• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 29

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
ராதிகா தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் பிரமை பிடித்தது போல் நின்ற முருகனை பார்த்து சிரித்த ஆதர்ஷினி



"என்ன அத்தைக் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியலையா? உண்மையாவே நீங்க காதலித்து இருந்தால் அவ்வளவு சீக்கிரம் அந்த காதலை மறந்து இருக்க முடியாது. அந்த காதலுக்காக தான் இது எல்லாத்தையுமே செய்தேன் அப்படின்னு சொல்ற நீங்க அந்த காதலை மறந்து தானே அத்தை கூட வாழ்ந்து இருப்பீங்க! இல்ல உங்க காதலியை நினைத்து அத்தை கூட வாழ்ந்து சரண் சரண்யா இரண்டுபேரையும் பெத்து விட்டீர்களா? அப்படி மட்டும் நீங்க சொன்னா அது எங்க அத்தைய அசிங்க படுத்துற மாதிரி, உங்களுக்கு ஒருத்தர் மேல வெறுப்பு வந்தால் காரணமே இல்லாம மேலும் மேலும் அவங்கள கஷ்டப்படுத்தி அழுக வச்சு இருக்கீங்க அதுமட்டுமில்லாம நீங்களா தான் அத்தையை கல்யாணம் பண்ணது அவங்க கூட சந்தோஷமா வாழ்ந்தது எல்லாம்.



ஆனா ஒரு விஷயம் நீங்க என்னோட புருஷனுக்கு செஞ்ச எல்லா விஷயத்தையும் ஏ மன்னிப்பேன் எதுவரைக்கும் தெரியுமா? அவன் காலேஜ் போகும்போது வரைக்கும் உள்ள விஷயம் வரைக்கும்தான். அவனை கஷ்டப்படுத்த ஒவ்வொரு காரணமா யோசிச்சு கடைசியில காதல் தோல்விதான் காரணம் அப்படின்னு உங்க மனசுல அதுவே பதிந்து போச்சு அதுக்காகவே அவனை கஷ்டப்படுத்தனும் அப்படின்னு விஷாலினி சொன்ன ஒரே காரணத்துக்காக அவன் காதல் தோல்வி அடைந்து உள்ளுக்குள்ள இன்னொன்றில் சாகணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டதுக்கு என்ன காரணம்? விஷா என்ன சொன்னா அவனுக்கு காதல் தோல்விக்கான வலியை கொடுக்க தான சொன்ன அப்படி பார்க்கும்போது அதுவரைக்கும் உங்களுக்கு அந்த காதல் தோல்வி தான் மனசுல இருந்துகிட்டே இருந்துச்சா பதில் சொல்லுங்க" என்று கேட்டாள்.



அவரால் பதில் கூற இயலவில்லை அதனால் அமைதியாக நிற்க அப்பொழுது பவானி நேராக அவர் முன்பு வந்து "உண்மையாவே நீங்க பண்ணது காதல் கிடையாது நீங்க சொல்ற மாதிரி எத்தனையோ தடவை அண்ணா தர்சினி வர்றத பார்த்து கண்டுக்காம போய் இருக்காங்க. எப்படி எல்லாம் அவளை அவங்ககிட்ட இருந்து விலக்கி வைக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனால் ஒரு நாள் கூட அவர்கள் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து இருந்ததே கிடையாது. தொரத்தி தொரத்தி போய் அவங்கள காதலிக்க வைக்க முயற்சி பண்ணா என்ன தான் இவ மேல காதல் வந்த இருந்தாலும், நீங்க எல்லாரும் சொன்னதை நம்பி இவ நல்லா இருக்கணும் அப்படின்னு சொல்லி தான் அண்ணா இவ்வளவு தூரம் போச்சு. ஆனா எக்காரணம் கொண்டும் இவ இல்லாமல் வாழ முடியாது இவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது அப்படிங்கற விஷயமே நல்லாவே தெரியும். இவளைத் தவிர வேற யாருமே இந்த அளவுக்கு பிடிவாதமாக இருக்க மாட்டார்கள் என்கிற விஷயமும் தெரியும் அதனாலதான் இவள அவங்களை விட்டு விலகி வைக்க முயற்சி பண்ணுச்சு. ஆனா அதுக்கப்புறம் ஒரு கல்யாணத்த பத்தி யோசிக்கவே செய்யாது.




அதே மாதிரி அண்ணனோட மனச புரிஞ்சுகிட்டேன் எவ்வளவு தடவை அண்ணன் திட்டினாலும் இவ அத நெனச்சி கொஞ்சமா வருத்தப்படுவா அதற்குப் பிறகு நிலைமை புரிந்துவிட்டது சந்தோசமா அடுத்து என்ன பண்ணி அண்ணனா இந்த பக்கம் பார்க்க வைக்கலாம் அப்படின்னு மட்டும் தான் முயற்சி பண்ணா! ஆனா ஒரு தடவை கூட இவளோட அன்பையும் பாசத்தையும் பெருசா அண்ணன்கிட்ட காட்டியது கிடையாது. எப்ப பாரு எதையாவது செஞ்சு அண்ணன் கிட்ட திட்டு வாங்குவா இல்லன்னு சொன்னா கோவப் படுத்துற மாதிரி பேச வைப்பா. அப்படி செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா அப்படியே அவங்களோட மனசுல உள்ள கஷ்டம் எல்லாத்தையும் வெளியே சொல்லாதா அப்படின்னுதான். இது தான் உண்மையான காதல்!


இன்னைக்கு ரெண்டு பேரும் நீங்க எவ்வளவோ விஷயங்கள் பண்ண பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் காதல் சொல்லிக்கிட்டு நிம்மதியா சந்தோஷமா இருக்குறாங்க இனி வாழ்க்கை மொத்தமும் இதே காதலோட தான் இருக்கப்போகறோம் அப்படிங்கற நினைப்புல இருக்காங்க அப்படின்னு சொன்னா அது எல்லாத்துக்குமே காரணம் அவர்களுடைய காதல் மட்டும் தான். இதுல உங்க காதல இவங்க காதலுடன் ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்க யார் பண்ணது காதல் அப்படின்னு" என்று கேள்வியாக நிறுத்தினாள்.



விசா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவள் "எதுக்கு இப்ப எல்லாரும் அங்கிளில டார்கெட் பண்றீங்க? அவங்க பண்ணதுல தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல ஒவ்வொருத்தங்க மனசு ஒவ்வொரு மாதிரி இருக்கும், தேவையில்லாம அவங்கள தப்பா சொல்ற வேலை வேண்டாம்" என்று கூறி முடித்த அடுத்த நொடி கார்த்திகா அவளை அறைந்து இருந்தாள்.




"இது எங்க குடும்ப விஷயம் இதுல நாங்க மட்டும் பேசி முடிவெடுத்து விடுகிறோம், தேவை இல்லாம நீ பேசாத! நீ எல்லாம் பேச கொஞ்சம் கூட தகுதி இல்லாதவ காதல் அப்படிங்கிற விஷயத்தை விட ஒரு உண்மையான நட்புக்கு அர்த்தம் உனக்கு தெரியுமா? அதான் சொல்றாரே உன்னோட அளவுக்கு எவ்வளவோ தடவை ஆதவன அண்ணாவ மாமா கிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ண பிறகு கொஞ்சம் கூட அண்ணா அவங்கள விட்டு விலகல அப்படின்னு, ஆனால் நீயும்தான் இருக்கியே முதல்ல நட்பா கொச்சைப் படுத்தின அடுத்து காதலை கொச்சைப் படுத்தினர சரி அதையெல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு போன நிம்மதியா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க வேண்டிய தானே?


இப்போ வந்து திரும்பவும் இப்படி அசிங்கப்பட்டு நிச்சயமா இதுக்கு மேல நீ பேசினால் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது எங்க குடும்ப விஷயத்தில் தலையிடுவது எங்களுக்கு சுத்தமா புடிக்காது. அதே மாதிரி இப்ப வந்திருக்கிற பவானி ஆதவன் அண்ணா அவங்க எல்லாம் யாரு அப்படின்னு கேள்வி கேட்காதே! ஆதவன் அண்ணா எங்களோட கூடப்பிறந்த அண்ணன் மாதிரி அவனுக்கு வரப்போற பொண்டாட்டி பவானி அதே மாதிரி அவ என்னோட அக்காவோட பிரண்டு எங்க குடும்பத்துல ஒருத்திதான் நீ எவளோ ஒருத்தி ஞாபகம் வச்சுக்கோ" என்று காட்டமாக கூறினாள்.




இதற்கு மேல் பேசினால் இங்கே இன்னும் பிரச்சினை ஆகிவிடுமோ என்று எண்ணிய விசா அமைதியாக அமர்ந்து கொண்டாள். கார்த்திகா கூறிய பிறகுதான் ஒவ்வொரு விஷயத்தையும் யோசிக்க ஆரம்பித்தவள் இவர்கள் அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு யாராலும் பதில் கூற முடியாதே என்று எண்ணி அமைதி காத்தாள்.




மாத்தி மாத்தி அனைவரும் பேசிய முருகன் தான் நிலை இல்லாமல் தவித்தார். யாருக்கும் அவரால் பதில் கூற முடியவில்லை தவறு மொத்தமாக தன் பக்கம் இருக்கும் போது யாருக்குத்தான் அவரால் பதில் கூற முடியும். அங்கிருந்த அனைவருக்குமே ராதிகா முகத்தை பார்க்கும் போது தான் கஷ்டமாக இருந்தது ஏனென்றால் அவர் முகத்தில் ஒரு வெறுமை இருந்தது.




அதுவரை நடந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அருள் நேராக தன் சித்தப்பாவிடம் வந்து "சித்தப்பா இது வரைக்கும் எல்லாரும் கேட்டதுக்கு நீங்க ஒரு பதில் சொல்லல நான் கேட்கிற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் யோசித்து பார்த்து பதில் சொல்லுங்க! காதல் எல்லாருக்கும் அவ்வளவு ஈசியா கிடைச்சது இல்ல. உண்மையாவே உங்களால உங்க காதலியை தவிர வேற யாருமே மனசுல நினைக்க முடியாமல் இருந்து இருந்தா நிச்சயமா அவங்க கல்யாணம் நடக்கிறதா பார்த்துட்டு அமைதியா இருந்து இருக்க மாட்டீங்க. அதே மாதிரி நீங்க தான் அவங்களோட உலகம் அப்படின்னு உங்க காதலி நினைச்சு இருந்தா உங்க கண்ணு முன்னாடியே இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போய் இருக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சி நீங்க ரெண்டு பேருமே உங்க ரெண்டு பேர் வீட்லயும் ஏன் உங்க காதல பத்தி சொல்லல சரிதானே இல்ல நீங்க சொன்ன பிறகும் வீட்ல யாருமே அதைக் கண்டு கலையா இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க" என்று கேட்டான்.




முருகன் இல்லை என தலையசைத்தார் அதைப் பார்த்து சிரித்த அருள் "காதல் வந்தாலே கள்ளத்தனம் ஜாஸ்தியாக வரும் அது காதல் பண்ண எனக்கே தெரியும் அப்படி இருக்கும்போது அவங்க வீட்ல உங்க காதலி தன்னோட காதலை சொல்லி இருக்கலாம். உங்கள விட்டு வேற யாரையும் அவங்க மனசால கூட கணவனை நினைக்க முடியாது அப்படின்னு ஒரு நிலைமை இருந்தா அவங்க வீட்டை விட்டு வெளியே வந்து உங்கள கல்யாணமாவது பண்ணியிருக்கலாம் கண்டிப்பா நீங்க கல்யாணம் பண்ணிட்டு வந்து இருந்தா பாட்டி எதுவுமே சொல்லியிருக்க மாட்டார்கள்.

ஏன்னி பாட்டிக்கு உங்க மேல செல்லம் ஜாஸ்தியா இருக்கும்போது தாத்தாவும் பெருசா எதுவும் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எதனால அவங்க செய்யல அதே மாதிரி அவங்களுக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்ச பிறகும் நீங்க சமர் அண்ணா மேல மட்டும்தான் வன்மத்தை நீங்கள் தவிர்த்து அந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணவே இல்ல. இதுல இருந்து உங்க ரெண்டு பேருக்கும் தெரியல அது உங்க வயசு சம்பந்தமான வந்த ஒரு ஈர்ப்பு மட்டும் தான். அத நீங்க ஏதோ காவிய காதல் நெனச்சிகிட்டு எங்க அண்ணனை இவ்வளவு வருஷம் கஷ்டப்படுத்தி இருக்கீங்க இப்ப நீங்க பண்ணதுக்கு எல்லாம் என்ன செய்ய போறீங்க" என்று கேட்டான்.




அவர் இன்னும் அமைதியாக நிற்க அவரைப் பார்த்து வெறுப்பு வந்தாலும் தாத்தாவும் அப்பாவும் எதுவும் கூற முடியாமல் அவளை கையாண்டு கொண்டு நின்றனர். ஏனென்றால் அவர்களும் நிறைய தவறுகள் செய்திருக்கிறார்கள், அதனால் எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் தங்களுடைய குற்ற உணர்ச்சியை தவிர்க்க முடியாமல் தடுமாறினார்கள்.




அவருடைய அமைதியை பார்த்து கோபமடைந்த சரண் சரண்யா இருவரும் நேராக அவர் முன்பு வந்தனர்.




"எங்க ரெண்டு பேருக்கும் நீங்க அப்பாவா இருந்து செஞ்சதை விட எங்க கூடவே இல்லாமல் இருந்தாலும் சமர் அண்ணா எங்களுக்கு நிறைய செஞ்சிருக்காங்க. சின்ன சின்ன பிரச்சனை எங்களுக்கு வந்தாலும் நீங்க எல்லாம் வரதுக்கு முன்னாடி அண்ணாதான் வந்து அந்த பிரச்சனையை எங்களுக்கு சரி பண்ணி கொடுப்பாங்க. அப்படிப்பட்ட அண்ணனோட பாசத்தை முழுசா கூடவே இருந்து அனுபவிக்க முடியாமல் அதுக்கு நீங்கதான் காரணம் அப்படின்னு நினைக்கும்போதே எனக்கு அவ்வளவு கோபம் வருது" என்று சரண்யா கூற



அதைக் கேட்டுக்கொண்டிருந்த சரண் "இனிமே நாங்க உங்க கிட்ட பேச போறது கிடையாது. எப்படி இந்த குடும்பத்தில் உள்ள யாருமே செம அண்ணா கூட பேச கூடாது அப்படின்னு நீங்க நினைச்சிங்களா அதே மாதிரி இனி உங்க பிள்ளைங்க நாங்க உங்க கிட்ட பேச மாட்டோம். அண்ணா அவங்க அப்பாவோட பாசத்துக்காக ஏங்கி இருக்காங்க அம்மா பாசத்துக்காக எவ்வளவு ஏங்கி இருப்பாங்க. இனி நீங்க உங்களோட பிள்ளைங்க மேல பாசம் காட்ட முடியாமல் தவிக்கும் நாங்க அடைகிற சந்தோஷத்தை பார்க்கும்போதெல்லாம் அதுல கலந்துக்க முடியாம தனியா நிற்கும்போதுதான் சமர் அண்ணா அனுபவிச்ச வலி என்ன அப்படின்னு உங்களுக்கு புரியும். வயசுல எங்களை விட எவ்வளவு பெரியவங்க நீங்க எங்களுக்கெல்லாம் புத்தி சொல்லி எங்களை அழைத்து பெரிய ஆளா கொண்டு வந்து இருக்கணும் ஆனால் உங்களை பார்த்து வளர்ந்த எங்களை நாங்களே அசிங்க படுத்துற மாதிரி தான் ஏதாவது பண்ணுவோம். அதனாலேயே உங்களை விட்டு நாங்க ஒதுங்கி இருக்க போறோம் கவலையே படாதீங்க எங்களுக்கு ஆபாச கொடுக்கிறது செல்வராஜ் பெரியப்பா இருக்காங்க கூடவே அப்பா மாதிரி பாத்துக்க எங்களுக்கு அண்ணன் எங்க இருக்காங்க நீங்க அதனால சந்தோஷமா உட்கார்ந்து எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பாருங்க" என்று கூறி முடித்தான்.



தன் பிள்ளைகள் தன்னை வெறுத்து ஒதுக்க போகிறார்கள் என்ற விஷயத்தை அறிந்த முருகன் துடிதுடித்துப் போனார். ஆனால் அவர் செய்த தவறு அவரை கேள்வியும் கேட்க விடவில்லை அவர்களிடம் மன்னிப்பு கேட்டு என்றும் அளவிற்கு அவருக்கு தகுதியும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டார்.




ஆனால் இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும் சமர் ஆதவன் இருவரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஏன் ஆதர்ஷினி கார்த்திகா ஆதவன் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஒரு கேள்வி கேட்காதது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சிறு ஆச்சரியமாகவும் அவர்கள் என்ன நினைத்து இருப்பார்களோ என்ற அச்சமும் வந்தது.




அவர்கள் அனைவரும் தங்கள் புறம் திரும்புவதை கவனித்த ஆதவன் கார்த்திகா குடும்பம் "இந்த விஷயமெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும் இங்க பொண்ணுங்க இந்த வீட்டில இருக்கும்போது அவங்க நல்லா இருக்காங்களா அப்படிங்கிற விஷயத்தை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருப்போம். எங்க மாப்பிள்ளையோட நிலைமை எங்களுக்கு நல்லாவே தெரியும் அவரோட சந்தோஷம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமாக பட்டுச்சு, அதனாலேயே முழுநேரமும் இவங்க எல்லாரையும் நாங்க கவனிச்சுக்கிட்டு தான் இருந்தோம். இருந்தாலும் நேற்று நடந்தது நாங்களே எதிர்பார்க்காமல் நடந்தது ஒரு சின்ன கவனக்குறைவால் அதான் இவங்களுக்கு இப்படி ஆகிப் போச்சு. இல்லனா நேற்றும் இப்படி நடக்க வைத்த இருக்கமாட்டோம் எங்கள நெனச்சி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இனியாவது எந்த பிரச்சினையும் இல்லாம எல்லாரும் சந்தோஷமா இருங்க" என்று கூறினார்கள்.



ஆதர்ஷினி இப்போது சமர் முகத்தை பார்க்க அவன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தான்.

"


நீங்க பண்ணது எல்லாத்துக்குமே சேத்து வச்சு அனுபவித்தது நான் மட்டும்தான் நான் இல்லைன்னு சொல்லவே மாட்டேன். ஆனாலும் உங்களால தான் எனக்கு ஒரு சில உண்மையான உறவுகளும் கிடைத்தது. அந்த விஷயத்தையும் நாம் மறுக்க கூடாது ஏன்னா எனக்கு அதை பார்த்து பார்த்து செய்யணும் நான் கஷ்டப்பட கூடாது அப்படின்னு என்னோட பொண்டாட்டியும் என்னோட பொண்டாட்டி குடும்பமும் என் தம்பி தங்கச்சிங்க எல்லாரும் அவ்வளவு கஷ்டப்பட்டு நிறைய விஷயத்தை செஞ்சாங்க. அதெல்லாம் நினைக்கும்போது இப்போதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்குது, ஆனா நான் பண்ண ஒரே தப்பு நீங்க பண்ணது எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ நான் எல்லாரையும் விட்டு ஒதுங்கி போனதுதான்.




நான் மட்டும் யாரையுமே விட்டு ஒதுங்கிப் போகாமல் என் மேல உண்மையான பாசம் காட்டிய எல்லார்கிட்டயும் பாசம் காட்டி இருந்தேன் அப்படின்னு சொன்னா, இன்னைக்கு நிறைய பேர் மனசுல குற்ற உணர்ச்சி வர வேண்டிய வாய்ப்பு இல்ல. இதுல நான் உங்களோட அப்பாவையும் அண்ணனையும் சேக்கலை என அவங்க என் மேல பாசம் காட்டுவது கிடையாது, ஆனால் எத்தனையோ தடவை மத்தவங்க எல்லாரும் எங்க கிட்ட நெருங்கி வர நினைக்கும் போதெல்லாம் நான் ஒதுங்கி போனேன். அப்படி நான் ஒதுங்கிப் போகாமல் இருந்திருந்தால் விஷாலினி மேல எனக்கு ஒரு சின்ன அன்பு மட்டும்தான் இருக்கு அப்படிங்கற விஷயமே எனக்கு அப்பவே தெரிஞ்சு இருக்கும். ஆதர்ஷினி மேல காதல் வந்த பிறகுதான் அந்த விஷயம் எனக்கு புரிஞ்சு இருக்காது.




உங்களுக்கு தண்டனை கொடுக்கிற அளவுக்கு எனக்கு சக்தியும் இல்ல அதுக்கு உங்களுக்கும் எனக்கும் எந்தவிதமான உறவும் இல்லை. ஆனா உங்களுக்கான தண்டனையே உங்களோட உறவுகளை கொடுத்துட்டாங்க அதை நான் தடுக்க மாட்டேன் இனி இந்த வீட்டை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன். என் மேல உண்மையான பாசம் காட்டின எல்லார்கிட்டயும் நான் சகஜமாக பேசி பழகி அவங்களும் என்னோட பாசத்தை காமிக்க போறேன். இத நீங்க இனியும் தடுக்க முயற்சி பண்ணா உண்மையிலேயே இதோட பின்விளைவுகளை நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மோசமா சந்திக்கிற மாதிரி பண்ணி வெச்சுடுவேன்.


இன்னைக்கு நான் இவ்வளவு பேச காரணம் என்ன தெரியுமா இதனால் வரைக்கும் நீங்க என்ன மட்டும்தான் கஷ்டப்படுத்த நெனச்சுக்கிட்டு இருந்தீங்க. ஆனா எனக்கே எனக்கென கூட இருந்த என்னோட நண்பனோட உயிரையும் எடுக்கும் அதற்கான அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது? நீங்க தான் இதை பண்ணிங்க அப்படின்னு ஆதாரத்தை எடுத்து உங்களை போலீசில் பிடித்து கொடுக்க ரொம்ப நேரம் ஆகாது ஆனால் அதை செய்ய எனக்கு விருப்பமில்லை இனி தயவு செஞ்சு என்னோட மூஞ்சி முன்னாடி நீங்க வந்துடாதீங்க இவ்வளவு நாள் நான் உங்க மூஞ்சி முன்னாடி வந்தா தான் உங்களுக்கு வெறுப்பு வந்துச்சு.


ஆனா எனக்கு இருக்கிற வெறுப்பு போற வரைக்கும் நீங்க என் முன்னாடி வந்துடாதீங்க. அதே மாதிரி நான் எப்படி விஷாலினி மேல ஒரு சின்னதா அன்பு காட்டினேன் அதே மாதிரி தான் நீங்களும் உங்களுடைய காதலியை காதலியை சொல்லிக்கிட்டு இருக்க பொண்ணு மேல அன்பு காட்டி இருக்கீங்க அது காதல் இல்ல அத முதல்ல தெளிவாப் புரிஞ்சுக்கோங்க அப்படி மட்டும் அத காதலுன்னு இனியும் சொன்னா நீங்க இவ்வளவு நாள் சித்தி கூட வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தமே கிடையாது. எப்பவுமே அவங்க முகத்துல சந்தோசத்தை மட்டும்தான் நான் பார்த்து இருக்கேன் ஆனா இன்னைக்கு அவங்க முகத்துல வெறுப்பு இருக்கு வெறுமை இருக்கு அப்படின்னு சொன்னா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நீங்க மட்டும்தான் இனி என்னோட வாழ்க்கையில தலையிட வேலை வெச்சுக்காதீங்க" என்று அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் கூறி முடித்தான்.




யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க அப்போதுதான் நல்ல உறக்கத்தில் இருந்த பரிபூரணம் பாட்டி எழுந்து வந்தார் எழுந்து வந்தவர் கேட்ட கேள்வியில் மொத்த குடும்பமும் அவரை கொலைவெறியில் முறைக்கு ஆரம்பித்தது.



இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்க உங்கள் தோழிக்கு என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari