• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 51

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 51

தூங்கியவனின் விழிகளுக்குள், சுற்றிலும் கும்மிருட்டாய் ஒரு காடு, நடுவில் அமுதி திக்குத் தெரியாமல் நிற்கிறாள். அவளைச் சுற்றிலும் நரிகள் கூட்டம்.. எப்போது வேண்டுமானாலும் பாய்வதற்கு தயாராய் இருந்தது. நரிகள் கத்திக் கொண்டேயிருக்க அமுதி பயத்தில் விழிகள் இரண்டையும் மூடி சித்து என்று கத்த, அந்நரிகள் அவள் மீது பாய்ந்தது. 'அமுதிஈஈ...' என்று கனவில் இருந்து அலறி எழுந்தான்.

முகமெல்லாம் வியர்த்து கொட்டியது. மனதும் உடலும் நடுங்கியது. மணியைப் பார்த்தால் ஐந்து என்று காட்டியது. 'ஏன் இப்படி ஒரு கனவு. இந்த கனவுக்கும் அமுதி கடத்தலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?. அமுதிக்கு ஏதாவது ஆகிருக்குமா? இல்ல இருக்காது. என்னையும் பசங்களையும் விட்டு அவளால எங்கேயும் போக முடியாது. அமுதி நீ வேனும்டி. உன்கூட நிறைய நாள் வாழனும். ஏற்கனவே உன்னை இழந்து நீ அனுபவிச்சது போதும். இதுக்கு மேல உனக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டேன்'.

அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. அவள் நினைவுகள் வாட்டி வதைத்தது.

அங்கிருந்த அவர்கள் கல்யாண ஆல்பத்தை எடுத்துப் பார்த்தான். இன்னும் அவள் பார்க்கவில்லை. அன்று அத்தையிடம் காட்டிவிட்டு வைத்தது. இருவரும் சேர்ந்து பார்க்கலாம் என்று சொன்னவள், வேலை இருந்ததால் இன்னும் நேரம் ஒதுக்கி அமர்ந்து பார்க்கவில்லை. ஆல்பத்திலிருந்த அமுதிக்கு கண்களில் ஒளியில்லை. உணர்வில்லாமல் அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் மின்னல் வெட்டும் விழியசைவில் தொலைந்து போகாமல் இருக்க முடியுமா?. அவளுடன் அந்த அறையில் சந்தோஷமாய் இருந்த நாட்கள் வந்து அவனை வதைக்க கண்களை இறுக மூடி தன்னை சமன்செய்தான்.

ஆல்பத்தில் இருந்த அமுதிக்கும் இப்போது இருப்பவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். ஆம் அதில் அவனுக்கு பெருமையே. அவளை நன்றாக வைத்திருக்கிறோம் என்று சிறு கர்வமும் கூட. 'ஆனால் தொலைந்த பொக்கிஷம் மீண்டும் கைக்கு கிடைத்தும் இப்போது முழுதாய் தொலைத்து விட்டு நிற்கிறேனே. வர்றேன் அம்முமா.. சீக்கிரம் வர்றேன். எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வர்றேன்' என்று அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல், சத்தமில்லாமல் சந்திரமதி அறைக்குச் சென்று சரணையும் ஹாசினியையும் கண்ணுக்குள் நிரப்பி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சென்னைக்கு வெளியே ஒரு காட்டுப் பகுதியில் வெகுநாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஒரு கெமிக்கல் கம்பெனி. அங்கங்கே துருப்பிடித்த இரும்புக் கம்பிகளும் கெமிக்கலே சோதிக்கும் உடைந்த குடுவைகளும் கிடந்தது. உள்ளே இருந்தால் இரவா பகலா என்று அறிய முடியாத அளவுக்கு இருந்த அந்த இருட்டு அறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தாள் அமுதி..

நேற்றிலிருந்து உண்ணாமல் இருந்த பசி, கட்டிப்போட்டு வைத்ததால் உண்டான உடல் வலி, அனைத்தையும் மீறி மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். நேற்றைய நினைவுகள் வரிசையாய் வர, மீண்டும் அழுகை வந்தது. ஆனால் அழுவதற்கு கூட உடலில் தெம்பில்லை. அவள் முன் வந்து நின்றான் அவன்.

"டேய் ஏன்டா என்னை கடத்துன‌?. உனக்கு என்னடா வேனும்? ஏற்கனவே வாங்குனது பத்தாதா?"

"என்னடி ஓவரா துள்ளுற. உன் புருஷன் இருக்குற தைரியமா. அவனால இந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாது. அப்டியே கண்டுபிடிச்சாலும் நீ கைமாறி போய் எந்த ஸ்டேட்ல இருப்பனே சொல்ல முடியாது. ஹாஹா.. என்ன புரியலையா?. உன்னை என் தேவைக்கு பயன்படுத்திட்டு விற்கப் போறேன். ஏதோ பத்தினி மாதிரி என்கிட்ட வேஷம் போட்டுட்டு நீயும் அவனும் சேர்ந்து என்னைய ஜெயிலுக்கு அனுப்பிட்டு நீ அவன் கூட ஜோடி போட்டுக்கிட்டு அலைவ. நாங்களும் வாழ்த்திட்டு போனுமோ" என்றவனின் கண்ணில் அவளை அழித்தே தீருவேன் என்கிற வெறி.

"சீ.. நீயெல்லாம் மனுஷனா? உனக்கு வெட்கமா இல்ல. வெளிய வந்தாவது திருந்தாம மேலும் மேலும் தப்பு பண்ணிட்டு இருக்க நீ. என் புருஷன் வருவாருடா. அவர் கைல பட்ட நீ உயிரோட இருக்க மாட்ட"

"ஹாஹா.. உன் புருஷன் என்னை.. அவன் வர்ற வரைக்கும் உன்னை விட்டு வச்சா தான. உன்கிட்ட இப்பவே தேவையை தீர்த்துக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா நீ உன் புருஷன் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சுருக்குறதால.. ஒன்னு பண்ணலாம். உன் புருஷன் உன்னைத் தேடி தேடி நாயா அலைஞ்சு திரிஞ்சு கதறுறதை பார்த்து சந்தோஷ பட்டுட்டு அப்புறம் உன்னை கவனிக்கலாம்னு இருக்கேன்‌. அதுவரைக்கும் ப்ரியா இருந்துக்கோ" என்று சென்று விட்டான் அவன்.

'சித்து எங்க இருக்கேங்க.‌. சீக்கிரம் வந்து கூப்டு போங்க. இந்த வெறிபுடுச்ச நாயை பார்த்தாலே பயமா இருக்கு. உங்களையும் பசங்களையும் பார்க்கனும். கடவுளே இப்போ தான் வாழ்க்கையே அனுபவிக்க ஆரம்பிச்சுருக்கேன். அதுக்குள்ள ஏன் இந்த கொடுமை?. பாவம் அவரு எங்கெங்கலாம் தேடி அலையுறாரோ' என்று புலம்பினாலும் சித்து வந்து விடுவான் என்ற நம்பிக்கையை மட்டும் விடாமல் இருந்தாள்.

அந்த கார் செல்லும் வழியெங்கும் உள்ள சிசிடிவி காணொளிகளை வாங்கி அதன் வழியை தொடர்ந்து சென்று கொண்டிருந்தான் சித். குறிப்பிட்ட இடம் வரை மட்டுமே அக்கார் காணொளியில் தெரிந்தது. அதன் பின் எங்கே சென்றது என்றே தெரியவில்லை. எங்கே சென்றது என்று தேடித் தேடி அது இருக்குமிடமும் வந்து விட்டான். அது ஒரு ஒர்க் ஷாப்பில் இருந்தது. உள்ளே சென்று அங்கு வேலை செய்பவனை இரண்டு அடி விட்டதில் சொல்லி விட்டான்.

"சார். சார்.. எனக்கு ஒன்னும் தெரியாது சார். ஒருத்தரு வந்து எனக்கு ஒரு நாள் வண்டி வாடகைக்கு வேனும்னு கேட்டாரு. நானும் காசுக்கு ஆசைப்பட்டு செர்வீஸ்க்கு வந்த ஒரு காரைக் குடுத்தேன். அவரு யாரு என்னனுலாம் தெரியாது சார். என்னை விட்டுடுங்க சார். இனிமே இப்படி பண்ண மாட்டேன்"

"ஏன்டா காசுக்காக வேற ஒருத்தன் காரை நீ வாடகைக்கு குடுப்பியா?. ஆமா இந்த கார்ல இருக்குற நம்பர் ஒரிஜினலா"

"இ.. இல்ல சார். இதோட நம்பர் ப்ளேட் எடுத்து உள்ள வச்சுருக்கேன்"

"ஏன்டா நாயே.. இதுக்கு பேரு திருட்டுத்தனம் இல்லாம என்னது. நீயும் அவன் கூட உடந்தையா? " என்று ஓங்கி ஒன்று விட்டதில் கீழே விழுந்து எழுந்தான்.

"அய்யோ சார் எனக்கு எதுவும் தெரியாது. அவன் யாருனே தெரியாது. நான் அவனை இந்த ஏரியாவுல கூட பார்த்தது இல்ல. என்னை மன்னிச்சுருங்க சார்" என்று கதறினான்.

உடனே வசந்துக்கு அழைத்தான். "டேய் காலையிலே எங்க போயிட்ட?" என்றான் வச்ந்த்.

"வசந்த் நான் சென்னை அவுட்டர்ல இந்த ஏரியாவுல இருக்கேன்டா. முதல்ல நான் சொன்னவன் போட்டோ இருந்தா கேஸ் பைல்ல செக் பண்ணி அனுப்புடா அர்ஜன்ட்" என்றான். அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் கேட்டவன் போட்டோ அவன் மொபைலில் இருந்தது. அதை டவுன்லோட் செய்து பார்த்த சித்துவின் கண்கள் சிவந்தது.

"உன்கிட்ட கார் வாங்கிட்டுப் போனது. இவனா பாரு" என்று மொபைலைக் காண்பித்தான்.

"இவன் தான்.. இவன் தான் சார்"

சித்துவுக்கு ரத்தம் கொதித்தது. 'அன்னைக்கு என்னை ஆக்ஸிடன்ட் பண்ணதும் அவன் தான். அது ஏதோ எதேட்சையா நடந்ததுனு அசால்டாக விட்டது எவ்வளவு தப்பா போச்சு. இன்னைக்கு என் உயிரையே தொலைச்சுட்டு நிக்குறேன். டேய் உன்னை எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சு உன் சாவு என் கைல தான்டா' என்று சூளுரைத்துக் கொண்டான்.

"சார்.. அவன் இந்த நம்பர்ல இருந்து தான் எனக்கு கால் பண்ணான். இதை வச்சு வேணா தேடி பாருங்க சார்" என்கவும், அவனிடம் போன் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு, "உன் மேலயும் சந்தேகம் இருக்கு. அவன் கிடைக்குற வரை எங்க கஷ்டடில தான் இருக்கனும். ஊரை விட்டு எங்கேயும் போக முடியாது. எப்பக் கூப்டாலும் வந்து சொல்லனும்"

"ம் சரிங்க சார்" என்றான் பயத்தோடு.

வசந்துக்கு அழைத்து, "வச்ந்த் சந்தேகப் பட்டது சரியாகப் போச்சுடா. அந்த நாய் தான்டா அமுதியை கடத்திருக்கான். அவன் நம்பர் அனுப்புறேன். அதை டிராக் பண்ண சொல்லு. அன்னைக்கு அவன் வொய்ப் வந்தாங்கள. அவங்க அட்ரஸ் வாங்கி வச்சோம்ல. அங்க போய் விசாரிச்சுட்டு வா. அந்த நம்பர டிராக் பண்ணி அவன தேடிப் போறேன்"

நண்பர்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பம்பரமாய் சுழன்று தேடிக் கொண்டிருந்தனர். கூடப் பிறக்காத தங்கை உறவாகிப் போனவளைத் தேடி வசந்தும் அழைந்தான்‌.

அந்த நம்பரை டிராக் செய்து அந்த நம்பர் இருக்கும் இடம் அவன் இருக்குமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் காட்டியது. வண்டியைக் கிளப்பிக் கொண்டு அங்கு விரைந்தான். பாதி தூரம் சென்றதும் வசந்த்திடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று , "என்னடா அங்க போனியா?"

"ஆமா சித்து. அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு அப்புறம் அவனை கண்டுக்கிறது இல்ல போல. ஜெயில்ல இருக்கும் போதும் போயி பார்க்கலனு சொன்னாங்க. ரிலீஸ் ஆகி நேரா வீட்டுக்கு தான் வந்தானாம். ஆனா அவங்க வீட்ல சேர்த்துக்கலனு சொன்னாங்க சித்து‌. அக்கம்பக்கத்துலயும் விசாரிச்சுட்டேன். அவங்க உண்மையை தான் சொல்றாங்க"

"சரி வசந்த் நீ நேரா இங்க வா" என்று விட்டு விரைந்தான் அவ்விடத்திற்கு.

அது ஒரு ஒயின் ஷாப். அங்கு மூச்சு முட்டும் அளவுக்கு மதுவை அருந்திக் கொண்டிருந்தான் அவன். கூடவே அவன் நண்பனும். "அந்த அமுதினியை சும்மா விடமாட்டேன்டா ரகு. என் வாழ்க்கையே போச்சு. என் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாரும் என்னைய வெறுத்து ஒதுக்கிட்டாங்க. குடும்பம் இல்ல வேலை இல்ல. போனா போகட்டும்.. அவங்க இல்லனா என்ன.. இப்போ நான் தனிக்காட்டு ராஜா. கேட்க யாருமே இல்ல. ஆனா இதுக்கு காரணமான அந்த அமுதியையும் அவ புருஷனையும் சும்மா விட மாட்டேன். என்னை உள்ளே தள்ளிட்டு அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஜாலியா இருப்பாங்களா. விட மாட்டேன்" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வன்மம்.

"நீ பண்றது கரெக்டு தான்டா. அன்னைக்கு தான் அவளை மிஸ் பண்ணிட்டோம். இப்போ விடக்கூடாது" என்று ஒத்து ஊதினான் அவன் நண்பன் ரகு. கூடா நட்பு கேடில் தான் முடியும். உடன் இருப்பவன் நல்லவனாய் இருந்தாலல்லவா அவன் திருந்துவான். கூடக்கொஞ்சம் தவறு செய்ய தூண்டினால் அவன் எங்கே திருந்தப் போகிறான்.

"நீ கவலப்படாதடா ரகு. அன்னைக்கு விட்டத இன்னைக்கு முடிச்சிடலாம். முன்னவிட இப்போ ஆளு பார்க்க செமயா இருக்கா" என்று இருவரும் வில்லத்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அந்த இடத்தை நெருங்கிய சித்து, வேகமாய் உள்ளே வந்தான். உள்ளே செல்லவே நாற்றம் குடலை பிரட்டியது. 'எப்படித்தான் இதைக் குடிக்கிறாங்களோ' என்று நினைத்துக் கொண்டே ஒவ்வொரு டேபிளாக தேடி கடைசியில் அவனைக் கண்டும் பிடித்து விட்டான். அவனை அங்கயே வெறி தீரும் வரை அடித்துத் துவைத்தான். போதையில் இருந்தவனுக்கு அடித்த போதையெல்லாம் இறங்கியது.

சித்துவைக் கண்டு அதிர்ந்து பின் சர்வ சாதாரணமாக, "சார் என்ன ஏன் சார் அடிக்குறேங்க?. நீங்க பாட்டுக்கு வந்தேங்க அடிக்குறேங்க. நாங்க என்ன தப்பு செஞ்சோம்"

"ஏன்டா பொறுக்கி நாயே.. என்ன தப்பு செஞ்சோம்னா கேட்குற. அமுதி எங்கடா? அமுதியை எங்க வச்சுருக்குற?"

"அமுதியா யாரு சார் அது?" என்று தெரியாதது போல் கேட்க, அவ்வளவு தான் இருக்கிற கோவம் அத்தனையும் அவனிடம் காண்பித்தான் சித்து. இரத்தம் சொட்ட சொட்ட நின்றவனை பார்க்க இரக்கம் வருவதற்கு பதில் இன்னும் கோவமே அதிகரித்தது.

யார் அவன்?

தொடரும்..