• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 21

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சமர் தந்தை சமரை பற்றி சலிப்பாகவும் தவறாகவும் பேச அதைப் பார்த்து செல்வராஜ் கொதித்தெழுந்து பதில் பேச வாய் திறந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புனிதா தன்னுடைய வாயைத் திறந்தார்.



"ஆமாங்க நீங்க சொல்ற மாதிரி சமருக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. இப்ப இல்ல அவனுக்கு பிறக்கிறது முன்னாடி இருந்தே அறிவு இல்ல அப்படி மட்டும் அறிவு இருந்து இருந்தா உங்களுக்கும் எனக்கும் புள்ளையா பிறந்து இருப்பானா? சரி அது ஆண்டவனோட செயலா வெச்சுகிட்டாலும், நமக்கு பிறந்த பிறகாவது கொஞ்சம் கொஞ்சமா நீங்க அவனை விட்டு ஒதுங்கி அவன் சின்னப் பிள்ளையா இருக்கும் போதே முழுசா ஒதுங்கி போயிட்டீங்க. அதை பார்த்தாவது இவரு நமக்கு அப்பாவா என்னைக்கு நடந்து இருக்காரு நாம இருக்கு இவர் கிட்டே போய் அப்பா பாசத்திற்கு ஏங்குறோம் அப்படின்னு அதையாவது யோசிச்சு இருக்கலாம்.



ஆனா அதை யோசிச்சு இருந்தா அவன் அப்பவே தனக்குள்ள இவங்க எல்லாம் இவர்களுக்காக எதுக்கு நான் வாழ்கிறேன் எனக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு போறேன். இவங்க பாசம் எல்லாம் இல்லனா கூட என்னால வாழ முடியும் அப்படிங்கிற வைராக்கியத்தை உருவாக்கியிருப்பான். அந்த பொண்ணு காட்டின அன்பு உண்மையா பொய்யா அப்படிங்கற விஷயத்தையும் புரிந்து இப்படி அவசரப்பட்டு கஷ்டப்பட்டு இருக்க மாட்டான்.

சரி அவனாவது பாசத்துக்கு ஏங்குனான் நாங்க எல்லாரும் என்ன பண்ணோம் அவன் மேல உண்மையான பாசம் இருந்த பிறகும் நீங்க எல்லாரும் அவனை கஷ்டப்படுத்துவீங்க அப்படி என்கிற காரணத்துக்காக ஒதுங்கி இருந்தோம். நாங்க ஒதுங்கி இருக்காமல் நீங்கல்லாம் யாரு எங்க பிள்ளைக்கு நாங்க பாசம் காட்டுவோம் அப்படின்னு எதிர்த்து நின்னு இருந்தா, நீங்க கொஞ்சம் அமைதியா இருந்து இருப்பீங்க. நாங்கள் எல்லாருமே உங்களோட திட்டுக்கோ இல்ல நீங்க அவனை கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் பயந்து பயந்து ஒதுங்கிப் போன காரணத்தினால் தான் அவன் வந்து ஒவ்வொரு நிமிஷமும் உண்மையான பாசத்துக்காக ஏங்கி போய் இருந்தான்.



உண்மையாவே அவன் என்ன தப்பு பண்ணான்? தப்பு பண்ணது எல்லாமே இந்த வீட்ல இருக்க ஒவ்வொருத்தரும் இதுல அவன தப்பு சொல்ல என்ன இருக்கு? அந்த பொண்ணு கேட்டு இருக்காளேஅவன் மேல தப்பு இருந்த காரணத்தினால் தான் எல்லாரும் ஒதுங்கியிருந்தாங்க அப்படின்னு இன்னைக்கு அது மாதிரி தானே ஆகியிருக்கு. உங்க யாருக்கும் பயப்படாம நாங்க அவங்கிட்ட உண்மையான பாசத்தோடு பழகி இருந்தா இன்னைக்கு அந்த பொண்ணு இந்த கேள்வியை கேட்க நிலைமைக்கு அவன் வந்து இருக்க மாட்டான்.



ஒன்னு எங்களை கஷ்டப்படுத்துவீங்க இங்க இல்ல அவனை கஷ்டப்படுத்துவீங்க. நீங்க யாரும் கஷ்டப்பட வேண்டாம் அப்படின்னு அவனும் ஒதுங்கிப் போய் இருந்தான் நாங்களும் ஒதுங்கி இருந்தோம். இப்படி நாங்க ஒதுங்கி இருக்க போய் தான் இவ்வளவு பிரச்சனையும் உங்களுக்கு அவனைப் பிடிக்கலைனு சொன்னா அவன் பிறந்த அப்பவே எங்கேயாவது கொண்டு ஆசிரமத்தில் சேர்த்து இருக்கணும். அதையாவது பண்ணி இருந்தா அங்க உள்ளவங்க கிட்ட கிடைக்கற உண்மையான பாசத்தை யாவது அனுபவிச்சு வளர்ந்திருப்பான்.



இல்லியா சின்ன வயசுல நீங்க அவனை படுத்துற கஷ்டத்த பாக்க முடியாம ஆதவன் அப்பா அம்மா வந்து அவனை அவன் கூடவே அழைச்சிட்டுப் போக கூப்பிட்டாங்க இல்லையா அப்பவாவது அவங்க கூட அனுப்பி வைத்திருக்கலாம். எங்க குடும்ப மானம் மரியாதை கவுரவம் அப்படின்னு நீங்க தான் கொஞ்சம் கொஞ்சமா அவன் அந்த வீட்டிலேயே வச்சுக் பாசத்துக்காக ஏங்கி வச்சீங்க!

இதிலே வீட்ல இருக்கிற வேற யாரோட பிள்ளைகாவது இந்த நிலைமை வந்து இருந்தா அவங்க அப்பா வந்து சும்மா இருப்பாங்க அப்படின்னு நான் நிச்சயமா சொல்ல மாட்டேன். உங்க தம்பிங்க ரெண்டு பேருமே நிச்சயமா உங்க அம்மாவை எதிர்த்து பேசி உங்க அப்பாக்கு புரிய வச்சு தான் பிள்ளை ராசி சரியில்லாமல் இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி எல்லாருடையும் சேர்த்து வச்சு வளர்ந்து இருப்பாங்க.



ஏன் என் பிள்ளை பிறந்த நேரத்தில் மட்டும்தான் இந்த வீட்ல பிரச்சினை நடந்துச்சா, அதுக்கப்புறம் அந்த வீட்டில் நடந்த எந்த நல்ல காரியத்துக்கு அப்புறம் உன் பிரச்சனை நடக்கவே இல்லையா? எதுக்காக என் பிள்ளையை மட்டும் ஒதுக்கி வச்சிங்க? இன்னைக்கு இந்த வீட்ல உள்ள பல பேர் உண்மையான சந்தோஷத்தோடு இருக்காங்க அதுக்கு காரணம் என் புள்ள.



அவன் இந்த வீட்டுக்கு வந்தது தான் சும்மா என் புள்ளைக்கு என்ன தெரிஞ்சது இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்கான் அப்படின்னு குறை சொல்லாதீங்க. இந்த வளர்ச்சி எல்லாமே அவன் அவனோடது நீங்க யாருமே அவன் கூட இருந்து அவளை வளத்து விடல. இவ்வளவு நாள் எங்க இருக்க யாருமே அவ மேல உண்மையான பாசம் காட்டல இப்பவும் யாரும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு ஒட்டுமொத்த பாசத்தையும் கொடுப்பதற்காகவே அவன் பொண்டாட்டி வந்து இருக்கா.

இனி தேவை இல்லாம என் பையன பத்தி பேசுற வேலை வேணாம். இவ்வளவு நாளா அமைதியா இருந்த மாதிரி நான் இருக்க மாட்டேன் இன்னைக்கு அவ சொல்றா அந்த பொண்ணு கேட்ட கேள்வி எல்லாம் எனக்கு சாட்டையால் அடிச்ச மாதிரி இருக்கு எனக்கு மட்டும் கிடையாது, இங்க நிக்குற அவன் தம்பி தங்கச்சி லிருந்து அத்தனை பேருமே உள்ள கலங்கிப் போய் நிற்கிறார்கள். இவ்வளவு தெரிஞ்சப்புறம் என் பையன பத்தி பேசுறீங்க அப்படின்னு சொன்னா உண்மையாவே நீங்க தான் அவனுக்கு அப்பாவா அப்படின்னு எனக்கு சந்தேகமா இருக்கு இதுக்கு மேல என் பையன பத்தி பேசுற வேலை வேணாம்.



இவ்வளவு நாளும் நீங்க அவனைவிட்டு எப்படி ஒதுங்கி இருந்தீங்களோ அதே மாதிரி இனியும் ஒதுங்கியே இருங்கள். தயவு செஞ்சு அவனோட வாழ்க்கைல நுழைந்து அவனை எந்த வகையிலும் தொந்தரவு பண்ணாதீங்க. இதுவரைக்கும் என்னோட வாழ்க்கையில பெருசா உங்ககிட்ட நான் எதுவுமே ஆசைப்பட்டு கேட்டது கிடையாது. முதன் முறையாய் கேட்கிறேன் தயவு செஞ்சு என் புள்ளையோட வாழ்க்கையிலிருந்து நீங்க ஒதுங்கியே இருங்கள்" என்று கூறி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

புனிதா பேச ஆரம்பிக்கும்போதே இளவட்டங்கள் அனைத்தும் அங்கே கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் ஒரு வாய் கூட பேசாமல் அவர் பேசுவதையே மிகவும் ஆனந்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அதிலிருந்து அவர்கள் மனதில் இருப்பதை அறிந்த பெரியவர்கள் என்ன பேசுவது என்று தெரியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.



அந்த இடத்தில் ஆதவன் சமர் இருவர் மட்டுமே இல்லை மற்றவர்கள் அனைவருமே அங்குதான் கூடியிருந்தனர். நடந்த அனைத்தையும் எப்படியாவது சமருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஆதர்ஷினி தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் தோழியை பார்த்தாள்.



எதற்காக அவள் தன்னை பார்க்கிறாள் என்பதை புரிந்து கொண்டவள் "ஏற்கனவே எல்லாத்தையும் வீடியோ எடுத்து வெச்சுட்டேன் இப்போ உன்னோட அண்ணா நம்பருக்கு அனுப்பனுமா இல்ல என்னோட அண்ணன் நம்பருக்கும் சேர்த்து அனுப்பனுமா? அதை மட்டும் சொல்லு எல்லாத்தையும் சேர்த்து அனுப்பி வைப்போம்" என்று நல்ல தோழியாக கூறினாள்.



"ரெண்டு பேருக்கும் அனுப்பி வைப்பது நமக்கு எப்பவாவது தேவைப்படும்" என்று கூறியதும் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அனுப்பி வைத்து விட்டாள் பவானி. யாராவது ஒருவர் அளித்தாலும் மற்றவர் அதை வைத்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இச்செயலை செய்துவிட்டாள்.



சமர் ஆதவன் இருவரும் வேலையில் இருந்த காரணத்தினால் அப்போது அவர்கள் அந்த வீடியோவை பார்க்கவில்லை. அன்று முழுவதுமே அவர்களால் அதை பார்க்க இயலவில்லை என்று தான் கூற வேண்டும்.



ஏனோ தன் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்து பிறகு முகத்தில் ஒரு தெளிவு இருந்ததைப் பார்த்த அவன் நண்பன் மிகவும் மகிழ்ந்து போனான். அன்றைய நாள் வேலை செய்த களைப்பில் வீடு திரும்பிய போது வீடே அமைதியாக இருந்தது எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருப்பதை பார்த்து கேள்வியாக நோக்க யாரும் அதற்கு எந்தவித பிரதிபலனையும் காட்டவில்லை. அதனால் அவரவர் வேலையை அவரவர் பிஸியாக இருக்கிறார்கள் போல என்று எண்ணிக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான். ஏற்கனவே பவானி கிளம்பி சென்று இருந்த காரணத்தினால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர் அதனால் அவரும் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை.



அனைவருமே புனிதா பேசியதில் தான் உழன்று கொண்டிருந்தனர். யாராலும் அவரிடம் பேச இயலவில்லை ஏனென்றால் அவர் சொல்வது அனைத்தும் உண்மை தானே ஆனால் சமர் தந்தை பாட்டி சித்தப்பா மூவருமே அதை புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் தாத்தாவிற்கு சிறிது புத்தியில் உரைத்தது தன்னுடைய மகனுக்கு இப்படி இருந்தால் நிச்சயமாக அவரால் எப்படி ஒதுக்கி வைக்க முடியுமா என்ற விஷயம் யோசிக்கக் கூடியதாக தான் இருந்தது, அதனால் அவர் சிறிது அமைதியாக இருந்தார்.



அன்றைய நாள் அவரை முடிந்துவிட மறுநாள் காலையில் பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடோடி வந்தனர். அனைவரும் கீழே வந்து பார்க்கும்போது அங்கே ஏதோ ஒன்றில் கால்பட்டு வழிக்கி விழுந்து இருந்த தன் இளைய மகனை பார்த்து பதறிய பாட்டி தன் வயதை மீறி "ஐயோ ராசா என்னய்யா ஆச்சு எப்படி விழுந்தா எந்த எடுபட்ட பாவி உன்னை இப்படி விழ வைத்தது" என்று கதறிக் கொண்டே ஓட அவரும் அங்கு இருந்த தண்ணீரில் வழிக்கி முருகன் மீது விழுந்தார்.




முதலில் முருகன் மட்டும் விழுந்து இருப்பதை பார்த்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வந்த இளவட்டங்கள் பாட்டியும் விழுந்ததைப் பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தனர்.



சரி அவர்கள் புன்னகைப் அதைப் பார்த்த பெண்களும் தன்னை மீறி சிரித்து விட்டனர் அதை பார்த்துவிட்டு "என்னடி உங்க எல்லாருக்கும் இளிப்பு வேண்டியது இருக்கு ஒழுங்கா வந்து எங்களை தூக்கி விடுங்கள்" என்று கத்தினார்.



பெண்கள் அவர் அருகில் செல்ல போக ஆதர்ஷினி அவர்களை தடுத்து "அத்தை நீங்க மூணு பேரும் எதுக்கு போகணும்? தேவை இருந்தா அவங்க பிள்ளையும் அவங்க புருஷனும் போய் தூங்கி விடுவாங்க. கீழே விழுந்து கிடக்கிறது தன்னுடைய தம்பியும் அம்மாவும் தானே ஒரு தங்களுக்கு புள்ளையும் பொண்டாட்டியும் தானே தேவை இருந்தால் தூக்கு வாங்க இல்லனா அப்படியே விட்டுவிட்டு சும்மா இருப்பாங்க. நீங்களும் போயி அந்த தண்ணி இல்ல கால் வைத்து கீழே விழுந்து அடிப்படை போறீங்களா?" என்று கேட்டவள் நின்று நிதானமாக கீழே விழுந்து கிடந்த இருவரையும் பார்த்து



"எப்பவுமே நானும் என்னோட தங்கச்சி கார்த்திகாவும் தான் முதல்ல எழுந்து வெளியே வருவோம். இன்னக்கி என்ன அதிசியமா நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் எந்திரிச்சு வந்து இருக்கீங்க? அதுமட்டுமில்லாம இது வெளியில போற வாசல் கதவு தானே இந்த வழியா தான் நாங்க ரெண்டு பேரும் வெளியே போய் வீட்டு முன்னாடி கூட்டி பெருக்கி கோலம் போடுவோம். நாங்க கீழவிழ செய்த சதியா இது. நீங்க செய்த சதியில் நீங்களே சிக்கிக் நீங்களே சிக்கி கொண்டீர்களா?" என்று நக்கலாக கேட்டாள்.



அப்போதுதான் அங்கிருந்த அனைவரும் அந்த விஷயத்தை யோசிக்கவே ஆரம்பித்தனர். அதைப்பார்த்த கார்த்திகா "இவ்வளவு நாள் நாம செஞ்சது எல்லாத்துக்கும் எதுவுமே தண்டனை கிடைக்கல அப்படி என்கிற தைரியத்தில் சுத்திகிட்டு இருந்து இருக்கலாம். இனி நாம அடுத்தவங்க காலவார நினைச்சா அதுல நம்மளே விழுவோம் அப்படி என்கிற விஷயம் இப்பவே உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லனா போகப் போக என்னோட அக்கா ரொம்ப தெளிவா உங்களுக்கு புரிய வைப்பா" என்று கூறிவிட்டு தன் உடன் பிறந்தவள் அருகில் நின்று கொண்டாள்.



அனைவரும் இப்போது கீழே விழுந்து கிடந்த இருவரையும் ஒரு அருவருப்பு பார்வை பார்த்து சென்று விட்டனர். கடைசியாக மிஞ்சி நின்று கொண்டிருந்தது தாத்தா மற்றும் சமர் தந்தை இருவரும் தான். ஒருவழியாக இருவரையும் தூக்கி விட்டு அவர்களுக்கு தேவையான மருந்தையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.



சமையலறையில் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்க ராதிகா வந்த மருமகள் இருவரையும் பார்த்து "உண்மையாவே இந்த வீட்ல என்னதான் நடந்துக்கிட்டு இருக்கு? இது எல்லாத்துக்கும் காரணம் யாரு? யாரோ வேணும்னே எல்லா விஷயத்தையும் பண்ணியிருக்காங்க. ஆனால் எதுக்காக இப்படி எல்லாம் பண்ணி இருக்கணும் இவ்வளவு நாள் உன் மேல மட்டும்தான் கோபம் இருந்துச்சு? ஆனா கார்த்திகா உனக்கு ஃபுல்லா சப்போர்ட் பண்ற பார்த்து அவ மேலயும் கோபம் திரும்பி இருக்கு. கண்டிப்பா என்னோட மாமியார் என்னமோ பண்ணி இருக்காங்க அது நல்லாவே தெரியுது. ஆனா அவங்க மட்டும் தனியா இருந்து எதையும் பண்ணியிருக்க முடியாது. இதுல வேற யார் சேர்ந்து இருக்கா இதுல சொல்றதெல்லாம் நம்பி முட்டாளாகி இருக்கிறது யார்" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.


"உங்க எல்லாருக்குமே இப்போ உங்களோட மாமியார் மேல தான் சந்தேகம் அதிகமா இருக்கும். ஆனா உங்க மாமியார் அளவுக்கு இன்னொருத்தர் இந்த வீட்ல வேண்டாத வேலை எல்லாத்தையும் பாத்து இருக்காங்க. சமர் வாழ்க்கையில நடந்ததுல ஆரம்பத்துல நடந்தது எல்லாத்துக்கும் உங்க மாமியார் காரணமாயிருந்தா அவன் காலேஜ் படிக்கும் போது நடந்தது எல்லாத்துக்கும் இன்னொருத்தர் காரணம். அவங்க யாரு அப்படிங்கிற காரணத்தையும் எதுக்காக இப்படி பண்ணாங்க அப்படிங்கற காரணத்தையும் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன். ஆனா என்னோட புருஷன் என் கிட்ட இன்னும் சரியா பேசவே மாட்டேன் என்கிறான். பொது இடத்துல எனக்கு சப்போர்ட் பண்ணி கிட்டு இருக்கிறவன் தனியா என் கிட்ட ஒரு வார்த்தை இதுவரைக்கும் பேசினது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக தெளிய வச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா இந்த தெளிவு எவ்வளவு நாளைக்கு எப்படின்னு தெரியல கூடிய சீக்கிரம் மொத்தமா அவனை தெளியவைத்து நேரடியா என்கிட்ட பேச வைக்கணும்" என்று யோசனையாக கூறினாள் ஆதர்சினி.

"அதெல்லாம் உன்னோட நல்ல மனசுக்கு சீக்கிரமே அவன் எல்லார்கிட்டயும் சகஜமாக பேசி பழகி உன்கூடவே நல்லா பழக ஆரம்பிப்பான் கவலையே படாத உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எங்க கிட்ட கேளு நாங்க தயங்காமல் உனக்கு உதவி பண்றோம்" என்று கூறினார்கள்.

"இப்ப எந்தவித பிரச்சனையும் இல்ல அத்தை ஆனால் கண்டிப்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள்ள விசாலினி திரும்ப வருவான் அவன் வரும்போது இந்த வீட்ல தங்குற மாதிரி தான் வருவா. ஏன்னா விஷாலினி இந்த வீட்ல உள்ள ஒருத்தருக்கு ரொம்ப நெருக்கமான ஒருத்தரோட பொண்ணு. அவள இந்த வீட்டுல தங்க விடாமல் நீங்க யாரும் எதுவும் பண்ணகூடாது. இந்த வீட்ல வந்து அவ தங்குற ஒரு வாரமோ ரெண்டு நாள் தான் அவளுக்காண தண்டனை எல்லாம் கிடைக்கும் அன்னைக்கி எங்களுக்கு நீங்க எல்லா உதவியும் பண்ணுங்க இப்ப எதைப்பற்றியும் யோசிக்காமல் சந்தோஷமாயிருங்க" என்று கூறியவள் நேராக புனிதாவிடம் சென்று

"அத்தை உங்களுக்கு உங்க மேல கோவம் வர வேண்டாம் எப்பவுமே சூழ்நிலைக் கைதியாக நாம எல்லாரும் நிறைய விஷயங்கள் எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கதான் செய்றோம். ஆனா உங்க பையனே கேள்வி கேட்டவள விளையாட நீங்க சும்மா விட கூடாது அவ வரும் போது உங்களால் செய்ய முடிந்த நல்லா செஞ்சு காமிங்க" என்று அவள் தோளை பற்றி கொண்டாள்.


அவரும் புரிந்து கொண்டேன் புன்னகைக்க சகஜமான சூழ்நிலையை அந்த வீட்டில் உருவாக ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி போட்ட திட்டத்தை என்னவென்று அறியாத சமர் அனைவரும் அமைதியாக இருப்பதையே யோசனையாக பார்த்து கடந்து சென்று கொண்டிருந்தான்.

அன்று தோட்டத்தில் அவனும் ஆதரவும் வேலையாக இருக்க இவன் முகத்தில் யோசனை இருப்பதை பார்த்த ஆதவன் "என்னடா எப்ப பாரு எதையோ யோசித்துக் கொண்டே இருக்க ஏதாவது பிரச்சினையா புதுசா ஏதாவது கிளம்பி வந்து இருக்கா?" என்று கேட்டான்.


"இல்ல மச்சான் வீட்ல இப்போ எந்த பிரச்சனையும் இல்லை ஆனாலும் ஏதோ ஒரு விஷயம் என் மனசை உறுத்திக்கொண்டே இருக்கு. அன்னைக்கு விஷாலினி வீட்டுக்கு வந்துட்டு போன பிறகு எல்லாரும் சகஜமாய் இருக்கிற மாதிரி தான் இருக்காங்க. ஆனாலும் ஏதோ ஒன்று சரியில்லாத மாதிரியே சொல்லி கிட்டே இருக்கு உன் தங்கச்சி பத்தி உனக்கே தெரியும் அவ எப்பவுமே அமைதியா இருக்கிற டைப் கிடையாது. அன்னைக்கே எல்லாரையும் கூப்பிட்டு வைத்து என்னமோ பிளான் பண்ணினா ஆனா அது என்ன அப்படின்னு தான் இப்ப வேற தெரிய மாட்டேங்குது" என்று கூறினான்.

"டேய் மச்சான் அன்னைக்கு நாம இங்க வந்த பிறகு வீட்ல உங்க அப்பா ஏதோ பேசி இருக்காரு அதுக்கு உங்க அம்மா நல்லா பதிலடி கொடுத்து இருக்காங்க. அப்பவே நமக்கு வீடியோ வந்துடுச்சுன்னு இன்னும் அதை பாக்கலையா முதல்ல அதை எடுத்து பாரு அப்போ உனக்கு புரியும் வீட்ல உள்ள பெரியவங்க ஏன் அமைதியா இருக்காங்க அப்படின்னு, ஆனால் இந்த சின்ன வாண்டுகள் எல்லாம் அமைதியாய் இருக்கிறது எனக்கு யோசனையா தான் இருக்கு" என்று யோசனையாக நிறுத்தினான்.


எந்த வீடியோ என்றவன் அதை ஃபுல்லாக பார்த்தால் அதில் அவனது கண்கள் லேசாக ஆனந்தத்தில் கலங்கத்தான் செய்தது. இவ்வளவு நாள் மனதில் அடக்கி வைத்திருந்த விஷயத்தைத் என் தாய் வெளிப்படுத்தி விட்டார் என்று எண்ணி புன்னகைத்துக்கொண்டே இருந்தாலும் எதற்காக இவ்வாறெல்லாம் செய்கிறா என்று கோபமடையும் செய்தான். ஏனென்றால் இதன் கோபம் மொத்தமும் தன் மனைவிமேல் தான் திரும்பும் என்பதை அறியாதவனா இதற்கிடையில் ஒரு போன் வர அதை எடுத்து பேசி அவன் முகம் மிகவும் கோபமடைந்து அதே கோபத்தோடு "மச்சான் உன்னோட தங்கச்சி இன்னைக்கு என்ன பண்றேன் பாரு தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கா" என்று கூறிவிட்டு வீடு நோக்கி கிளம்பினான் ஆனால் மொத்த பட்டாளத்தையும் அழைத்துக் கொண்டே அவன் தோட்டத்திற்கு வந்து இருந்தாள் அவன் மனைவி.

இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top