ஆதர்ஷினி கூறிய படி அனைத்தும் சரியாக நடந்து கொண்டு இருந்தது. செல்லையா தாத்தாவிற்கு சமருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் சிறிதுகூட விருப்பம் இல்லை என்றாலும் தன்னுடைய ஆசை பேரன் திருமணம் அதனால் தடை பெறும் என்று அறிந்த காரணத்தினால் அமைதி காத்தார். ஆனால் சிறு துரும்பை கூட அசைக்க அவர் நினைக்கவில்லை.
இந்நிலையில் அனைத்தையும் பேசி முடித்துவிட்டு செல்வராஜ் அறையில் இளவட்டங்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். அப்போது ஆதர்ஷினி போன் செய்யவே அருள் போனை அட்டன் செய்து ஸ்பீக்கரில் போட்டு விட்டான். அனைவரும் இருப்பதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்டவள்.
"இன்னைக்கு நடந்தது கண்டிப்பா நல்லபடியா நடந்து இருக்கும் அப்படி என்று நம்புகிறேன். இனி நீங்க என்ன பண்ணனும் அப்படின்னு சொன்னா இந்த சமர்பய கிட்ட போய் அருள் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணோட அக்காவா அவனுக்கு தரத்துக்கு அவங்க வீட்ல சம்மதம் சொல்லி இருக்காங்க அப்படின்னு சொல்லுங்க.
கண்டிப்பா அந்த லூசு என்ன கல்யாணம் பண்ணிக்க போறேன் அப்படின்னு சொல்லவே சொல்லாது. மனசுல ஆசை இருந்தாலும் வெளியே சொல்ல அவனுக்கு அவ்வளவு பயம். அதனால நீங்க இதை போய் சொல்லுங்க அப்பவும் அது அமைதியாக தான் இருக்கும் அந்த அமைதி நமக்கு சாதகமாக இருக்கும் அப்படின்னு நம்புறேன். அதனால இத அடுத்து பண்ணுங்க அதுக்குப்பிறகு எங்க வீட்ல பேசி ஒரு நாள் சொல்றேன், இல்ல நீங்களே ஒரு நாள் முடிவு பண்ணாலும் சரி அன்னைக்கு வந்து பொண்ணு பார்த்து உறுதி பண்ணிட்டு போற மாதிரி பாத்துக்கோங்க" என்று கூறினாள்.
"நீ சொல்றது எல்லாமே சரிதான் ஆனா இப்படி அவன் கிட்ட போய் பேசுறது சரியா இருக்காது. அவனுக்கு மொத்தம் அஞ்சு நாள் டைம் கொடுத்து இருக்கேன். அந்த 5 நாள் முடியட்டும், அதுக்குள்ள அவன் வந்து ஏதாவது சொன்னா சரி இல்லனா நானே ஒரு பொண்ணு பார்த்து வைப்பேன், அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதனால ஒரே முடிவா பொண்ணு பாக்குறது பத்தி பேசி முடிவு செய்யலாம். அவன் மனசுல நீதான் இருக்க அந்த உண்மையை அவன் சொன்னாலும் நீ தான் பொண்ணு இல்ல என்றாலும் நீதான் பொண்ணு இதுக்கு எதுக்கு தேவையில்லாம மறுபடியும் அவன் கிட்ட போய் பேசி திரும்பி வருவானேன்" என்று செல்வராஜ் தன்னுடைய கருத்தை கூறினார்.
அனைவருக்குமே அவர் கூறியது சரியாகவே தோன்றியது ஏன் என்றால் நிச்சயம் சமர் தன்னுடைய மனதில் இருப்பதை வெளியே சொல்வதற்கு வாய்ப்புகள் குறைவு . அதை மீறி அவன் கூறினாலும் இதோ ஆதர்ஷினி தான் அவனுக்கு பார்த்து இருக்கும் பெண் அப்படி இருக்கும் நேரங்களில் வேறு எந்தவிதமான சிக்கலும் வராது என்று நினைத்து செல்வராஜ் கூறியதை ஆமோதித்தனர்.
ஆனால் தான் எடுத்து செய்து கொண்டு இருக்கும் வேலையினால் சமர் எந்த அளவுக்கு கோபப்படுவான் என்பதை அறிந்து வைத்து இருந்த ஆதர்ஷினி மனதில் 'பத்தோடு பதினொன்று எல்லாத்துக்கும் திட்டு வாங்குவது போல இதுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்' என்று நினைத்துக்கொண்டு
"நீங்க சொல்றது சரிதான் பெரியவங்க நீங்க என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கும். அதனால எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நீங்களே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க இல்லைனா என்னோட அப்பா அம்மாவை பார்க்க சொல்றேன்" என்று கூறி முடித்தாள்.
செல்வராஜ் தன்னுடைய மனைவியை பார்க்க இதற்காகவே காத்திருந்த விஜயா பக்கத்திலிருந்த தின காலண்டரை எடுத்து வந்தார். அதை பார்த்த இருவரும் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் நல்ல நாளாக இருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தனர். அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த நாளை பார்த்த இளவட்டங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஞாயிறு விடுமுறை என்ற காரணத்தினால் அனைவரும் ஒன்றாக ஆட்டம் போடலாம் என்று நினைத்து மகிழ்ந்தனர்.
அதே மகிழ்ச்சியோடு பெரியவர்கள் கூறுவதற்கு முன்பாக "அண்ணி வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்கள பாக்க நாங்க எல்லாரும் கிளம்பி வருகிறோம். அதனால உங்க வீட்ல சொல்லி விடுங்க சின்ன அண்ணியையும் தயாரா வச்சுக்கோங்க" என்று மகிழ்ச்சியாக கூச்சலிட்டனர்.
அவர்களின் சந்தோஷ கூச்சலில் தானும் கலந்து கொண்டவள் "உங்க எல்லாரையும் நேரில் பார்த்து சந்தோஷமா என்ஜாய் பண்ணுவதற்கு நானும் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன். நான் உடனே இத போய் அப்பா அம்மா கிட்ட சொல்றேன் எல்லாரும் மறக்காம வந்துருங்க" என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாள்.
அங்கிருந்த அனைவர் மனதிலும் ஒரு மகிழ்ச்சி ஒரு நிம்மதி ஒரு சந்தோஷமும் நிரம்பி இருந்தது. இனி அனைத்தும் படிப்படியாக சரியாகும் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
ஆதர்ஷினியும் மகிழ்ச்சியாக தன்னுடைய தாய் தந்தை பெரியப்பா பெரியம்மா நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ஓடினாள். அவளுடைய மகிழ்ச்சியான முகத்தை பார்த்தே காரணம் என்னவாக இருக்கும் என்று கண்டுபிடித்தவர்கள் மகிழ்ச்சியாக அவளை அணைத்துக் கொண்டனர்.
"வருகிற ஞாயிற்றுக்கிழமை அவங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு வராங்க பொண்ணு பாத்துட்டு அப்படியே உறுதி பண்ணிட்டு போயிரு வாங்கலாம் அதுக்கு பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ண பாக்கணும் அப்படின்னு சொன்னா சமர் வேறு ஏதாவது வழி யோசிக்க ஆரம்பித்து விடுவான். அவன யோசிக்க விடாம எல்லாத்தையும் பண்ணனும் இப்ப நா ரொம்ப சந்தோசமா இருக்கேன் இது சந்தோஷத்தைத் என்னோட ஆளுக்கு தெரியாமல் அவனை பார்த்துட்டு வரேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய தோழியை அழைக்க ஸ்கூட்டியை எடுத்து சென்றுவிட்டாள்.
அவளுடைய மகிழ்ந்த முகத்தை பார்த்து அனைவரும் அதே மகிழ்ச்சியுடன் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆயத்தம் ஆனார்கள். நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த கார்த்திகா 'கடவுளே என்னோட அக்கா ஆசைப்பட்டபடி எல்லாமே சரியா நடக்கணும். மாமா வாழ்க்கையில சந்தோசமா இருக்கணும் இது எல்லாம் நடக்கிறது நானும் ஒரு வகையில் காரணமாக இருக்கேன், அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா இதுல எந்தவித குழப்பமும் வராம நல்லபடியா நீங்க தான் நடத்தி கொடுக்கணும்' என்ற வேண்டுதலோடு மகிழ்ச்சியும் சேர்ந்து நின்று கொண்டு இருந்தாள்.
நேராக பவானி வீட்டிற்கு சென்றவள் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த அவளை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள். அதைப் பார்த்த பவானி வீட்டில் உள்ளவர்கள் சிரித்து விட்டு மீதி வேலையை பார்க்க ஆரம்பித்து இருந்தனர். சிறுவயது முதலே இவர்களின் சேட்டை மற்றும் அனைத்தையும் பார்த்து பழகியவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தவறு செய்து விடுவார்களோ என்று எண்ணி பயந்தனர்.
ஆனால் அதற்கு நேர்மாறாக பவானி வாழ்க்கையையும் சேர்த்து ஆதர்ஷினி யோசிப்பதை பார்த்தவர்கள், இனி இவர்களை நினைத்து கவலை இல்லை என்று நிம்மதி கொண்டனர். அதனால் அவர்கள் இருவரும் எங்கே செல்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தாலும் ஒரு புன்னகையுடன் அதை பார்த்துவிட்டு வேலையில் கவனத்தை செலுத்தினார்கள்.
வண்டியில் சென்று கொண்டு இருந்த பவானி தன் தோழியின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து 'இவ நினைச்சது போல எல்லாமே நல்லபடியா போய்கிட்டு இருக்கிற மாதிரி தான் இவளோட முகத்தை பார்த்தாலே தெரியுது. ஆனா இதுக்கு அந்த அண்ணா எந்த மாதிரி ரியாக்ட் செய்வாங்க அப்படின்னு தெரியலையே, எல்லாமே அந்த அண்ணாக்கு தெரியாமல் நடக்கப்போகுது.
உள்ள சந்தோசம் இருந்தாலும் கண்டிப்பாக அந்த அண்ணனுக்கு இவங்க ஏமாத்தின விஷயம்தானே பெருசா தெரியும். இதனால இவளோட வாழ்க்கைக்கு எந்தவித பிரச்சினையும் வந்து விடக்கூடாது கண்டிப்பாக விடமாட்டா, அதை மீறியும் இன்னும் இவ யோசித்து வைத்து இருக்கிறது எல்லாம் பார்க்கும்போது பிரச்சினை ஆக்கக்கூடாது. இப்ப அந்த அண்ணா எந்த நிலைமையில் இருக்கும் அதுவும் தெரியல' என்று எண்ணிக்கொண்டே அமர்ந்து இருந்தாள்.
தோழியின் மன ஓட்டம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவள் அதுக்கும் ஒரு புன்னகையை சிந்திவிட்டு சமாளித்து தெரியாமல் அவனைக் காணச் சென்றாள்.
அங்கே இவளை காண முடியாத சோகம் ஒருபுறமிருந்தாலும் தன் சித்தப்பா தன்னிடம் கூறி சென்ற விஷயத்தையும் ஒருபுறம் யோசித்து குழம்பி போய் அமர்ந்து இருந்தான் சமர்.
தன் நண்பனின் குழப்பமான முகத்தை பார்த்து அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் 'இவனை இப்படியே விட்டால் கடைசி வரைக்கும் தனிமரமாய் இருப்பான். கண்டிப்பாக ஏதாவது ஒரு வழி பண்ணி இருப்பாங்க அதுவரைக்கும் இருக்கத்தான் செய்யும். இவ்வளவு நாள் தர்ஷினி இவனைத் தேடி வரும்போது எல்லாம் துரத்தியவன், இப்போ அவ வரல அப்படின்னு தெரிஞ்ச பிறகு அதுக்கும் கஷ்டப் படுறான். மனசுல நினைக்கிறது வெளியே சொன்னால் என்ன பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும். இவன்கிட்ட அந்த விஷயத்தை நான் எதிர்பார்க்கவே முடியாது மனசுக்குள்ளேயே வச்சி ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருப்பான்' என்று தன் நண்பனை நினைத்து நொந்து கொண்டு அவன் அருகில் அமர்ந்து இருந்தான்.
அவன் நினைத்தது போலவே 'சும்மா இருந்தா நம்மள தினமும் வந்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமா அவ பக்கம் சாய்க்க ஆரம்பிச்சா, அப்படி இருந்தும் நான் அவ என்னோட பக்கம் வரக்கூடாது அப்படின்னு நினைச்சு என்ன எல்லாம் பேச முடியுமோ எல்லாத்தையும் பேசினேன். ஆனா இப்ப அவர வராமல் இருக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுல சித்தப்பா வேற பொண்ணு பார்க்க போறேன் அப்படின்னு சொல்றாங்க கல்யாணம் வேண்டாம் அப்படின்னு சொன்னாலும் கேட்க மாட்டேன் அப்படின்னு இருக்காங்க.
இதுல இவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது போல, எனக்கு என்ன பண்றது அப்படி என்று புரிய மாட்டேங்குது! குழப்பமாக இருக்கு! சித்தப்பா வேற அஞ்சு நாள் தான் டைம் கொடுத்து போய் இருக்காங்க, அந்த அஞ்சு நாளைக்குள்ள நான் ஏதாவது சொல்லலை அப்படின்னு சொன்னா அவங்களே ஒரு பொண்ணு பாத்துட்டு வந்து நிப்பாங்க என்னால ஆதர்ஷினி வாழ்க்கை ஏதாவது பிரச்சனை வந்தா என்னால நிச்சயமா தாங்கிக்க முடியாது. கண்டிப்பா எனக்கு பார்த்து இருக்கிற உன்னபார்த்த கூட்டிட்டு போவாங்க தானே அப்ப போய் அந்த பொண்ணுகிட்ட ஹெல்ப் கேட்கலாம்' என்று எண்ணிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவனுடைய இந்த தோற்றத்தை தான் பார்த்த ஆதர்ஷினி மனதிற்குள் சிரித்துக் கொண்டே "நீ எவ்வளவு யோசனை பண்ணி இதிலிருந்து தப்பிக்க நினைச்சாலும் நிச்சயமா உன்னை இதிலிருந்து தப்பிக்க விட மாட்டேன். உன்ன தினமும் ஒரு முறையாவது பாப்பேன் அப்படின்னு நான் உன் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் பண்ணி இருந்தேன். அத நீ யோசிச்சு பார்த்து இருந்தாக்கூட நடக்குற எல்லாமே உனக்கு புரிஞ்சிருக்கும்.
ஆனால் எதையுமே யோசிக்காமல் எதை எல்லாம் யோசிக்க கூடாதோ அது எல்லாத்தையும் யோசிச்சுகிட்டு உக்காந்து இருக்க, இதுல நான் ஒண்ணுமே பண்ண முடியாது எப்படியும் நீ என் மேல கோவப்படுவ அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா அந்த கோபத்தை எப்படி சமாளிப்பது என்கிற விஷயமும் எனக்கு தெரியும். சீக்கிரம் மிஸ்டர் ஆதர்ஷினி ஆக ரெடியா இரு" என்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டே தன் காதலனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளுடைய பேச்சைக் கேட்ட பவானி 'இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ கடவுளே நீதான் என்ன கூடவே இருந்து காப்பாத்தணும்' என்று மனதில் வேண்டுதலை வைத்துவிட்டு நின்று கொண்டு இருந்தாள்.
சில நேரத்தில் இருவரும் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டனர் என்று ஆதர்ஷினி வருவாளா என்று அவள் சென்ற பிறகு தேட ஆரம்பித்த சமர் இன்றும் அவள் வரவில்லை என்று தெரிந்து ஏமாற்றம் அடைந்தான். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
இப்படியே நாட்கள் செல்ல ஆரம்பித்தது செல்வராஜ் தான் கொடுத்த ஐந்து நாட்கள் கெடு முடிந்ததை அடுத்து நேராக சமரை சந்திக்க வந்தார் தன் சித்தப்பா எதற்காக வந்து இருக்கிறார் என்பதை அறிந்த சமர் எதுவும் பேசாமல் அவருடைய முகத்தை பார்த்தான்.
அதிலிருந்தே 'இவன் என்னமோ மனசுக்குள்ள ஒரு முடிவெடுத்து இருக்கா ஆனா நீ என்ன முடிவு எடுத்து இருந்தாலும் அதனால் நடக்க விடமாட்டோம்' என்று அவனை கண்டுகொண்ட செல்வராஜ் அமைதியாக
"வர்ற ஞாயிற்றுக்கிழமை உனக்கு பொண்ணு பார்க்க போகிறோம் இவ்வளவு நாள் நீயா ஏதாவது சொல்லுங்க அப்படின்னு நான் காத்துகிட்டு இருந்தேன் ஆனா நீ எதுவுமே சொல்ற மாதிரி தெரியல, அதனால நானே உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சாச்சு ஞாயிற்றுக்கிழமை போய் பார்த்துட்டு எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம். வேற எதுவும் சொல்லாமல் ஞாயிற்றுக்கிழமை தயாராய் இரு எனக்கு இப்போ வேற வேலை இருக்கு அதனால நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு அவனுடைய பதிலைக் கூட எதிர்பாராமல் கிளம்பிவிட்டார்.
அவர் நிச்சயம் தன்னுடைய பதிலை கூட கேட்க மாட்டார் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த சமர் ஞாயிற்றுக்கிழமை எப்படி அந்த பெண்ணிடம் இந்த திருமணத்தை பற்றி பேசலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த ஆதவன் ஞாயிற்றுக்கிழமை ஆதர்ஷினி மற்றும் கார்த்திகா இருவருக்கும் சேர்த்து தான் பெண் பார்க்கும் படலம் நடக்கவிருக்கிறது என்று அவனுடைய அன்னை போன் மூலமாக தெரிவித்ததை யோசித்து சிரித்துக் கொண்டே தன்னுடைய நண்பன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் அவன் முகம் குழப்பமில்லாமல் யோசனையாக இருப்பதை வைத்தே தன் நண்பன் ஏதோ ஒரு வில்லங்கம் செய்யப் போகிறான், என்பதை உணர்ந்து கொண்டவன் மனதில் 'ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் காத்திருக்கும் போலயே' என்று எண்ணி சிரித்து விட்டான். ஆனால் அதை அவனுடைய நண்பன் பார்ப்பதற்கு முன்பு மறைத்து விட்டான்.
அதேசமயம் செல்வராஜ் மற்றும் அருள் இருவரும் சேர்ந்து தங்கள் வீட்டில் ஒரு சில விஷயங்களை கூற அங்கே பெரும் வாக்குவாதம் எழுந்தது, இருந்தாலும் இருவரும் தங்களுடைய முடிவில் பிடிவாதமாக நின்று தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டனர்.
அனைவரும் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது சிலருக்கு மகிழ்ச்சியாகவும் சிலருக்கு எதிர்பார்ப்பாகவும் சிலருக்கு வெறுப்பாகவும் அந்த நாள் வந்தது.
இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.