட்டிங்களா அப்பவே உங்களோட அப்பா அம்மா இவ சொத்து மேல ஆசைப்பட்டு தான் இப்படி பண்ற அப்படின்னு தெரிஞ்சி அவங்க உங்க பொண்டாட்டிய வேலைக்கு வைத்து இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.
ராசி கெட்ட கிழவி உங்க பொண்டாட்டி தான் இனிமே உங்க வாயில இருந்து என் புருஷனோட ராசி சரியில்லை அப்படி ஏதாவது வந்தா நானும் உங்க பொண்டாட்டி ராசி சரி இல்லன்னு ஊர்ல இருக்க எல்லார்கிட்டயும் போய் சொல்லுவேன். நான் இவ்வளவு பேசுறேன் அதுக்காக என்னை இந்த வீட்டை விட்டு துரத்த பிளான் பண்ணா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக உங்க பொண்டாட்டி மேல கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன் ஞாபகம் வச்சுக்கோங்க. கடைசியா சொல்றேன் இந்த வீட்ல அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி இனி எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க ஆசை படுறாங்க. அவங்க ஒத்துமையா பிரிக்க நினைச்சீங்க நான் பொல்லாதவளா மாறிடுவேன்" என்று கூறிவிட்டு தன் தங்கையையும் தன் கணவனையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.
நடந்த அனைத்தையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த சரண் கணேஷ் இருவரும் "அப்ப பாட்டி இந்த வீட்டுக்கு வந்த நேரம் தான் சரியா இல்லை போல அது தெரியாம நம்ம அப்பா தாத்தா பாட்டி எல்லாரும் நம்ம அண்ணாவை தப்பா நினைச்சுகிட்டு இருந்து இருக்காங்க. இப்போ என்ன பண்ண போறாங்க பாட்டிய வீட்டை விட்டு துரத்த போறாங்களா இல்ல பக்கத்துல இருக்க மாட்டு தொழுவத்தில் தங்க வைக்கப் போறாங்களா?" என்று சத்தமாக கேட்டுக் கொண்டே சென்றனர்.
ஆதர்ஷினி பாட்டியை குறை சொல்ல ஆரம்பிக்கும்போதே வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்ட அவ்வீட்டின் மருமகள்கள் இதற்குமேல் சிரிப்பை அடக்க முடியாமல் நேராக கிச்சன் சென்று தங்களை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
சமர் மேல் வெறுப்பில் இருந்தவர்களுக்கு கூட ஒரு நிமிடம் பரிபூரணம் பாட்டி வீட்டிற்கு வந்த நேரம்தான் சரியில்லையோ என்ற எண்ணம் தோன்றியது ஆனால் அதை உடனடியாக மாற்றி விட்டனர்.
அனைவரது முகத்தையும் பார்த்த அருள் தன் சித்தப்பா செல்வதை பார்த்து சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்.
இங்கே முதலில் ஆதர்ஷினி சமர் கையைப் பிடித்து அழைத்து வந்தாள் ஆனால் சில நொடிகளில் சமர் ஆதர்ஷினி கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.
அடுத்து நடக்கப் போகும் சுவாரசியமான நிகழ்வுகாக கார்த்திகாவும் கை பிடியிலேயே செல்ல "இங்க பாரு நீ நினைக்கிற மாதிரி இந்த வீட்டு ஆட்கள் எல்லாம் அவ்வளவு நல்லவங்க கிடையாது. என் மேல இருக்குற வெறுப்புல என்னோட வாழ்க்கை அழிக்க கூட பார்த்தவங்க" என்று கூறி ஒரு நிமிடம் கடந்த கால நினைவுகளில் முகம் கசங்க நின்றவன்,
பின்பு "ஒவ்வொரு நிமிஷமும் உன்னை நான் பாத்துட்டு இருக்க முடியாது ஒழுங்கா வாய கொஞ்சம் அடக்கி வைக்க வழியை பாரு. இல்லன்னா நம்ம தோட்டத்து வீட்டுக்கு போய்க்கிட்டே இருக்கலாம். எல்லாரும் அவங்களுக்கு விருப்பப்பட நேரம் நம்மள அங்க வந்துட்டு போவாங்க எந்தவித பிரச்சனையும் இருக்காது இனி நீ இப்படி துடுக்குத்தனமான எங்கேயாவது பேசுறத பாத்தா அவ்வளவுதான். எல்லார் முன்னாடியும் பாட்டி தான் எல்லாத்துக்கும் காரணம் அப்படின்னு சொல்ற இதனால் என்னென்ன பின்விளைவுகள் வரும் என்று உனக்கு தெரியுமா?" என்று கேட்டான்.
"டேய் இங்க பாரு என்னால என்னோட கேரக்டரை மாற்ற முடியாது எனக்கு பிடிக்காத விஷயத்தை இப்படி தான் நேரடியாக சொல்லுவேன். அதே மாதிரி உன்னோட கடந்த காலத்தில் நடந்த எல்லாத்தையும் மறந்துடு இனி எப்பவாச்சும் அந்த விஷயங்களை எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி கஷ்டப்பட்ட நான் பொல்லாதவளா மாறிடுவேன் உனக்கு கட்டின பொண்டாட்டி ஒருத்தி கூடவே இருக்கும்போது உன்னோட பழைய லவ்வர் ஞாபகம் வரது சரி இல்ல. அது எல்லாம் முடிஞ்சு போன கதை இனி உன்னோட கடந்த காலத்தில் அவளோட காதல் பற்றியும் நடந்த எதைப்பற்றியாவது நெனச்ச உன்ன கடத்திட்டு போய் ஏதாவது பண்ணி விடுவேன்.
அதே மாதிரி உனக்கு நான் இங்க யார்கிட்டயும் பெருசா வம்பிழுக்க கூடாது அப்படின்னு தோணினா ஒன்னே ஒன்னு பண்ணு என்ன பார்த்து ஐ லவ் யூ சொல்லு அதுவும் என்னோட கண்ண பாத்து காதலோட சொல்லு. இங்க இருக்கிற உன்னோட தம்பி தங்கச்சி எல்லார் கூடயும் சேர்ந்து சந்தோஷமாக விளையாட்டுட்டு நிறைய பேர் நிறைய விஷயங்களை அவன் கிட்ட சொல்லி அவங்க கிட்ட பேசி தெரிஞ்சுக்கோ யார் இருந்தா எனக்கென்ன அப்படின்னு உன்னோட அம்மா சித்தி இரண்டு பேரும் கிட்டயும் உண்மையான பாசத்தோடு பழகி உன் சித்தப்பா கிட்டயும் உரிமையாய் பழகு. இவ்வளவு விஷயத்தையும் நீ பண்ணு நான் யாரையும் எதிர்த்து பேசாமல் அமைதியா என்னோட வேலையை பாக்குறேன்" என்று தோளை குலுக்கினாள்.
இவளை எப்படித்தான் சமாளிக்கிறதுன்னு தெரியல ஆண்டவா என்ற ரீதியில் சமர் தலையில் கைவைத்து அமர்ந்து விட அவனை பார்த்து சிறிது தோள் குலுக்களுடன் வெளியே வந்தாள் அவன் மனைவி.
"அக்கா என்னக்கா இந்த குடும்பம் இப்படி இருக்கு நம்ம முன்னாடியே இவ்வளவு பேச்சு பேசுறாங்க நம்ம இல்லாம இருக்கும் போது எவ்வளவு பேசி இருப்பாங்க. இதுல எல்லாம் குடும்பத்தையோ வீட்ல இருக்கிறவங்க ஒத்துமையா இருக்கணும்னு தான் ஆசை இருக்கும், ஆனா இவங்க குடும்பம் மட்டும் இன்னும் நீ இன்னைக்கு செஞ்சது எல்லாம் பத்தாது கா இந்த கேலரி இன்னும் என்னென்னமோ பண்ணி இருக்கு புதுசா நீயும் மாமாவும் வேற பழைய காதல் அப்படி இப்படி ன்னு சொல்றீங்க அது என்ன விஷயம் இன்னும் மாமா வாழ்க்கையில் என்னென்ன தான் நடந்து இருக்கு" என்று ஆதங்கமாக கேட்டாள்.
"உன்னோட மாமா வாழ்க்கையில உனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் நடந்து இருக்கு, அதெல்லாம் என்ன என்ன அப்படின்னு போகப்போக உனக்கு நான் சொல்றேன். நீ எதை நினைத்தும் கவலைப்படாதே சந்தோஷமா இரு எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம் சரியா" என்று கூறியவள் நேராக அலைபேசியை எடுத்துக்கொண்டு தன் அண்ணனிடம் பேச சென்று விட்டாள்.
மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்ட உடன் ஆதர்ஷினி "உன்கிட்ட ஒரு சில விஷயங்களை சொல்றேன் அதை எல்லாம் ஏன் எதுக்குன்னு கேட்காம எனக்காக பண்ணி கொடு" என்று கூறினாள்.
"முதல்ல நீ என்ன விஷயம்னு சொல்ல வந்த விஷயத்தை என்னால பண்ண முடியுமா முடியாதா அப்படின்னு பார்த்துட்டு நான் சொல்றேன் அதுக்கு பிறகு பேசிக்கலாம்" என்று கூறினான்.
"அதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும் உன்னை தவிர வேற யாராலயும் பண்ண முடியாது அதனால நீ பண்ணி கொடுத்துதான் ஆகணும் அதை மீறி நீ பண்ணாம இருந்தா நீ சந்திக்கப் போற பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஞாபகம் வச்சுக்கோ" என்று கட்டளையாக கூறினாள்.
"நீ என்ன மிரட்டுரத பார்த்தாலே தெரியுது நீ சொல்ல போற விஷயம் எவ்வளவு பெரிய விஷயம் அப்படின்னு, ஆனா இதனால என்னோட சமர் கஷ்டப்படுற மாதிரி இருந்தா நிச்சயமா நான் இத பண்ண மாட்டேன் அதை மட்டும் உன்னோட மனசுல வச்சிக்கோ" என்று கூறினான்.
அதெல்லாம் எங்களுக்கு தெரியும் மொதல்ல நான் சொல்றதெல்லாம் செய்யும் என்று அவன் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கூற ஆரம்பித்தாள்.
ஆதர்ஷினி கூறிய அனைத்தையும் கேட்ட ஆதவனுக்கு தான் நெஞ்சு வலி வராத குறையாக இருந்தது. இதை எப்படி செய்யப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்கு பெரிதாக எழுந்தது ஆனாலும் செய்யாமல் இந்த குட்டிபிசாசு சும்மா விடாது என்ற எண்ணமும் ஒரு ஓரத்தில் இருக்கதான் செய்தது.
அடுத்து என்ன திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.