அத்தியாயம் 52
அங்கிருந்த கூட்டம் மொத்தமும் அதிர்ந்து அவர்களை சுற்றி நிற்க, பின்னந்தலையை அழுந்தக் கோதி தன்னை சமன் செய்தான் சித்.
அதற்குள் வசந்தும் அங்கு வந்துவிட்டான். "சித்து என்னாச்சுடா. இவனை இழுத்துட்டு வா. இவன் தானு தெரிஞ்சுருச்சுல"
சித்து வசந்த்திடம் தலையை இடவலமாய் ஆட்டி கண்ஜாடை காட்டி விட்டு, "இவன் இல்ல விடு.. இவன் போகட்டும்".
அதுவரை சித்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன், "சார்.. எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை சார். நம்புங்க. என்னைய இப்டி போட்டு அடிச்சதுக்கே நீங்க எனக்கு பதில் சொல்லியாகனும். யாரும் கிடைக்கலனா ஒரு அப்பாவிய பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேங்களா.. டேய் ரகு வாடா போலாம்" என்று அங்கிருந்து நகர்ந்தான் மோகன்.
அவன் அமுதி ஆபிஸ் சென்று கொண்டிருந்த போது அவளை கடத்தி தவறாக நடந்து கொண்டானே மோகன் என்பவன், சித்து கூட அவன் மனைவியை அழைத்துக் கண்டித்து ஜெயிலில் தள்ளினானே அவனே தான். அமுதியும் சித்துவால் தான் அவன் ஜெயிலுக்குச் சென்று குடும்பத்தை இழந்து நிற்கிறோம் என்று அவளை பழிவாங்க நினைக்கிறான். ஏதோ அவன் எந்த தவறும் செய்யாமல் அவனை ஜெயிலுக்கு அனுப்பியது போல்.
'நீ அவ்வளவு சீக்கிரம் அவளை கட்டுபிடிக்க விட்டுருவேனா. இனிமே எனக்கு குடும்பமா புள்ளை குட்டியா.. எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. ஆனா அவளையும் உன்னையும் சும்மா விட மாட்டேன்' என்று திரும்பி பார்த்துக் கொண்டே போனான்.
"டேய் அவன் பார்க்குற பார்வைய பாருடா எவ்வளவு வன்மம் இருக்குனு?. அதை விட அந்தக் காரை அவன் தான் வாடகைக்கு எடுத்தானு கன்பார்ம் பண்ணிட்டேல. அப்புறம் என்னடா? கைல கிடச்சும் போகச் சொல்லிட்டு இருக்குற? நீ என்ன நினைக்குறேனே எனக்கு புரியல. இவனை அப்படியே இழுத்துட்டுப் போயி நம்ம பாஷைல விசாரிச்சா தன்னால உண்மையை சொல்லிடுவான்"
"இழுத்துட்டுப் போயி?.. இழுத்துட்டுப் போயி அடிச்சா உண்மையை சொல்லிடுவானு நினைக்கியா? குடும்பம் பொண்டாட்டி புள்ளனு இருக்குறப்பயே பயமே இல்லாம ஒரு பொண்ணை சீரழிக்க நினைச்சவன். இப்போ எதுவுமே இல்ல. தன்னை அழிச்சாவது பழியை தீர்த்துக்கனும்னு தான் நினைப்பான். அவன் கண்ணுல அவ்வளவு வெறிடா. நான் கஷ்டப்படுறதை பார்த்து அவன் கண்ணுல சந்தோஷப்படுறதை பார்த்தேன்"
"பின்ன எப்டிடா அமுதிய கண்டுபிடிக்குறது?"
"நம்ம ஆளுங்கள யாராவது மப்டில இவனை பாலோ பண்ண சொல்லு" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த ஏரியா காவல் அதிகாரி ஒருவர் வந்தார்.
"சார் நீங்க குடுத்த கார் போட்டோ, நம்பர் வச்சு அது ஓர்க் ஷாப் இருக்குற ஏரியாவுக்கு போறதுக்கு முன்னாடி எங்க நின்னுருக்குனு பார்த்ததுல இந்த இடத்துல ஒரு அஞ்சு நிமிஷம் நின்னுருக்கு பாருங்க சார். அந்த நேரத்துல இந்த இடத்துல ஆள் நடமாட்டமும் இல்ல. அது பக்கத்துல ஒரு கார் வந்து நின்னு டோர் ஓப்பன் ஆகுது. மே பி அந்த இடத்துல தான் ஆள மாத்திருக்கலாம் சார்.. இந்த காரோட நம்பர் அன்ட் அது போன ஏரியாவோட அட்ரஸ். புல்லா சிசிடிவி புட்டேஜ் இல்ல சார். ஆனா அந்த ஏரியாவுல பக்கத்துல ஏதாவது சந்தேகப்படும்படியா ஏதாவது இடம் இருந்தா கண்டுபிடிச்சுடலாம் சார்"
"இது போதும் சித்து கண்டுபிடிக்க. தேங்க்ஸ் அருண். நீங்க போங்க. ஏதாவது கூடுதல் தகவல் கிடைச்சா சொல்லுங்க" என்று அவனை அனுப்பி விட்டு வசந்தும் சித்துவும் அந்த இடத்திற்க்கு விரைந்தனர்.
ஏற்கனவே அந்த ஏரியா அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் குடுத்ததால் அவர்கள் பங்கிற்கும் தேடியதில் அந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டனர்.
அதற்குள் மோகன், "இந்த இடம் வேண்டாம். அந்த எசிபி மோப்பம் பிடிச்சுட்டான். இந்நேரம் இந்த இடத்தைக் கண்டுபிடிச்சுருந்தாலும் கண்டுபிடிச்சுருப்பான். எல்லாரும் கிளம்புங்க" என்று அமுதியை இழுத்துக் கொண்டு வெளியே வரும் நேரம் புயலென ருத்ரமூர்த்தியாய் உள்ளே நுழைந்தான் சித்தார்த்.
அமுதியின் கைகள் மோகன் கையில் சிக்கிக் கொண்டு நிற்க கூட முடியாமல் அழுது கொண்டிருந்தாள்.
அமுதியின் நிலையை கண்டு சித்துவின் நாடி நரம்பெல்லாம் விடைத்து அவர்களைக் கொல்லும் அளவிற்கு கோவம் வந்தது.
சித்துவைக் கண்ட பின்னே அமுதிக்கு உயிர் வந்தது.
அங்கிருந்த ரவுடிகளையும் மோகனையும் அடித்து துவைத்து அந்த ஏரியா போலிஸ்வுடன் அனுப்பி விட்டு, அமுதியின் கை கால்களில் உள்ள கட்டை அவிழ்த்து விட்டான். "அமுதி.." என்று இறுக அணைத்துக் கொண்டான்.
அந்த இடமும் அந்த இடத்தில் இருந்து வரும் நாற்றமும் வேறு தாக்க, குடலை புரட்டிக் கொண்டு வந்தது.. ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். இரண்டு நாட்களாய் உண்ணாத பசி வேறு தன்னிச்சையாய் அவள் கைகள் வயிற்றில் அரணாய் மாற அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
"அமுதிமா.. என்னாச்சு.."
"சித்து நீ அமுதிய ஹாஸ்பிட்டல் கூப்டு போ. நான் இங்க எல்லாம் பார்த்து முடிஞ்சுட்டு வர்றேன்"
அவளை கைகளில் ஏந்திக் கொண்டு ஓடினான் மருத்துவமனைக்கு.
உள்ளே அவளை சோதித்து கொண்டிருந்தார் மருத்துவர். சித்துவால் வெளியே ஒரு நிமிடம் கூட நிற்க முடியவில்லை. 'எப்போதடா மருத்துவர் வெளியே வருவார்' என்று குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
மருத்துவர் வெளியே வந்ததும் தான் தாமதம், "டாக்டர் அமுதி இப்போ எப்படி இருக்கா? அவளுக்கு ஒன்னுமில்லயே?"
"சார்.. அவங்க இப்போ ஓகே. ரெண்டு நாளா சாப்டாம உடம்பு டீஹைட்ரேட் ஆகிருக்கு. டிரிப்ஸ் போட்டுருக்கு. இன்னொரு டெஸ்க்கு சேம்பிள் கொடுத்துருக்கு. வேற ஒன்னும் பிரச்சனையில்லை. உள்ள போய் பார்க்கனும்னா பாருங்க"
உள்ளே வாடிய கொடியாய் கிடந்தாள் அமுதி. ஒரு கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மயக்கத்தில் இருந்தாள். அவள் அருகிலே சேரை இழுத்துப் போட்டு மெதுவாய் அமர்ந்து தலை வருடி நெற்றியில் இதழ் பதித்தான். சிறிது நேரத்தில் அவள் கைகள் பயத்தில் நடுங்கியது. 'சித்து.. சித்து.. சீக்கிரம் வாங்க' என்று புலம்பினாள்.
"அம்முமா இங்கதான் டா இருக்கேன். நீ பயப்படாத உன் பக்கத்துல தான் இருக்கேன்" என்று அவள் டிரிப்ஸ் ஏறிய கையை மெதுவாய் அழுத்தம் கொடுத்து அமைதிப் படுத்தினான். 'எவ்வளவு பயந்திருக்கிறாள். அவனை சும்மாவே விடக்கூடாது. காலத்துக்கும் இதை நினைச்சு வருந்துற மாதிரி பண்ணல' என்று மோகனை நினைத்து ரௌத்திரம் ஆனான்.
தொலைந்த பொக்கிஷம் கையில் கிடைத்து விட்ட நிம்மதியில், அவள் கையை பிடித்தபிடியே பெட்டில் சாய்ந்து தூங்கி விட்டான். இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த அமுதி, அசதியாய் தன் கையை பிடித்தபடி உறங்கிக் கொண்டிருப்பவனை தான் கண்டாள். தொண்டை வறண்டு போயிருக்க மெதுவாக செருமினாள்.
அதில் விழித்தவன், "என்னாச்சு அமுதி? ஏதாவது வேனுமா?" என்று பதற, "ம்.. தண்ணி" என்றாள்.
மெதுவாய் அவளை தூக்கி அமர வைத்து தண்ணியை புகட்டினான். அவள் அருகில் அமர்ந்து, "ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா அமுதி.. பயந்துட்டேன்டி. எங்க உன்னை தொலைச்சுருவேனோனு" என்று அவளை இறுக அணைத்து அவள் இதழில் உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன் இதழ் வழியே.
"க்கும்.." என்ற செருமலில் இருவரும் பிரிந்தனர்.
"இதெல்லாம் வீட்ல போய் வச்சுக்கோங்க எசிபி சார். இது பப்ளிக் ப்ளேஸ்"
அமுதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. "உனக்கு எங்கடா எரியுது?. கரடி மாதிரி உன்னை யாருடா வரச்சொன்னது? மொத நான் கொடுத்த வேலைய முடிச்சியா இல்லயா?"
"அடப்பாவி பயலே.. ஏன்டா சொல்லமாட்ட.. காலையிலிருந்து சாப்பாடாம கொள்ளாம நானும் தான்டா உன்கூட அலைஞ்சுட்டு இருக்கேன். இப்டியே போச்சுனா அமுதியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு நான் தான் இங்க படுக்கனும். அப்புறம் நீதான் எனக்கும் இங்க உட்கார்ந்து காவல் இருக்கனும். ஒழுங்கா வந்து ஏதாவது வாங்கிக் கொடு. கொலபசில இருக்கேன்"
"சரி சரி போலாம். மொத நான் சொன்ன வேலை என்ன ஆச்சு?"
"அய்யா ஏசிபி சார் அவர்களே.. நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சாச்சு. இப்ப சாப்பிட போலாங்களா".
"ம் போலாம்"
அப்போது மருத்துவர் உள்ளே நுழைந்தார். "அமுதி எப்படி இருக்கேங்க"
"ம் ஓகே டாக்டர்"
"ம் குட். கொஞ்சம் வீக்கா இருக்கேங்க. டேப்ளட்ஸ்லாம் எழுதிருக்கேன். அதை சாப்பிடுங்க. இந்த மாதிரி நேரத்துல நல்லா சாப்பிடனும். நாப்பத்தி ஐந்து நாள் கருங்குறதால ரொம்ப கேர்புலா இருக்கனும். கங்கிராட்ஸ் சித்தார்த் சார். உங்க வொய்ப்அ கொஞ்சம் கேர் பண்ணி பார்த்துக்கோங்க " என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அமுதியின் கைகள் ஆசையாய் வயிற்றைத் தடவி, கண்கள் சித்தைக் காண, அவனோ 'என்ன சொல்லிட்டுப் போறாங்க. அப்டினா அமுதி ப்ரக்னன்ட் ஆ?' என்று அதிர்ச்சியில் இருந்தான்.
வச்ந்தோ, 'அடப்பாவி இது எப்போடா?. இப்போ தான் முதல் ஸ்டெப் வச்சுருக்கனு நெனச்சா நீ என்னடானா எங்கயோ போயிட்டியேடா' என்று ஆவென வாயைப் பிளந்து கொண்டிருந்தான்.
சித்துவின் முகத்தில் சந்தோஷத்திற்கு பதிலாக அதிர்ச்சியைக் கண்ட அமுதிக்கு ஏன் என்ற கேள்வி எழுந்தது. வசந்துக்கும் ஏன் இப்படி இருக்கிறான் என்ற சந்தேகமே. ஆனால் இங்கு வைத்து கேட்க வேண்டாம். ஏற்கனவே சந்திரமதியும் குழந்தைகளும் பயந்து கொண்டு இருப்பதால் வீட்டிற்குச் சென்று கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.
வீட்டிற்கு வந்து அமுதியை விட்டு விட்டு, "எனக்கு வேலை இருக்கிறது" என்று சென்று விட்டான்.
சித்துவுடனே வசந்தும் சென்றான். அந்த மோகனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று இருவரும் கிளம்ப அதற்குள் அவர்களே எதிர்பாராத சம்பவம் நடந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது. அவனை கைது செய்த ஏரியாவில் இருந்து இவர்கள் ஏரியா காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் வழியில் மோகன் தப்பிச் செல்ல முயலும் போது லாரியில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக செய்தி வரவும் அங்கு சென்றனர்.
மருத்துவர் வந்து, அவனுக்கு காலில் பலத்த அடிபட்டு ரத்தம் நிறைய வெளியேறியதால் கால்களை எடுக்க வேண்டிய நிலை என்றனர். கடவுளே அவனுக்கு தகுந்த தண்டனை அளித்து விட்டார் என்று நினைத்து விட்டு, கான்ஸ்டேபிளிடம் இருந்து பார்மாலிட்டிஸை முடித்து விட்டு வருமாறு சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.
நேராக வீட்டுக்கு செல்லாமல் அவன் அலுவலகம் தான் சென்றான். அவன் முகத்திலும் நடவடிக்கையிலும் நிறைய குழப்ப ரேகைகளை அறிந்த வசந்த், "டேய் என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க நீ? மொத ட்ரீட் வைடா"
"நான் என்ன நினைக்கிறேன்? எதுக்கு ட்ரீட்"
"எதுக்கா? மனுஷனாடா நீ. எவ்ளோ சந்தோஷமான விஷயத்தை டாக்டர் சொன்னாரு. ஆமா மொத எப்படா சிஸ்டர் கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்ச?. எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்துட்டேங்க. உன் வாழ்க்கை நல்லா இருந்தா சந்தோஷம்டா"
"நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான இருக்கோம்"
"டேய் அவ்ளோ தான் சொல்லிட்டேனே. என்ன நக்கலா? வாயில கை வச்சா கடிக்கத் தெரியாத சின்ன பாப்பா நீ. உனக்கு விளக்கமா சொல்லனுமா? ஆமா நீ எதுக்கு இப்படி இருக்க.. உன் முகத்துல சந்தோஷமே இல்லயேடா"
"ப்ச்.." என்று கண்களை மூடி கையைத் தலைக்குத் தாங்கி சேரில் தலை சாய்ந்தவனின் செவிகளுக்குள் அனு சொன்ன வார்த்தைகள் வந்து விழுந்தது. 'அது உண்மையானால்..' என்று நினைக்கவே இதயத்தை ரெண்டாய் கிழிப்பது போல் வலித்தது.
"நேத்து முழுக்க சிஸ்டரை கானும்னு ரோடு ரோடா நாயா பேயா அலைஞ்சு கண்டுபிடிச்சு வீட்டுக்கு வந்தா.. நீ இன்னைக்கு முழுக்க சிஸ்டரை விட்டு வர மாட்டேன்னு நினைச்சேன். நீ என்னடானா அங்க விட்டுட்டு இங்க வந்து அக்கடானு உட்கார்ந்துருக்க. நீ மொத கிளம்பு வீட்டுக்கு. சிஸ்டர் கிட்ட பேசு மொத"
"ம்ம்.."
"ம்னா கிளம்புடா"
"எனக்கு விருப்பம் இல்லடா. எனக்கு சரணும் ஹாசினியும் மட்டும் போதும்டா. இன்னொரு குழந்தை வேண்டாம்.." என்ற சித்தின் வார்த்தைகளில் அதிர்ந்தான் வசந்த்.
தொடரும்..