• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 30

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
வீடு கூச்சல் குழப்பமாக இருக்க அனைவரும் கூறியதைக் கேட்டு இடிந்து போய் அமர்ந்து இருந்தார் முருகன். எப்பொழுதும் வீட்டில் தனிக்காட்டுராஜா நாங்கள்தான் என்று சுற்றிக் கொண்டிருக்கும் தாத்தாவும் சமர் தந்தையும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போய் நின்றிருந்தனர்.

மிச்சமிருந்தது பாட்டி பரிபூரணம் மட்டும்தான் அவர் இந்த சத்ததிற்கு நடுவிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருந்தால் அப்போதுதான் எழுந்து வெளியே வந்தவர், அனைவரும் கூடி இருப்பதை பார்த்து 'என்னவா இருக்கும் மொத்த கூட்டமும் இன்னைக்கு காலையிலேயே வந்து இருக்கு, ஒருவேளை இந்த சமர் பொண்டாட்டியும் அருள் பொண்டாட்டியும் இனி இங்க இருக்க முடியாது அப்படின்னு சொல்லி அவங்க வீட்டுக்கு போக ரெடி ஆகி விட்டார்களா? அப்படி மட்டும் நடந்தால் இந்த வீடே அமைதியா இருக்குமே!' என்று எண்ணிக்கொண்டே வந்தவர் அதை நேரடியாக கேட்கவும் செய்தார்.

"டேய் அருளு என்னடா உன்னோட மாமியார் வீட்டிலிருந்து எல்லாரும் வந்து இருக்காங்க, உன்னோட பொண்டாட்டியும் உன்னோட அண்ணன் பொண்டாட்டியும் அவங்க வீட்டுக்கு போக போறீங்களா? அப்படி மட்டும் போக போறதா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் டா! எப்பவும் கீழே விழுந்து வாருவேன் எப்போ குறுக்கெலும்பு உடையும் அப்படி என்கிற பயத்திலேயே இந்த வீட்ல நடமாட வேண்டிய தான் இருக்கு. அனுப்புறது தான் அனுப்புற அவங்க ரெண்டு பேரையும் அனுப்பும்போது இதோ இந்த மேனாமினுக்கியையும் சேர்த்து அனுப்பி விடு, எப்ப என்னோட புருஷனுக்கு முத்தம் கொடுப்பாள் அப்படி என்கிற பயத்திலேயே சுத்திக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு" என்று கூற

"கிழவி உனக்கு நேரம் சரியில்லை அப்படின்னு நினைக்கிறேன், எவ்வளவு தைரியம் இருந்தா என்னயும் என்னோட அக்காவையும் எங்க வீட்டுக்கு போக சொல்லுவ? இரு உன்ன உன்னோட பிறந்த வீட்டுக்கு பார்சல் பண்ண வழி பார்க்கிறேன்" என்று கார்த்திகா கோபமாக கத்திக் கொண்டு அவரை நெருங்கினாள்.

"அடியே கார்த்தி இதுவே எப்போ நரகத்துக்கு போவேன் அப்படின்னு எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வயசுக்கு வந்தாச்சு. இனி இத போய் பிறந்த வீட்டுக்கு எப்படி அனுப்புவ உண்மையான பாசம் வச்சவங்களுக்கே இந்த காலத்துல சொந்தங்கள் கூட இருக்குறதுக்கு வழி இல்லாம இருக்கு. அப்படி இருக்கும்போது இதுக்கெல்லாம் எப்படி சொந்தத்துல இருக்க முடியும்? அவங்க பிறந்த வீட்டு ஆளுங்க இதை இன்னுமா ஞாபகம் வெச்சு கிட்டு இருப்பாங்க, லூசுத்தனமா பேசாத வேணும்னா முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுட்டு வந்துடலாம் அது கரெக்ட்டா இருக்கும்" என்று பவானி ஐடியா கொடுக்க

"பானிபூரி அதெல்லாம் சரிப்பட்டு வராது முதியோர் இல்லத்தில் போயி ஏற்கனவே நிம்மதி தேடி வந்து இருக்கிறவங்க நிம்மதியையும் இந்த கிழவி எடுத்துரும். அதனால இதுக்கு வேற விதமா ஏதாவது பண்ணலாம் எலும்பு முறிந்து விடுமோ என்கிற பயத்தில் தான் இது சுத்துரேன் என்று சொல்லுது, இவ்வளவு நாள் இது வேலை செஞ்ச எனக்கு தெரியல இதோட மாமியார் இருக்கிற வரைக்கும் அவங்க செஞ்சு கொடுத்து இருக்காங்க. அவங்க சாகுற நேரத்துல கரெக்டா இதுக்கு மருமகள் வந்துட்டாங்க அதனால அவங்க எல்லாரும் இதுக்கு சமைச்சு போட்டு இருக்காங்க. இனி நீ இதை சமைக்க வச்சு தான் எல்லாரும் சாப்பிட போறோம் பாரு சின்ன சின்ன வேலை இல்ல தப்பு சொன்னாலும் இது அத மாத்தி ஒழுங்க சமைக்கனும். இப்ப குறை சொல்லிகிட்டே இருக்குல்ல இதோட சாப்பாடு எல்லாரும் குறை சொல்லும் போது தான் இருக்கு அதோட அருமை தெரியும்" என்று ஆது முடிவாக கூற


இவர்கள் மூவரும் பேசியதை கேட்டு அரண்ட பாட்டி "அடியே என்ன நினைச்சுட்டு இருக்கீங்க காலம்போன காலத்துல என்ன வேலை வாங்கி நீங்க எல்லாம் பாவத்தை சம்பாதிக்காத, ஒழுங்கு மரியாதையா இருக்கிற வேலையை பாருங்க. டேய் என்னங்கடா உங்க பொண்டாட்டி ரெண்டு பேரும் என்னென்னமோ பிளான் போட்டுட்டு இருக்காளுக, நீ ரெண்டு பேரும் அமைதியா கேட்டுகிட்டு இருக்க" என்று இதுவரை தான் சமரிடன் பேசியது இல்லை என்பதை கூட மறந்து அவனிடம் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

முதலில் பாட்டி வந்தவுடன் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களா இல்லை இவர்களை போகப் போகிறார்களா என்று கூறியதை கேட்டு கோபமடைந்த மற்றவர்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் கூத்தை பார்த்து தங்களை அறியாமல் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.


"நீங்க பேசினதுக்கு பதில் அவங்க பேசுறாங்க இதென்ன உங்களுக்கு புதுசா அவங்க இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்களும் எத்தனை தடவை அவங்ககிட்ட நோஸ்கட் வாங்கினாலும் சலிக்காமல் மறுபடியும் அவங்க கிட்ட தான் போய் சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க. பார்த்த எங்களுக்கு பழகி போச்சு அதனால எந்த கம்ப்ளைன்ட் இருந்தாலும் எங்க ரெண்டு பேருகிட்டயும் வராதீங்க நீங்களே அதை சரி பண்ணிக்கோங்க" என்று சமர் கூற


"டேய் அநியாயம் புடிச்சவனே இப்படி எல்லாம் உடனே பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி கிட்டு இருக்காதீங்க. இந்த மாதிரி பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருந்தா அவங்க எங்க எல்லாரையும் தூக்கி போட்டு தான் மிதிப்பாங்க. கொஞ்சமாச்சும் எங்களுக்கும் சப்போர்ட் பண்ற வேலையை பாருங்க எப்ப பாரு அவர்களுக்கே கூஜா தூக்கிட்டு சுத்துறது" என்று படபடவென பொரிந்து தள்ளியது.

"ஏய் கிழவி என்ன எங்க புருஷனை எங்களுக்கு எதிராகத் திருப்பிவிட பிளான் பண்றியோ? உன்னுடைய பிரச்சனை உனக்கு எதிராக திருப்பி விட்டு விடுவேன்" என்று கார்த்திகா கூற அதில் நிமிர்ந்து அவளை முறைத்த பாட்டி "என்னடி எப்பப்பாரு எதையாவது பதில் பேசிக்கிட்டே இருக்க ஒரு தடவையாவது பெரியவர்களை மதித்து அமைதியா இருக்கியா? இது எல்லாம் இந்த வீட்டில் உள்ள என்னோட பேரனுங்க கொடுத்த இடம் அவர்களை அடக்கி வச்ச எல்லாம் சரியாக வந்துவிடும்" என்று கடுப்பாக கூறினார்.


"எப்படி பாட்டி தாத்தாக்கு ஆசையா விசாகா முத்தம் கொடுத்த மாதிரியா எங்களை எங்களோட புருஷன் அடக்கி வைக்கணும்" என்று ஆதர்ஷினி இழுவையாக கேட்க அவள் கேட்ட தோரணையில் அனைவரும் சிரித்து விட்டனர்.

"அடியே கூறுகெட்டவளை இப்ப எதுக்கு அந்த நார விஷயத்தை போய் எனக்கு ஞாபகப் படுத்துற அதை நினைக்கும் போதே எனக்கு பத்திகிட்டு எரியுது" என்று கூறியவர் அப்போதுதான் அங்கே கட்டுப் போட்டு அமர்ந்திருக்கும் ஆதவனை பார்த்தார்.


"டேய் நீ எங்கடா போய் விழுந்து வாரி வந்திருக்க இவளுக கூட சேராத சேர்ந்தாலே உனக்கு ஆகாது ஆகாதுனு எத்தனை தடவை சொல்லி இருப்பேன், கேட்டியா? நீ ஏதாவது இவளுக சொன்னத செய்யாம போயி உன்னை எங்கேயாவது இருந்து கீழே தள்ளி விட்டார்களா? இல்ல வேற எங்கேயாவது போய் நீயே விழுந்து வாரி வந்து இருக்கியா? நீ எப்பவுமே உன்னோட உயிர் நட்பு இல்லாமல் எங்கேயும் போக மாட்டீயே நீ மட்டும் தான் விழுந்தியா இல்லை அவனும் சேர்ந்து தான் விழுந்து வாரி வந்துட்டு இருக்கானா?" என்று கேள்வியாக சமர் புறம் திரும்பினார்.


"டேய் வாய் மட்டும் ஏழு ஊருக்கு பேசுற இல்ல மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சுக்க தெரியல. பொண்டாட்டிய ஏதாவது சொன்னா மட்டும் கோவம் பொத்துகிட்டு வருது ரோட்டில் ஒழுங்காக போக தெரியாதோ! இப்படித்தான் விழுந்து வாரி வந்து இருப்பியா? உன் மேல எனக்கு அவ்வளவு கோபம் இருக்கலாம், நிறைய விஷயங்கள்ல உன்னை எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனா என்னைக்குமே உன்னோட உயிருக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது அப்படின்னு சொல்லி நான் யோசிச்சுகிட்டே தான் இருப்பேன். இனியாச்சும் ஒழுங்கா இருக்குற வழிய பாரு! இந்தா மேனாமினுக்கி எங்களை பழி வாங்க எவ்வளவு திட்டம் போடுற புருஷன் ஒழுங்கா ரோட்டில் போக சொல்ல லாய்க்கு கிடையாது" என்று கிடைத்த கேப்பில் ஆதர்சினியையும் திட்டினார்.


"கிழவி இப்போ புதுசா நல்லவ வேஷம் போடுற இவ்வளவு நாள் சமர் மாமாவ திட்டிக்கிட்டு இருந்த ஆட்கள்ல நீயும் ஒருத்தி தானே! இன்னைக்கு என்ன புதுசா பாசம் பொங்குது இங்க நடந்தது எல்லாத்தையுமே தூங்குறேன் அப்படிங்கற பேர்ல கேட்டுவிட்டு இருந்துவிட்டு இப்போது நான் அப்படியெல்லாம் இல்ல அப்படின்னு பேசிகிட்டு இருக்கியா, இல்ல வேற எதாவது புதுசா பிளான் பண்ணி இருக்கியா?" கார்த்திகா கேட்க

அதற்கு ஆதர்ஷினி "இல்ல கார்த்தி கிழவி கொஞ்ச நாளாவே மாறிவிட்டுதான் வருது நாம இந்த வீட்டுக்கு வர்ற வரைக்கும் யாருமே கிழவியை எதிர்த்து கேள்வி கேட்பதே கிடையாது, அந்த திமிரில் அது உன் அளவுக்கு அதிகமாகவே ஆடிக்கிட்டு இருந்து இருக்கு. இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? இதுவரைக்கும் யாருமே தப்பு பண்றதை எடுத்துச் சொல்லி திட்டாம இருந்தா அவங்க நம்ம செய்வதெல்லாம் சரி அப்படின்னு நினைச்சிட்டு இருப்பாங்க. அதே மாதிரி இருந்தது தான் நம்ம வீட்டு கிழவியும், ஆனா நம்ம வந்தபிறகு நிறைய விஷயங்கள்ல அதை எதிர்த்து கேள்வி கேட்கவும் ஏதாவது சொல்லி சொல்லி அதை கிண்டல் பண்றதையும் பார்த்து பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா அது மாற ஆரம்பித்தது. ஆனாலும் நம்மள இந்த வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்வதற்கு அதுக்கு இன்னும் மனசு வரல ஒரு ஓரத்தில் ஏதாவது வாய்ப்பு கிடைச்சா நம்ம வச்சு செய்ய அது பிளான் போட்டுட்டு தான் இருக்கு. அதுவும் நடக்காது அதனால இப்போ அமைதியா மனசு சொல்றதை எடுத்துச் சொல்வது இந்த வீட்ல ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் யாருக்குமே என்னோட புருஷன் கொல்கிற ஐடியா கிடையாது.


புதுசா இப்போ வந்தது தான் இவருக்கு மத்தபடி எல்லாரும் அவனை விட்டு ஒதுங்கி இருக்கணும், அவன் இவங்கள விட்டு ஒதுங்கி இருக்கணும், அப்படின்னு மட்டும் தான் ஆசைப்பட்டாங்க. அதே மாதிரி அவங்க ஒதுங்கி இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க தவிர்த்து அவன் செத்துப்போகனும் செத்தா தான் நமக்கு நிம்மதி அப்படிங்கிற எண்ணம் எல்லாம் யாரோட மனசுலயும் இல்ல. அந்த விஷயம் எனக்கு நல்லாவே தெரியும் அதனால இதுல வந்து நீ கேட்டு வேற எதுவும் புதுசா கொண்டுவராத அமைதியா இரு" என்று கூறினாள்.


ஆதர்ஷினி கூறிய பிறகு கார்த்திகா பாட்டியை எந்த கேள்வியும் கேட்காமல் இனி நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அருள் நேராக தன்னுடைய பாட்டியிடம் சென்று "இவ்வளவு நாளும் அதாவது நாங்க கல்யாணம் முடிஞ்சு வந்த பிறகு உன்னோட வீட்ல எப்படி வளர்த்தாங்க? ஒழுங்காக தெரியலையா அப்படின்னு எத்தனை தடவை என்னோட பொண்டாட்டிகிட்டயும் அண்ணிகிட்டயும் நீ கேட்டு இருப்ப ஆனா அவங்க வளர்ப்பு எல்லாம் நல்லாதான் இருக்கு, உன்னோட வளர்ப்பு தான் தப்பா போயிற்று உன் புள்ள என்னென்ன பண்ணிருக்கான் தெரியுமா?" என்று அனைத்தையும் கூறி முடித்தான்.


அனைத்தையும் கேட்ட பாட்டி ஒரு நிமிடம் சிலையாக நின்று விட்டார். ஆனால் மறு நிமிடமே நேராக சமரிடம் சென்று அவனுடைய கைகளை பிடித்துக்கொண்டு "ஐயா ராசா என்ன மன்னிச்சிடு ராசா என்னால தானே உனக்கு இவ்வளவு கஷ்டம். நான் மட்டும் அந்த பத்திரத்தை ஒழுங்கா படிச்சு சொல்லாம இருந்து இருந்தா இவங்க அது மேல கேஸ் போட்டு இருக்க மாட்டாங்க. அந்த சொத்து நமக்கு கிடையாது அப்படி என்கிற விஷயமும் இவங்களுக்கு புரிஞ்சி இருக்கும், அந்த மாதிரி புரியும்போது தேவையில்லாத ஒன்னை கஷ்டபடுத்தி இருக்க மாட்டாங்க. நான் இத சொல்லல அப்படின்னு சொன்னா நானாவது உனக்கு சார்பா ஏதாவது பேசி இருக்கலாம் இல்லை இது நான் சொன்ன காரணத்தினால் எனக்கு வந்த பயத்துல எல்லாரும் சொன்னதையும் மண்டையில ஏத்திகிட்டு என் மேல தப்பு இருக்கு அப்படி என்கிற விஷயத்தையே மறந்து போய் உன்ன வார்த்தையாலே ரொம்பவே கஷ்டபடுத்திட்டேன். எல்லாரும் சொல்ற மாதிரியே எனக்கு புத்தி இல்லாம போச்சு போல, என்ன மன்னிச்சிடு ராசா உடனே நீ மன்னிக்காத உன்னால எப்ப என்னை மன்னிக்க முடியுமோ அப்ப மன்னிச்சுறு ஆனா நான் சாகுறதுக்குள்ள மன்னிச்சுடு" என்று கண்களில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார்.


அவருடைய கண்ணீர் அங்கிருந்த அனைவருக்குமே சிறிது கஷ்டமாக தான் இருந்தது தாத்தாவுக்கு 'எப்படி இவ உடனே அவன்கிட்டே மன்னிப்பு கேட்டா நம்மளால குற்ற உணர்ச்சியில் அவனோட முகத்தைக்கூட பார்க்க முடியல, ஆனா இவ ஒரே நிமிஷத்துல அவனோட கைய புடிச்சு மன்னிப்பு கேட்டுட்டா அதுவும் கண்களில் கண்ணீரோடு இந்த மாதிரி நம்மளால முடிஞ்ச இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்' என்று எண்ணிக்கொண்டார்.


அனைவரும் அவர் உண்மையில் திருந்தி விட்டாரா என்று எண்ணிக் கொண்டிருக்க கார்த்திக் அருகில் நின்றுகொண்டிருந்த பவானி மட்டும் யோசனையில் நிற்பதை பார்த்த கார்த்திக் "என்ன அக்கா ஏதோ தீவிர யோசனையில் இருக்கிற? அங்க எல்லாருமே பாட்டி திருந்திட்டாங்க அப்படின்னு சந்தோஷமா இருக்காங்க, நீ மட்டும் என்னக்கா யோசிச்சுக்கிட்டு இருக்க" என்று கேட்டான். இது மற்றவர்கள் காதில் விழவில்லை என்றாலும் அவர்களின் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த தாத்தாவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.


"இல்லடா தம்பி உண்மையிலேயே இந்த பாட்டி திருந்திட்டா அதுவே எனக்கு பெரிய கேள்வி! அப்படி அது திருந்தி இருந்தா எதனால திருந்திருக்கும் நல்லா யோசிச்சு பாரு இது வரைக்கும் தான் பண்ண தப்ப யோசிச்சு திருத்துவதை விட, நாம் திருந்தில அப்படின்னு சொன்னா உனக்கு ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பாட்டியை என்ன பாடுபடுத்த வாங்க அப்படின்னு அதுக்கே பயம் வந்துடுச்சு. அதனால தான் உடனே கால்ல விழுந்துடுச்சு. இவ்வளவு நாள் இந்த வீட்டிலிருந்து அவளுக ரெண்டு பேரும் நல்லா என்ஜாய் பண்ணி இருக்கா. நமக்குதான் ஒன்னுமே தெரியல நம்மள விட்டு டேய் இவங்க ஜாலியா எல்லாருடைய விளையாடி எல்லாரையும் கிண்டல் பண்ணி எப்படி எல்லாம் எல்லாருக்கும் சலுகை கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் குடுத்து இருக்கா. இன்னைக்கு காலையில பாட்டி இவங்க ரெண்டு பேரையும் பார்த்து அரண்டு போய் தான் நின்னுச்சு. எனக்கு தெரிஞ்சி அது உண்மையா தான் செஞ்ச தப்ப நினைத்து வருந்துவதை விட இவளுக்கு ரெண்டு பேரும் மேல உள்ள பயத்தில் தான் திருந்தி இருக்கணும்" என்று தன்னுடைய கணிப்பை கூற அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தன்னையறியாமல் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.


அவருடைய சிரிப்பு சத்தத்தில் அனைவரும் அவரை திரும்பி பார்க்க பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பவானி திருட்டு முழி முழித்தாள். அதிலிருந்தே அவள் ஏதோ கார்த்திக்கிடம் கூறியிருக்கிறாள் அதைக்கேட்டு தான் அவர் சிரிக்கிறார் என்பதை அங்குள்ள அனைவரும் நன்றாக புரிந்து கொண்டனர்.


"அடியே பானிபூரி நீ என்னத்த என்னோட தம்பி கிட்ட சொன்ன நீ சொன்ன விஷயத்தைக் கேட்டு இந்த பெரிய மனுஷன் எதுக்காக இப்படி சிரிக்கிறாரு ஒழுங்கா உண்மையை சொல்லு" என்று அவளுடைய தோழி ஆதர்ஷினி நேராக அவள் முகம் பார்த்து கேட்டாள்.

இதற்கு பவானி என்ன சொல்ல போகிறாள் என்ற ஆர்வம் தாத்தா முகத்தில் வர அதை அங்கிருந்த அனைவருமே குறித்துக் கொண்டனர். ஆனால் பவானி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் "அது ஒன்னும் இல்ல ஆத்திச்சூடி உன்னோட பெருமையும் உன்னோட தங்கச்சி பெருமையும் ஏற்கனவே உன்னோட தம்பிக்கும் எனக்கும் நல்லாவே தெரியும். அத பத்தி ஒரு சின்ன டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருந்தோம், அத கேட்டு தான் தாத்தா சிரிச்சுடாரு போல இருக்கு நீ வேற எதுவும் நினச்சுக்காத! உனக்கும் உன்னோட தங்கச்சிக்கும் தெரியாதா நீங்க ரெண்டு பேரும் எப்பேற்பட்ட வீர சாலிகள் சூறசாலிகள் அப்படின்னு அந்த விஷயம் தான் கொஞ்சம் நாங்க விலாவரியா பேசிட்டோம் வேற ஒன்னும் இல்ல" என்று அசால்டாக கூறினாள்.


"என்ன பானிபூரி வரவர வாய்ப்பேச்சு கொஞ்சம் ஓவராகவே இருக்குது, நாங்க இல்ல நெனச்ச நேரம் உன்னை இழுத்து விட்டு போக மாட்டேன் அப்படிங்கற தைரியத்துல பேசுதோ எங்க அண்ணனுக்கு கை சரியான உடனே உனக்கு கல்யாணத்தை முடிவு பண்ண சொல்றேன், அப்புறம் பார்த்துகிறேன் நீ உன்னை என்னென்ன பண்ணப்போறேன்னு இப்ப நீ என்ன யோசித்திருப்பேன் என்னைய தம்பி கிட்ட சொல்லி இருப்ப அப்படிங்கற விஷயம் எனக்கு தெரியும் நேரம் வரும்போது கவனிச்சிக்கிறேன்" என்று ஆதர்ஷினி கூற


அதற்கு பவானியும் "ஆமா இத்தனை வருஷம் கவனிக்காதது விட புதுசா இவ கவனிக்க போறாளாம்" என்று முடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி "அடியே கூறு கெட்ட சிறுக்கிகளா நான் இங்க என்னோட பேரன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன், நீங்க என்னடானா உங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ பேசிகிட்டு இருக்கீங்க இந்த மனுஷன் என்னடான்னா சிரிச்சுகிட்டு இருக்காரு" என்று கேட்க அதைப்பார்த்த சமர்



"என்னால உங்கள அவ்வளவு சீக்கிரம் மன்னிச்சு ஏத்துக்க முடியுமா அப்படி என்கிற விஷயம் எனக்கு தெரியல. எல்லார் வீட்லயும் பொண்டாட்டிக்கு வரக்கூடிய பிரச்சனையை புருஷன்தான் தெரிஞ்சுகிட்டு அவர்களை அதிலிருந்து காப்பாத்துவாங்க. ஆனா என்னோட விஷயத்துல என்ன சுத்தி நடக்குற பிரச்சனை எல்லாத்தையுமே என்னோட பொண்டாட்டி தான் முதல்ல தெரிஞ்சுகிட்டு என்ன காப்பாத்த முதல் ஆளா வந்து நிற்கிறா. அதுல எனக்கு பெருமையும் கூட என்னோட மனசு உங்க எல்லாரையும் ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும். அதே மாதிரி மத்தவங்க எல்லாரும் கூட என் மேல உண்மையான பாசம் காட்டினாங்க அப்படிங்கிற விஷயத்தை இத்தனை வருஷமா நான் உணர்ந்து இருக்கேன், ஆனா உங்க கிட்ட நான் அப்படி உணர்ந்து கிடையாது. அதனால எனக்கு உங்களை ஏத்துக்க இன்னும் கொஞ்சமே கொஞ்சம் அதிகமான நேரம் வேணும் என்னுடைய நிலைமையை புரிஞ்சுக்கோங்க அதுக்காக அழாதீங்க" என்று கூறிவிட்டு நேராக ஆதர்ஷினியை பார்த்து


"நான் மேல நம்மளோட ரூமுக்கு போறேன் ஆதவனையும் இங்க பக்கத்துல ஒரு ரூம்ல ரெஸ்ட் எடுக்க வை. சாயங்காலமா எல்லாரும் வீட்டுக்கு போனா போதும்" என்று கூறி விட்டு தங்கள் அறைக்கு கிளம்பினான்.

அனைவரும் செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். போனவன் போன வேகத்திலேயே மறுபடியும் கீழே இறங்கி வர எதற்காக இப்படி வருகிறான் என்று அனைவரும் கேள்வியாக பார்க்க அப்போதுதான் சிறியவர்களுக்கு ஆதர்ஷினி அறையில் அவனுக்கு தயார் செய்து வைத்திருந்த சர்ப்ரைஸ் ஞாபகம் வந்தது, அது ஞாபகம் வந்தவுடன் அவருடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் அனைவரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari