• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 16

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ஆதவனை போனில் அழைத்த ஆதர்ஷினி அவனிடம் சில உதவிகள் வேண்டும் என்று கூற, அதற்கு அவனோ தன்னுடைய நண்பனை கஷ்டப்படுத்தும் படி எதுவும் தன்னால் செய்ய இயலாது என மறுத்து கூறினான். அதை சிறிது கூட சட்டை செய்யாத ஆதர்ஷினி கண்டிப்பாக அவன் செய்தே ஆக வேண்டும் என்று கட்டளை இட்டு விட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று கூற ஆரம்பித்தாள்.



"அண்ணா இந்த வீட்டில இருக்கிற பிரச்சனை எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா தான் சரி பண்ண முடியும். அவனோட மனசில இருக்கிற அந்த பழைய காதல் பிரச்சனை பத்தின விஷயங்களை மொத்தமா அழிக்கணும், அவனுடைய மனசுல இருக்குற விருப்பம் மொத்தமா வெளியே கொண்டு வந்து பேச வைத்துவிட்டா அதுவே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?" என்று நடந்த அனைத்தையும் கூறியவர் இறுதியாக சமர் தனக்காக எதிர்த்து பேசியதையும் கூறினாள்.



"சூப்பர் டா அவன் மனசுல உன் மேல இருக்கிற காதல கொஞ்சம் கொஞ்சமா இப்படிதான் வெளியே கொண்டுவரனும் ஆனால் இந்த நிலைமை இருக்கும்போது அவனுடைய பழைய காதல் பத்தி ஞாபக படுத்த போற இது எல்லாம் சரியா வருமா? அவன் இன்னும் ரொம்ப கஷ்டப்பட்டு விடக் கூடாது. அதனால இது எதுவுமே வேண்டாம்" என்று கூறினான்.



ஆதவன் கூறியதை கேட்டு கடுப்பான ஆதர்ஷினி "டேய் லூசு அண்ணா உனக்கு நான் சொல்றது புரியுதா புரியலையா? இப்போ அவனுக்கு என் மேல இருக்கிற காதல் வெளியில் வரது பெரிய விஷயம் கிடையாது. ஆனா எங்க தப்பித் தவறி வெளியே சொன்னால் காலேஜ் படிக்கும் போது அவன் கஷ்டப்பட்ட மாதிரி இப்பவும் கஷ்டப்படுவோமோ அப்படிங்கிற எண்ணம் அவனோட மனசுல இருக்கும். அதனால எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லவே மாட்டான். இன்னொரு விஷயம் அவனுடைய மனசுல அந்த பொண்ணு ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகள் மொத்தமா இல்லாம இருக்கணும், அதுக்கு அந்த பொண்ண நேர்ல வர வைக்கணும் எனக்கு தெரிஞ்சு நீ நினைச்சா கண்டிப்பா அந்த பொண்ணோட டீடைல்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி தர முடியும். ஒன்னு மொத்த டீடெயில் கலக்ட் பண்ணி தா இல்லையா அந்த பொண்ண நம்ம ஊருக்கு வர வை அவ்வளவுதான் சொல்ல முடியும். இதுல ஏதாவது கோல்மால் வேலை பார்த்த உனக்கும் பானிபூரிக்குமா நடக்க இருக்க கல்யாணத்தை அஞ்சு வருஷம் தள்ளி வைத்து விடுவேன் ஞாபகம் வச்சுக்கோ" என்று மிரட்டி விட்டு போனை வைத்தாள்.



"அடிப்பாவி சும்மா இருந்தா என்ன உன்னுடைய பிரண்டு கூட கல்யாணம்னு கோர்த்து விட்டு எல்லா வேலையும் பார்த்தது நீதான்! இப்போ எனக்கு அந்தப் பிள்ளையை வேற பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த நேரத்துல கல்யாணத்தை அஞ்சு வருஷம் தள்ளிப்போட போறேன்னு சொல்லி வில்லங்கமான வேலை பார்க்கப் போகிறா. பவானி வேற இவ என்ன சொன்னாலும் வேற வழியில்லாமல் மண்டைய ஆட்டிக்கிட்டு இருப்பா! கடவுளை இவ ஒருத்தி கிட்ட இருந்து எங்க எல்லாரையும் நீதான் காப்பாத்தணும் போல" என்று புலம்பிக் கொண்டே அவள் சொன்ன விஷயங்களை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.



"ஐயோ என்ன பண்றதுன்னு எதுவுமே தெரியலையே இவ சொல்ற மாதிரி செஞ்சா அவனுக்கு பழைய விஷயங்களை பத்தின ஞாபகம் எல்லாம் கண்ணு முன்னாடி வரும். அதை எல்லாம் நினைச்சு பார்த்தா ரொம்ப கலங்கி போவானே! அதேசமயம் அந்த பிசாசு வந்தாலும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி அவனை இன்னும் கஷ்டப்படுத்தும், இவனுக்கு கோபம் வந்து எதிர்த்து பேசினா கூட நாம இவ சொல்ற மாதிரி எல்லாத்தையும் செய்யலாம்.



ஆனால் இவன் விரக்தியடைந்து அமைதியான போனா இன்னும் அவனை கஷ்டப்படுகிற மாதிரி தானே ஆகும். ஆனாலும் நம்ம தங்கச்சி சொல்ற மாதிரி அவளை உண்மையா லவ் பண்ணிக்கிட்டு இருந்தாலும் முன்னாடி நடந்த இந்த பாதிப்பினால் வெளியே சொல்ல தயங்கும் அதையும் ஏற்றுக்கொண்டு தான் ஆகணும் ஐயோ இப்ப என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரிய மாட்டேங்குது கடவுளே நீ தான் ஒரு வழி காட்டணும்" என்று புலம்பிக் கொண்டிருந்தான்.



சரியாக அப்போது யாரோ அவன் தோள் தொட யாரென்று திரும்பிப் பார்த்தவன், அங்கே நின்று கொண்டிருந்த பவானியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனுடைய அதிர்ந்த முகமே காண்பித்தது.



"இப்பதான் ஆதர்ஷினி எனக்கு போன் பண்ணி உங்ககிட்ட சொன்ன விஷயத்தை சொல்லி உன் கிட்ட வந்து பேச சொன்னா. கண்டிப்பா நீங்க என்ன முடிவு எடுக்கிறது என்று தெரியாமல் குழம்பி போய் தான் இருக்கீங்க அப்படின்னு எனக்கும் புரியுது. ஆனால் இன்னும் எவ்வளவு நாள் இப்படியே யோசிச்சி யோசிச்சி காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறது?" என்று கேட்டு அவன் முகம் பார்த்தாள்.



முதலில் இவள் எதற்கு இங்கே வந்தாள் என்று புரியாமல் குழம்பி அவன் பின்பு தன்னுடைய தங்கை வேலை என்பதை புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டான்.



"இல்ல பவானி நீ நினைக்கிற மாதிரி கிடையாது. சமர் சின்ன வயசுல இருக்கும்போது அவனுடைய கோபத்தை எல்லாத்தையும் வெளிக்காட்டி கொண்டு தான் இருந்தான். ஆனால் போகப்போக எல்லாரும் பேசுறத நினைத்து உள்ளுக்குள் அழுது கோபப்படுவானே தவிர்த்து வெளிய யார்கிட்டயும் அவன் அவனோட கோபத்தையும் அழுகையையும் காண்பித்தது கிடையாது. காலேஜ்ல படிக்கும்போது அந்த பொண்ணால அவன் கொஞ்சம் கொஞ்சமா சகஜமாக மாற ஆரம்பிச்சான் ஆனா மொத்தமா அவளே குழி தோண்டி புதைத்து விட்டு போயிட்டா. திரும்பவும் அவளை இங்க வர வெச்சி சமர் முன்னாடி கூட்டிட்டு போனா கண்டிப்பா அவ பேசக்கூடாது பேச்செல்லாம் பேசுவா, அத கேட்டு என்ன நிலைமைக்கு ஆளாவான்? யோசிச்சு பாரு என்னால என்னோட தங்கச்சிக்கு முழு மனசா ஒத்துழைப்பு கொடுக்க முடியல, என்னோட நண்பனுக்காக இந்த விஷயத்தை அமைதியாகவும் முடியல இப்ப நான் என்னதான் பண்றது" என்று இயலாமையின் பிடியில் கேட்டான்.



"நீங்க சொல்ல வர்ற விஷயம் எல்லாமே எனக்கு புரியுது. ஆனா நான் சொல்ற ஒரு விஷயத்தை யோசிச்சு பாருங்க இவ்வளவு நாள் சமஸ் அண்ணா எந்த விஷயத்துலயும் தலையிடாமல் ஒதுங்கி தானே இருந்தாங்க. ஆனா இன்னைக்கு ஆதர்ஷினிய அவங்க வீட்ல பேசும்போது கோபப்பட்டு எதிர்த்து பேசினாங்க அல்லவா! இதேமாதிரி அந்தப் பொண்ணு வந்து ஏதாவது பேசினா நிச்சயமா இவங்க எதிர்த்து கேள்வி கேப்பாங்க. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு! முன்னாடி நீங்க மட்டும் பக்கபலமாக இருக்கும் போது எந்த விஷயத்தையும் வெளியே சொல்லி உங்களை கஷ்டப்படுத்த கூடாது அப்படி என்கிற காரணத்திற்காக உள்ளேயே வச்சுகிட்டு இருந்தாங்க.

ஆனா இப்போ நீங்க மட்டும் அவங்களுக்கு துணையா இல்லை எவ்வளவு பேர் அவங்களுக்கு துணையா இருக்கோம் அப்படி என்கிற விஷயமும் அவங்களுக்கு தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அதனால நிச்சயமா அந்த பொண்ணு வந்து அசிங்கமாக பேசினால் எதிர்த்து கேள்வி கேட்பாங்க. இன்னொரு விஷயம் யோசிச்சு பாருங்க நம்மளோட நாக்குதான் நமக்கு எதிரி எவ்வளவு வேணும்னாலும் பேசும் அதோட வார்த்தைகள் மோசமாக கூட வெளில வர வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும்போது அந்த பொண்ணு கண்டிப்பா ஆதர்சினிய பத்தியும் அசிங்கமா தான் பேசுவா அண்ணனால அவளை யாராவது அசிங்கமா பேசினா தாங்கிக்க முடியல அப்படிங்கற விஷயத்தை நாம இன்னைக்கு தெளிவா பார்த்தாச்சு. அதை வைத்தே அவளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வரலாம் தானே" என்றும் கேட்டு நிறுத்தினாள்.



"நீ சொல்ற மாதிரி யோசிச்சு பார்த்தா எல்லாமே நல்லபடியா தான் நடக்கும் சரி நானும் அவ எங்க இருக்கா அப்படி என்கிற விஷயத்தை என்னோட மத்த பிரெண்ட்ஸ் மூலமாக விசாரிச்சு பார்த்துட்டு சொல்றேன். நீ இனி என்ன பார்க்க வரணும் அப்படின்னு சொன்னா எனக்கு ஒரு போன் பண்ணு இப்படி தனியா எல்லாம் வராத! என்னதான் நம்ம ஊரு நம்ம இடமா இருந்தாலும் பெண்களுக்கு வரவர பாதுகாப்பு இல்லாம தான் இருக்கு என்னோட மனைவியா வரபோறவளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என்னோட பொருப்பு. அதனால என்ன பார்க்க தோன்றினால் இல்ல என்கிட்ட ஏதாவது சொல்ல தோனிச்சுன்னா எனக்கு போன் பண்ணு நானே உன்னை பார்க்க வரேன்" என்று கூறினான்.



அவனுடைய அக்கறையில் நெகிழ்ந்த பவானி சம்மதமாக தலையசைத்துவிட்டு ஒரு புன்சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.



போகும் அவளையே புன்னகையுடன் பார்த்துவிட்டு தன் நண்பன் வருவதற்குள் கல்லூரியில் பயின்ற நண்பர்களை தொடர்பு கொண்டு சமரின் முன்னாள் காதலியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.



அதே நேரம் போன் பேசிவிட்டு வீட்டிற்குள் வந்த தன் அண்ணியின் முகம் ஏதோ சரி இல்லாமல் இருப்பதை கவனித்த அருள் "என்னாச்சு அண்ணி அண்ணா ஏதாவது திட்டினானா முகம் ஒரு மாதிரி இருக்கு இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.



"எனக்கு இருக்கிற பெரிய பிரச்சனையே உன்னோட பாட்டி தாத்தா அப்பா சித்தப்பா தான். ஆனா இப்போ வேற ஒரு பிரச்சனை கிளம்பி வர தயாராக இருக்கிற மாதிரி இருக்கு. நான் ஒன்னு யோசிச்சி பிளான் பண்ணா எனக்கு தெரியாம எனக்கு முன்னாடியே இந்த வீட்ல உள்ள ஒரு தானா பிளான் பண்ற மாதிரி தோணுது. என்னோட யூகம் மட்டும் சரியா இருந்தா இன்னைக்கு சாயங்காலம் அதாவது இன்னும் 2 மணி நேரத்துக்குள்ள அதுக்கான சரியான இன்ஃபர்மேஷன் கிடைச்சுடும். அது கிடைத்த பிறகு மத்தத சொல்றேன் இப்போ நான் என்னோட தங்கச்சியை பார்க்கிறேன் இல்லனா உன் பார்ட்டி அவளுக்கு வேப்பிலை அடிக்க ஆரம்பிச்சோம்" என்று கூறி தன் தங்கையைத் தேடி சென்றாள்.



ஏன்டா நம்ம குடும்பம் எப்படி இருக்கோ என்று நொந்துகொண்டே தன்னுடைய வேலையை பார்க்க கிளம்பி சென்றான்.



ஆதர்ஷினி தன்னுடைய தங்கையை தேடி செல்ல அங்கே அவள் நினைத்தது போலவே நால்வரும் கார்த்திகாவை பிடித்து வைத்து ஏதோ பேச முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவளோ அவர்கள் பேசுவதை சிறிதுகூட காதலி ஏற்றாமல் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தாள்.



கார்த்திகா சிந்தனை அங்கு இல்லை என்பதை உணர்ந்தவள் "என்னடி கார்த்தி உன்ன சுத்தி வச்ச நாலு பேரு பேசிக் கொண்டு இருக்காங்க. கொஞ்சம் கூட அவங்க நாலு பேரையும் அதிகமாக நீ பாட்டுக்கு ஏதோ ஒரு கனவுலகத்தில் இருக்க. அப்படி என்னத்தை யோசிச்சிட்டு இருக்க?"



"இல்லடி லூசு எங்களோட காதலோட ஆரம்பமே நீ மாமாவ காதலிக்க ஆரம்பித்த விஷயம் தெரிஞ்ச பிறகு தான், அருள் உன்கிட்ட பேசுவதற்காக என் கிட்ட வந்து பேச ஆரம்பிச்சான். நாளாக நாளாக அவனாலேயே உன் கிட்ட வந்து பேச முடியாது, அதே மாதிரி நான் சொன்னாலும் நீ கேக்க மாட்ட அப்படிங்கற விஷயமே அவனுக்கு புரிய ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா இந்த இடப்பட்ட நாள்ல அவனுக்கு பிடிக்க ஆரம்பித்த காரணத்தினால் அவன் அவனுடைய காதலை என்கிட்ட சொன்னான். எனக்கு அவனை பிடித்திருந்தது அதனால நானும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் காதலுக்கு சம்மதம் சொன்னேன். இது எதுவுமே தெரியாத இவங்க எதுக்கு நம்மள பிரிக்க பாக்குறாங்க இதெல்லாம் தெரிந்த என்ன பண்ணுவாங்க அத பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்" என்று கூறினாள்.



கார்த்திகா கூறி முடித்ததும் தான் தாமதம் ஆதர்ஷினி அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்து விட மற்ற நால்வருக்கும் முகம் பேயறைந்தது போல் ஆனது.



இதைக் கண்டும் காணாததுபோல் பெண்கள் இருவரும் வெளியே கிளம்ப பாட்டி முகத்தில் ஒரு வன்மம் மற்றும் சுறுசுறுப்பு இருப்பதை கவனித்த ஆதர்ஷினி அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு வெளியே சென்றாள்.



ஆனால் கார்த்திகா ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு "நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி இந்த வீட்ல உங்களுக்கு கட்டுப்பட்டு யாரும் நடந்தது கிடையாது. உண்மையான பாசத்தை கட்டுப்பட்டுதா அத்தனை பேரும் இருக்காங்க. உங்களுக்கே தெரியாம மாமாவ எத்தனையோ தடவை பார்த்து பேச நிறைய முயற்சி எடுத்து இருக்காங்க. ஆனா நீங்க அவங்களையும் கஷ்டப்படுத்து விடுவீர்களோ அப்படிங்கர பயத்தில மாமா தான் இவங்க எல்லாரையும் விட்டு ஒதுங்கியிருந்தார்.

இப்பவும் இந்த வீட்ல இருக்கிற மாதிரி எப்பவுமே இங்கேயே இருந்து இருந்தா உங்க நாலு பேரோட மரியாதை எப்போவோ போயிருக்கும். வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துகாம இப்படி எல்லாம் நடந்துகிட்டா இப்படித்தான் எல்லாரும் உங்களுக்கு எதிரா செய்வாங்க. தாத்தா-பாட்டி சின்ன மாமாவ கூட நான் மன்னிச்சு விட்ரலாம். ஆனா மாமா உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன் சொந்த ரத்த பாசம் கூட இல்லாம இருக்கு என்னத்த சொல்றது" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.



பரிபூரணம் பாட்டி ஆண்களை பொதுவாக பார்த்து "இவங்க ரெண்டு பேரையும் இப்பவே அடக்கி வச்சாதான் நாம எல்லாரும் இந்த வீட்ல இங்க கவுரவமா இருக்கமுடியும். இல்லனா கண்டிப்பா நமக்கு இந்த வீட்ல கொஞ்சம் கூட மதிப்பும் மரியாதையும் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமா இந்த வீட்ல இருக்கிற நண்டு சிண்டு எல்லாம் கூட நம்மள மதிக்காமல் எடுத்தெறிந்து பேச ஆரம்பிச்சுடும்" என்று இரண்டு பெண்கள் மேல் உள்ள கோபத்தில் வன்மமாக பேச ஆரம்பித்தார்.



மகன்கள் இருவரும் வாயை திறப்பதற்கு முன்பு வாயை திறந்த தாத்தா "நீ கொஞ்ச நேரம் சும்மா இரு தேவையில்லாம வீட்டுக்கு வந்த பொண்ணுங்க மேல வெறுப்ப விதைக்காத. நாம இன்னும் எவ்வளவு வருஷம் இந்த வீட்ல இருக்க போறோம் அப்படின்னு தெரியாது, நம்ம பசங்களாவே இருந்தாலும் அவங்களுக்கு கடைசி காலத்தில் கஞ்சி ஊத்த அவங்க மருமக வேணும். நீ இப்போ வஞ்சத்தை வளக்கறது உன்னோட மூத்த பையனோட மருமக மேல ரெண்டு பேருமே இவன வெறுத்துட்டா கடைசி காலத்துல இவன் சாப்பாட்டுக்கு எங்க போய் நிற்பான். கொஞ்சம் அமைதியா தான் இருந்து தொலையேன், வயசான காலத்துல இன்னும் தேவையில்லாம பேசிக்கிட்டு இந்த பொண்ண பாத்தா சாதாரணமா தெரியல நம்மள பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டு பிளான் பண்ணி தான் இங்க வந்து இருக்கா. எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க" என்று கூறியவர், தன் மகன்கள் புறம் திரும்பி



உங்க அம்மா சொல்ற மாதிரி எதுவும் எடுத்தோம் கவிழ்த்தோம் அப்படின்னு பண்ணி வச்சுக்கிட்டு இருக்காதீங்க. எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு ஆற அமர பண்ணலாம். இப்ப நம்ம என்ன பண்ணாலும் நம்ம வீட்டு பிள்ளைகள் மொத்த பேரும் நமக்கு எதிராக தான் இருப்பாங்க. மொத்தமா பிள்ளைங்க நம்மள வெறுத்து ஒதுக்கி வைச்சா தாங்கி விடமாட்டோம். அதை மட்டும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க. இதுநாள் வரைக்கும் நம்ம பண்ணது எல்லாம் நமக்கு திரும்ப வந்தது தாங்கற சக்தி நமக்கு இருக்கா இல்லையா அப்படிங்கற விஷயம் எனக்கு தெரியல. சும்மா உங்க அம்மா சொல்வதைக் கேட்டு ஏடாகூடமா பண்ணி வச்சீங்க அப்புறம் அவ்வளவுதான்" என்று கூறிவிட்டு தனது துண்டால் உதறி கொண்டு சென்றுவிட்டார்.



அவர்கள் இருவருக்கும் மலையளவு கோபம் இருந்தாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தன் தந்தை கூறுவதே சரி என்று எண்ணி அவர்கள் அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டனர்.



வெயில் சிறிது தாழ்ந்த நேரத்தில் தன்னுடைய வயலுக்கு கிளம்ப தயாராக அவன் பின்னே அவ்வீட்டின் மொத்த பட்டாளமும் தயாராகி நின்றது.



"டேய் நீங்கலாம் எங்க டா வர்றீங்க ஆளுக்கு முன்னால் கிளம்பி இருக்கீங்க? என் கூட அவர் அதுக்காக கிளம்பி இருக்கீங்களா? இல்ல வேற எங்கயாவது வெளியே போறதுக்காக கிளம்பி இருக்கீங்களா?" என்று கேட்டான்.



"உன்கூட தான் அண்ணா வரதுகாக கிளம்பி இருக்கிறோம். இதுநாள் வரைக்கும் ஒன்னோட தோட்டத்தின் செழுமையை நாங்க பார்த்தது இல்ல. அத பாக்குறதுக்கு எங்களுக்கு இந்த வீட்டில அனுமதியும் கிடைச்சதும் இல்ல. இப்பதான் நீ இங்க இருந்தே உன்னோட தோட்டத்துக்கு போறியே எங்களையும் கூட்டிட்டு போ. நாளைக்கு எங்க எல்லாருக்குமே ஸ்கூல் காலேஜ் லீவு தான் அதனால ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்" என்று ஒரு சேர கூறினார்கள்.



அவர்கள் முகத்திலிருந்து அவர்களின் ஆசையை அறிந்துகொண்ட சமர் "சரிடா வாங்க ஆனால் அங்கு வந்து பழக்கமில்லாத அதுல ஏறி குதிக்கிறேன் அப்படின்னு சொல்லி கீழே விழுந்து விட கூடாது. சாப்பாடு தண்ணி எல்லாமே அங்கேயே கிடைக்கும் அதனால வேற எதுவும் எடுத்துக்க வேண்டாம் நீங்க மட்டும் கிளம்பி வாங்க" என்று கூறிவிட்டு முன்னால் சென்றான்.



அவர்கள் அனைவருடன் ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் நிற்பதை கவனித்துக் கொண்டான். அவர்களும் வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டான். அனைவரும் அங்கே போய் சேரும் போது அங்கே ஏற்கனவே ஆதவன் வேலை செய்து கொண்டிருக்க, அப்போதுதான் கார்த்திக் பவானி அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இருவரும் தனித்தனி வண்டியில் வந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய சகோதரி போல் பாவிக்கும் பவானியை பத்திரமாகவே அழைத்து வந்தான் கார்த்திக்.



தங்களது சகோதரனை பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டனர் பின்பு பவானியை அணைத்துக் கொள்ள அவளும் பாசத்தோடு இருவரையும் அணைத்துக் கொண்டாள்.



அதன்பிறகு அனைவரும் ஒன்றாக அங்கங்கு சுற்றி விட ஆதவன் ஆதர்ஷினி பார்த்து ஒரு சில விஷயங்கள் கூறினான்.



அதைக் கேட்ட ஆதர்ஷினி முகம் புருவ முடிச்சுகளுடன் சுருங்கியது. பின்பு தெளிவு பெற்று ஒரு மெல்லிய புன்னகை வந்தது. அதை பார்த்த அவள் அருகில் இருந்தவர்கள் என்னவென்று கேட்க அவளும் தன்னுடைய யோகங்களை கூற ஆரம்பித்தாள்.



அதில் அவள் கூறிய ஒரு முக்கியமான செய்தி சமரின் முன்னாள் காதலி அவனை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு வருகிறாள் என்ற விஷயமே!!! இதைக்கேட்ட சுற்றியிருந்தவர்கள் பயம் கோபம் ஆதங்கம் என்ற உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆதர்ஷினி முகத்தில் மட்டும் புன்னகை நிறைந்த இருந்தது.



அடுத்து என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top