• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 49

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 49

அலைபேசியில் சொன்ன செய்தியில் அவள் இதயம் நின்று துடித்தது. அவள் ஓவென அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அலறலில் சந்திரமதி ஓடி வந்தார்.

"என்னாச்சுமா.. என்னாச்சு அமுதி.. ஏன் அழுதுட்டு இருக்குற? சித்து எங்க? சித்து இன்னும் வரலயா?" என்று படபடத்தார்.

"அய்யோ அத்தை..‌ அவருக்கு.." கால் வந்ததை அவரிடம் சொல்லி கட்டிக் கொண்டு அழ, அவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

"ஒன்னுமில்ல அமுதி.‌. சித்துவுக்கு ஒன்னும் இருக்காது. புது நம்பர் தான? யாராவது நம்மளை ஏமாத்த கூட இப்படி செய்யலாம். அவன் வேலைல இதுலாம் சகஜம். இரு அந்த புது எண்ணுக்கு திரும்ப கூப்புடு" என்றார் பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு. எங்கே தானும் பயந்தால் அவளும் உடைந்து விடுவாள் என்று.

'ஒருவேளை அப்படியும் இருக்குமோ? அகிலன் ஏதாவது என்னை பயமுறுத்த செய்திருப்பானோ?' என்று எண்ணியவள் இருந்தும் விடாமல் அப்புது எண்ணிற்கு அழைத்தாள்.

"ஹ.. ஹாலோ.. இந்த நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. என்னனு சரியா கேட்குறதுக்குள்ள கால் கட்டாகிடுச்சு. நீங்க யாரு.. எங்க இருக்கேங்க"

"ஏமா நான் சொன்னது உண்மை தான்மா.. இங்க ஒருத்தருக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. அதுல கடைசியாக பேசுன நம்பர்ல உங்க நம்பர் தான் இருந்துச்சு. அவரோட போன்ல போன் பண்ண முடியல. போன் கீழே விழுந்து ஸ்கிரீன் டச் வேலை செய்யலமா. இப்போ தான் ** ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போயிருகாங்க. நீங்க யாருமா.. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போங்கமா" என்றார் அந்த எண்ணுக்கு சொந்தக்காரர்.

"அய்யோ அத்தை அவருக்கு தான் ஆக்ஸிடென்ட். அவருக்கு என்னாச்சுனு தெரியலியே.. எனக்கு பயமா இருக்கு. நீங்க பசங்களை பார்த்துக்கோங்க. நான் போறேன்" என்று ஓடியவளை, "அமுதி இரு.. இந்த நேரத்துல எப்படி தனியா போவ. வசந்த் கூப்டுறேன். அவனும் நீயும் போங்க" என்று வசந்த்திற்கு உடனே அழைத்துக் கூற அவனும் உடனே வந்துவிட்டான்.

"அம்மா என்னாச்சு.. வா அமுதி. நாம போய் பார்த்துட்டு வரலாம்" என்று இருவரும் அவசரமாக கிளம்பினர். பதினைந்து நிமிடத்தில் மருத்துவமனை வந்து விட்டனர்.

மருத்துவமனை உள்ளே வேகமாக நுழைந்து சித்தைப் பற்றி விசாரித்து அறை எண்ணை கேட்டு அந்த தளத்திற்கு ஓடினர். அதுவரை வேகமாக ஓடி வந்தவளுக்கு அதற்கு மேல் அறையைத் திறந்து உள்ளே செல்ல முடியவில்லை. அங்கயே நின்று விட்டாள். அப்போது தான் மருத்துவர் வெளியே வந்தார்.

"டாக்டர் சித்தார்த்..?"

"சார் நல்லா இருக்காரு ஒன்னும் பிரச்சினை இல்ல‌. சின்ன காயம் தான். உள்ளே போய் பார்க்கனும்னா பாருங்க" என்று சென்று விட்டார்.

"தேங்க்ஸ் டாக்டர்" என்று அறையை திறந்து உள்ளே சென்று, "டேய் என்னாடாச்சு. பார்த்து வரமாட்டியா?. இப்போ எப்டிடா இருக்கு?"

"ஒன்னுமில்லடா லைட்டா தான். கை மட்டும் கொஞ்சம் பிசங்கிடுச்சு. அப்புறம் சின்ன சின்னதா சிராய்ச்சிருக்கு. மூனு நாலு நாள்ல சரியாகிடும். மதியமும் சாப்பிடல. தலைவலி வேற. அதான் கொஞ்சம் மயங்கிட்டேன். அதான் ட்ரிப்ஸ் போட்டுருக்காங்க. இல்லன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பேன். ஆமா உனக்கு யாரு போன் பண்ணா? நீ எப்படி வந்த?"

"நானும் அமுதியும் தான்.." என்றவன் அதன்பின்னே தன்னுடன் வந்த அமுதியை எங்கே காணவில்லை என்று பின்னால் பார்த்தான். சித்துவும் அவன் பின்னால் பார்த்து விட்டு, "அமுதி வந்தாளா?.. எங்கே?" என்றான்.

அதன் பின்னே வெளியே சென்று அமுதி அதே இடத்தில் நிற்பதைக் கண்டான். அவளுக்கு மருத்துவர் சொன்னதோ வசந்த் உள்ளே சென்றதோ எதுவும் காதில் ஏறவேயில்லை. பித்து பிடித்தாற் போல் அறைக்கதவின் மேல் தான் கண்கள் நிலைக்குத்தி நின்றது.

"அமுதி என்னாச்சுமா.. உள்ளே வா. சித்து நல்லா இருக்கான்" என்று அழைக்கவும் சுயநினைவுக்கு வந்தவள், கால்கள் பின்னிக் கொண்டு நகர மறுத்தது. 'அவனுக்கு அடி ஏதாவது பலமாக இருக்குமோ' என்று கண்ணீர் வடித்தாள்.

மெதுவாக உள்ளே நுழைந்தவள் அவன் ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறுவதையும் மறுகை பிசிங்கி இருப்பதால் தோளிலிருந்து பெரிய கட்டாக போட்டிருந்தனர். அவ்வளவு தான் அதைப் பார்த்து ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.

"அய்யோ அமுதி ஏன்மா அழுற? ஒன்னுமில்லடா. சின்ன காயம் தான். ஐயம் ஆல்ரைட்" என்று அவன் பேசுவதை எல்லாம் எங்கே கேட்டாள். அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.

"அமுதி இதுலாம் பெரிய அடியா அவனுக்கு. இதை விட பெருசாலாம் பாத்துருக்கான். நீ அழாதமா" என்று வசந்தும் தன் பங்கிற்கு ஆறுதலளித்தான்.

சந்திரமதிக்கும் அழைத்து தகவல் சொன்ன பிறகே அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

ட்ரிப்ஸ் ஏறி முடிந்து டாக்டர் வந்து செக் பண்ணி அனுப்புவதற்குள் விடிந்து விட்டது. அவர்கள் வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் இரு காவல் அதிகாரிகள் வந்தனர். அமுதியை காரில் காத்திருக்கச் சொல்லி விட்டு அவர்களிடம் சித்து எதையோ சொல்லி, "எனக்கு இன்னைக்கே செக் பண்ணி சொல்லனும்" என்று கட்டளையிட்டுச் சென்றான்.

காரில் அமர்ந்திருந்த அமுதி காவல் அதிகாரிகள் எல்லாம் வந்திருப்பதைக் கண்டு, 'இவரைப் பார்க்க வந்திருக்காங்களா? இல்லை அத்தை சொன்ன மாதிரி இவருக்கு வேண்டாதவங்க இப்டி பண்டிருப்பாங்களா?' என்று பயம் தொற்றிக் கொள்ள அவனிடம் கேட்டும் விட்டாள். "அமுதி நீ பயப்படுற மாதிரிலாம் ஒன்னுமில்லமா. ரோட்டுல ஆக்ஸிடன்ட் ஆகிருக்கு. அதுனால சில பார்மாலிட்டிஸ்லாம் இருக்கு. யாரா இருந்தாலும் போலீஸ்க்கு கோஆப்ரேட் பண்ணி அவங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்லனும். நீ எதுக்கெடுத்தாலும் பயப்படாத" என்க, வண்டி வீட்டை வந்தடைந்தது.

வீட்டுக்குள் கையில் கட்டுடன் நுழைந்தவனைக் கண்டு கண்ணெல்லாம் கலங்கி விட்டது சந்திரமதிக்கு. தன் கணவனுக்குப் பின் தான் வாழ்வதற்கான ஒரே காரணம் அவன் மட்டுமே. அவனுக்கு ஒன்னென்றால் அவருள்ளம் தாங்குமா. அவர் அழுவதப் பார்த்து அமுதியும் கலங்க, இருவர் அழுவதையும் பார்த்து அப்போது தான் எழுந்து வந்த சரணும் ஹாசினியும் அழ ஆரம்பித்து விட்டனர்.

"சரண்.. அம்மு.. இங்க பாருங்கடா அப்பாக்கு ஒன்னுமில்ல.." என்று சமாதானப் படுத்த முயல அமுதியின் தேம்பலே அதிகமாய் இருந்தது.

"அமுதி.. மொத அழுறதை நிறுத்து. உன்னை பார்த்து தான் பசங்க அழுறாங்க. நீ எப்படி இருக்கியோ அது மாதிரி தான் பசங்களும் இருப்பாங்க. எதுக்கெடுத்தாலும் பயந்துட்டு இருந்தா பசங்களுக்கும் அதான் வரும்" என்ற சித்துவின் கத்தலில் அழுகையை முழங்கிக் கொண்டாள். மனைவி அழுவதை நிறுத்தச் சொன்னானோ இல்லை குழந்தைகள் அழுவதை காணச் சகியாமல் சொன்னானோ ஆனால் இருவரும் அழுவதை நிறுத்திவிட்டனர்.

அமுதி தான் அதன்பின் அவன் பக்கம் செல்லவே இல்லை. சரணும் ஹாசினியும் அவன் கையை தொட்டு தொட்டு பார்த்து வலிக்குதா டாடி என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வாரத்திற்கு வேலைக்கு எங்கும் செல்லக்கூடாது என்று சந்திரமதி உத்தரவு போட்டு விட்டார். வேறுவழியில்லாமல் வீட்டில் இருந்தான். வசந்தை மட்டும் அழைத்து சில வேலைகளை செய்ய சொல்லியிருந்தான்‌.

எதுவும் பேசாமல் உம்மென்று அறைக்குள் நுழைந்தவளை, "அம்முமா நீ ஏன் இப்போ இப்படி இருக்க?"

அவள் அப்போதும் மௌனமாகவே இருக்க, "உன்னைத்தான் கேட்குறேன்"

"நான் எதுக்கு சொல்லனும் உங்ககிட்ட? எனக்கு அழக்கூட உரிமையில்லையா?. அப்டிக் கத்துறேங்க"

"ஓ அதுக்கு தான் உம்முனு இருக்கியா.. அமுதி இங்க பாரு.. அழுதா எல்லாம் சரியாகிடுமா? உன்னைப் பார்த்து தான் ஹாசினியும் சரணும் அதிகமா அழுதாங்க.. சொன்னா கேட்கல.. அதான் கத்த வேண்டியதா போச்சு"

"அதுக்காக அப்டியா.."

"சரி சாரி.. ஆனா ஒன்னு சொல்றேன் அமுதி.. என் வேலையில இதுலாம் சகஜம். ஏன் இதுக்கு மேலயும் கூட ஆகலாம். எது வந்தாலும் ஏத்துக்க பழகிக்கோ. தைரியமா இரு அமுதி. ஏன் எனக்கே ஏதாவது ஆனாலும்.."

"என்னங்க ஏன் இப்டி சொல்றேங்க..‌ இப்படிலாம் சொல்லாதிங்க ப்ளீஸ்.."

"ப்ச் அமுதி இப்போ தான சொன்னேன். என் வேலையை பத்தி தான் உனக்கு தெரியுமேமா. போலீஸ்காரன் பொண்டாட்டினு சொன்னா மட்டும் போதுமா. அதுகேத்த மாதிரி தைரியமா இருக்க வேண்டாமா?"

"எனக்கு இந்த வீடும் இங்க இருக்குறவங்களும் தான் உலகம். அவங்களுக்கு ஒன்னுனா என் தைரியம்லாம் என்கிட்ட இருக்காதுங்க‌. தைரியமா இருக்க முயற்சி பண்றேன். ஆனா நீங்க இனிமே இதுமாதிரி பேசாதீங்க"

அவள் குணமே அதுதானே என்று அவனாலும் அதற்கு மேல் பேச முடியவில்லை.

அமுதிக்கு முழுநேர வேலையே அவனை கவனிப்பது என்றானது. அவள் கவனிப்பில் அவன் தான் திக்குமுக்காடிப் போனான்.

சித்து கொடுத்த வேலையை முடித்துவிட்டு அவனைக் காண வந்தான் வசந்த். அவன் வரும் போது அமுதி கொடுத்த சூப்பை உறிந்துக் கொண்டிருந்தான் சித்.

அவளை மேலும் கீழும் பார்த்த வசந்த், "இப்போ உனக்கு என்ன ஆச்சுனு இந்த கவனிப்பு. இதுலாம் கொஞ்சம் ஓவரா இல்ல"

"பொறாமைடா உனக்கு. உட்காரு. ஏன் என் தங்கச்சி உனக்கு சூப்லாம் வச்சு குடுத்ததே இல்லயா. அமுதி வசந்த் வந்திருக்கான்" என்று உள்ளே குரல் குடுத்து விட்டு வசந்த்திடம் பேசினான்.

"உன் தங்கச்சி என் ரத்தத்தை உறிஞ்சி சூப்பா குடிச்சா காணல. ஒன்னு இருக்கும் போதே முடியாது. இப்போ ரெண்டு. ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு சமைக்கவே அவளுக்கு திக்குமுக்காடிப் போது‌"

"கொஞ்சம் பசங்க பெரிசான சரியாகிடும்டா. இப்போ பத்திரமா பார்த்துக்கனும்ல"

"ம் ஆமாடா" என்று விட்டு அவனிடம் கொடுத்த வேலையை பற்றி பேசினான்.

"நான் விசாரிச்சதுல அவன் கொஞ்ச நாளைக்கு முன்னாடியே ரிலீஸ் ஆகிட்டான்டா. ஆனா இந்த அளவுக்கு போற அளவுக்கு பெரிய ஆளுலாம் இல்லடா. அவன்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லடா. நீ அவனைத்தான் பார்த்தியா? ஒருவேளை மயக்கத்துல வேற யாராவது பார்த்துட்டு அவன் போல இருந்துச்சா?"

பின் அமுதி வரவும் அப்புறம் ஆபிஸ்ல பேசலாம் இதைப்பத்தி வீட்ல வேண்டாம் என்று அப்பேச்சை அத்தோடு நிறுத்தினான்.

வசந்தைப் பார்த்து விட்டு "அப்பா.." என்று உள்ளிருந்து வந்தான் அர்விந்த். "நீ இங்க என்னடா பண்ற"

"நீங்க உங்க ப்ரண்டை பார்க்க வந்துருக்கேங்க. நான் என் பிரண்ட பாக்க வந்துருக்கேன்"

"என்ன வாய் பாருடா இவனுக்கு. இவனை விட அவ அராத்தா வருவா போலடா. இவன் பண்ற எல்லா சேட்டைக்கும் சிரிச்சிட்டு இருக்கா இப்பவே"

"அண்ணா குழந்தைங்க அப்டி தான்.. அவங்க பண்றதை இப்போ தான் ரசிக்க முடியும். பெரிசாயிட்டாங்கனா அப்புறம் ப்ரண்ட்ஸ் அவட்டிங்னு வெளில போயிடுவாங்க. நம்ம கூட உட்கார்ந்து பேச மாட்டாங்களானு நாம தான் ஏங்கிட்டு இருக்கனும். குழந்தைங்க இருந்தாலே வீடே கலகலப்பாக இருக்கும்"

அவளின் பேச்சிலே அவள் குழந்தைகளின் மேல் வைக்கும் பாசம் நன்றாக தெரிந்தது.

"என் செல்ல அத்தை.." என்று அமுதியின் மடிமீது ஏறி அமர்ந்து கொண்டான்.

"அப்போ இவளையும் சேர்த்து வச்சுக்கோங்க அமுதி.." என்று சஞ்சனைவை தூக்கிக் கொண்டு வந்தாள் ஆனந்தி.

"ரெண்டு பேரையும் இங்க தள்ளிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க மேடம்" என்றான் வச்ந்த்.

"ம்.." என்று ஆனந்தி முறைக்க, "நாம வேணா நெக்ஸ்ட் பேபி ட்ரை பண்ணலாமா செல்லம்?" என்று அவள் காதருகில் குனிந்து சொல்ல, "ம்.. ஆமா ரெண்டவே நீ கூட இருந்து எதுவும் பார்த்துக்குறது இல்ல. இதுல மூனாவதா? நான் என்ன புள்ளைப் பெக்குற மெஷினாடா" என்று அவன் தொடையில் கிள்ள, "ம்மாஆஆ" என்ற அவனின் கத்தலில் எல்லாரின் பார்வையும் அவனிடம் திரும்பியது.

"ம்மா உங்க சண்டையெல்லாம் வீட்ல போய் வச்சுக்க வேண்டியது தான. இங்க வச்சு ஏன்மா அப்பாவை அடிக்குற. சே என் மானமே போகுது" என்று பெரிய மனுஷன் போல் அர்விந்த் அவர்கள் இருவரின் மானத்தை வாங்க, அங்கு சிரிப்பலை எழுந்தது.

'இருக்குற கொஞ்சநஞ்ச மானத்தையும் உன் புள்ள வாங்கிடான்டி' என்று ஆனந்தியை முறைத்தான் வசந்த்.


தொடரும்..