• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 31

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ன்னுடைய அறைக்கு சென்ற சமர் சென்ற வேகத்திலேயே கீழே இறங்கி வருவதை பெரியவர்கள் கேள்வியாக பார்க்க, அப்போதுதான் அவனுக்கு செய்து வைத்திருந்த சர்ப்ரைஸ் ஞாபகம் வந்ததால் சிறியவர்கள் அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று ஆர்வமாக பார்த்தனர்.


அவர்களுடைய ஆர்வத்தை பொய்யாக்காமல் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன், முகத்தில் சிரிப்புடனும் ஓடிவந்தவன், தன் மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். இப்படி ஒரு இறுக்கமான அணைப்பு ஆதர்ஷினி கூட எதிர்பார்க்கவில்லை 'ஐயோ இவன் வந்த வேகத்துல ஏதாவது பேசுவான் இல்லனா கைய பிடிச்சிட்டு சும்மா நிப்பான் அப்படின்னு யோசிச்சா இப்படி இவ்வளவு இறுக்கமா உடும்பு பிடி பிடித்து விட்டு நிற்கிறானே! வீட்ல எல்லாரும் வேற இருக்காங்க' என்று எண்ணி கூச்சம் அடைந்தாள் அதில் அவளுக்கு சிறிதாக வெட்கமும் தோன்றியது.


அவள் முகம் வெட்கத்தில் சிவப்பதை கண்டு கொண்ட பவானி தன் அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திகா கையை பிடித்து "கார்த்தி எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு நான் கீழ விழுந்தா என்ன பத்திரமாக கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடு" என்று மயங்குவது போல் கூறினாள்.

உண்மையிலேயே ஏதோ ஆகிவிட்டதோ என்று பதறிய கார்த்திகா "காலையில் எதுவும் சாப்பிடாமல் கொள்ளாம கிளம்பி வந்ததால ஒரு மாதிரி இருக்கா?" என்று கார்த்திகா சிறிது பதட்டமாகவே கேட்டாள். ஆனால் தோழி பற்றி நன்கு அறிந்திருந்த ஆதர்ஷினி "அடியே பானிபுரி ஓவரா பண்ணாத எனக்கு நேரம் கிடைக்கும் போது நான் இதுக்கு மேல செய்வேன் அது உனக்கே தெரியும்" என்று எச்சரித்தாள். ஆனால் அந்த எச்சரிக்கையில் சிறிது வெட்கம் இருக்கதான் செய்தது.


"அதுக்கு நேரம் வரும்போது பாத்துக்கலாம் உன் கூட இத்தனை வருஷமும் இருந்த பிறகும் எனக்கு இந்த மாதிரி மயக்கம் நெஞ்சு வலி எல்லாம் இப்படி உடனே வந்தது கிடையாது, அதுக்கு காரணம் இவ்வளவு நாள் என் முன்னாடி நீ வெட்கப் பட்டதே இல்லை அப்படி என்கிற விஷயமே இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சுது! ஆனாலும் வெட்கமே பட தெரியாத உன்னை எல்லாம் வெட்கப்பட வச்சுட்டாங்க பாரு என்னோட அண்ணா அவங்களுக்கு தான் சல்யூட் அடிக்கனும், ஆனால் தயவு செஞ்சு பொது இடத்தில் இப்படி பண்ணினால் சின்ன பிள்ளைங்க எல்லாம் இருக்கு பாத்து பயந்து விட போகுது" என்று மேலும் தன் தோழியை நக்கல் அடித்தாள்.

பவானி இவ்வளவு பேசிய பிறகும் சமர் அவளை விட்டு விலக நினைக்கவில்லை, ஏன் இவர்கள் பேசியது கூட அவன் காதில் விழுந்ததா என்று கேட்டால் அதுவே சந்தேகம் தான் அந்த அளவுக்கு அவனுடைய அணைப்பு நேரத்திற்கு நேரம் இறுகிக் கொண்டே சென்றது.


"டேய் லூசு எல்லாரும் இருக்காங்க டா எல்லாருக்கும் காட்சிப் பொருளாக மாறி விட்டு நிற்கிறோம், உன்னோட நிலைமை எனக்கு புரியுது அதுக்காக இப்படி நடு ஹால்ல வெச்சி என்னைய புளிஞ்சி எடுக்காதே எனக்கு வேற வெக்கமா வருது" என்று சமர் காதுகளில் முனுமுனுத்தாள் ஆதர்ஷினி.

அவளுடைய லேசான புலம்பலில் நிமிர்ந்த சமர் அவளுடைய கண்களை பார்த்துக்கொண்டே அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

"ஐயோ இவன் வேற நடு ஹால்ல இருந்து என் மானத்தை மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவான் போலயே" என்று மனதிற்குள் ஆதர்ஷினி அலறினாலும் வெளியே அந்த முத்தத்தை அனுபவித்தாள்.


ஆனால் அதற்குமேல் தன் அண்ணனின் ஆத்மார்த்தமான விஷயங்கள் எதுவும் வெளியே தெரிவதை விரும்பாத அருள் "அய்யய்யோ பூனைபோல இருந்தவர் நடு ஹால்ல உட்கார்ந்து ரொமான்ஸ் பண்றானே! இந்த குடும்பத்தில் உள்ள எல்லாருமே அதை வேடிக்கை பார்க்கிறார்கள் ஒருத்தங்க கூட அவர்களை விலக்கிவிட நினைக்கலையே! இவனெல்லாம் புள்ள பூச்சினு சொன்னவங்க யாராவது இப்போ என் முன்னாடி வந்து நின்ன அவங்கள என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஐயையோ ஐயையோ இவனக்காக தானே நான் அமைதியா என்னோட பொண்டாட்டியை விட்டு ஓதுங்கி இருக்கேன் ஆனா இவன் என்னடான்னா அப்பப்ப நடு கால்ல நின்னு அவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்து அவன் லவ் பண்றான் அப்படிங்கற விஷயத்தை காமிச்சி என்ன வெறுப்பு ஏத்துறானே!" என்று அழுவது போல் பாவனை செய்து நியாயம் கேட்க அதில் மொத்தமாக சுய நினைவு வந்த சமர்


"உனக்கு வேணும்னா நீயும் உன்னோட பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணு என் மச்சினிச்சி என்ன அதுக்கு வேணாம்னு உனக்கு தடை போட்டா வச்சிருக்கா? சும்மா வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு போடா நான் என்னோட ரூமுக்கு போறேன்" என்று ஆதர்ஷினியை தன் கைகளுக்குள் வைத்து அப்படியே தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்.


அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்க்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது, பாட்டி மட்டும் வாயை பிளந்து கொண்டு நிற்பதை பார்த்த அருள் பாட்டியிடம் சென்று "என்ன பாட்டி வாய தொறந்து வச்சு பாத்துக்கிட்டு இருக்க?" என்று கேட்டான்.


"இல்லடா அருளு சமரா இப்படி எல்லாம் பண்ணுது அவன் பொண்டாட்டிக்கு சும்மாவே கால் தரையில் நிற்காது, இனி அவ ஆட போராட்டத்தை எல்லாம் எப்படி தான் சமாளிக்க போறேன்? என் வாயும் சும்மா இருக்காது அதுவும் கடைசியா அவன் பேசிட்டு போறதை பார்த்தா இனி அவ அடங்கவே மாட்டாளே" என்று தன் பேரனிடம் புகார் வைத்துக் கொண்டிருந்தது.

பாட்டி "இது சும்மா ஆரம்பம்தான் இன்னும் போகப்போக நீ என்ன எல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்குமோ தெரியாது, எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு" என்று தன் பங்கிற்கு பாட்டியை கலவரப்படுத்திவிட்டு அம்மாவையும் சித்தியையும் பார்த்து "அம்மா சித்தி வந்தவங்க யாருமே காலையில சாப்பிடல ஆதவன் அண்ணாக்கு காலைல சாப்பாடு குடுத்திட்டு மருந்து கொடுக்கணும், சமைக்க ஆரம்பிக்கிறீங்களா இல்லை நான் கடையில் ஏதாவது வாங்கிட்டு வரவா?" என்று கேள்வியாக நிறுத்தினான்.


புனிதா பதில் அளிப்பதற்கு முன்பு ராதிகா "இல்ல அருள் கடையில போய் வாங்க வேண்டாம் வீட்டிலேயே எல்லாத்தையும் செய்றோம் அதுவும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து இருக்காங்க, இன்னேரம் கடையில வாங்கி கொடுத்தால் சரிப்பட்டு வராது. நீங்களும் யாருமே நைட்டு ஃபுல்லா தூங்குன மாதிரி தெரியல அதனால உங்களுக்கும் கடை சாப்பாடு எந்த அளவுக்கு ஒத்துக்கும்ன்னு சொல்றதுக்கு இல்ல. அதனால எல்லாரும் போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க அதுக்குள்ள நாங்க சமைத்து வைத்து விட்டு சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து அப்ப நான் உடம்பு நல்லா இருக்கும்" என்று கூறினார்.


ராதிகா கூறிய பிறகுதான் அனைவருக்குமே நாம் ராதிகாவிடம் எதுவுமே கூறவில்லையே என்ற எண்ணம் வந்தது அதே எண்ணத்தோடு அனைவரும் அவர் முகம் பார்க்க, அவர்களின் எண்ணப் போக்கை புரிந்து கொண்டவர் "நீங்க எல்லாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இன்னைக்கு இந்த விஷயம் உங்களுக்கு தெரியுது அதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும் அதுக்காக இந்த வீட்டு பசங்க யாரும் என்கிட்ட சொல்லிட்டாங்களா அப்படின்னு தப்பா நினைக்காதீங்க. இவரு இந்த ஆக்சிடன்ட் பண்றதுக்கு பிளான் போடும் போதே நான் கேட்டுட்டேன் எப்படியாவது இதை தடுக்கணும் னு நினைச்சேன். அதே மாதிரி இவ்வளவு சீக்கிரம் இந்த மாதிரி இருக்கு யாரும் போடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல கொஞ்சமாச்சும் நாளாகவும் அப்படி என்கிற தைரியத்தில் இருந்தது தான் இன்னைக்கு நீ மொத்தமா முட்டாளாக்கி கொண்டு வந்து விட்டது. அதனால் என நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தா அதான் என் முகத்தில் நிம்மதி இருக்கும்" என்று தெளிவாக தன்னுடைய முடிவை கூறினார்.


அவருடைய தெளிவான முடிவைக் கேட்ட பிறகுதான் அனைவருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது அதனால் அனைவரும் மற்ற வேலை அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தனர்.

ஆதவனுக்கு தேவையான அனைத்தையும் ஒரு அறையில் தயார் செய்துவிட்டு மற்றவர்கள் சாமர் அறையையே பார்த்துக்கொண்டிருந்தனர்.



"டேய் அண்ணா சமர் அண்ணா அவசர அவசரமா அண்ணியை கூப்பிட்டு போனாங்க தானே, என்ன பண்ணிட்டு இருப்பாங்க? இப்பவாச்சும் அவங்க மனசுல உள்ள எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசி இருப்பார்களா?" என்று தன்னுடைய சந்தேகத்தை கணேஷிடம் கேட்டான் சரண்.


"அங்க என்ன நடந்தால் நமக்கென்ன எப்படியோ அண்ணன் சந்தோஷமாய் இருக்கானா அதுவே நமக்குப் போதும் வா போய் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுட்டு தூங்குவோம்" என்று கூறி அழைத்து சென்றான்.

அதேசமயம் அறைக்குள் இருந்த சமர் முகத்தைக் கைகளால் ஏந்தி கொண்டு "இந்த போட்டோஸ் எல்லாத்தையும் பார்க்கும்போது உண்மையாவே மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, ஏன் தெரியுமா என்னோட வாழ்க்கையில நான் உண்மையாவே சந்தோஷமா இருந்தேன் அப்படின்னு எனக்கே நம்பமுடியாத நிகழ்வுகள் தான் நீ கொடுத்திருக்க போட்டோஸ் எல்லாமே! இதெல்லாம் பார்க்கும்போது இந்த நேரங்கள்ல எதுக்காக நான் சிரிச்சேன் எதுக்காக சந்தோஷமா இருந்தேன் அப்படிங்கிற அந்த நல்ல விஷயங்களை எல்லாம் ஞாபகம் வருது. அது எனக்கு ரொம்பவே புத்துணர்ச்சி கொடுக்குற மாதிரி இருக்கு, என்ன தான் ஒரு பக்கம் எல்லாரையும் நான் துவண்டு போய் சுத்தினாலும் இந்த மாதிரி ஒரு சில பொக்கிஷமான நிமிடங்கள் எனக்கு கிடைச்சிருக்கு அப்படின்னு நினைக்கும்போது உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ என்னோட வாழ்க்கையில வர்றதுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணேன் அப்படின்னு தெரியல இவ்வளவு நாள் என்னோட வாழ்க்கையை இப்படி இருக்கிறதுக்கு நான் செஞ்சது பூர்வஜென்ம பாவமா இல்ல முன்ஜென்ம விரோதமாக அப்படின்னுதான் தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனா இந்த நிமிஷம் நான் வாழ்க்கையில கண்டிப்பா ஏதோ ஒரு புண்ணியம் செஞ்சிருக்கேன் அப்படின்னு மனசார ஒத்துக்குறேன்.


அந்த புண்ணிய தோட பலன்தான் நீ!!! நீ மட்டும் என்னோட வாழ்க்கைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாதிரி எல்லாம் நான் உண்மையாவே சிரிச்சேன் அப்படி என்ற விஷயம் எனக்கு தெரிந்து இருக்குமா அப்படின்னு தெரியல. அதே மாதிரி இனி நான் சந்தோஷமா இருக்க போற வாழ்க்கையும் கிடைத்திருக்குமா அப்படின்னு கூட எனக்கு தெரியல. இன்னைக்கி இந்த நிமிஷம் நான் சொல்லுறேன் என்னைக்குமே என்னோட வாழ்க்கையில நான் ஒன்னு இழக்கவே கூடாது அப்படி இழந்தால் அது என்னுடைய உயிர் இல்லாததற்கு சமமாக தான் இருக்கும். இதுவரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு வெறுமை உயிரற்ற வாழ்வதாக வாழ்ந்திருக்கேன் இனி ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமா உயிர் போட வாழனும்னு ஆசைப்படறேன். என்னைக்குமே என் கூடவே நீ இருப்பியா?" என்று கேள்வியோடு நிறுத்தினான்.


"உன்ன விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன் என்னோட வாழ்க்கையோட பெரிய பெரிய பெரிய லட்சியமே உன்ன சந்தோசமா வச்சிக்கிறது மட்டும் தான். அதுக்காக அடாவடியாக பல விஷயங்கள் பண்ணி இருந்தாலும் சில நேரம் அதனால நீ கஷ்டப்பட்டு விடுவியோ அப்படின்னு நினைச்சு கஷ்டப்பட்ட நாட்கள் தான் நிறைய, ஆனா இன்னைக்கு உன்னோட முகத்துல இருக்குற சந்தோஷத்தை பார்க்கும்போது அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. நிச்சயமா உன்னை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன் உனக்காகவே உன் கூடவே கடைசி வரை இருப்பேன்" என்று கூறி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

சமர் அந்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவாறு கண்களை மூடி அவன் மெதுவாக அவள் முகத்தில் இன்னும் அழுத்தம் கொடுத்தான். எப்பொழுதும் தமிழர் அவள் அருகில் வரும் போது வராத கிளர்ச்சி வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆதர்ஷினி தன்னை தாக்குவதை உணர ஆரம்பித்தாள்.

அதிலிருந்தே சமரின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவளுக்கு ஒருவித படபடப்பு ஏற்பட தான் செய்தது. அதை தன்னுடைய கைகளில் மூலம் உணர்ந்தவன் ஒரு புன்சிரிப்போடு அவளுடைய நெற்றியில் அழுத்தமான முத்தத்தை வைத்தான்.


"சப்பா இதுக்கா இவ்வளவு பயந்தோம் எப்படியும் இதோட விட்டுடலாம் நமக்கு பிரச்சனை இல்ல கீழ போயிடலாம் ஏற்கனவே வெளியே எல்லாரும் என்னவோ ஏதோனு நெனச்சிட்டு இருப்பாங்க. நம்மளை கிண்டல் பண்ணவே ஒரு கூட்டமும் காத்துக்கிட்டு இருக்கும்" என்று ஆதர்ஷினி எண்ணிக் கொண்டிருக்க சமர் அடுத்து அவளுடைய கண் இமைகளில் முத்தம் வைத்தான்.

எதே இன்னும் இவன் முடியலையா இன்னும் என்னென்ன செய்ய காத்துக்கிட்டு இருக்கானோ என்ற ரீதியில் அவள் உடல் சிறிது நடுங்க ஆரம்பிக்க அதை புரிந்துகொண்டு அவன் அழுத்தமாக அவளுடைய இரு கன்னத்திலும் முத்தம் வைத்தான்.


அதில் தன்னுடைய கண்களை திறந்து நேராக சமரை பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த காதல் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனை மட்டுமே யோசிக்க செய்தது.

அவள் தன் கண்களை பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் கண்களாலேயே அவளிடம் சம்மதம் கேட்க அவளும் அவனுள் கட்டுண்டு சம்மதம் கொடுக்க அவள் இதழை மென்மையாக சிறை பிடித்தவன், கொஞ்சம் கொஞ்சமாக காதலின் வன்மை காட்ட ஆரம்பித்தான்.


ஏதோ ஒரு புதுவித உணர்ச்சி தன்னை ஆட்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக அவன் கைகளிலேயே தோய்ந்து விழ ஆரம்பித்தாள் ஆதர்ஷினி. அவளுடைய மனப்போக்கை புரிந்து கொண்டவர் மெதுவாக அவள் தலையை வருடிக் கொடுக்க இன்னும் இன்னும் தன் கணவன் மேல் தீராத காதல் கொண்டு அவன் கைகளிலேயே கை பொம்மை ஆகிப் போனாள் அடாவடி ஆத்திச்சூடி.

சிறிது நேரத்தில் அவளை விட்டவன் காற்று புக முடியாத அளவிற்கு அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பு அவளுக்கும் தேவையாக இருக்க அவன் உள்ள அடங்கிப்போனாள். அப்படியே அணைத்துக் கொண்டிருந்தவன் அவருடைய தோளில் முத்தம் வைக்க இதற்கு மேல் இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என்பதை ஆதர்ஷினி பெண்மை அவளுக்கு உணர்த்தி விட "மை டியர் புருஷா இது பகல் நேரம் அதுமட்டுமில்லாம நேத்துதான் அடிபட்டு காலைல ஹாஸ்பிடல் இருந்து கூட்டிட்டு வந்து இருக்கோம், ஒழுங்கா விடுங்க கீழ சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கும் சாப்பிட்டு வந்து மாத்திரை போட்டுட்டு தூங்குங்க. நான் எங்கேயும் போக போறது கிடையாது இவ்வளவு நாள் என் மேல இருந்த காதலை காட்டாம உள்ளுக்குள்ள மறைச்சு வச்சுகிட்டா இருந்தீங்க தானே! அதை எல்லாம் காயம் சரியாகலை வரைக்கும் காட்டுங்க காதல் பறவையா நாம சந்தோஷமா இருக்கலாம்" என்று கூறி வலுக்கட்டாயமாக அவளை குளியலறை வாசல் வரை கொண்டு போய் தள்ளிவிட்டு விட்டு சிவந்திருந்த தன்னுடைய முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே சென்றாள்.


ஆதர்ஷினி முகத்திலிருந்த வளர்ச்சியே சமர் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த பெரியவர்கள் நிம்மதி கொண்டனர் சிறியவர்கள் அனைவருமே குளிக்க செஞ்சிருக்க ஆதர்ஷினி தன் தாய் தந்தையை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.


அவர்களும் அவளை புன்னகையோடு அணைத்துக் கொண்டனர் அங்கே பேச்சு தேவைப்படவில்லை ஒரு அமைதியான அன்பான பாசமான சூழ்நிலை உருவாகியது. அந்த பாசமான குடும்பத்தை பார்க்கும் போது இங்கு உள்ளவர்களுக்கும் கண்கலங்க செய்தது. ஒரே நேரத்தில் இரண்டு பெண் பிள்ளைகளையும் இன்னொரு குடும்பத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பெற்றவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பது அங்குள்ள பெண்களுக்கு தெரியாதா என்ன அதனால் அவர்களும் நெகிழ்ச்சியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

ஆதர்ஷினி தனியாக சிக்கினால் அவளை கிண்டல் செய்து ஒருவழி ஆக்குவதற்கு ஒருசிலர் குறியாக இருக்க, அவளோ அவர்களிடம் சிக்காமல் தாய் தந்தையிடமே ஒட்டிக்கொண்டாள். ஓரளவிற்கு சமையலும் முடிந்திருக்க இளவட்டங்கள் அனைவரும் வந்து சாப்பிட அமர்ந்தனர். அவர்களுக்கு தேவையான சாப்பாடு அனைத்தையும் பரிமாறிவிட்டு பெரியவர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். ஏனோ ஒரு சக மனுஷனாக முருகனைக் கண்டு கொண்டவர்கள் வேறு எதுவும் பெரிதாக செய்யவில்லை அதில் மனம் உடைந்துபோய் மிகவும் துவண்டு சென்ற முருகனை காண விஷாலினிக்கு பொறுக்கவில்லை.

தவறு செய்வது மனிதர்களின் குணமாக இருந்தாலும் தாங்கள் செய்த தவறை எப்போதுதான் முழுமனதாக ஏற்றுக் கொள்கிறார்களோ அப்பொழுது மட்டுமே அவர்களின் குணங்களில் மாறுதல் ஏற்படும். ஆனால் இங்கே விசா தான் செய்த தவறு என்ன என்பதனை முழுதாக அறியாத காரணத்தினால், மீண்டும் தவறை செய்ய நினைத்தால் அதோட பிரதிபலனை அவள் அனுபவிக்கவும் செய்தாள்.



இனி என்று நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top