• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 26

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சமர் தன்னுடைய காதலை மனதிலிருந்து கூறியதை கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து போயினர். ஆனால் காதலை கூறும்போது ஆதர்ஷினி சொன்ன ஒரு விஷயத்தை அங்கிருந்த அனைவரும் கவனிக்காமல் போனதுதான் விதியின் செயல் போல கூடிய விரைவில் இந்த நிலைமைக்கு காரணமான வரை தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்து காட்டுகிறேன் என்று அவள் அந்த மகிழ்ச்சியான நிலையிலும் தன் கணவனை பற்றி யோசித்தது அருள் காதுகளில் மட்டுமே விழுந்திருந்தது.

அதை கவனித்தவன் மனதில் 'கூடிய சீக்கிரம் நம்ம வீட்ல ஒரு பெரிய புயல் வரப்போகுது, ஆனால் இது எல்லா பிரச்சினைக்கும் யாரு காரணமாய் இருப்பா பாட்டி காரணமாக இருக்கிற மாதிரி தெரியல! அதே மாதிரி இவ்வளவு நேரம் நடந்த விஷயத்தையும் பார்த்துக்கிட்டு இருந்த தாத்தா அப்பா முகத்துல ஒரு குற்ற உணர்ச்சி வந்தாச்சு. சித்தப்பா எந்த விஷயத்தையுமே பெருசா தலையிட்டது கிடையாது அப்படி இருக்கும்போது நல்லவங்க மாதிரியே இருந்து இவ்வளவு கொடூரமான வேலையும் நம்ம வீட்ல யாரு தான் செஞ்சு இருப்பா? கண்டிப்பா அந்த விஷயம் நம்ம பொண்டாட்டிக்கும் தெரிஞ்சு தான் இருக்கும், ஆனா அவளோ நம்மகிட்ட வாயை திறக்க மாட்டா சரி எப்படியோ சீக்கிரம் விஷயம் வெளியே வரும் பார்ப்போம். ஆனா அது யாரா இருந்தாலும் மனச தேத்திக்கிற ஐடியா நமக்கு வேணும்' என்று எண்ணிக்கொண்டு மெல்லிய புன்னகையோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களில் கண்ணீரோடு தன் கணவனின் முகம் பார்த்துக் கொண்டே இருந்த ஆதர்ஷினி சிறிது நேரத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தாள். பதிலுக்குச் அவள் கணவனும் புன்னகைக்க புனிதா "சரி வாங்க எல்லாருக்கும் சேர்த்து நில்லுங்க சுத்தி போட்டு விடுறேன் அதுக்கு பிறகு சந்தோஷமா வீட்டுக்குள்ள போகலாம்" என்று கூறி பிள்ளைகள் அனைவருக்கும் ஒன்றாக திருஷ்டி எடுத்தார்.


இவர்கள் இப்படி மகிழ்ச்சியாக இருக்க கோபத்துடன் வீட்டிற்கு உள்ளே சென்ற விஷாலின் கையை பிடித்து இழுத்து சென்ற அந்த உருவம் "ஏன் விசாமா இப்படி எல்லாம் நடக்குது? நீ ஏதோ நினைத்து ஒன்று கேட்க போய் இப்போ எல்லாமே அவர்களுக்கு சாதகமாக நடந்துக்கிட்டு இருக்கு. எனக்கு அவனோட முகத்துல சிரிப்பு இருக்கிறத பார்த்தாலே அப்படி பத்திக்கிட்டு எரியுது" என்று கேட்டது.


"அதுதான் அங்கிள் எனக்கு அவ்வளவு கோபம் வருது நாம அவனுக்கு கெடுதல் செய்ய ஏதாவது நினைச்சா மொத்தமா அது அவனுக்கு நல்லதா போய் முடியுது. இவ்வளவு நாள் நாம நினைச்ச படி தான் எல்லாமே நடந்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ அவனுக்கு கிடைத்து இருக்கும் தைரியம் தன்னம்பிக்கை அவன்கிட்ட தெரிகிற உறுதி காதல், அன்பு, பாசம் எல்லாமே அவனுடைய பெரிய பலமா இருக்கு! அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டில் உள்ள நிறைய பேரு அவனுக்கு ரொம்ப பக்கபலமாக இருக்கிறார்கள், அதுவே அவனுக்கு ஒரு பெரிய தெம்பு கொடுத்து நம்ம எல்லாரையும் அசால்டா எடுத்துக்கும் அவனுக்கு தைரியத்தை கொடுக்குது. இப்ப வரைக்கும் நீங்க தான் இது எல்லாத்துக்கும் காரணம் அப்படின்னு தெரியல ஆனா அவன் பொண்டாட்டிக்கு மச்சினிச்சிக்கும் அந்த விஷயம் தெரிஞ்சு இருக்கும்னு எனக்கு யோசனையா இருக்கு! கூடிய சீக்கிரம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டணும் இல்லன்னு சொன்னா கண்டிப்பா நீங்க தான் இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம் அப்படி என்கிற விஷயம் வெளியே வந்துவிடும்" என்ற யோசனையுடன் கூறினாள்.

"பேசாம அவனுடைய கதையை மொத்தமா முடிச்சுடலாம் அப்படின்னு தோணுது விசா. ஏன்னா இவ்வளவு நாள் ஏதோ ஒரு காரணத்துக்காக அவனை விட்டு வைக்க வேண்டிய தான் இருந்துச்சு! இதுக்கு மேல அவனை விட்டு வைத்தால் நிச்சயமாக எனக்கு பிரச்சனை தான் வந்து நிற்கும்! இதுநாள் வரைக்கும் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி தான போனான் அதனால நானும் சரி போயிட்டு போய் இருந்துட்டு போ அப்படி என்கிற எண்ணத்தில் விட்டுட்டேன். இப்போ அவன் ஆரம்பிச்சு இருக்கிற விவசாயத்துல அவனுக்கு நல்ல வருமானம் நல்ல பெயர் வேற கிடைச்சிருக்கு! ஊர்ல உள்ள பாதி பேருக்கு மேல அவனை மதிக்க ஆரம்பிச்சுட்டாங்க இதுக்கு மேல அவனை விட்டு வச்சா சரிப்பட்டு வராது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவன் கதையை முடிப்பது நல்லது. ஆனால் சந்தேகம் வராத மாதிரி முடிக்கணும் அதுக்கான வேலையை நான் பாத்துக்கிறேன். நீ இனி இந்த வீட்டில் உள்ள எல்லார்கிட்டயும் கொஞ்சம் கவனமாக இரு உன்னை எவ்வளவு கஷ்டப் படுத்த முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுத்த முயற்சி பண்ணுவாங்க. அவங்களால என்ன பண்ண முடியும் அப்படிங்கிற தெனாவட்டோட இருக்காத இதுங்க நினைச்சா என்ன வேணா பண்ணும்" என்று கூறினார்.


"சரி என்னால முடிஞ்ச அளவுக்கு நான் இவங்க எல்லார்கிட்டயும் போகாமல் பாத்துக்குறேன். இன்னும் மூன்று நாள் தான் நான் இந்த வீட்ல இருப்பேன், அதுக்கு பிறகு போயி அங்க உள்ள பிரச்சனை எல்லாத்தையும் சமாளிச்சு எல்லாத்தையும் சரி கட்டணும் அதுக்குள்ள உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க. இன்னைக்கு அவனோட கண்ணுல பார்த்த காதல நினைக்கும்போதே எனக்கு அவ்வளவு வெறி வருது, என்கிட்ட பழகும் போது கூட இந்த அளவுக்கு அவன் காதலை காட்டுனதும் இல்லை ஏதாவது பண்ணுங்க" என்று கூறி விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.

இவர்கள் பேசியதை யாரும் கேட்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க இவர்கள் பேசிய அனைத்தையும் நான்கு உருவம் தெளிவாக கேட்டு இருந்தது. அதில் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சி காணப்பட்டது. ஒருவர் முகத்தில் வெறுமை, இருவர் முகத்தில் கோபம், இன்னொருவர் முகத்தில் நக்கலான புன்னகை. இவர்கள் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்க இவர்கள் கூறியதை கேட்டு அவர்களை வேறு ஒரு திட்டத்துடன் ஆயத்தமாகினர்.


அதன் பிறகு அனைவரும் சாப்பிடும் போது கூட தாத்தாவும் சமர்த் தந்தையும் எதுவும் பேசாமல் யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக சாப்பிட்டு சென்றனர். அவர்கள் எதற்காக இவ்வாறு செல்கிறார்கள் என்ற காரணம் அருள் மூலமாக அனைவருக்கும் தெரிந்திருக்க அவர்களும் எதுவும் கூறாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்து சென்றனர்.

விசாலினி வருகையை வீட்டில் உள்ள யாரும் பெரிதாக விரும்பவில்லை என்ற காரணத்தை மையமாகக் கொண்டு அவளது ருமூக்கே சாப்பாடு கொண்டு செல்லப்பட்டது. இது அனைத்திற்கும் காரண கர்த்தா ஆதர்ஷினியாகவே இருந்தாள்.




புனிதா அவளிடம் "எதுக்காக அவளுக்கு சாப்பாட ரூமிலேயே கொடுக்க சொல்ற இங்க வந்தா தானே நாம ஏதாவது அவளை பண்ண முடியும்? அவ பேசும் பேச்சுக்கு எல்லாம் அவளை ஏதாவது பண்ணனும்னு எங்க உள்மனசு சொல்லிக்கிட்டே இருக்கு, நீ என்னடான்னா எங்க கிட்ட இருந்து அவளை காப்பாற்றி கிட்டு இருக்க என்ன தான் உன்னோட பிளான்?" என்று கேட்டார்.



ஆதர்ஷினி பதில் கூறுவதற்கு முன்பு கார்த்திகா "அத்த இன்னும் மூணு நாள்தான் அவ இந்த வீட்ல இருக்க போறா, அதனால ரெண்டு நாள் அவ சந்தோஷமா ரூம்லே இருந்து என்ஜாய் பண்ணட்டும் மூணாவது நாள் இந்த வீட்ல நிறைய உண்மைகள் வெளியே வரும். அப்படி வெளியே வரும்போது அவள் இந்த வீட்டை விட்டு போவா அன்னைக்கு உங்களுக்கு என்னென்ன அவளை கேள்வி கேட்கணும் என்ன என்ன பண்ணனும் அப்படின்னு தோணுதோ அதை எல்லாத்தையும் செய்யுங்க. ஆனா இந்த ரெண்டு நாள் அவளை கொஞ்சம் ஃப்ரீயா விட்டுடலாம் அவளால இந்த ரெண்டு நாள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது அதுக்கு என்னோட அக்கா கியாரன்டி! கவலைப்படாதீங்க நடந்தது எதையும் மாற்ற முடியாது அதே சமயம் நடக்கப்போவத நாம நல்லதா நடக்க வைப்போம் இன்னொரு விஷயத்தையும் புரிஞ்சுக்கோங்க" என்று கார்த்திகா ஏதோ கூற வர ஆதர்ஷினி அவள் கை பிடித்து "அமைதியாய் சும்மா இரு ஏதாவது தேவ இல்லாம பேசிகிட்டு இதுவரைக்கும் பேசினதே போதும்" என்று அடங்கிவிட்டாள்.




ஆதர்ஷினி தன் தங்கையை அடக்குவதை பார்த்த விஜயா "என்ன அக்காளும் தங்கச்சியும் எதையோ மறைக்கிறீர்கள் போல எதுவா இருந்தாலும் சொல்லு எந்த விஷயமாக இருந்தாலும் நாங்க அதையும் தெரிஞ்சுக்கிறோம்" என்று கூற ஆதர்ஷினி தன் தங்கையை முறைப்புடன் பார்த்தாள்.



அதற்கு அவள் "என்ன சொல்லி தான் ஆகணும் எல்லாத்தையும் சொல்லு எவ்வளவு நாள் மறைத்து வைத்துக் கொண்டே இருக்க போற? என்னைக்காவது ஒரு நாள் நாம கேட்கும்போது அன்னைக்கு வார்த்தையோட வீரியம் வேற மாதிரி இருக்கும் எல்லா பிரச்சனையும் முடியும்போது எல்லாத்தையும் முடித்து வச்சுட்டா அது பிரச்சனை உடனான பிரச்சனையா போயிரும். உனக்கு தெரியாதது எதுவுமே கிடையாது அதனால நீயே சொல்லிடு" என்றுகூறி அமைதியானாள்.



ஆதர்ஷினி ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு "நான் இப்ப கேட்க போறது உங்க எல்லாருக்கும் கஷ்டமா இருக்கலாம் ஆனா இது வந்து ரொம்ப நாள் ஆதங்கமா என்னோட மனசுல இருந்த விஷயம் அதுதான் இப்ப என்னோட தங்கச்சி கேட்க வந்துட்டா" என்று கூறி நிறுத்தி அவர்களில் மூவரின் முகம் பார்த்து விட்டு மறுபடியும் தொடர்ந்தாள்,



"இன்னைக்கி விஷாலினி சமர பத்தி இவ்வளவு பேசினதுக்கு நீங்க எல்லாரும் ஒரு காரணம்தான், அன்னைக்கு காலேஜ்ல வச்சி அவ பேசினா அதுவும் ஒரு வகையில் நீங்களும் காரணம்! இந்த வீட்ல மொத்தம் எத்தனை பேர் இருக்கீங்க நாலு பேர் அவன வேணாம்னு ஒதுங்கி போனா உங்க எல்லாருக்கும் என்ன பிரச்சனை? அவங்க சொல்ற எல்லாத்தையும் கேட்டு தான் எப்போவும் நடந்து இருக்கீங்களா? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களை மீறி நீங்க செஞ்சது இல்லையா?


செல்வராஜ் மாமா ஒரு சில நேரம் அவங்கள கேள்வி கேட்டு இருக்காங்க ஆனா அப்போ நீங்க யாருமே அவர் பக்கம் நின்னு சப்போட்டா பேசினது இல்ல. அதனால அவராலயும் ஒரு சில நேரங்களில் மேல கேள்வி கேட்க முடியல அதை மீறி கேள்வி கேட்டா அவரையும் எல்லாரும் அடுக்கி வச்சுருக்காங்க. அவரை அடக்க முடியாமல் போன சமயங்கள்ல சமர வார்த்தையால கொன்னு இருக்காங்க. நீங்க எல்லாரும் இவ்வளவு பேசுறவங்க யாராவது ஒருத்தர் மாத்தி மாத்தி கொஞ்ச நேரம் அவன கவனிச்சு இருந்தா கூட இந்த அளவுக்கு அவனோட நிலைமை வந்திருக்காது, இன்னைக்கு ஷாலினி இப்படி பண்ணிட்டா அப்படி என்கிற காரணத்துக்காக அவளை ஏதாவது பண்ணனும்னு நினைக்கிற நீங்க இதுவரைக்கும் நீங்க எல்லாரும் பண்ண தப்புக்கு என்ன தண்டனை கொடுக்க போறீங்க!


இந்த கேள்வி எனக்கு ரொம்ப நாளாவே இருந்துச்சு ஆனாலும் உங்களுடைய சூழ்நிலை ஒரு பக்கம் இருந்தத புரிஞ்சுகிட்டேன் அதனால அமைதியா போனேன், ஆனா என்னோட தங்கச்சி சொல்ற மாதிரி ஏதோ ஒரு மூலையில் இந்த பிரச்சனை என்கிட்ட அரிச்சிகிட்டே தான் இருக்கு அதனால தான் இன்னைக்கு உங்க கிட்ட கேட்டுட்டேன்" என்று கூறி நிறுத்தினாள்.




இதுவரை இந்த கேள்வியை யாரும் இல்லை நேரடியாக கேட்கவில்லை தான் ஆனால் இது அவர்கள் மனதில் அரித்துக்கொண்டிருந்த விஷயம்தானே அதனால் அமைதியாக அவள் கேட்ட கேள்வியை உள்வாங்கிக் கொண்டனர். ஆனாலும் தங்களுக்கு என்ன தண்டனை கொடுத்துக் கொள்வது என்ற விவரம் அவர்களுக்கு புரியவில்லை அதனால் கண்கள் கலங்கி அவளையே பார்த்தனர்.




அவர்களுடைய கலங்கிய முகம் பெண்கள் இருவருக்கும் கவலையாக இருக்க "இதுவரைக்கும் கவனிக்காத சேர்த்து வச்சி அவன கவனிங்க கொஞ்ச கொஞ்சமா அவன் வெளிய வந்துட்டு தான் இருக்கான், ஆனாலும் உங்க எல்லார் கிட்டயும் இன்னும் அவன் சகஜமா பேச பழகல அந்த விஷயத்தை நீங்க எல்லாரும் கவனிச்சு இருப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன். முடிஞ்ச அளவுக்கு உங்க எல்லோரோட மனசுல இருக்குற உண்மையான பாசத்தையும் அவன் கிட்ட காட்டுங்க. உங்க கிட்ட சகஜமா பேசி பழகுவது உங்க எல்லாருக்கும் பெரிய மன்னிப்பு அதுவரைக்கும் நான் இன்னைக்கு கேட்டது மட்டும் இல்லாம உங்களுக்குள்ளே இருக்கிற இந்த கேள்வி உங்களை கஷ்ட படுத்தி கொண்டே தான் இருக்கும் இதுவே ஒரு பெரிய தண்டனை தான்" என்று கூறினாள்.



பெண்கள் மூவருமே ஒன்றாக "எங்க வாழ்க்கைல நாங்க செஞ்ச பெரிய புண்ணியம் தெரியுமா நீங்க ரெண்டு பேரும் இந்த குடும்பத்துக்கு மருமகளாக வந்ததுதான் உங்கள தவிர வேற யாரு வந்து இருந்தாலும், இப்படி ஒரு பிரச்சனை வந்தா எப்படி எடுத்து இருக்காங்க அப்படின்னு தெரியல. ஆனா குடும்பத்தில் உள்ள எல்லாரையும் கவனிச்சுக்கிட்டு உங்க வாழ்க்கையும் கவனிக்கிறீர்கள் உண்மையிலேயே நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு வர நாங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்" என்று கூறி அவர்களை அணைத்துக் கொண்டனர்.




அந்நேரம் சமையலறை பக்கம் வந்த பாட்டி இவர்கள் அனைவரையும் பார்த்து "என்ன சமையல் பண்ணாம எல்லாரும் கூத்தடித்து இருக்கீங்க? வேளைக்கு சமையல் செய்ய சொன்னா அரட்டை கச்சேரி ஓடிக்கிட்டு இருக்கு ஆம்பளைங்க நேரத்துக்கு சாப்பிட வந்துருவாங்க ஒழுங்கா வேலைய மட்டும் பாருங்க" என்று அதிகாரமாக கூற




அதற்கு பதில் கூறுவதற்கு கார்த்திகா வாயைத்திறந்த நேரம் நடந்த அனைத்தையும் கேள்வி பட்டு உற்சாகமாக ஓடி வந்த பவானி பாட்டியை கவனிக்காமல் அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு தன் தோழியை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் "அடியே பானிபூரி உண்மையிலேயே நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன், இத்தனை நாள் நீ அந்த அண்ணாமலை இவ்வளவு அன்பா இருக்கிறதா பார்த்து அந்த அண்ணா எப்போ உன்னோட காதலை புரிந்து உன்னை ஏத்துக்க போறாங்களோ அப்படி என்கிற பயத்திலேயே சுத்திகிட்டு இருந்தேன். ஆனால் இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குதிக்க அந்த கூட்டத்தில் கார்த்திகாவும் ஒன்று சேர இவர்கள் சத்ததில் கீழே இறங்கி வந்த சரண்யா நிலாவும் தங்கள் பாட்டி கீழே விழுந்து கிடப்பதை கூட மதிக்காமல் அவர்களுடன் சேர்ந்து குதிக்க ஆரம்பித்தனர்.




வலி தாங்க முடியாமல் இடுப்பை பிடித்துக் கொண்டே எழுந்து பார்த்த பாட்டி "ஏண்டி பைத்தியக்கார சிரிக்கிகளா ஒருத்தி நிற்கிறது கூட தெரியாம இப்படியா ஓடி வருவ அப்படியே அவளை கட்டி புடித்து அவ உனக்கு அவ்வளவு சந்தோஷம் கொஞ்சம் கூட பொம்பளை மாதிரி நடந்துக்கனு சொன்னாலும் மண்டைல ஏறவே போறது கிடையாது. எனக்கு ஏதாவது சொல்லிட்டு கிளம்பி போய்க்கிட்டே இருக்காங்க இதுல எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சிருக்கவனும் பாவம் கல்யாணம் பண்ணிக்க போறவனும் பாவம்" என்று கத்தி கூற அதை சிறிதும் சட்டை செய்யாமல் அவர்கள் குதித்துக் கொண்டு தான் இருந்தனர்.



அவர் தனியாகப் புலம்புவது போலவே அங்கே இருக்க அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் மெதுவாக சென்றுவிட்டார் அவர் இடுப்பை பிடித்துக் கொண்டே செல்வதைப் பார்த்த மற்றவர்களுக்கு சிரிப்புதான் வந்தது. கீழே கேட்ட சட்டத்தில் இறங்கி வந்த ஷாலினி இவர்கள் அனைவரின் கொண்டாட்டத்தை பார்த்து உள்ளுக்குள் கருவி கொண்டு நின்றிருந்தாள். ஏற்கனவே அன்று ஆதர்ஷினி கூட்டு சேர்க்கவில்லை என்ற கடுப்பில் இருந்த பவானி விசாலினி ஏதோ வாய் திறந்து சொல்ல சென்ற நேரம் அருகில் நின்ற விஜயா கையிலிருந்த கை கழுவிய தண்ணீரில் அவளை அபிஷேகம் செய்து விட்டாள்.

"


எதுக்காக இப்ப என்னோட மேல இந்த தண்ணிய போட்ட பைத்தியமா நீ" என்று விசாலினி கத்தி கேட்க பாவமான பச்சைப் பிள்ளை முகத்தை வைத்த பவானி "ஐயோ உங்களுக்கு விஷயமே தெரியாதா அரிசி கழுவிய தண்ணீர்ல நாம தலைக்கு மசாஜ் பண்ணினா நம்மளோட முடி ரொம்ப சீக்கிரமா வளரும். கூடவே அந்த தண்ணில நம்ம ஃபேஸ் வாஷ் பண்ணிக் கொண்டே வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்கு எல்லாம் போயி முகம் பளபளப்பாகும். நீங்க வேற கீழே வரும்போது உங்க மூஞ்சி ஒரு மாதிரி இருந்துச்சு இதுக்காகத்தான் வந்தீர்களோ அப்படின்னு நினைச்சு உங்க மேல உங்க கிட்ட கொடுக்க தான் வந்தது தெரியாம உங்க மேலே கொட்டிடுச்சு இப்ப போயி குளிச்சிட்டு பிரச்னை பாருங்க முன்னாடியே விட ரொம்ப அழகா இருக்கீங்க" என்று ஒன்றும் தெரியாதவள் போலயே கூறி முடித்தாள்.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாத விசாலினி கோவமாக சென்றுவிட பவானி ஆதர்ஷினி கார்த்திகா இருவரையும் பார்த்து "ஏன் நீ எப்ப பாரு நீங்க என்ன பண்ணாலும் என்ன விட்டுட்டு செஞ்சிட்டு இருக்கீங்க இதெல்லாம் அநியாயம் பார்த்துக்கோங்க வீட்டுக்கு வந்து நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஜாலியா இருந்திருப்பீங்க கொஞ்சமாச்சும் என்ன சாப்டீங்களா நான் மட்டும் வீட்ல சோகமா ஒக்காந்து இருக்கேன் நீங்க இவ்வளவு நல்ல என்டர்டைன்மென்ட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க" என்று கூற

ஆதர்ஷினி "அடியே லூசு நாளை மறுநாள் அவளுக்கு ஒரு சிறப்பான பூசையிருக்கு மறக்காமல் வந்து சேரு இன்னைக்கும் நாளைக்கும் அவளை எதுவும் பண்ண வேணாம் அப்படின்னு அமைதியா இருந்தோம். அதையும் நீ சிறப்பா செஞ்சு விட்டுட்டேன் சரி வா சாப்பிட்டுவிட்டு நாம ஜாலியா சுத்துவோம்" என்று கூறி அழைத்து சென்று விட அவளும் ஜாலியாகத்தான் தோழியுடன் சென்று விட்டாள்.


சமர் தன் காதலை கூறிய காரணத்தினால் அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆதர்ஷினி தயார் செய்திட அதைவிட பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று அவளுக்கு காத்திருந்தது. தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற தைரியத்தில் இருந்தவளுக்கு அந்த அதிர்ச்சி பெரிய இடியாக இருக்க அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் மொத்தமாக அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்துவிட்டாள் தர்ஷினி.

இதில் அவளை எதிர்பார்க்காமல் ஒரு சிலர் உதவி அவளுக்கு கிடைத்தது அதுதான் அவளுக்கு ஆச்சரியத்தின் உச்சமாக இருந்தது.

அடுத்து என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

இன்னும் நான்கு அத்தியாயத்தில் கதையை முடித்து விடுவோமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் ஃப்ரெண்ட்ஸ்.
 
Top