• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விரும்பியே தாெலைக்கிறேன் உன்னில் என்னை

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
768
148
93
Jaffna
ரமா

விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 11

வீட்டிற்கு வந்த கவிநிலாவை முதலில் முறைத்தவன், பின்பு அவளுக்கு வழிவிட்டு நின்றான்.
அவனை பார்த்து, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேலி செய்தவாறே உள்ளே நுழைந்தாள்.

அவள் செயலில் கோபம் வந்தாலும், அதை அம்முவுக்காக மறைத்துக் கொண்டான். மருத்துவமனையிலிருந்த வந்த மறு வாரத்திலே, அவனின் ஆருயிர் தோழி அவனிடம் அவளுக்காக சண்டை போட்டதை எப்படி அவன் மறப்பான்?
எப்படி கவிநிலாவை திட்டலாம் என்று.

அதை கேட்டவன் முகம் சுணங்கித் தான் போனது.. தன்னை விட அவள் தான் இவளுக்கு முக்கியமோ.. தான் இவளின் நன்மைக்கு தானே கூறினோம் என்ற நினைவில் தவித்தே போனான்.

அவன் முகத்தை பார்த்ததும், அவன் என்ன நினைத்திருப்பான் என்று நொடியில் யூகித்தவள், அவனை பார்த்து மென்மையாய் புன்னகை சிந்தி,

"அகரா.... இங்க பாரு! நான் சொன்னது கோபமா..? எனக்கு எல்லோரையும் விட நீ ரொம்ப முக்கியம் அகரா.. ஆனா என்மேல உள்ள அதீத பாசத்துல, நீ அவளை திட்டின... ஆனா அவளும் பாவம் இல்லை..

அவ என்ன வேணும்மின்னா செஞ்சா..? அவளுக்கே தெரியாம தானே இது நடந்தது.. நம்மளால ஒரு உயிர் காப்பாத்த படுதுன்னா, அது நமக்கு சந்தோஷம் தானே..! அது மட்டுமில்லாம.. அவ வேற யாரும் இல்லையே..


இன்னைக்கு நான் சுயமா சொந்த கால்ல நிக்கிறதுக்கு அந்த குடும்பம் தானே காரணம்.. அது மட்டுமில்லாம உன்னையும் அவங்க சொந்தமாத்தான் நினைக்குறாங்க.. அன்னைக்கு உன்னோட நல்ல குணங்களை வச்சி, உனக்கு வேலையை குடுத்தது யாரு? வர்ஷன் தானே..

அப்போ இது என்னால முடிஞ்ச சின்ன உதவி தானே..! இப்போ என்னை நான் கொஞ்ச நாளைக்கு நடக்க முடியாது.. அவளோ தான்.... ஏன் நீ என்னை பாத்துக்கமாட்டியா..? அப்படியே விட்டுருவியாடா..? அவகிட்ட முகத்தை காமிக்காத அகரா..

அவங்களும் என்னை பாத்துக்கிறேன்னு தான் சொன்னாங்க.. ஆனா நீ என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்ட.. எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை அகரா..

முதல்ல என்னோட சித்திய நெனச்சு பயந்தேன் தான்.. அவங்க வேலையே அவங்க சரியா செய்துக்க மாட்டாங்க.. இதுல நம்மளையா கவனிக்க போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா நீ உன்னோட என்னை கூட்டிட்டு வந்துட்டே..

இதோ பாரு! நமக்கு அவங்க நல்லது தான் நிறைய செஞ்சிருக்காங்க.. இது யாரும் எதிர்பாராத நடந்த ஒன்னுடா.. அதுக்கு அவங்க மேல கோப படறது ஞாயமே இல்லைடா.." என தன் நண்பனிடம் சமாதான புறாவாய் மாறினாள் அவனின் அம்மு.

இதுவரை தன் தோழி பேசியதையே பார்த்துக் கொண்டிருந்தவனை,
"ஏன்டா இப்படி பாக்குற..?" என்க.

"இல்லை... என்னோட அம்முக்கு இவ்வளவு பேசத் தெரியுமான்னு யோசிச்சேன்.." என்று அவளை ஆதுரமாய் பார்த்தான்.


"இதுக்கும் காரணம் வர்ஷன் தானே அகரா..! யாரு என்ன பேசினாலும், பயந்து அமைதியாகத்தானே இத்தனை நாளா இருந்தேன்.. ஆனா இப்போ கொஞ்சம் தெளிவா பேசுறேன்னு தோனுதுடா.." என்றாள் மென்னகை சுமந்த முகத்துடனே.

அதை சிரித்தவாறே ஏற்றுக் கொண்டவனும்,

"சரிதாயே இனி அவங்க வந்தாங்கன்னா நான் கோபப்படலை சரியா.." என்று பதில் கூறினான் தன் தோழியானவளுக்கு.


அன்று நடந்ததை நினைத்தவன், இப்பொழுது அவளுக்கு வழிவிட்டு நின்றான். அவளிடம் வேறெதும் பேசாமல் அங்கிருந்து வேகமாக அலுவலகத்துக்கு சென்று விட்டான்.

இங்கே உள்ளே வந்த கவிநிலா, நட்பாய் புன்னகைத்தவாறே,

"இப்போ எப்படி இருக்கு யாழினி..? வலி எதுவும் இல்லைல்ல.. வலி இருந்தா, சொல்லு டாக்டரை வர சொல்றேன்.. ஆமா நீ சாப்டியா..? இல்லை இனிமே தான..? உனக்கு எதாவது சமைச்சி தரவா..?" என்று அவளை பேசவிடாது இவளே பேசினாள்.

அவளின் துறுதுறுப்பில் தன்னை தொலைத்த அமுதா, அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையில் மெல்ல சிரித்த அடுத்தவள்,

"ஏய் யாழினி! எதுக்கு என்னை அப்படி பாக்குறே நீ..? நான் என்ன உன் பாய் பிரண்டா சொல்லு இப்படி சைட் அடிக்குற.." என்னை ஒற்றைக் கண் சிமிட்டி புன்னகைத்தாள்.



அவளின் வார்த்தையில் முகம் சிவந்தவள்,

"கவி என்ன இப்படில்லாம் பேசுற நீ..!
ஒவ்வொரு கேள்வியா கேட்டா பதில் சொல்லலாம்.. இப்படி ஒட்டு மொத்தமா கேட்டா எப்படி பதில் சொல்றது..?" மறு வார்த்தையில் பதில் கூறினாள்.


" சரி ஓகே விடு.. உன்னை சாப்பிட வைக்காத அந்த அகர் பத்தி போயிருக்காது ரைட்டா..?" என்றாள் கிண்டலாக.

"அடியே அவன் பேரு அகரன். நீ என்ன அவனை அகர் பத்தின்னு சொல்ற.." என்று சிரித்துக் கொண்டே வினவினாள்.

" அது அப்டித்தான்... என்னமா பொங்குறான் உன் பிரண்ட்.." அன்று மருத்துவமனையில் நடந்ததை நினைத்து அங்கலாய்த்து போனாள்.

" ஆனா உனக்கு பெத்தவங்க மட்டும் தான் சரி இல்லையே தவிர, நண்பர்கள் விடயத்திலே நீ அதிர்ஷ்டசாலி தான் யாழினி.." என்றாள் அகரனை நினைத்து பெருமையாய்.

அதே பெருமை அமுதயாழினியில் முகத்திலும் மிளிர்ந்தது.

இருவரும் இன்றைய பொழுதை தங்களுக்குள் பேசித்தான் கழிப்பார்கள் என்பது போல, இருவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

இங்கே ஷோபனா வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து டிவி யை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது மாடியிலிருந்து வந்த ஆராதனா அவள் அம்மாவின் அருகில் அமர்ந்து,

"ஏன்மா! அந்த அகரனோட வீட்ல போய் சத்தம் போட்டு வந்த..? இப்போ அந்த வேலைக்காரி இங்கே வர விடுவானா அவன்.. அவள் இங்கேயே இருந்தா, நம்மளோட வேலை எவ்வளவு மிச்சமா இருந்துச்சி.. இப்போ இந்த வேலை எல்லாம் யாரு செய்வா..? அதுக்கு இன்னும் ஒரு வேலைக்காரி வைக்கனுமா.." என்று தாயிடம் எரிந்து விழுந்தாள் ஆராதனா.

ஆனால் அவள் அமுதாவிற்காகவும் தன் வீட்டு வேலைக்காகவும் இதை கேட்கவில்லை... அவளுக்கு அகரனை மிகவும் பிடிக்கும்.. அவன் அமுதாவை பார்த்துக் கொள்வதை பார்த்து, அவன் மேல் காதல் கொண்டாள். ஆனால் அவனோ அவளை ஏறெடுத்தும் இதுவரை பார்த்ததில்லை.

அதன் காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை. தன் தாயனவளை அவர்கள் படுத்தி எடுக்கும் கொடுமைகளை நினைத்து தான், அவளை தன் அருகிலே நிறுத்தாமல் இருக்கின்றான்.

ஆனாலும் விடாது கருப்பு போல, இவள் அவனைத்தான் சுற்றி வருகிறாள்.. அவனை அவமானப்படுத்தியது தான் இப்பொழுது தன் தாயிடம் கோபத்தை காமிக்கிறாள்.

ஆனால் அவளின் தாயோ தான் இதற்கெல்லாம் அஞ்சுபவள் அல்ல என்பதை போல

"இங்கே பாரு ஆரா! அந்த சனியன் இதோட ஒளிஞ்சி போகட்டும்.. யாராவது கேட்டா கூட, நான் பதில் சொல்லிக்குறேன் சரியா.. உங்க அப்பன் பண்ண தப்புக்கு, இன்னும் என்னெல்லாம் அனுபவிக்கனுமோ.." என்று நொடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

போகும் தாயை பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று விட்டாள்.

இங்கே அலுவலகம் வந்த அகரனை தன் அறைக்கு அழைத்தான் மது வர்ஷன்.

அகரன் அங்கே வந்து தலைகுணிந்தபடியே நின்றானே தவிர, தன் முதலாளியை அழைக்கவில்லை.

அவன் வந்ததை அறிந்து கணினியில் இருந்து தன் முகத்தை நிமிர்த்தி காணவில்லை மது வர்ஷன். இருவரும் எத்தனை நேரம் அப்படி இருந்தார்களோ! இருவருமே அறியவில்லை அலைபேசி வந்து அவர்களின் அமைதியை கலைத்தது.

அலைபேசியை எடுத்து பேசியவன், பேசாமல் அமைதியாய் நின்றவனை பார்வையால் வருடினான். எதோ தன் காதலியை வருடுவது போல.

அலைபேசியை அதன் தரிப்பிடத்தில் வைத்தவனின் பார்வை முழுதாய் அகரனை அளவிட்டது.

'ஒய் தம்பி பாப்பா! எவ்வளவு நேரம் டா பேசாத இருக்க போற.. பாக்குறேன் டா எவ்வளவு நேரம் இப்படியே இருக்கன்னு.. பட் நீ கோபமா இருந்தாலும், அழகா இருக்கட தம்பி பாப்பா.. க்யூட் கோபம் டா..' என்று மனதினுள்ளே தன் எதிரில் உள்ளவனை கொஞ்சி கொண்டான்.

அவனின் பார்வையில் எதிரில் நின்றவனுக்கு கூச்சம் தான் எடுத்தது.

எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்கிறது என்று யோசித்தவன் தலையை நிமிர்த்தி,

"சார் நீங்க வர சொன்னதா சொன்னாங்க சார்.. சொல்லுங்க நான் என்ன பண்றது..? எவ்வளவு நேரம் இப்படியே பார்ப்பீங்க.." என்று தன்னை இவ்வளவு நேரம் பார்க்கிறானே என்ற செல்ல கோபத்திலும் வேகமாக கேட்டான்.

அவனின் செல்ல கோபம் கூட சிரிக்கும் மழலையாய் மனம் வருடிப் போனது. அதை நினைத்தவனின் புன்னகை, இதழை விட்டு வெளிவந்தது. இப்போது வெளிப்படையாகவே,

"ஒய் தம்பி பாப்பா! இப்போ எதுக்கு இவ்ளோ கோபம்...? முதல்ல உட்காரு அப்புறம் பேசலாம்.." என்றான் புன்சிரிப்புடனே.


"இல்லை சார்! எனக்கு வேலை இருக்கு நான் போகனும்... நீங்க முதல்ல சொல்லுங்க.." என்று ஏதோ சிறுபிள்ளை எனக்கு அந்த பொம்மை வேண்டாம், இது தான் வேண்டும் என்று அடம்பிடிப்பது போல தோன்றினான் மதுவின் கண்களுக்கு.

அவனின் பிடிவாதத்தை ரசித்து சிரித்தவனுக்கு ஏனோ கோபம் வரவில்லை.. மாறாக பாசம் தான் வந்து தொலைத்தது. அது அவனின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது .

ஆறடி ஆணமகனின் பிடிவாதமும்
மயக்கும் புன்னகை சிந்தும்
மழலையின் வதனமாய் அமைந்ததுவே
அவனின் கோபமும் சிறுபிள்ளை தனத்தின் உச்சமாய் அமைந்ததோ


என்று தன் முன்னே நின்றவனை கவிதையாய் நினைத்து விட்டு, மீண்டும் அவனிடம் சில விடயங்களை பேசி விட்டு அவனை வெளியே அனுப்பினான் மது வர்ஷன்.


அப்படி அவன்கிட்ட என்னப்பா பேசியிருப்பான்... 🤔🤔🤔🤔