• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 17

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
சமர் தன் தம்பி தங்கைகள் அனைவருடனும் தோட்டத்திற்கு வருவதை பார்த்த ஆதவன் 'நம்ம தங்கச்சி ஒரு பிசாசு வந்தாலே சமாளிக்கிறது அவ்வளவு கஷ்டம்! இதுல ஒட்டுமொத்த குட்டிசாத்தான் கூட்டமும் கிளம்பி வந்து இருக்கு இனிமே இங்க என்னென்ன கலவரங்கள் நடக்கப் போகுதோ தெரியலையே' என்று தன்னுடைய மைண்ட் வாய்ஸில் புலம்பிக் கொண்டு தன்னுடைய நண்பனை பார்த்து சிரித்தான்.

அவன் சிரிப்பின் பின்னே உள்ள உள்ளர்த்தத்தை புரிந்த சமர் புன்னகைத்துக் கொண்டே அனைவரையும் விளையாட அனுப்பி வைத்தான். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆதர்ஷினி பவானி தவிர அனைவருமே விளையாட சென்று விட்டனர். கார்த்திகா அருள் இருவருக்கும் திருமணம் முடிந்து இருந்தாலும் இருவருமே சிறுபிள்ளை போல விளையாடிக் கொண்டிருந்தனர்.

அருளுக்கு இதுவரை தன் அண்ணனின் பாசமும் தோட்டத்திற்கு வரும் உரிமையும் கிடைக்காத காரணத்தினால் அவன் அதை என்ஜாய் செய்வதற்கு சென்றுவிட்டான். அதுபோலவே அவன் மனைவியும் சிறுபிள்ளைத்தனமாக தன் உடன்பிறப்பு வந்த சந்தோஷத்தில் அனைவரோடும் விளையாட சென்று விட்டாள்.

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த சமர் "ஆளுதான் கல்யாணம் முடிஞ்ச பெரிய பையனும் பொண்ணுமா இருக்காங்க மனசுல இன்னும் ரெண்டு பேரும் சின்ன குழந்தைங்க தான்" என்று தன் நண்பனிடம் கூறினான்.

'ஆமாடா இந்த சின்னப் பையனும் சின்ன பொண்ணு தான் நீ சந்தோசமா இருக்கணும் அப்படிங்கிற காரணத்துக்காக என்னென்னவோ செய்யவும் செஞ்சாங்க! இன்னமும் செய்ய காத்துக்கிட்டு இருக்காங்க' என்று மனதில் எண்ணிவிட்டு நேரடியாக அவன் முகம் பார்த்தான்.

அவன் முகத்தில் என்றுமில்லாத ஒரு மெல்லிய புன்னகை இருப்பதை கண்டு கொண்டவன் தானும் புன்னகைத்துவிட்டு "நீ சொல்றது உண்மைதான் டா இந்த உலகத்துல எல்லாருமே சின்ன பிள்ளைங்க தான், அவங்க அவங்க மனசுல இருக்கிற கஷ்டங்கள் எல்லாத்தையும் சின்னப்புள்ளத்தனமா வெளியே சொன்னா யாராவது ஏதாவது நினைப்பார்களோ என்கிற பயத்துடன் வாழுற சின்ன பிள்ளைங்க தான். சரி வா நான் போய் இந்த பக்கம் இருக்கிற என்னோட தங்கச்சியை பாக்குறேன். நீ போய் உன்னோட வீட்டிலுள்ள அராத்து எல்லாத்தையும் கவனிச்சுக்கோ" என்று கூறிவிட்டு அங்கே தனியாக நின்று கொண்டிருந்த தன் வருங்கால மனைவியையும் ஆதர்ஷினியையும் நெருங்கினான்.

தன் நண்பன் கூறுவது தனக்குத்தான் என்ற விஷயம் தெரிந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் தம்பி தங்கைகளை கவனிக்க சென்றான். அதே நேரம் அவன் தன் அண்ணியிடம் செல்வதை கண்டு கொண்ட அருள் கண்டிப்பாக ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அவ்விடம் வந்து சேர்ந்தான். அவன் பின்னே அவன் மனைவியும் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அங்கே வந்தாள்.

"தங்கச்சி மா நீ சொன்ன பிறகு நான் அந்த அரலூசை பத்தி விசாரிச்சேன், இவ்வளவு நாள் சமர் பத்தி எதுவுமே விசாரிக்காமல் அமைதியா இருந்தவ இப்ப கொஞ்ச நாளா அவனை பற்றி விசாரித்துவிட்டு இருந்து இருக்கா! ஆனா காலேஜில் நடந்த பிரச்சனை தெரிஞ்ச என்னோட மத்த பிரண்ட்ஸ் யாருமே அவளுக்கு சமர் பத்தி துளி அளவு கூட இன்பர்மேஷன் குடுக்கல. அத தெரிஞ்சு கிட்ட அவ இன்னும் ரொம்ப ஆர்வமா தேட ஆரம்பித்து இருக்கா. கடைசியில நேத்து யாரோ நம்ம ஊர் விபரம் எல்லாத்தையும் சொல்லி இருக்காங்க. அதை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு நாளைக்கு அவ உங்க வீட்டுக்கு வரப் போற அப்படின்னு எனக்கு தெரிஞ்ச ஒரு ஃபிரண்ட் சொன்னான். ஆனா அவ வர போறதுக்கு உண்மையான காரணம் என்ன அப்படின்னு தெரியல, இன்னொரு விஷயம் அவளுக்கு ஏதோ கல்யாண ஏற்பாடு ஆகி இருக்கும்னு சொல்றாங்க" என்று கூறி கேள்வியாக அவள் முகம் பார்த்தான்.

"ஒருவேளை உன்ன விட நல்ல பையன நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் அப்படின்னு காட்டுவதற்காக வரப்போறாளா இருக்கும்" என்று தன் கருத்தைக் கூறினாள் கார்த்திகா.

"இல்ல கார்த்தி நீ நினைக்கிற மாதிரி இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம், ஆனா அப்படிதான் இருக்கும் அப்படின்னு நம்மளால சொல்ல முடியாது. காரணங்கள் வெவ்வேறு இருக்க வாய்ப்புகள் அதிகம்" என்று தன் மனதில் தோன்றியதை கூறினாள் பவானி.

இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் நின்ற அருள் முகத்தை ஆதர்ஷினி பார்க்க அவன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு "கார்த்தி சொல்ற மாதிரி ஒரு காரணம் இருக்கலாம், இல்லனா நீ எல்லாம் கல்யாணம் பண்ணி எண்ணத்தை கிழிச்சி இருக்க அப்படின்னு பாக்கரதுக்காக வரலாம். அதுவும் இல்லன்னா இப்ப பாத்து இருக்கிற மாப்பிள்ளை அவளுக்கு ஏத்த மாதிரி இல்லாம இருக்கலாம், சமர் அண்ணா காலேஜ் படிக்கும்போது அவ காட்டுன பொய்யான பாசத்தை உண்மை அப்படின்னு நம்பி அவ என்ன சொன்னாலும் செஞ்சு இருப்பாங்க. அதே மாதிரி இப்பவும் இருப்பாங்க அப்படிங்கற நம்பிக்கையில அண்ணனை திரும்ப அவளோட கைக்குள்ள போட்டு நம்ம எல்லாரோட முகத்திலையும் கரிய பூசுவதற்காக வரலாம். இது எல்லாம் என்னோட எண்ணங்கள் தான், ஆனா இதுக்கு மேல இது எல்லாத்துக்கும் காரணம் நம்ம வீட்டிலேயே யாராவது கூட இருக்கலாம்" என்று தனக்கு தோன்றியவற்றை யோசனையாக கூறி முடித்தான்.

அனைவரும் இப்போது ஆதர்ஷினி முகத்தை பார்க்க "நீ சொல்றது சரிதான் அருள் நம்ம வீட்டுல இருக்கிற ஒருத்தர் தான் இது எல்லாத்துக்கும் காரணம். ஆனா அது யார் அப்படி என்கிற விஷயத்தை நான் போக போக சொல்றேன். நாளைக்கு அவ வரும் போது உன்னோட அண்ணன் எந்த நிலைமைக்கு வேணும்னாலும் மாறலாம். ஆனால் நிச்சயமா அவளுக்கு சப்போர்ட் பண்ணி நம்மள எதிர்த்து பேச மாட்டான், அந்த ஒரு உத்தரவாதத்தை என்னால உங்க எல்லாருக்கும் கொடுக்க முடியும்.

ஆனாலும் உங்க அண்ணன் ரொம்ப வருத்தப்பட்டு அழுகிற நிலைமைக்கு கூட போகலாம். நீங்க எல்லாருமே அவனுக்கு பக்கபலமாய் இருக்கணும் ,அதை மட்டும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க. இனி வீட்ல போய் இந்த விஷயத்தை பத்தி நம்ம யாராலயும் பேச முடியாது. ஆனால் அருள் நீ உன்னோட தம்பி தங்கச்சி எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லி வைத்திரு. அப்புறம் ஆதவன் அண்ணா நாளைக்கு நீங்க பவானியை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க, நீங்க இருந்தா தான் உங்க நண்பன் கொஞ்சமாவது தெம்பா இருப்பான். இவ்வளவு நேரம் நம்ம பேசினத பார்த்துகிட்டு நாம என்ன பேசணோம் அப்படின்னு கண்டுபிடிக்க இன்னும் கொஞ்ச நேரத்துல என் புருஷன் வருவான், அதனால எல்லாரும் போய் அவங்கவங்க வேலைய பாருங்க" என்று கூறி ஆட்டத்தையும் கலைத்து விட்டு நகர்ந்து சென்றாள்.

அவள் நினைத்தது போலவே அவர்கள் அருகே நெருங்கி வர நினைத்த சமர் இப்போது அனைவரும் கலைந்து செல்வதைப் பார்த்து விட்டு அவன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

அதன் பிறகு சிறுது நேரம் அங்கேயே ஓடியாடி விளையாடி தங்களுடைய பொழுதை இன்பமாக கழித்தவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.

தோட்டத்தில் ஓடி ஆடிய களைப்பு தங்கள் பிள்ளைகள் முகத்தில் தெரிந்த காரணத்தினால் அவர்களை யாரும் கேள்வி கேட்கவில்லை, அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்க அமைதியாக இரவு உணவை சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தனர்.

ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுவிட்டு செல்வதை ஒருசிலர் ஆச்சரியமாக பார்க்க ஒரு சிலரோ வன்மமாக பார்த்து புன்னகைத்தனர்.

மறுநாள் காலை மிகவும் அமைதியாகவே விடிந்தது. என்றும் இல்லா இந்த அமைதியை அவ்வீட்டு பெண்கள் விருப்பம் இல்லாமல் எதிர்கொண்டனர். காலை சமையல் வரை எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வீட்டின் மருமகள்கள் தங்கள் இரு புதிய மருமகள்களின் அமைதியை வினோதமாகவும் வருத்தமாகவும் பார்த்தனர். வந்து சில நாட்களே ஆகியிருந்தாலும் எப்பொழுதும் கலகலப்பாக ஏதாவது பேசிக் கொண்டும், படுத்திக் கொண்டும் இருப்பவர்கள் இன்று அமைதியாக இருந்தால் யாருக்கு தான் தாங்க முடியும்.

இதைப் பற்றி அவர்களிடம் நேரடியாக பேச நினைத்த நேரம் வெளியே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. யார் என்று எட்டிப் பார்த்த பெண்களுக்கு புதிதாக காரில் இருந்து இறங்கிய அந்த நவ நாகரீகமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் உடையணிந்து வந்த பெண்ணை அடையாளம் தெரியவில்லை என்பதாக முழித்துக் கொண்டனர்.

ஆனால் அவளோ இவர்கள் மூவரையும் பார்த்து இகழ்ச்சியாக உதட்டை சுளித்து விட்டு வீட்டிற்குள் வர முயற்சித்தாள். அதற்குள் சென்ற கார்த்திகா இருவரும் கை நீட்டி அவளை உள்ளே வரவிடாமல் தடுத்து விட்டனர்.

தன்னை உள்ளே விட வில்லையே என்ற கடுப்பில் "யார் நீங்க ரெண்டு பேரும் எதுக்காக இந்த வீட்டுக்குள்ள என்ன உள்ள விடாம வழிமறித்து நிக்கிறீங்க? இன்னும் கொஞ்ச நாள்ல இந்த வீட்டையே நான்தான் ஆளப்போறேன் ஒழுங்கு மரியாதையா என்ன உள்ள விடுங்க" என்று கூறி அவள் அடிக்க கை ஓங்க, அவள் கையைப் பற்றிய ஆதர்ஷினி அப்படியே தரதரவென இழுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் விட்டாள்.
அவள் பேசிய பேச்சில் அவளைப் பார்த்து முகம் சுளித்த பெண்கள் இப்போது தன் மருமகள் செய்த செயலில் மகிழ்ந்து வெளியே வந்தனர். அவர்கள் மட்டுமல்ல அவர்கள் பின்னே அவ்வீட்டில் உள்ள அனைவரும் வெளியே வந்தனர். புதிதாக வந்தது யார் என்று தெரியாத போதும் தன் மனைவி இழுத்து சென்ற வேகத்தைப் பார்த்த சமர் எங்கே புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விடுவாளோ என்ற பயத்தில் அவசரமாக பின்னே ஓடினான்.

அவன் ஓடிய வேகத்தைப் பார்த்து வந்தது யார் என அறிந்த ஒரு சிலர் எகத்தாளமாக சிரித்துக் கொண்டனர். அவர்கள் மனதிற்குள் 'ஓடு ஓடு உன்னோட பழைய காதலியை பார்த்தவுடனே பாசம் பொங்கி வருதா போ இனி உன்னோட வாழ்க்கையில எப்படி நீ சந்தோஷமா இருக்கிற அப்படின்னு நானும் பார்க்கிறேன். உன் பொண்டாட்டி ஆடுகிறா தானே அவ ஆடுகிற ஆட்டத்தை அடக்கி காட்டுறேன்' என்று எண்ணிக் கொண்டனர்.

வெளியே ஓடி வந்தவன் புதிதாக வந்தவள் முகத்தை கூட ஏறிட்டுப் பார்க்காமல் தன் மனைவியின் கைகளிலிருந்து அவள் கையைப் பிரித்து எடுத்தான். ஆனால் ஆதர்ஷினி வேகமாக உதறி விட புதிதாக வந்தவளோ தரையில் விழுந்து கிடந்தாள்.

அதை கவனிக்காத சமர் தன் மனைவி விட்டு விட்டாள் என்று எண்ணிக்கொண்டு "ஏண்டி லூசு நேத்து சாயங்காலத்திலேருந்து இன்னைக்கு காலைல வரைக்கும் அமைதியா தானே இருந்த? காலையிலேயே இந்த பிரச்சினை தேவையா யாரோ இந்த வீட்டுக்கு வந்துட்டு போறாங்க. நீ எதுக்கு தேவையில்லாம அவங்களை போய் தடுக்கிற உன்ன பத்தி யாராவது ஒரு வார்த்தை தேவையில்லாம பேசினாலே உனக்கு அவ்வளவு கோபம் வரும், இதுல இந்த வேண்டாத வேலை எல்லாம் பாக்கணுமா? பேசாம ரூமுக்கு வந்து இருக்கலாம் இல்லியா மொத்தமா எப்பவும் எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்க எங்கயாவது ஒன்றுகூடி போவீங்கல்ல அங்க போய் இருக்கலாம் தானே! எப்பவாவது ஏதாவது பிரச்சனை இல்லாம இருக்கியா எப்பப்பாரு ஏதாவது ஒரு பிரச்சினை கிளப்பிக் என்னோட பிபிஏ ஏற்றுவதே உன்னோட வேலையா வச்சிருக்க" என்று படபடவென பொரிந்து தள்ளினான்.

"அதெல்லாம் என்னால சும்மா இருக்க முடியாது போடா சாம்பார். வீட்டுக்குள்ள வர்றதா இருந்தா ஒழுங்கா வரணும் அதை விட்டுவிட்டு எகத்தாளமாக ஒரு பார்வ, அதுலயும் யாருன்னு கேட்கலாம் அப்படின்னு தடுத்தா இந்த வீட்டையே அவதான் ஆளப்போறேன் சொல்றா. அவளை விட்டுவிட்டு நாங்க எங்க தெருவுல போயி இருக்கவா? நீ சும்மா இரு இது பொம்பளைங்க எங்களுக்குள்ள உள்ள பிரச்சனை, நீ இதுல தலையிடாத! அமைதியா உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட ஃப்ரண்ட் வந்துருவாங்க ரெண்டு பேர் உட்கார்ந்து வேடிக்கை பாக்குற வேலையை மட்டும் பார்க்கணும் புரியுதா" என்று அவனுக்கு பதில் கொடுத்தாள்.

இதில் கடுப்பான சமர் தன்னையறியாமல் அவள் தலையில் 4 கொட்டுகளை வைத்துவிட்டு "ஏண்டி ஒரு வார்த்தை சொன்னாலும் கேட்க கூடாது அப்படிங்கிற முடிவோட தான் இருக்கியா? கொஞ்சம் சும்மா தான் இருந்தா என்ன ஏற்கனவே இந்த வீட்டில் உள்ள ஒரு சிலருக்கு உனக்கும் சண்டை வந்துகிட்டே இருக்கு. இதுல வர்றவங்க யாராவது அவங்க யாராவது ஒருத்தரோட விருந்தாளியாய் இருந்தா என்ன பண்ணுவ அதுக்கும் ஒரு புது பிரச்சினையா வந்து சேரும். என் பொண்டாட்டியா கொஞ்சம் தான் அமைதியா இரு நான் எவ்வளவு அமைதியா இருக்கேன்" என புலம்பியபடியே அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

"அதெல்லாம் முடியாது போடா நான் உன்கிட்ட எத்தன நாள் என்னோட காதல் வந்து சொல்லி இருப்பேன்,அப்ப எல்லாம் அமைதியா தானே இருந்த! நான் என்ன பேசினாலும் காது கொடுத்து கேட்டு இருப்பியா மாட்ட தானே! உள்ளுக்குள்ள காதல் இருந்தாலும் ஏற்கனவே உன்னை ஏமாத்திட்டு போனவ மாதிரி நானும் ஏமாத்திட்டு போயிருவேன் அப்படின்னு அமைதியா போனதானே! ஆனால் நீ அதே மாதிரி இப்போ நான் என்ன பண்ணாலும் அமைதியா இரு" என்று கூறினாள்.

இப்போது உண்மையாகவே மிகவும் கோபமடைந்த சமர் "அவளையும் உன்னையும் சேர்த்து வச்சு பேசாத அவ வேற நீ வேற உங்க ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசத்தையும் உங்க காதலையும் எப்போவோ நான் உணர்ந்துவிட்டேன். ஆனாலும் எனக்கு உள்ள இருக்கிற தயக்கம்தான் அதை வெளியே சொல்ல விடலை இப்ப எதுக்கு நீ தேவையில்லாம அவளை பத்தி பேசிக்கிட்டு இருக்க" என்று கர்ஜித்தான்.

"வேற யாரை பத்தி பேச சொல்ற இப்போ இந்த வீட்டுக்கு வந்து இருக்கிற அந்த புது ஆள் யார் என்று நினைக்கிற அவதான். என்கிட்டயே எவ்வளவு தைரியமா இந்த வீட்டை இன்னும் கொஞ்ச நாள்ல அவதான் ஆளப்போறேன்னு சொல்லுவா? அதனாலதான் புடிச்சு இழுத்துட்டு வந்து வெளியே தள்ளுனேன். நீயே பாரு மூஞ்ச இவ்வளவு நேரமா நீ அந்த மூஞ்ச பாக்கல அப்படிங்கறது எனக்கு தெரியும் மத்தவங்களுக்கு தெரியுமா ஒழுங்கா பாரு" என்று கூறி அவன் முகத்தை அவள் புறமாய் திருப்பினாள்.

இவ்வளவு நேரம் நடந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தையும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தனர். முக்கியமாக செல்வராஜ் சித்தப்பா சமர் இப்படி எப்போது தன்னை மீறி சகஜமாக பேச ஆரம்பிப்பான் என்று காத்துக் கொண்டிருந்தவர் போல் கண்கலங்க அவனுடைய பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவனுடைய தம்பி தங்கைகள் கூட அவன் சகஜமாக அடித்து விளையாடி பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக வந்திருப்பதை யாரென அறிந்தவர்கள் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தனர்.

நடக்கும் அனைத்தையும் ஒருவித கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சமரின் முன்னாள் காதலி விசாலினி. சமர் அவளை நோக்கி திரும்பிய பிறகு முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ விட்டு அவள் கைகளை அவனை நோக்கி நீட்டினாள்.

ஆனால் அவளுடைய கைகளை பற்றாமல் நகர்ந்து ஆதர்ஷினியை நெருக்கமாக பிடித்தபடி நின்று கொண்டான் சமர். அதைப் பார்த்து கடுப்பான அவள் சரமாரியாக வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தாள்.

"டேய் என்னடா நெனச்சுக்கிட்டு இருக்க நான் கை கொடுத்தா என்னோட கைய புடிக்கதுக்கு கூட உனக்கு பிடிக்காத மாதிரி அவ கிட்ட போய் ஒட்டிக் கொண்டு நிற்கிற! இதே கைய பிடிக்க எத்தனை நாள் நீ தவமா தவமிருந்து கடைசில என்கிட்ட கெஞ்சுனது எல்லாம் மறந்து போச்சா? என் கால்ல விழ கூட தயாராக இருந்தவன் தானே நீ இப்ப என்ன புதுசா என்ன கண்டு ஒதுங்கி நிற்கிற மாதிரி நிக்கிறே! என்ன அவ முன்னாடி நல்லவன் வேஷம் போடுறியா?

காலேஜ் படிக்கும் போது நாம எப்படி எல்லா லவ் பண்ணோம் நீ எனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்க அப்படிங்கற விஷயத்தை எல்லார் முன்னாடியும் சொல்லவா? நான் சொன்ன பிறகு உன்னோட பொண்டாட்டி உன் கூடவே இருக்காளா இல்லையான்னு பாப்போம். கோபப்பட்டு ரோச பட்டு அவ வீட்டுக்கு கிளம்பி போனா அவளும் உண்மையான கற்போட இருக்கான்னு அர்த்தம். இல்ல நான் என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு உன் கூடவே இருந்தா அவை எப்பேற்பட்ட கேவலமான பிறவியா இருப்பான்னு நான் சொன்ன பிறகு தெரியும்.


உன்னோட வாழ்க்கையில நான் உன்னை காதலிச்சது பெரிய விஷயம் இதுல என்ன மறந்துவிட்டு என தொடுறதுக்கு கூட தயங்கிட்டே நீ ஒதுங்கி நிற்கிறது சரியா? கல்யாணமாகி இவ்வளவு நாள் ஆனபிறகும் நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியாக வாழ்ந்துகிட்டு இருப்பீர்களா என்ன? வெளிய எல்லார் முன்னாடியும் அவகிட்ட நாலு வார்த்தை பேசுறே நீ ரூமுக்குள்ளே போய் பேசுவியா நிச்சயமா பேச மாட்ட உன்னை பத்திதான் எனக்கு நல்லாவே தெரியுமே! உன்னோட சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்கு மட்டும்தான் தெரியும்.

சும்மா நல்லவன் ஆட்டும் வேஷம் போடாதே காலேஜ் படிக்கும்போது நடந்தது உனக்கும் எனக்கும் இதோ வந்து நிற்கிறானே உன்னோட ஃப்ரண்ட் ஆதவன் அவனுக்கும் மட்டும்தான் தெரியும்! மத்தவங்க யாருக்கும் தெரியாது. நான் எல்லாத்தையும் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். அப்புறமா எல்லாரும் மூஞ்சியை எங்க போய் வச்சிக்கிறாங்க அப்படின்னு நானும் பாக்குறேன்" என்று நாக்கு கூசாமல் பேசியவள் எழுந்து நின்று தன் மேலிருந்த மண்ணை தட்டினாள்.
அவள் தன்னை பற்றி பேசும்போது கூட பெரிதாக கண்டு கொள்ளாமல் நின்ற சமர் தன் மனைவியைப் பற்றி பேசும்போது கொந்தளிக்க ஆரம்பித்தான். ஆனால் அவனை தன்னுடைய கைகளை பிடித்து தடுத்தாள் இனி அவள் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தாள்.

சமர் இறுகிப் போய் நிற்க அவன் கைகளை விட்டு அவள் நேராக விசாலினி முன்பு சென்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். திரும்பி பதிலுக்கு விஷாலினி அறைய வர அதற்குள் சமர் தன் மனைவியை தன் கைகளுக்குள் பாதுகாத்துக் கொண்டான்.

அதைப் பார்த்த விசாலினி ஏதோ பேச வர சமர் என்றுமில்லாமல் தன் அதிரடி பேச்சுகளால் எதிரில் நின்றவளை பேச முடியாமல் செய்தான். அவன் பேசி முடித்தது தான் தாமதம் அவருடைய தம்பி தங்கைகள் தங்கள் பங்கிற்கு விலாச கடைசியாக ஆதர்ஷினி தன்னுடைய ஸ்டைலில் அழகாக பதிலடி கொடுத்தாள்.

அது என்ன என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari