• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 34

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
வீடும் ஒரு சில முக்கியமான சொத்துக்களும் சமர் பெயரில் இருப்பது தெரிய வந்த பொழுது மிகவும் நொந்து போனது என்னவோ சமர் மட்டுமே! மற்ற அனைவருமே இந்த விஷயத்தை சகஜமாகவே எடுத்துக் கொண்டனர். அவரவர் வேலைகளை பார்க்க அனைவரும் சகஜமாகவே கிளம்பி சென்று விட அவன் மட்டும் ஏன் ஒரு யோசனையோடு தோட்டத்திற்கு சென்றான்.



தன் கணவன் முகத்திலிருந்த யோசனையை கண்டுகொண்ட ஆதர்ஷினி 'இவன தனியா விட்டா கண்டபடி யோசிப்பானே! ஏன் இவங்க வீட்ல வேற எல்லாருக்குமே இந்த விஷயம் தெரிஞ்சு இருக்கு ஆனாலும் யாருமே எதுவுமே இதைப்பத்தி பேசிக்கல, அந்த அளவுக்கு எல்லாரும் ஒற்றுமையாக இருப்போம் அந்த ஒற்றுமைக்கு சமர் எந்தவித களங்கமும் ஏற்படுத்த மாட்டான் அப்படின்னு நம்பிக்கை இருக்கு. ஆனா இவனுக்கு தான் தம்பி தங்கச்சி என்ன நினைச்சுக்கோங்க அப்படி என்கிற பயம் அளவுக்கு அதிகமாவே இருக்கு, அது அவனோட முகத்துல தெரியவே செய்கிறது இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது எப்படியும் தோட்டத்துக்கு போய் சரி பண்ணியே ஆகணும்' என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.



அனைவரும் மதிய உணவு சமையலில் பிசியாகி விட பெண்கள் தவிர அவ்வீட்டில் உள்ள ஆண்கள் அனைவருமே வெளியே சென்றிருந்தனர். சரண்யா நிலாக் கூட சரண் கணேஷுடன் வெளியே சென்றுவிட்டனர். சமையலறையில் ஒன்று கூடி இருந்த தன் அத்தைமாறிடம் சென்ற தர்ஷினி "அத்தை நான் தோட்டத்துக்கு போயிட்டு வரேன் உங்க பிள்ளை மனநிலை எப்படி இருக்கும் அப்படின்னு உங்க எல்லாருக்குமே புரிஞ்சிருக்கும், அவங்கள தனியா விட்டா சரிப்பட்டு வராது முடிஞ்சா மதியம் சாப்பாடு குடுங்க இல்லனா அங்க இருக்க வீட்டுல நானே சமைச்சு கொடுக்கிறேன். எப்படியும் இன்னைக்கு சாயங்காலம் வர அவனை இங்க கூட்டிட்டு வர முடியாது" என்று யோசனையுடனே கூறினாள்.



புனிதா ஒரு புன்னகையுடன் "நாங்க இங்க இருக்க எல்லாருக்கும் சமைக்கிறோம் நீ அங்கேயே அவனுக்குத் தேவையானதை சமைச்சு கொடு சமையலுக்கு தேவையானது எல்லாமே கிட்டத்தட்ட அந்த வீட்டில் இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். இல்லனா தேவையான எல்லாத்தையுமே இங்கு இருந்து கொண்டு போ அதே மாதிரி இந்த வீடு அவன் பெயரில் இருக்கிறது தான் நல்லது அப்படின்னு எங்க எல்லாருக்குமே தெரியும். இதபத்தி அவனை கவலைப்பட வேண்டாம்னு சொல்லு" என்று கூறினார். அவளும் சம்மதமாக தலையை சிறிது சமையலுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.



அவள் தோட்டத்திற்கு வந்து சேர்ந்த போது அங்கு மிகவும் தீவிரமாக கார்த்திகா கார்த்திக் ஒரு பக்கம் சண்டை போட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் சரண் சரண்யா நிலா கணேஷ் நால்வரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் மத்தியில் சமர் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, ஆதவன் வாய்பொத்தி சிரித்துக்கொண்டிருந்தான். சமர் அமர்ந்திருந்த கோலத்தை பார்க்கும் போது ஆதர்ஷினி முகத்தில் தன்னை அறியாமல் சிரிப்பு வந்தது. அதே சமயம் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கிறேன் என்று கை ஓங்கி தடுமாறி மொத்தமாக அவன் மேலேயே விழுந்தனர். தன் முதுகில் தாங்கிக்கொண்டு குப்புற விழுந்து இருந்தான்.



அதை பார்த்தவுடன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். இவளுடைய சிரிப்பு சத்தத்தில் அனைவரும் இவள் பக்கம் திரும்பி பார்த்தனர். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் நெருங்கி வந்தாள் ஆதர்ஷினி. கையில் பெரிய பை இருப்பதை கவனித்த அருள் அதை வாங்கிக் கொண்டு போய் சமரின் இல்லத்தில் வைத்தான்.



கார்த்திகா நேராக ஆதர்ஷினி அருகில் வந்து "அக்கா பசிக்குது ஏதாவது சாப்பிட கொண்டு வந்தியா? இந்த எருமை மாடுகிட்ட தோட்டத்திலிருந்து பழம் பறித்து வரச் சொல்றேன் பறித்து விட்டு வரவே மாட்டேங்குறான். அதை மீறி இவன் சரண் கணேஷ் முனுபேரும் போய் பறிச்சுட்டு வந்தா எங்க மூணு பேருக்கும் தராமல் அத்தனையுமே அவர்களே சாப்பிட்டுட்டு இருக்காங்க நீயே நியாயத்தை கேளு" என்று அவளை பஞ்சாயத்து தலைவர் ஆக்கினாள்.



இந்த நேரத்திற்குள் அருளும் ஆதவனும் சமரை தூக்கி அமர வைத்து இருக்க, அவனும் ஆசுவாசமாக அமர்ந்து இருந்தான். ஆதர்ஷினி ஏதோ பேச வருவதற்கு முன்பு கார்த்திக் "அக்கா அப்படி இல்ல இதுங்க கேட்டுச்சு அப்படின்னு சொல்லி நாங்க போய் பழத்த பறித்து வந்தா எங்களுக்கு எதுவுமே தராமல் இவங்க மட்டும் தனியாதான் சாப்பிடுவாங்களாம், அதுவும் ஏதோ கீழே விழுந்து அடிபட்ட 1, 2 பழங்கள பாவம் பார்த்து எங்களுக்கு தருவாங்களாம், அப்பவும் கஷ்டப்பட்டு மேலே இருந்து பறிச்ச நாங்க என்ன இளிச்சவாயனா? அதனாலதான் நாங்களே பழங்களை சாப்பிடுவோம் உங்களுக்கு வேனுமுன்னா நீங்க போய் பறித்துக்கோங்கனு சொல்லி இருக்கிறோம்" என்று அவன் தன் தரப்பு நியாயத்தை கூறினான்.



"இந்த இப்ப நீ பறித்தாலும் நான் எதுவும் சொல்ல போறது கிடையாது சாப்பிட்டதுக்கும் நான் சொல்ல போறது கிடையாது. நீங்க இங்க எதை பறிச்சு சாப்பிட்டாலும் என்னோட புருஷன் எதுவுமே சொல்ல போறது கிடையாது. ஆனால் எதுக்காக என்னோட புருஷன் தலையில் கை வைத்து இருக்கிற அளவுக்கு அவனாகி நொந்து நூடுல்ஸாக்கி வெச்சி இருக்கீங்க? நீங்க பண்ணதுல இல்ல அவன் கூட கீழ விழுந்துட்டான். யாராவது ஒருத்தர் இருந்தா கூட பரவால்ல ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் அவனோட முதுகுல விழுந்தியே அவனுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? அவனுக்கு ஏதாவது ஆயிருந்தா என்னுடைய நிலைமையை யோசிச்சு பார்த்தியா?" என்று அதன் நிலமையே முக்கியம் என்பது போல் கேள்வி கேட்டாள்.



அனைவரும் அவளை பார்த்து உறைத்து நிற்க ஆரம்பிக்க அதை சிறிது கூட கண்டுகொள்ளாமல் தன் கணவன் அருகில் சென்ற நேரம் பார்த்து, எங்கிருந்தோ ஓடி வந்த பவானி 'அடியே ஆத்திச்சூடி' என்று கத்திக்கொண்டே அவள் மேல் விழ விழ ஆதர்ஷினி தடுமாறி மொத்தமாக சமர் மடியில் விழுந்தாள்.



அவள் கீழே விழுந்து விடக்கூடாது என்று சுகமாக தன் மடியில் தாங்கிக் கொண்டவன், அனைவரையும் பார்த்து "என்ன தாண்டா உங்க பிரச்சனை? காலையில வந்ததிலிருந்தே உங்க அலப்பறையை தான் கூட்டிக்கிட்டு இருக்கீங்க! வீட்ல இருந்து வரும்போது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு, அதுக்கு அப்புறமா யோசிக்கும்போது நான் சொல்லாம நீங்க யாருமே அந்த வீட்டை விட்டு வெளியே போக போறது கிடையாது. அதனால என்னைக்குமே நாம எல்லாரும் அந்த வீட்ல தான் இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை வந்துடுச்சு. நானே கொஞ்ச நேரத்துல யோசிச்சு தெளிவாகி இருப்பேன் இப்ப நீங்க எல்லாரும் வந்து பண்ணியிருக்கு அலப்பறையை பாருங்கடா ஒண்ணுக்கு நாலு வேலை ஆக்கி வச்சு இருக்கீங்க" என்று நொந்து போய் கூறினான்.



அவன் கூறிய விதமே அனைவருக்கும் சிரிப்பு வந்து விட அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். அனைவரும் சிரிப்பதை ஒரு சிறு முறைப்புடன் பார்த்தவன் "வேலைக்கே போகாம அவ்வளவு பேறும் வந்து இங்க எங்க வேலையையும் சேர்த்துக் கெடுத்தாச்சு இதுக்கு மேல என்ன முடிவோட இருக்கீங்க?" என்று கேட்டான். ஆனால் அதுவரை அவன் மடியில் அமர்ந்திருந்த அவன் மனைவியை அவன் சிறிதும் விலக்க வில்லை என்பதையும் அங்கிருந்த அனைவரும் கண்டு கொண்டுதான் இருந்தனர்.



"வேற என்ன பண்றது எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து இனி நாள் புல்லா என்ஜாய் பண்ணுவோம், அப்படியே இங்க சமைப்பதற்கு தேவையான எல்லாத்தையும் அண்ணி கொண்டு வந்து இருக்காங்க, அதுல உட்கார்ந்து சமைச்சு சாப்பிட்டு வீட்டுக்கு போவோம்" என்று அசால்டாக சரண் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.



ஆதவன் பவானியை பார்த்து "இவங்க எல்லாரும் வந்து ஆட்டம் போட்டுட்டு இருந்தாங்க நீ எதுக்கு இப்போ கிளம்பி வந்த அதுவும் அவசரமாக பதட்டமாக ஓடி வந்து என் தங்கச்சியை இடித்துத் தள்ள அளவுக்கு அப்படி ஒரு வேகம் எதுக்கு" என்று கேட்டான்.



"ஆமா நான் இடிச்சி தள்ளுவதுல உங்க தங்கச்சி கீழே விழுந்து கை கால் முறிஞ்சி எந்திரிக்க முடியாமல் கிடைக்கிற பாருங்க, ஹாயா எங்க அண்ணன் மடியில உட்காந்து இருக்கா அவங்களும் இவ்வளவு கதைகளை தவிர்த்து அவளை இறக்கிவிட பாக்குறாங்களா அதுவும் கிடையாது. இதுதான் சாக்குன்னு இவளும் ஜம்முனு உக்காந்து இருக்கா" என்று தோள்பட்டையில் இடித்துக்கொண்டு கூறினாலும் அவள் முகத்தில் பூரிப்பு இருந்ததை அனைவருமே கண்டுகொள்ளதான் செய்தனர்.



பின்பு "நான் தேடி வந்ததே உங்கள காணும்னு சொல்றதுக்காக தான் வீட்ல எல்லாரும் உங்களை தான் தேடிக்கிட்டு இருக்காங்க. ஒரு ஒரு வாரமாவது வெளியே போகக்கூடாது வீட்டிலேயே இருங்க அப்படின்னு இருந்தா எல்லாரும் சொல்லி அனுப்பினார்கள். அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம் வெளியே வருவதற்கு, ஒன்னு இங்க வந்து இருப்பீங்க இல்லனா அண்ணா வீட்டுக்கு போய் இருக்கீங்க அப்படின்னு சொல்லி என்ன போய் பாத்துட்டு வரச் சொன்னாங்க. அவங்க வீட்டுக்கு போனேன் அங்க யாருமே இல்ல காலைல நடந்த பிரச்சனை எல்லாத்தையும் வீட்ல சொன்னாங்க அதை பத்தி கேட்டுட்டு உங்கள பத்தி சொல்லிட்டு போலாம் நான் உங்க தங்கச்சியா தேடி வந்தேன்" என்று நீட்டி முழக்கி கூறினாள்.



அவள் கூறி முடித்ததும் தான் தாமதம் சடாரென்று எழுந்து ஆதர்ஷினி, அவள் தலையில் கொட்ட பார்க்க அடி வாங்காமல் தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள் பவானி. அடுத்து இவர்கள் இருவரும் தங்களுடைய சேட்டையை ஆரம்பிக்க மற்றவர்கள் அதை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அதன்பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து அங்கேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டு முடித்தனர் ஓடியாடி விளையாடிய களைப்பிலும், உண்ட களைப்பிலும் அனைவரும் தூங்க ஆரம்பிக்க சமர் வெளியே தோட்டத்தில் அமர்ந்து இருந்ததால் அதை பார்த்து ஆதர்ஷினி அவனருகில் சென்று அமர்ந்தாள்.



"என்ன ஆச்சு உன்னோட மனசுக்குள்ள இன்னும் என்னமோ ஓடிக்கொண்டே இருக்கிற மாதிரி இருக்கு, எதுவா இருந்தாலும் வெளியே சொல்லிட்டு உள்ளே வச்சு கிட்டே இருந்தா அது பின்னாடி ஏதாவது பிரச்சனைக்கு தான் வழி வகுத்துக் கொண்டு வந்து நிற்கும்" என்று கேட்க





"இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை ஆனா இது நான் ஆசைப்பட்ட வாழ்க்கை இன்னைக்கு அப்பாவும் தாத்தாவும் பேசும்போது அவங்க முகத்துல இருந்த குற்ற உணர்ச்சி, ஏக்கம் எல்லாத்தையும் பார்க்கும் போதே எனக்கு சந்தோஷமாய் இருந்தது. உண்மையா அப்படி சந்தோஷப்பட கூடாது தான் நான் இல்லை என்று சொல்லவே இல்லை, ஆனாலும் என்கிட்ட பேச முடியவில்லையே அப்படிங்கற ஏக்கம் இதெல்லாம் பார்க்கும்போது நிச்சயமா அவங்களும் சீக்கிரம் என்கிட்ட பேச வருவாங்க அப்படின்னு நம்பிக்கை இருக்கு. அப்படி அவங்க ஒரு தயக்கத்தில் பேசாம போனா கூட நானே போய் அவங்க கிட்ட பேசி எனக்கு கிடைக்காத சந்தோஷத்தையும் அனுபவிக்க போறேன். இது எல்லாத்துக்கும் நீ ஒருத்தி தான் காரணம்" என்று கூறி அவளை இறுக அணைத்து அவன் அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.



ஏனென்று தெரியாமல் இன்றைய அணைப்பு வித்தியாசமாக இருக்க, ஆதர்ஷினி கூட சிறிது மயங்கி கிறங்கி தான் போனாள். அது அவளது கண்களில் தெரிய அதை கண்டு கொண்டவன் லேசான புன்னகையுடன் அவளுடைய இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்தான். அந்த சுகமான மனநிலையை கண்களை மூடி ஏற்றுக் கொண்டவள் இதழை நோக்கி அவன் நெருங்கிய நேசம் அவளுடைய பெண்மை இது வெட்டவெளி என்பதை உணர்த்த, திடீரென்று கண்ணை திறந்து சுற்றி முற்றி பார்த்தாள். ஆனால் தோட்டத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இடமோ வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அளவுக்கு இருந்தது. அதை பார்த்து தன் கணவனை கண்களால் கேள்வியாக கேட்டாள், அதை புரிந்து கொண்டவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் ஏதோ காணக்கிடைக்காத பொக்கிஷம் கிடைத்தது போல அவளுடைய இதழை முற்றுகையிட்டான்.




அவனுடைய வேகத்தை சமாளிக்க முடியாமல் அவள் தடுமாற தன் கைகளை அவளது பின் கழுத்திற்கு கொண்டு சேர்த்து மெதுவாக அவளுடைய முடியை வருடி கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றத்தில் இருந்து கிறக்கமான மனநிலைக்கு சென்றாள் ஆதர்ஷினி.



சிறிது நேரம் தொடர்ந்த இந்த முத்தத்தில் ஆதர்ஷினி மூச்சுவிட தவிக்க அப்பொழுதும் தன் மூச்சை அவளுக்கு வழங்கியவன் அவளை விடவில்லை. தூரத்தில் விழுந்த மட்டையின் சத்தத்தில் சுயநினைவு அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆதர்ஷினி முகம் வெட்கத்தால் சிவந்து இருக்க அதை ஒரு திருப்தியான புன்னகையுடன் ரசித்திருந்தான் சமர்.



இருவரும் ஒரு மோன நிலையில் அமர்ந்திருக்க தூக்கத்தின் இடையில் கேட்டு சத்தத்தில் விழித்த அருள் சரண் நிலா மூவரும் வெளியே வந்தனர். வெளியே வந்தவர்கள் சமர் ஆதர்ஷினி இருவரையும் காணாமல் தேடி இறுதியாக சமர் எங்கே இருப்பான் என்பதை யோசித்துக் கொண்டே இவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தனர். இருவரும் ஒரு மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் மூவருக்கும் மகிழ்ச்சியாக இருக்க அவர்களும் வந்து இவர்களுடன் ஒன்று சேர்ந்து விட்டனர்.



அதுவரை அமைதியாக இருந்தவர்கள் இவருடன் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட, மற்றவர்களும் ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தனர் சிறிது நேரத்தில் அந்த இடமே கலகலப்பாக மாறியது.



மாலை அனைவரும் ஒன்றாக வீடு செல்ல இவர்கள் அனைவரின் முகத்திலும் இந்த மகிழ்ச்சியை பார்க்கும்போதே பெரியவர்களிடமும் மனமும் நிறைந்தது. அன்றைய இரவு உணவை முடித்து விட்டு அவரவர் அறையில் அவரவர் புகுந்து கொண்டனர்.



தன் அறைக்கு வந்த ஆதர்சினியை பின்னால் இருந்து கட்டி அணைத்த சமர் அவளுடைய முதுகில் கிடந்த முடியை எடுத்து முன்னே வைத்தவன் அழுத்தமாக அவள் தோள்களில் முத்தம் வைத்தான். எதிர்பாராத அணைப்பு, எதிர்பாராத முத்தம் என்று தடுமாறிக் கிறங்கியவள் அதை ஏற்று அமைதியாக நிற்க, மெதுவாக அவளுடைய முகத்தை திருப்பி அவன் அங்குலம் அங்குலமாக தன் மனைவியை ரசிக்க ஆரம்பித்தான். அவனுடைய பார்வையை உணராத போதும் அதில் இருந்த செய்தியை அவளுடைய மேனி உணர்ந்துகொள்ள, அது மொத்தமாக சிவக்க ஆரம்பித்தது. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கண்களைத் திறந்தவள் அவளை இறுக அணைத்து அவன் கண்ணத்தில் முத்தம் வைக்க அங்கே இல்லறம் நல்லறமாக ஆரம்பமானது.



மறுநாள் காலையில் கண்விழித்த ஆதர்ஷினி தன் கனவன் மார்பில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு எழுந்து குளிக்க சென்றாள். என்றும் தனக்கு முன்னே வரும் ஆதர்ஷினி இன்று வராமல் போக என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே கோலமிட்டு முடித்து வீட்டிற்குள் வந்தவள், தன் எதிரே வந்த தன் அக்காவின் முகம் பார்த்து அனைத்தையும் புரிந்து கொண்டாள் அதே மகிழ்ச்சியோடு அவளை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள். அப்போதுதான் இருந்துவந்த பெரியவர்களும் ஆதர்ஷினி முகத்தில் இருந்த வெட்கம் கலந்த புன்னகையை கண்டு அவளை திருஷ்டி எடுத்து கட்டிக் கொண்டனர்.



அதன்பிறகு வந்த நாட்களில் அனைத்துமே மகிழ்ச்சியே சிறுசிறு ஊடல்கள் வந்தாலும் அதை கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவர்கள் சரி செய்து கொண்டனர். பெரியவர்கள் காதுகளுக்கு செல்லாத காரணத்தினால் சிறியவர்களின் மகிழ்ச்சியே பெரிதாக இருந்தது. சமர் மாலை நேரத்தில் தன் தம்பி தங்கைகளுடன் அதிகமாகவே நேரம் செலவழித்தால் அதுபோலவே தனது அம்மா, சித்தி கைகளினால் உணவு உட்கொள்வது, மனைவியிடம் அனைத்தையும் பேசுவது என்று வாழ்க்கையை ரசித்து வாழ ஆரம்பித்தான்.



தன் அண்ணன் வாழ்க்கை சரியாகி விட்ட பிறகும் அவனுக்கு ஒரு வாரிசு வரட்டும் என்று அருள் கார்த்திகா ஜோடி இன்னுமே ஒருவரை ஒருவர் அதிகமாக காதலித்து கொண்டிருந்தனர். சில நாட்களில் ஆதவன் உடம்பில் உள்ள காயங்கள் சரியாகி விட அவர்களுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு ஆயத்தமானது.



இப்படி மகிழ்ச்சி மட்டுமே நிரம்பி சென்று கொண்டிருந்தாலும் தாத்தாவும் தந்தையும் பெரிதாக யாரிடம் பேசிக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர். முருகனோ முற்றிலுமாக அனைவரும் தன்னை ஒதுக்கி விட்டதை நினைத்து நொந்து நொந்து அமைதியாகிவிட்டார். இவர்கள் மூவரையும் தனித்தனியே சமர் கவனித்துக் கொண்டுதானிருந்தான். பாட்டி அதன் வயதிற்கேற்ப அனைவருடனும் சண்டை இழுத்து வம்பிழுத்து சகஜமாக சுற்றிக் கொண்டிருந்த, காரணத்தினால் அவர் பற்றி அங்கு கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.



பெரியவர்கள் அனைவரையும் இப்படியே விடுவது சரியில்லை என்று ஆதர்ஷினி ஒருபக்கம் எண்ணிக் கொண்டிருக்க சமர் அதற்கான தீர்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். ஏனென்றால் அவர்கள் கண்களில் தெரியும் ஏக்கத்தை பார்க்கப் பார்க்க அவனுக்கு பொறுத்துக்கொள்ள இயலவில்லை அனைவரும் ஒன்றாக சிரித்து பேசும் இடங்களில் அவர்கள் ஒதுங்கி இருப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை அவன் அனுபவம் மூலம் உணர்ந்த காரணத்தினால், இதை சரி செய்ய எண்ணி யோசித்துக் கொண்டிருந்தான்.



அதற்கான தீர்வாக அமைந்ததோ ஆதவன் பவானி திருமணம் அவர்களுடைய திருமணம் தேதி குறிக்கப்பட்ட உடன் தர்சினி இருவருக்கும் தெரிவிக்கப்பட சமர் நேராக தன் தாத்தா அப்பா சித்தப்பா இருக்குமிடம் சென்றான். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று மூவரும் கேள்வியாக பார்க்க, அப்போதுதான் வந்த செல்வராஜ் மனதில் எங்கே என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து இருந்த காரணத்தினால் புன்னகைத்துக் கொண்டார்.



நேராக தன் தாத்தாவை பார்த்தவன் "நீங்க எனக்காக இதுவரைக்கும் எதுவுமே செஞ்சது கிடையாது. ஆனா என்னோட சின்ன சின்ன விஷயத்திலிருந்து எல்லாத்துக்குமே எனக்கு கூடவே இருந்து செஞ்சது ஆதவனும் அவன் குடும்பமும் தான், இப்போ ஆதவன் கல்யாணம் நடக்கப் போகுது இந்த கல்யாணத்துல நீங்க முன்ன நின்னு எல்லாத்தையுமே செய்யணும் அப்படின்னு நினைக்கிறேன். நீங்க மட்டும் கிடையாது உங்க பிள்ளைங்க ரெண்டு பேருமே இந்த விஷயத்துல முழு மனசா கலந்துகிட்டு எல்லாத்தையுமே செய்யணும். உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா இந்த வீட்ல இருக்கா யார்கிட்ட வேணாலும் கேட்கலாம் எல்லாரும் தயங்காம உங்களுக்கு உதவி பண்ணுவாங்க. அதேசமயம் எந்தவித வருத்தமும் இல்லாமல் முழு மனசோட சந்தோஷத்தோடு இந்த கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும் கொடுக்க முடியுமா?" என்று கேட்டான்.



வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவருக்குமே அவர் என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று கேட்க ஆர்வமாக இருந்தது, ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்து விட்டு ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் இருப்பது எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் என்று சமர் பிறந்ததில் இருந்தே அறிந்து இருந்தவர்கள், சமர் சரியாகி விட இப்போது இவர்களுக்குள் இந்த பிரச்சனை வர மறுபடியும் அதே நிலையில்தான் வேறு வேறு என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஒரு ஓரத்தில் இருக்கதான் செய்தது. அதனால் இது அனைத்தும் சரியாகிவிடாது என்ற எண்ணத்தில் எதிர்பார்ப்போடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.




ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி நடந்த விஷயம் அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.



அது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari