• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 19

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சமருடைய கல்லூரிக் கால காதல் கதையை கேட்டு தெரிந்து கொள்வோம் என ஆதர்ஷினி கூற அனைவரும் அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தனர்.


அதைப் பார்த்தவன் 'ஐயோ நம்ம கதைய சொன்னா கண்டிப்பா இதுங்க எதுவுமே பீல் பண்ணாதே! ஆனால் பங்கமாக கலாய்க்கும் அதுலயும் நான் கல்யாணம் பண்ணி ஒருத்திய கூட்டிட்டு வந்து இருக்கேனே அவ அவ்வளவு கேவலமா அசிங்கமா கலாய்ப்பா. ஆனாலும் இதுங்க எல்லாம் ஏதோ ஒரு இன்ட்ரஸ்டிங்கான லவ் ஸ்டோரியை கேக்க போற ஆர்வத்துல நம்ம மூஞ்ச பாத்துட்டு இருக்கு. சொல்லாமையும் விடாது வேறு வழியில்லை சொல்லுவோம்' என்று எண்ணிக்கொண்டு தன் நண்பனை கண்களாலேயே அருகே அழைத்தான்.



சமர் அழைப்பதை பார்த்த ஆதர்ஷினி தன் அண்ணனை பார்த்து "டேய் அண்ணா உன்ன உன்னோட ப்ரெண்ட் ஏதோ லவ்வர கூப்பிடற மாதிரி கண்ணாலேயே கூப்புடுறான் போ போய் பக்கத்துல இருந்து உதவி பண்ணு, ஏதோ சரித்திர கதையை சொல்ல போற மாதிரி சப்போர்ட்டுக்கு ஆள் இருந்தா தான் வாய் திறக்கும் போல" என்று அதற்கும் நக்கல் அடித்தாள்.



"அடியே பிசாசு நீ மட்டும் வாய மூடிட்டு சும்மா இருக்கல நான் எந்த கதையும் சொல்ல மாட்டேன், பேசாம நான் கிளம்பி தோட்டத்துக்கு போய்கிட்டே இருப்பேன். சும்மா எதுக்கு எடுத்தாலும் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கா" என்று கடுப்பாக அவளைப் பார்த்துக் கூறினான்.



அவன் தன்னுடைய கூட்டைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறான் என்பதை உணர்ந்த குடும்பத்திலுள்ள நல் உள்ளங்கள் மகிழ்ந்து போயினர்.



சமர் கூறியதைக் கேட்ட பவானி "ஐயோ அண்ணா அந்த மாதிரி தப்ப பண்ணிடாத! ஏற்கனவே உன்னோட காதல் கதையை முழுசா தெரிஞ்சு வச்சிருக்கா நீ மட்டும் சொல்லாம போனா அந்த கதையை எப்படி எல்லாம் அவளுக்கு ஏற்ற மாதிரி மாற்றி சொல்ல முடியுமோ மாத்தி சொல்லிடுவா. அப்படி சொன்னா உங்க மானம் கப்பல் ஏறும் அதனால தயவு செஞ்சு நீங்களே எல்லாருக்கும் சொல்லிட்டு போயிடுங்க" என்று முன்னெச்சரிக்கையாக அவனை வார்ன் செய்துவிட்டாள்.



பவானி கூறியதைக் கேட்ட சமர் சுதாரித்துக்கொண்டு "சரி வாங்க எல்லாரும் சொல்றேன்" என்று கூறி தன் கதையை கூற ஆரம்பித்தான்.



இந்த ஊர்ல இருந்து வெளிய போன பிறகுதான் நான் ஏதோ ஒரு ஆசுவாசத்தை உணர்ந்தேன். அது வரைக்கும் நிறைய விஷயங்களை மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம சகித்துவிட்டு வாழ்ந்து கொண்டிருந்த நான் வெளில காலேஜ் போய் சேர்ந்த பிறகு ஒரு சுதந்திர காற்றை வாசிக்க ஆரம்பிச்சேன். ஆனா அது என்ன என்பது வயதுக்கேற்ற ஆர்வம் அப்படிங்கற விஷயம் எனக்கு அதுக்கப்புறம் புரிய ஆரம்பிச்சது.



காலேஜ் போய் சேர்ந்த புதுசுல நான் யார்கிட்டயும் பெருசா பழக ஆரம்பிக்கல. என்ன தான் அங்க நான் யார்கிட்ட பேசினாலும் திட்ட ஆள் இல்லாமல் இருந்தாலும், எனக்குள்ள இருந்த தயக்கம் பெருசா எல்லார்கிட்டயும் நெருங்கி பழகவில்லை. ஆனாலும் முகத்தை திருப்பி விட்டு போறே அளவுக்கு இல்லாம முகத்தை பார்த்து சிரிக்கிற அளவுக்கு நான் நல்ல விதமா தான் இருந்தேன். எனக்கே எனக்கென ஒரு சில நல்ல பிரண்ட்ஸ் கிடைக்க எல்லாம் செஞ்சாங்க. ஆனாலும் அவங்க எல்லார் கிட்டயும் ஆதவன் மாதிரி நான் நெருக்கமாக இல்ல ஆதவன் மட்டும்தான் இங்க இருந்து போனதிலிருந்து என்னோட ரொம்ப நெருக்கமான நண்பனாக இருந்தான்.



அப்படி நாங்க இருந்த நேரத்தில் தான் எங்களுக்கு புதுசா விஷாலினி பிரண்ட் ஆனாள். அவ கூட நாங்க பிரிண்ட் ஆனதற்கு ஒரு முக்கிய காரணம் என்னன்னு சொன்னா எப்படி நான் யார்கிட்டயும் பெருசா பேசாம அமைதியா ஒதுங்கியே இருப்பேனோ அதே மாதிரிதான் அவளும் கிளாஸ்ல யார்கிட்டயும் பேச மாட்டா. எனக்கு ஆதவன் இருந்தான் ஆனால் அவளுக்கு அப்படி கூட யாரும் கிடையாது. யார்கிட்டயும் பேசாம ஒதுங்கியே இருந்தா எனக்கு என்னையே பாக்குற மாதிரி இருந்துச்சு. அதனால நாங்க போய் பேசி முயற்சி செஞ்சோம் ஆனா முதல்ல எங்க கிட்டயும் பேசாமல் இருந்தவ திரும்பத் திரும்ப நாங்க போய் பேச பேச கொஞ்சம் கொஞ்சமா எங்கள நம்பி பேச ஆரம்பிச்சா நாளாக நாங்க ஒரு நல்ல நட்புக்குள் வந்தோம்.



ஆனா கொஞ்சம் நாளாக நாளாக அவளை எங்க கிட்ட ரொம்ப க்ளோசா பழக ஆரம்பிச்சா முதல்ல அது எங்களுக்கு வித்தியாசமா தெரியல ஆனா வித்தியாசமா தெரிய ஆரம்பித்த நேரம் நாங்க கண்டு பிடித்த இன்னொரு விஷயம் அவ அவன விட என்கிட்ட தான் ரொம்ப க்ளோசா பழக முயற்சி பண்ணினாள். என்ன பொறுத்த வரைக்கும் அவளை பத்தி எந்த தப்பான எண்ணமும் அதுவரைக்கும் இருந்தது இல்ல. அதே மாதிரி அவ அவ்வளவு நாள் எங்க கிட்ட ஒரு உண்மையான நட்போட தான் இருந்தா இந்த காரணத்தினால் நேரடியாக அவகிட்ட நான் கேட்க முடிவு பண்ணேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை கேட்க விடாமல் தடுத்தது.



அதற்கான காரணத்தை நான் யோசித்துப் பார்க்கும்போது தான் எனக்கு புரிந்த ஒரு விஷயம் ஆதவன் தவிர வேற யாருமே இவ்வளவு நெருக்கமா என்கிட்ட பழகுனது இல்ல, கூடவே உண்மையான அக்கறையா பேசினாளோ இல்ல பொய்யான அக்கறையில் பேசினாளோ தெரியாது ஆதவன் தவிர யாரும் அந்த மாதிரி அக்கறையாகவும் பேசினது இல்ல எனக்கு சின்னதா உடம்பு சரியில்ல என்றால் கூட எனக்கு அதை பார்த்து பார்த்து ஏதாவது செய்வா. அந்த அன்பு அக்கறை எல்லாம் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.



இந்த மாதிரி உண்மையான அன்பு எனக்கு காட்டுறதுக்கு நிறைய பேர் இருந்தாலும் அவங்கள தடுக்கவே ஒரு கூட்டம் இருந்துச்சு. ஆனா அங்க தான் யாருமே தடுக்க இல்லையே அந்த ஒரு விஷயம் என்னால அவ கிட்ட கேட்க விடாமல் இருக்க காரணமா இருந்துச்சு. சப்போஸ் நான் அவ கிட்ட கேட்டா அத அவ நான்தான் அவளை காதலிக்கிறதா தப்பா புரிஞ்சுகிட்டு என்ன விட்டு விலகி போயிட்டா இந்த அன்பு எனக்கு கிடைக்காது அப்படிங்கிற கேள்வி தான் எனக்குள்ளே வந்துச்சு.



அந்த ஒரு காரணத்துக்காகவே நான் அமைதியா இருந்தேன். ஆனா ஒருநாள் அவளாகவே வந்து அவளோட காதல என்கிட்ட சொன்னா. அவ என்ன மட்டும் தனியா கூப்பிட்டு போய் சொல்லி இருந்தா கூட அவ மேல எனக்கு ஏதாவது சந்தேகம் வந்திருக்குமோ என்னவோ? ஆனா நானும் ஆதவனும் ஒண்ணா நின்னுகிட்டு இருக்கும்போது



" சமர் உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும் ஆனா அந்த விஷயத்தை நீ எப்படி எடுத்து கொள்வ அப்படின்னு எனக்கு தெரியல. ஆனா நான் பேசி முடிக்கிற வரைக்கும் எதுவும் நீ குறுக்கிட்டு பேசாதே! பேசி முடித்த பிறகு உனக்கு என்ன தோணுதோ அதையே பதிலா சொல்லு. இல்ல நான் பேசினது உனக்கு பிடிக்காமல் போனால் கூட என்கிட்ட தாராளமா சொல்லிவிடு. இந்த விஷயத்தை ஏன் உன்னை தனியா கூப்பிட்டு சொல்லாம ரெண்டு பேரையும் வச்சுகிட்டு சொல்றேன் அப்படின்னு நான் சொல்லி முடித்தபின் நீங்க யோசிக்கலாம், இந்த விஷயத்தை எப்படியும் பேசி முடித்த பிறகு ஆதவன் கிட்ட சொல்ல தான் போறோம். அதை ரெண்டு பேருமே இருக்கும்போது சொல்லிட்டா நல்லது அப்படி என்கிற காரணத்துக்காக தான் உங்க ரெண்டு பேரும் வச்சு எல்லாத்தையும் சொல்றேன்" என்று கூறி நிறுத்தியவள் சமர் முகத்தை நேரடியாக பார்த்து



"எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு அதுக்கான காரணம் என்ன அப்படின்னு கேட்டா நிச்சயமா எனக்கு தெரியல ஆனா நான் தனியா இருக்கும் போது நீ எனக்கு தோள் கொடுத்தது, நீங்க ரெண்டு பேரும் தான் ஆனாலும் நீ சின்ன சின்ன விஷயத்துக்கு சில நேரமும் ஏங்கும் போது உன்னை அரவணைக்க தோனிச்சு. அதற்கான காரணத்தை என்னோட மனச முதல்ல தெளிவா சொல்லலை உன் மேல அக்கறை, பிரியம், அரவணைப்பு எல்லாமே என்ன அறியாம வளர ஆரம்பித்தது. இதே மாதிரி நான் ஆதவனையும் பார்த்து அவனுக்கு செஞ்சாலும் அவனை விட உனக்காக அதிகமா செய்யணும் அப்படின்னு என்னோட மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு.



இதுக்கெல்லாம் என்ன காரணமா இருக்கும் அப்படின்னு நான் ரொம்ப உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் இதெல்லாம் காதல் அப்படிங்கற விஷயமே எனக்கு புரிய ஆரம்பித்தது. புரிய ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே உன்கிட்ட இத சொல்ல வேணும் அப்படின்னு முடிவு பண்ணி இன்னைக்கு நான் உன் கிட்ட சொல்றேன். ஐ லவ் யூ சோ மச் என்னால நீ இல்லாம வாழ முடியும் அப்படின்னு தோணல. என்னோட வாழ்க்கை முழுக்க நீ என் கூடவே வரணும்னு ஆசையா இருக்கு கூடவே உன்னோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ஏங்க விடாமல் பார்த்துக்கொள்ள ரொம்பவே பேராசை. எனக்கு இருக்கும் இந்த ஆசை பேராசை எல்லாத்தையும் நீ நிறைவேற்றுவியா சமர்" என்று கேட்டாள்.



இவ்வளவு விஷயத்தையும் சமர் கூறி முடித்து தான் தாமதம் ஆதர்ஷினி "அவ வந்து ல்ல பல்ல காட்டி கொஞ்சி கொஞ்சி சொன்னவுடனே நீயும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு ஓகே சொல்லிட்டியோ?" என்று கேட்டாள்.



அதைக் கேட்டவுடன் சமர் அவளை முறைக்க பவானி "அடியே ஆத்திச்சூடி கொஞ்ச நேரம் அமைதியா இரு. அண்ணா தான் ஒரு பிளோல சொல்லிவிட்டு போயிட்டு இருக்கு இல்ல. அதையும் ஃபுல்லா சொல்ல விடாம குறுக்க பூந்து கேள்வி கேக்குற? ஓரமா போய் உட்காரு ஏற்கனவே உனக்கு தான் இந்த கதை தெரியும்ல. நான் கேட்டதுக்கு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்ட இப்பவாச்சும் எல்லாரையும் கேட்க விடு போ" என்று கதை பாதியில் நின்ற கடுப்பில் தன் தோழியிடம் பொரிந்து தள்ளினாள்.



"அடியே பானிபூரி வாய மூடிக்கிட்டு சும்மாயிரு. நான் எத்தனை தடவை இவன் பின்னாடியே போய் என்னோட காதலை சொல்லி இருப்பேன். என்ன காதலிச்சு இருக்கு ஆனா இன்னைக்கு அவ கிட்ட நான் ஏங்கி இருக்கேன், தாங்கியிருக்கேன், தூங்கி இருக்கேன் அப்படின்னு எல்லாம் சொல்றான். இதை எதையாவது அவன் என்கிட்ட நேரடியா சொல்லி இருக்கானா? இப்ப பாரு அவன் காதல் கதையை சொல்லும்போது மட்டும் முகத்தில் ஒரு பிரகாசம் வருது பாரு. அத இவனுங்க ரெண்டு பேரையும் பிரித்து பாக்கலையாம், அதனால இவனுக்கு அவ மேல காதல் வந்துதாம், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. லூசு முட்டாள் கொஞ்சம்கூட யோசிக்காம அவர் பிளான் பண்ணி பண்ணத புரிஞ்சுக்காம கஷ்டப்பட்டுட்டு வந்து நிக்குது. இவன் முகத்தை பார்த்து காதல் சொன்னவ இவன் கண்ண பாத்து சொன்னாளா அப்படின்னு கவனிச்சு இருந்தாலே எல்லா விஷயமும் புரிஞ்சிருக்கும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டு நான் போய் பேசும்போதெல்லாம் என்கிட்ட என்ன வருத்து வந்த?" என்று தன் தோழியிடம் ஆரம்பித்து தன் கணவனிடம் கேள்வியாக முடித்தாள்.



முதலில் முறைக்க ஆரம்பித்த சமர் இப்போது என்ன சொல்வது என்று அறியாமல் திருட்டு முழி முழிக்க ஆரம்பித்தான். அதை பார்த்த பெரியவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. இவ்வளவு நேரம் அவன் பேசப்பேச அவனின் இந்த நிலைக்கு தாங்கள் தான் காரணமோ என்ற எண்ணத்தில்தான் அவர்கள் அனைவரும் இருந்தனர்.



யார் சொன்னால் எனக்கென்ன என்று எண்ணி உண்மையான பாசத்தை இவனுக்கு காண்பித்து இருந்தால் இப்படி பொய்யாக பாசம் காட்டி ஏமாற்றிய அவளை நம்பி இருக்க மாட்டானோ என்ற எண்ணத்தில் உண்மையான நல்ல உள்ளம் கொண்டவர்கள் முகம் சுருங்கினர். அதை பொறுக்க முடியாமல்தான் ஆதர்ஷினி இவ்வாறு செய்தாள் என்பதை அங்கிருந்த யாரும் அறிந்திருக்கவில்லை ஆனால் இவர்கள் அனைவரும் சிரிப்பு சத்தத்தில் தான் அதை பலபேர் உணர்ந்து கொண்டனர்.



சமர் இன்னும் முழித்துக் கொண்டு நிற்பதை பார்த்த ஆதர்ஷினி "சரி இது போதும் மீதி கதையை சொல்லி முடி மொத்தமா சேர்த்து வச்சி உன்ன நான் செய்றேன்" என்று கூறினாள்.



"அப்புறமா என்ன நானும் சரின்னு சொன்னேன் .காலேஜ் முடிக்கிற வரைக்கும் நல்லாத்தான் போச்சு. ஆனா காலேஜ் பைனல் எக்ஸாம் வரதுக்கு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வந்து ரொம்ப அசிங்கமா பேசி திட்டிட்டு இந்த காதலு வேணாம் ஒன்னும் வேணாம் னு சொல்லிட்டு போயிட்டா. நானும் கொஞ்ச நாள் ஒரு மாதிரி இருந்த அப்புறமா ஆதவன் கொஞ்சம் கொஞ்சமா நிலைமையை எடுத்துச் சொல்லி எனக்கு புரிய வைத்தான். அதை புரிந்து நானும் அங்கே எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன் அவ்வளவு தான் இதுக்கு மேல ஒன்னும் இல்ல வீட்டுக்கு நான் தோட்டத பார்க்க கிளம்புறேன்" என்று கூறி தப்பி செல்ல ஆயத்தமானான்.



"இந்த டகால்டி வேலை தான வேணாம்னு சொல்றது, ஒழுங்கு மரியாதையா மீதியையும் சொல்லிட்டு போ நீ சொல்ற மாதிரி அவ சொன்னதுக்கு மறுப்பு சொல்லாம நீ ஏற்றுக் கொண்டு இருந்து இருப்ப. அதே மாதிரி இவ்வளவு நாள் எப்படி அவ உன்கிட்ட நடிச்சாலும் அதே மாதிரி மீதியிருந்த நாளும் நடித்துவிட்டு தான் இருந்திருப்பா அதனாலதான் உனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் அவ காதலிக்கிறா அப்படி நினைச்சுகிட்டு இருந்து இருக்க, ஆனாலும் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை இருக்கு மிஞ்சி போனா அவ கைய புடிச்சி இருப்ப அவள் தோளில் கை போட்டு இருப்ப.



அதை தவிர நீ வேற எதுவுமே அவகிட்ட செஞ்சிருக்க மாட்ட ஆதாரம் சொல்றது நீங்க ரெண்டு பேரும் நெருக்கமாக உட்கார்ந்து இருக்கிற விஷயமா இருக்கும். இல்லனா தூரத்திலிருந்து பார்க்கும்போது வேற ஏதாவது நெருக்கமா இருக்கிற மாதிரி இருக்கிற படம் ஏதாவது அவகிட்ட இருக்கும். ஆனா நீ எந்த தப்பு பண்ணி இருக்க மாட்ட அப்படி என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.



இப்போ எனக்கு தேவையான விஷயம் என்ன அப்படின்னு சொன்னா கடைசியில அத உன்கிட்ட சொல்லிட்டு போன விஷயம் என்ன? இந்த கேள்வியை ஏன் தெரியுமா நான் கேட்கிறேன் கண்டிப்பா அவளது பொய்யான அன்பாக இருந்தாலும் அந்த இடைப்பட்ட நாளில் உன்னோட முகத்துல ஒரு துள்ளல் தெரியும். அதை நானே நீ எப்பவாச்சும் ஆதவன் நான் வீட்டுக்கு வரும்போது பார்த்து இருக்கேன். நீ உன்னோட வெறுமை கூட்டுக்குள்ள சுருங்காமல் ஒரு சின்ன சின்ன சந்தோஷம் தான் அனுபவிக்க ஆரம்பித்து இருந்த, ஆனா திரும்ப நீ வரும்போது மொத்தமா உன்னோட கூட்டுக்குள்ளே சுருங்கிப் போயிருந்த அப்படி அவ என்ன சொன்னதுனால நீ இந்த மாதிரி மாறுன அப்படிங்கிற காரணம் எனக்கு இப்பவே வேணும். எனக்கு மட்டும் கிடையாது. இங்க இருக்கிற எல்லாருக்குமே அந்தக் காரணமும் அவ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அச்சுபிசகாமல் வேணும் அத சொல்லாம உன்னை இன்னைக்கு இங்க இருந்து விடுகிற மாதிரி இல்ல" என்று அழுத்தமாக கூறினாள்.



சமருக்கு நன்றாகவே தெரியும் தான் மட்டும் அந்த விஷயத்தை இவர்கள் அனைவரிடமும் கூறினால், இவர்கள் அனைவரின் கோபமும் விஷாலினி புறம் மிகக்கடுமையாக திரும்பும் என்பதை அறிந்தவன் வீணாக பிரச்சினை வர வேண்டாம் என்று எண்ணி அமைதி காத்தான்.



"இங்க பாரு முடிந்துபோனது முடிந்துபோனது அதை இருந்துட்டு போகட்டும், அதைப் பற்றி மறுபடியும் நம்ம பேச வேண்டாம் என்னோட காலேஜ் வாழ்க்கை முடிஞ்சு நான் அத கடந்து வந்து ரொம்ப நாள் ஆச்சு. கல்யாணம் வேணாம்னு சுத்திக்கிட்டு திரிஞ்ச என்ன அப்படியே விட்டுவிட்டு நீ இந்த கேள்வி எல்லாம் கேட்டு இருந்தா, நான் உனக்கு கண்டிப்பா பதில் சொல்லியிருப்பேன். ஆனா நீ அதை எதையுமே பண்ணாம மொத்தமா எல்லாரையும் சேர்த்து வச்சு பிளான் பண்ணி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட! அப்புறம் எதுக்காக இதெல்லாம் கேட்டுட்டு இருக்க? இதெல்லாம் தெரிஞ்சி மட்டும் நீ என்ன பண்ண போற? ஒழுங்கா அமைதியா இருக்கிற வழியை பாரு. எப்பவுமே நீ சொல்றதுக்கு எல்லாம் நான் ஆடிக்கிட்டு இருப்பேன்னு நீ நினைக்காதே எனக்கு கோவம் வரும் ஞாபகம் வச்சுக்கோ" என்று அழுத்தமான குரலில் கூறினான்.



"அதற்கு ஆதர்ஷினி ஏதோ கூற வர அருள் அண்ணா நீங்க கண்டிப்பா அந்த விஷயத்தை எங்ககிட்ட சொல்லியே ஆகணும் இன்னைக்கு இவ்வளவு திமிரா தெனாவட்டா வந்து உங்க ரெண்டு பேரையும் அசிங்கமா பேசிட்டு போறாங்க, அப்படினு சொன்னா இன்னைக்கு நாங்க யாருமே கூட இல்லாத போதும் உங்களை எவ்வளவு கேவலமாக பேசி இருப்பாங்க. உங்களுக்கே தெரியும் நாங்க எல்லாரும் உங்க மேல வச்சி இருக்க பாசம் நிச்சயமா நீங்க சொன்னா நாங்க போய் அந்த விஷானியை எதுவுமே பண்ண மாட்டோம் நாங்கள் தேடி போகவும் மாட்டோம். இதுக்கான உத்தரவாதத்தை நான் உங்களுக்கு தருகிறேன்.




தயவு செஞ்சு கடைசில அவங்க சொன்ன விஷயத்தை எங்களுக்கு சொல்லுங்கள் எதுக்கு அப்படின்னு என்று சொன்னா காலேஜ் போறதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த வீட்ல உங்களுக்கு எவ்வளவு விசயங்கள் நடந்திருக்கு, அப்ப எல்லாம் இந்த வீட்டை விட்டுப் போகனும்னு நினைக்காத நீங்க காலேஜ் போயிட்டு வந்த பிறகுதான் மொத்தமா இந்த வீட்டை விட்டு போக ஆசைப்பட்டீங்க அதற்கான காரணம் என்னன்னு இந்த வீட்ல இருக்க உங்க தம்பி தங்கச்சிகளான எங்களுக்கும் தெரியணும் தயவு செஞ்சு சொல்லுங்க" என்று கூறினான்.



என்னதான் நாங்கள் தேடி சென்ற பிரச்சினை செய்ய மாட்டோம் என்று அருள் கூறினாலும் அதில் அவளாக வந்தால் நாங்கள் விட்டு வைக்கவும் மாட்டோம் என்ற உள்ளர்த்தம் இருப்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கும் அளவிற்கு சமர் சின்ன குழந்தை அல்லவே! இருந்தாலும் தான் சொல்லாமல் இவர்கள் நகர மாட்டார்கள் இல்லை நான் சொல்லாமல் கிளம்பி சென்றால் நிச்சயமாக வருத்தப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டவன் தன் நண்பனின் கையை அழுந்த பற்றிக்கொண்டு கடைசியாக அவள் கூறியவற்றை கண்களை மூடிக்கொண்டு கூறி முடித்தான்.



அவன் கூறியவற்றை கேட்ட அனைவரும் ஒவ்வொரு விதமான மன நிலையில் இருந்தனர். ஆனால் அதைக் கூறி முடித்த பிறகு அவர் முகத்தில் இருந்த வேதனையை பார்க்கும்போது அவர்களின் ஆத்திரம் அதிகமானதே தவிர சிறிது கூட குறையவில்லை.



அப்படி என்னதான் சமர் கூறினான் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதாவது பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top