• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 4

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
ஆதவன் மற்றும் சமர் இருவரும் ஊருக்கு வர போகிறார்கள் என்று விஷயம் கேள்விப்பட்டவுடன் சமரை பார்த்து தன்னுடைய மனதில் இருக்கும் அனைத்தையும் கூறி விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு காலையிலேயே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன் தோழியை அடித்துப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள் ஆதர்ஷினி.

தன் விதியை நொந்தபடி வேறு வழியில்லாமல் தன் தோழியுடன் சென்று கொண்டு இருந்தாள் பவானி மனதில் "படுபாவி இவ ஒருத்தியை பிரண்டா வச்சு இருக்கிறதுக்கு இன்னும் என்ன எல்லாம் என் வாழ்க்கையில் நடக்க போகுது அப்படின்னு தெரியல எதுக்கு இந்த காலங்காத்தாலேயே என்ன அடிச்சு எழுப்பி கூட்டிட்டு போகிறா அப்படின்னு கூட தெரியல அதுவும் இந்த குளிர் காற்றுக்கு இன்னும் சுகமா தூக்கம் தான் வருது" என்று நொந்து கொண்டே சென்றாள்.

தர்ஷினி பேருந்து நிலையத்திற்கு வந்து வண்டியை நிறுத்தியவுடன் 'யாரோ முக்கியமானவர்கள் வரப்போகிறார்கள் போல' என்று எண்ணிக்கொண்டு தலையில் கை வைத்து உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தாள் பவானி.

பவானி வருபவர்களை கண்டும் காணாதது போல் அசந்து தூங்க அவளை ஒரு அடி அடித்து எழுப்பி தரதரவென இழுத்துக் கொண்டு சென்றாள் ஆதர்ஷினி. அதில் பதறி எழுந்த பவானி அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள். ஆனால் அவள் சமர் மற்றும் ஆதவன் முன் நின்று நிற்கவே 'எதற்காக இவள் இவ்வாறு வந்து நிற்கிறாள்' என்று யோசித்தபடியே நின்று கொண்டு இருந்தாள்.

அனைவரும் கேள்வியாக நோக்கிய சிறிது நேரத்தில் சமர் முகத்தை நேருக்கு நேர் பார்த்த ஆதர்ஷினி "எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு இதுவரைக்கும் உன்னோட லைஃப்ல என்ன நடந்துச்சு இனி என்ன நடக்க போகுது எதுவும் எனக்கு தெரியாது ஆனால் எதுவா இருந்தாலும் இனி நான் உன் கூடவே இருப்பேன் அதையெல்லாம் நீ வேண்டாம்னு சொல்ல கூடாது. இதை நான் ரொம்ப வருஷமா யோசிச்சு இந்த முடிவு எடுத்து இருக்கேன்.

அதனால சின்ன புள்ள தேவையில்லாம மனசு போட்டு குழப்பிக் கொண்டு நம்மிடம் வந்து பேசுது அதுக்கு அப்பறம் சரியாயிடும் அப்படின்னு எல்லாம் பகல் கனவு காணாதே நீ இந்த ஊருக்கு வந்து சேர்ற அன்னைக்கு உனக்காக நான் காத்துகிட்டு இருக்கேன் அப்படிங்கிற விஷயத்தை உனக்கு புரிய வைக்கனும்னு நினைச்சேன். அதனாலதான் நேரடியாகவே வந்து சொல்லிட்டேன் என்ன தவிர வேறு யாரையும் நீ நினைக்கவும் கூடாது இனி நான் நினைக்கவும் விடமாட்டேன்.

அந்த அளவுக்கு உன் முன்னாடியே வந்து இம்சை பண்ணுவேன் நீ ஆசைப்பட்டாலும் ஆசைப்பட்டாலும் நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் உனக்கு குடுக்க தான் செய்வேன். அதை எல்லாத்தையும் நீ ஏத்துக்க பழகிக்கோ சும்மா யார்கிட்டயும் பேசாம ஒதுங்கி ஒதுங்கி போனால் எல்லாம் சரியாகாது புரியுதா என்னோட வாழ்க்கையில எல்லாமே நீ வேணும் எனக்கு ஒரு சந்தோஷம் துக்கம் வந்தாலும் கூட இருந்து தாங்குவதற்கு நீ வேணும் அதே மாதிரி உனக்கு ஒரு சின்ன பிரச்சனை அப்படியே வந்தாலும் உன்னை தாங்கி பிடிக்கிறதுக்கு நான் இருப்பேன்.

ஐ லவ் யூ என்னைக்குமே நீதான் என்னோட புருஷன் உன்னை தவிர வேறு எவனையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் உன்னைய வேறு யாரையும் கல்யாணம் பண்ண விடவும் மாட்டேன். நான் சொன்ன எல்லாத்தையும் மனசுல வச்சுக்கோ" என்று கூறிவிட்டு திகைத்து நின்ற மூவரையும் ஒருமுறை பார்த்தவள். தன்னுடைய தோழியை மறுபடியும் தரதரவென இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

சில நிமிடங்கள் அதிர்ச்சியில் நின்றுகொண்டு இருந்த சமர் மற்றும் ஆதவன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆதவன் மனதில் 'இந்த ஆத்திச்சூடி இப்படி பட பட பட்டாசு மாதிரி மனதில் இருந்த எல்லாத்தையும் சொல்லிட்டு கிளம்பி போயிட்டா அதுவும் வந்து இறங்கிய உடனேயே இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் அப்படின்னு நிச்சயமாக நான் எதிர்பார்க்கவே இல்லை இனி சமர் இவள் கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போகிறானோ ஆனாலும் இவள் ஒருத்தி இருந்தால் மட்டுமே அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் அடங்குவார்கள்' என்று எண்ணிக்கொண்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

சமருக்கு சிறிது நேரம் எதுவுமே புலப்படவில்லை தன்னுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு தன்னுடைய மனதில் இருந்த அனைத்தையும் கூறி விட்டு சென்றது ஏதோ ஒரு வகையில் சமர் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் கூறும்போது அவள் கண்களில் உள்ள உண்மை நான் கூறிய அனைத்தையும் செய்தே தீருவேன் என்று அவளுக்கு இருந்த நம்பிக்கை அனைத்தும் அவனை அசைத்துப் பார்த்தது என்னவோ உண்மை இருந்தாலும் அவளுடைய மனது எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை அதனால் அமைதியாக தன் நண்பனை பார்த்து விட்டு தன்னுடைய பொருள்களை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவனுடைய முகத்தில் வந்துபோன உணர்ச்சிகளை வைத்து தன்னுடைய நண்பன் என்ன முடிவு எடுத்து இருக்கிறான் என்பதை உணர்ந்த ஆதவன் மனது மிகவும் கவலை அடைந்தது. இருந்தாலும் ஆத்திச்சூடி அவனை விட்டு வைக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அமைதியாக நண்பனை பின் தொடர்ந்து சென்றான்.

ஆனால் ஆதர்ஷினி சமரிடன் இவ்வாறு பேசியதை ஒரு ஜோடி கண்கள் மகிழ்ச்சியுடனும் ஒரு ஜோடிக் கண்கள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன இதை அறியாத அவர்கள் அனைவரும் தங்களுடைய பாதையில் வீடு சென்றனர்.

சமர் தன்னுடைய வீட்டிற்கு விருப்பம் இல்லாமல் தான் சென்றான் அவன் வந்ததை அந்த வீட்டிலுள்ள சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பெரியவர்களோ ஒரு சிலர் இவன் ஏன் வந்தான் என்ற ரீதியில் பார்க்க மற்றவர்கள் கண்குளிர அவனை கண்டு கொண்டனர்.

அனைவருடைய முகபாவத்தை பார்த்த சமர் செல்வன் தனக்குள் சிரித்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றான். இவன் சென்றவுடன் அவருடைய சித்தப்பா செல்வராஜ் மற்றும் தாய் புனிதா வந்தனர். இருவரையும் பார்த்தவன் பொதுவாக இனி "நான் இந்த வீட்டில் இருப்பதற்கு விரும்பவில்லை படித்துக் கொண்டிருந்த காலத்தில் சிறிது சிறிதாக பணம் சேமித்து வைத்திருக்கிறேன். அதை வைத்து இந்த ஊரில் ஒரு நிலம் விலைக்கு வருகிறது அதை எனக்கு வாங்கித் தாருங்கள் அதிகமாக தேவைப்பட்டால் என்னுடைய நண்பனிடம் கூறுகிறேன் அவனும் என்னுடன் இணைந்து இந்த நிலத்தை வாங்குவான். அதன்பிறகு யாருக்கும் தொந்தரவு தராமல் நாங்கள் அங்கே ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்து விடுகிறேன். இங்கு இருக்க சொல்லி தயவு செய்து வற்புறுத்தாதீர்கள்" என்று கூறினான்.

அவனுடைய மனநிலையை முழுதாக புரிந்து கொண்ட இருவரும் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்தனர். அவனை விட்டு பிரிந்து இருப்பது அவர்களுக்கும் கஷ்டமாக இருந்தாலும் இதற்கு மேல் இந்த சூழ்நிலையில் அவன் இருக்க வேண்டாம் என்று எண்ணி அவன் கூறியதற்கு அமைதியாக தலையசைத்தனர். செல்வராஜ் அவனைப் பார்த்து அந்த நிலத்தை உன்னுடைய பெயருக்கு மட்டுமல்லாமல் ஆதவன் பெயரிலும் சேர்த்து முடித்துக் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு நீ எந்தவித கவலையும் பட வேண்டாம்.

அதுபோல உன்னுடைய ஆசைப்படி அந்த நிலத்தில் வீடு கட்டும் இடத்தில் மட்டும் உன்னுடைய பெயரிலேயே வரும்படி அனைத்தையும் செய்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள் இந்த வீட்டில் யாரும் வேண்டாம் என்று கூறினாலும் நீ சிறுவனாக இருந்த போதில் இருந்தே தூக்கி வளர்த்த நான் என்றுமே உன்னை வேண்டாம் என்று கூறமாட்டேன் அதனால் உனக்கு ஏதாவது ஒரு விஷயத்தை பகிர வேண்டும் இல்லை ஆலோசனை கேட்க வேண்டும் என்று தோன்றும் போது யாருமே உன்னுடன் இல்லை என்ற நிலை வந்தால் தயங்காமல் என்னை தொடர்பு கொள் உனக்காக நான் அங்கே வருவேன் என்று நீ யாரும் இல்லாதவன் கிடையாது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்" என்று கூறினார்.

அவர் கூறியதை கேட்டு சம்மதமாக தலையசைத்த சமர் அதன்பிறகு ஒரு வாரம் மட்டுமே அந்த வீட்டில் குடியிருந்தான் அதற்குள் அவனுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செல்வராஜ் முடித்துவிட அந்த வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு சமர் ஆயத்தமானான்.

சமரின் தந்தை தாத்தா பாட்டி மற்றும் இன்னொரு சித்தப்பா அனைவரும் அவன் இந்த வீட்டை விட்டு சென்றால் தங்களுக்கு இருக்கும் கஷ்டம் ஒழிந்தது என்று ரீதியில் கண்டுகொள்ளவே இல்லை ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் அவன் வீட்டை விட்டு செல்வது வருத்தமாக இருந்தாலும் எவ்வளவு நாள்தான் இந்த வீட்டிலேயே இருந்து அனைவரின் கடுஞ்சொற்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுடைய வாழ்க்கையில் முன்னேறி வரட்டும் என்று எண்ணி அமைதி காத்தனர்.

அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு தான் வாங்கிய நிலம் இருக்கும் இடம் சென்றான். அங்கு அவனுக்கு சிறியதாக ஒரு வீடு போன்ற அமைப்பு அவனுடைய வீட்டு வேலை முடியும் வரை தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனை பார்த்த உடன் அதற்கு காரணம் தன்னுடைய சித்தப்பா என்பதை உணர்ந்தவன் அமைதியாக சென்று அதை பார்வையிட்டான் அவனுக்கு அது முழு திருப்திகரமாக இருந்தது. அவனுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே இருந்ததை பார்த்தவன் தன் சித்தப்பாவை நினைத்து சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.

அங்கு ஆதவன் அவனை காண வந்துகொண்டே இருக்க அவன் பின்னே அடிபிடி சண்டை போட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்தனர் கார்த்திகா மற்றும் கார்த்திக். இருவரையும் பார்த்த சமர் முகத்தில் சிரிப்பு வந்தது ஏனென்றால் இவர்கள் இருவரும் எப்பொழுதும் ஏதாவது ஒரு சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போட்டுக் கொண்டே இருப்பர். முதலில் பெரியவர்கள் இவர்களின் சண்டையை தீர்த்து வைத்தனர்.

எப்பொழுதும் இவர்கள் ஏதாவது சண்டை வைத்துக் கொண்டு வருவதால் அவர்கள் இருவரும் பேசி அதனை பேசி தீர்த்துக் கொள்ளட்டும் என்று அந்த இடத்தின் பக்கம் கூட செல்லாமல் இருந்து கொள்வார்கள். இப்பொழுதும் அதே போல் தான் அவர்களின் சண்டையை துளி கூட கண்டுகொள்ளாமல் வந்து கொண்டு இருந்தான் ஆதவன்.

அவர்கள் இருவரையும் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு தன் நண்பனை பார்த்தான் அவனும் சமர் முகத்தை பார்த்து சிரித்துவிட்டு அவனுக்கு தான் கொண்டு வந்து இருந்த சாப்பாட்டை கொடுத்தான்.ஏற்கனவே சமர் உடன் தான் சாப்பிட வேண்டும் என்று அடம்பிடித்து தான் கார்த்திக் மற்றும் கார்த்திகா இருவரும் வந்து இருந்த காரணத்தினால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்போதே ஆதவன் சமர் முகத்தைப் பார்த்து "இந்த நிலத்துல விவசாயம் பண்ணனும் அப்படின்னு முடிவு எடுத்தது சரி ஆனால் மொத்தமாகவே இயற்கை விவசாயம் தான் பண்ணனும் அப்படின்னு சொன்ன அதுக்காக நம்ம மொத்தமாய் இருக்கிற இந்த நிலத்தில் ஒரு சில இடத்தை தனியாக ஒதுக்கி உரம் எல்லாத்துக்குமே தயார் செய்யணும் தானே" என்று கேட்டான்.

சமர் "ஆமா முதல்ல உரத்துக்கு தான் நம்ம எல்லாத்தையுமே தயார் பண்ணனும் கொஞ்சம் இடத்துல நம்ம மகசூல்காக காய்கறிகள் போட்டால் கூட கொஞ்சம் கொஞ்சமாக அதை விரிவுபடுத்தி கொண்டுவரலாம் அதற்கு முன்பு அதற்குத் தேவையான ஊட்டச் சத்தான உரங்களை நாம் தயார் செய்து அந்தந்த நேரத்திற்கு உணவு கொடுப்பது போல் கொடுத்தோம் என்றால் அனைத்தும் சரியாக நடக்கும் நம் வீட்டு பிள்ளைகளை கவனிப்பது போல அவர்களை கவனித்து வந்தால் அது நம்மை கண்டிப்பாக வாழவைக்கும்" என்று கூறினான்.

கார்த்திக் கார்த்திகா இருவருக்கும் பெரிதாக அதில் எதுவும் புரியவில்லை என்றாலும் இயற்கை உரம் என்று வரும்போது இவர்கள் மண்புழு அந்த மாதிரி ஏதாவது வைப்பார்கள் என்று நினைத்து அவர்கள் முகம் பார்த்தனர். அவர்கள் தங்கள் முகத்தை பார்ப்பதை பார்த்த சமர் "நீங்க ரெண்டு பேரும் எப்ப வேணும்னாலும் இங்க வாங்க எங்க கூட ஏதாவது வேலை செய்யணும் அப்படின்னு தோன்றினாலும் அதை செய்யுங்க எதுக்குமே நான் மறுப்பு சொல்ல மாட்டேன் ஆனா எதுக்காகவும் உன்னோட அக்காவை இங்க வர விட்ராத இத மட்டும் எனக்காக பண்ணுங்க" என்று கேட்டான்.

அவனை பாவமாக பார்த்த இருவரும் "நாங்க ரெண்டு பேரு கூட இந்த பக்கம் வராம இருப்போம் ஆனால் அந்த அரை லூசு இந்தப் பக்கம் வராமல் இருக்காது. அதுமட்டுமில்லாம அந்த பவானி அக்கா பாவம் இவ கிட்ட மாட்டிகிட்டு பானிபூரி மாதிரிதான் அப்பப்போ ஒருமாதிரி ஆகிறது. அந்த அக்காவையும் விடமாட்டா அவர்களையும் சேர்த்து தான் கூட்டிட்டு வருவா முடிஞ்சா நீங்க அவகிட்ட சொல்லி பாருங்க ஆனா கண்டிப்பா அவ கேக்குறதுக்கு வாய்ப்பே கிடையாது. நாங்க சொன்னாலும் கேட்க மாட்டா அதனால நாங்களும் ஒன்னும் பண்ண முடியாது" என்று கூறினார்கள்.

ஏனோ சமருக்கு அவளிடம் பேசி பழக ஆசை வரவில்லை ஏனென்றால் அவளிடம் பேசி பழக ஆசைப்பட்டால் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் அவள் பக்கம் சாய்ந்து விடுவோமோ என்று எண்ணினான். அதனால் அமைதியாக அப்போது முதல் அவளை பார்க்கும் போதும் முறைத்துக்கொண்டே கடந்து விடுவான். ஆனாலும் அவள் விடாமல் அவளுடைய பரிட்ச்சை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் சமரை ஏதாவது ஒரு வகையில் சீண்டுவாள். இல்லையென்றால் பார்த்துவிட்டாவது செல்லுவாள்.

இப்படியே நாட்கள் கடந்து மாதங்களாக வருடங்களாக மாறி இப்போது தர்ஷினி மற்றும் பவானி இருவரும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்த பிறகும் கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் இருக்கிறான் ஆனாலும் அவள் தன்னுடைய கொள்கையிலிருந்து இறங்கி வரவில்லை அதை பார்க்கும் போது அவனுக்கு தன்னை அறியாமல் அவளை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று ஆசை வரும் ஆனால் சிறு வயது முதல் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அவனை மேற்கொண்டு எதுவும் கூற விடாமல் அமைதியாகி விடுகிறது.

தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி உங்களை பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.