• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 24

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
24
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னைவீட்டிற்கு வந்த சிவராம்க்கு மாயா சொன்னதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. தன் மகள் காதலிக்கிறாளா.. ? அதை தன்னிடம் கூட சொல்லவில்லையே.. இல்லை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியுமா.. யார் அவன்.. என் பெண்ணை கடைசி வரை காப்பாற்றுவானா.. எப்படிப்பட்டவன் என தெரியவில்லையே.. இதை இப்பொழுது நான் கேட்கலாமா.. இல்லை ஏற்கனவே என் மேல் அனைவரும் கோபத்தில் தான் இருக்கிறார்கள்.. இப்பொழுது எப்படி நான் கவியிடம் கேட்பது என்ற யோசனையில் தன் வீட்டிற்குள் நுழைந்தவரது காதுகளில் விழுந்த வார்த்தைகளில் அப்படியே நின்று விட்டார் சிவராம்.

ஆம் அங்கே நிக்கில் தான் தன் பெற்றவர்களை அழைத்துக் கொண்டு கவியின் வீட்டிற்கு வந்திருந்தான் அவளை பெண் கேட்க.

இதற்கு மேல் அமைதியாயிருக்க கவிக்கு விருப்பமில்லை.. அது தான் நிக்கலை பெண் கேட்டு வர சொல்லி விட்டாள்.. எங்கே இப்படியே இருந்தால் தன் தந்தை தன் வாழ்க்கையையும் பணயம் வைத்து விடுவாரோ என்ற எண்ணத்தில்.

தந்தை மேல் உள்ள நம்பிக்கையை அவரே கொன்று விட்டாரே.. சுயமாய் தொழில் செய்யும் தன் அண்ணனின் வாழ்வையே பணயம் வைத்தவர் பெண் என்ற காரணத்திற்காக தன் வாழ்வையும் அது போல் செய்து விட்டால் என்ன செய்வது என்று மனதில் ஓரம் துளிர்த்த பயத்தின் காரணம் தான் நிக்கிலை அவசரமாய் பெண் கேட்டு வர சொன்னது.


அங்கே , "உங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சம்பந்தி.. அதுவும் இல்லாத எங்க பையனும் உங்க பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே விரும்பறாங்க.. பையன் இங்கேயே இனி சொந்தமா தொழில் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டான் உங்க பொண்ணுக்காக.. ஏனா உங்க பொண்ணு உங்களை பாக்காம இருக்க மாட்டாளே.. எங்களுக்கு எங்க பையனும் மருமகளும் ஒன்னா இருக்கறது தான் சம்பந்தி நல்லது.

நீங்க எதுவும் செய்ய வேணாம் சம்பந்தி.. தங்கமான பொண்ணை தரப் போறீங்க.. அதுவே எங்களுக்கு பெரிய சீர் தான் சம்பந்தி மா.. நீங்க தான் சம்பந்தி வந்ததுக்கு அப்புறம் பேசிட்டு ஒரு முடிவு சொல்லனும்.." என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் பேசி முடித்தார் நிக்கிலின் தாய்.

அதையெல்லாம் மௌனமாய் கேட்டு அமையியாயிருந்தனர் பார்வதியும் மதுவர்ஷனும்.

சிறிது நேரம் கழித்து தொண்டையை செருமிக் கொண்ட மதுவர்ஷன்,

"எனக்கு ரொம்ப சந்தோஷம்.. என் தங்கச்சியோட செலக்ஷன் சூப்பர் தான்.. ஆனா இந்த பெரிய முடிவு நான் மட்டும் எடுக்க முடியாது.. இந்த குடும்பத்தோடு தலைவர் எங்க அப்பா.. அதுமட்டுமில்லாம எங்களை இத்தனை வருஷம் வளத்தினவர்.. அவரோட சம்மதமும் வேணும்.. அப்பா வந்ததுக்கு அப்புறம் நாங்க எங்களோட முடிவை சொல்றோம்.." என்றான் தீர்மானமாய்.

என்ன தான் தந்தையின் மேல் கோபம் இருந்தாலும் தந்தையை வெறுக்க முடியவில்லை.. இத்தனை வருடங்களாக தங்களுக்கு ஒவ்வொன்றாய் பார்த்து செய்பவருக்கு நம் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது தான்.. ஆனால் அவர் எடுத்த முடிவு தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே.. அப்பொழுது நாம் தானே அந்த நம்பிக்கையை கொண்டு வர வேண்டும்.

இன்று நமக்கு பிடிக்காது செய்து விட்டார்கள் என்பதற்காக பெற்றவரை தூக்கி எறிய முடியுமா என்ன..?

மதுவும் தங்களின் சூழ்நிலையை விளக்கினான் நிகில் குடும்பத்திற்கு.. தந்தை மேல் தவறு இருந்தாலும் அவரை விட்டுக் கொடுக்க அவனும் தயாரில்லை.. அவனின் தாய் முகத்திலும் அது தான் இருந்தது.

நிகிலின் பெற்றோரும் அவன் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து சிவராமிடம் பேசி விட்டு சொல்லும் படி விடை பெற்றனர்.

அவர்கள் சென்றதும் கவி தன் அண்ணனிடம் திரும்பி, "அண்ணா.." என்று அழைக்கும் பொழுதே அவள் எதற்க்காக அழைக்கிறாள் என்பதை புரிந்தவன்,

"இங்கே பாருடா உன் கல்யாணம் உன் விருப்பம் போலத்தான் நடக்கும்.. ஆனா நம்ம அப்பவோட சம்மதத்தோட ஏன் என் கல்யாணமும் அவனோட சம்மத்தோட தான் நடக்கும்.." என்று அழுத்தமாய் கூறிவிட்டு சென்றான்.


இதையெல்லாம் வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சிவராமுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

தன் பையன் எத்தனை நிதானமாய் யோசித்து முடிவெடுக்கிறான்.. ஆனால் நான் தொழிலில் ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்ட என் பையனின் வாழ்க்கையே விலை பேசிவிட்டேனே என்று எண்ணத்தில் தன் மகனின் முன்பு சென்று நின்றார்.

தன் எதிரே நிழலாடுவதை உணர்ந்த மதுவர்ஷன் யாரென்று பார்த்தான்.. தன் தந்தை நிற்பதை பார்த்தவன் எதுவும் பேசாமல் செல்ல முற்படும் போது அவனின் கையை பிடித்த சிவராம்,

"மது கண்ணா இந்த அப்பாவ மன்னிக்க மாட்டியா பா.. நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ தான் கண்ணா உணர்றேன்.. என் பையனுக்கு நல்லது செய்யறதா நினைச்சு நான் தப்பு செஞ்சுட்டேன்.. இந்த அப்பாவ மன்னிச்சிரு பா.. உன் விருப்பம் போல உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணை கட்டிக்கோ பா.. உன் விருப்பத்துக்கு நான் குறுக்க நிக்கலை.. அதே போல உன் தங்கச்சி விரும்பனை பையனுக்கு கட்டி வச்சிரலாம் பா.. என் புள்ளைங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்த்த நானே அவங்க விருப்பத்துக்கு குறுக்கே நின்னுட்டேன்.. என்னை மன்னிச்சிருபா.." அவர் கையெடுத்து வணங்கும் போதே அவனுக்கு விழிகள் கலங்கி விட்டது.

தன் தந்தையின் வணங்கிய கையை கீழிறிக்கிய மது, "அப்பா என்ன பன்றீங்க.. எங்களை புரிஞ்சிக்கலையேன்னு உங்க மேல வருத்தம் இருந்தாலும் கோபம் இல்லைப்பா.. எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்த்தீங்க.. அதே நேரத்துல இந்த பிரச்சனையை என்னால சமாளிக்க முடியாதுன்னு நினைச்சீங்களே அப்போ என் மேலே நம்பிக்கை இல்லாயன்ற கோபம் இருந்தது உண்மை பா.. ஆனா இப்போ அது இல்லை ப்பா.. தயவு செஞ்சு இது மாதிரி பன்னாதீங்க பா.." என்றான் மது.

தன் மகனிடம் பேசியவர் தன் மனைவி மகளிடம் திரும்பி, "குட்டிமா என்னை மன்னிச்சிருங்கடா.. சத்தியமா உங்களோட வெறுப்பை தாங்கற சக்தி எனக்கு இல்லை டா.. எனக்கு என் குடும்பம் நல்லா இருக்கனும் .. அதுக்கு தான் இதெல்லாம் பன்னேன்.. ஆனா எது நல்லது கெட்டதுன்னு புரிஞ்சிக்கிறதுல தப்பு பண்ணிட்டேன் மா.. பார்வதி நீயும் என்னை மன்னிச்சிரு மா.. நான் செஞ்ச தப்பை உணர்ந்துட்டேன் மா.. நம்ம பசங்க வங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை குடுக்கலாம் மா.. என்னை மன்னிச்சிரு மா பாரு.." என்று இருவரிடமும் கெஞ்சினார்.

என்ன தான் தவறு செய்தாலும் தன் பிள்ளையின் நன்மைக்காக தானே செய்தார்.. இதோ தன் தவறையும் உணர்ந்து விட்டாரே இதற்கு மேலும் இவரை தண்டிப்பது நியாயமாகுமா..?தவறு மனிதனின் இயல்பு .. நான் தவறே செய்யாதவன் என்று யாரும் சொல்ல இயலாது.. ஏதோ சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவர்கள் அவ்வாறு மாற்றுகிறது.. செய்த தவறை மனம் வருந்தி திருந்தினாலே போதுமானது.. இதோ சிவராமும் மனம் திருந்தியுள்ளார்.. நிச்சயம் அவரின் குடும்பம் அவரை மன்னிக்கும்.

பார்வதியும் கவியும் அவரின் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டனர்.. அந்த அணைப்பே சொல்லியது அவர்களுடைய மனநிலையை..அவர்களுக்கும் தானே அவரை தண்டிப்பது வலியை கொடுத்தது.

ஆராதனாவோ தான் அமுதாவிற்கு செய்த தீங்கினை நினைத்து நினைத்து மனம் வெம்பி போனாள்.. தான் அவளுக்கு அத்தனை செய்தும் தனக்காக தன் வாழ்க்கைக்காக அவள் அகரனிடம் பேசிய நொடியிலிருந்து நெருஞ்சி முள்ளாய் மனதை வதைத்து தைத்தது.. தான் அவளுக்கு செய்த இழி செயல்..

உண்மையை சொன்னால் தவறு செய்த தன் தந்தையை விடுத்து எந்த பாவமும் அறியாத அவளுக்கு தானே தாயும் மகளும் அத்தனை பாவம் செய்தனர்.

தன்னை நினைத்து தன்னையே வெறுத்தாள் பெண்ணவள்.

அகரனுக்கு அவள் மேல் தான் எத்தனை பாசம்.. தாயாய் அல்லவா அவளை நினைக்கிறான்.. அவள் சொன்ன ஒற்றை வார்த்தைக்கு தானே தன்னை அவன் ஏற்றுக் கொண்டுள்ளான்.

இல்லை இனி அமுதாவிற்கு இந்த வீட்டிலிருந்து கிடைக்க வேண்டிய உரிமை கட்டாயம் கிடைக்க வேண்டும்.. அவளின் உரிமையை தடுத்து நிறுத்திய நாம் தான் அதை பெற்றுத் தர வேண்டும்.. ஒரு முடிவுடன் தன் தாய் தந்தையை பார்க்க சென்றாள்.

அவளின் தாய் தந்தை இருவருமே மதுவின் மேல் கோபமாய் அமர்ந்திருந்தனர்.அப்பொழுது,

"அம்மா அப்பா.. " என்ற அழைப்புடன் ஆராதனா நுழைந்தாள்.

அவளைப் பார்த்ததும் இருவரும் முகத்தை திருப்பினர்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரின் இடையே வந்து அமர்ந்தவள்,

"அம்மா அப்பா எதுக்கு இப்போ ரெண்டு பேருக்கும் கோபம்.. நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறது தப்பா.. எனக்கு அகரன் மேல இருக்க காதல் வேறு யாருடனும் என்னால வாழ முடியாது ம்மா.. எந்த விதமான உறவு இல்லாம அமுதாவையே அவன் அவ்வளவு பாசமா பாத்துக்கும் போது அவனோட முழு உரிமையான மனைவியா வாழ்ந்த என்ன எவ்வளவு நல்லா பாத்துப்பான்.. " இருவருக்கும் தன் வாழ்க்கையை தேர்ந்தெடுத்ததில் தவறில்லை என்று வாதாடினாள்.

ஆனால் அவர்களோ கோபமாய் அவளிடம் திரும்பி, "புரியாத பேசாதே ஆரா.. ஒரு மாச சம்பள காரனோட எப்படி சந்தோஷமா வாழ்வ.. அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை தான் எடுக்கனும்.. இதுக்காகவா உன்னை இவ்வளவு செல்லமா வளர்த்தோம்.." தன் மனக்குறையை மகளிடம் இறக்கி வைத்தாள் ஆராவின் தாய்.

"அய்யோ அம்மா பணம் மட்டும் சந்தோஷமான வாழ்க்கையை குடுத்துடாது.. மனசார ஒருத்தரை நேசிக்கிற தான் சந்தோஷமான வாழ்க்கையை குடுக்க முடியும்.. அப்படி நான் மனசார நேசிக்கிறது அகரன் தான்.." என்றாள் தெளிவுடன்.

"அதுமட்டுமில்லாம அமுதாவுக்கு நாம தான் சீர் செஞ்சு கல்யாணம் செய்து வைக்கனும் அதுவும் அவ ஆசைப்பட்ட மதுவோட.." என்றாள் தீர்மானமாய்.

அதைக் கேட்ட சோபனா கோபத்தில் கொதித்தெழுந்தாள்.

"ஆரா என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசுறீயா.. அவ ஒரு அனாதை அவளுக்கு போய் சீர் செஞ்சு கல்யாணம் செய்யனுமா.." என்றாள் ஆத்திரத்தில்.

"அம்மா சும்மா கோபப்படாத.. இப்போ நீயும் நானும் வாழ்ற இந்த வாழ்க்கை அமுதாவும் அவ அம்மாவும் நமக்கு கொடுத்தது அதை மறந்துட்டு பேசாத.."

" யாருக்கு யாருடி வாழ்க்கை கொடுக்குறது.. என்னோட வாழ்க்கை பறிக்க வந்தவ தான் அவ அம்மா.."

"உன் மனசாட்சிய தொட்டு சொல்லு அமுதாவோட அம்மாவா உன் வாழ்க்கையை பறிக்க வந்தாங்க.. வீட்டுக்கு வேலை செய்ய வந்தவங்களை வேலைக்காரியா பாக்காம தன்னோட சுகத்துக்கு பயன்படுத்திக்கிட்ட உன்னோட புருசன் உன் வாழ்க்கையை கெடுத்தது.. அப்படின்னா தப்பு உன்னோட புருசன் மேல தானே.." என்றாள் நிர்தாட்சன்யமாய்.

" ஆரா அவரு உன்னோட அப்பா.. பாத்து பேசு.. யாரோ ஒருத்திக்காக பெத்தவங்களை எதிர்த்து பேசுற.. உன்னை இத்தனை நாளா வளர்த்தி எங்களை விட இன்னைக்கு உனக்கு அவ பெருசா போயிட்டாளா.. ஏன் இத்தனை நாளும் நீயும் தானே அவளை அவமானபடுத்தின அப்போ தெரியலையா அவ அப்பாவின்னு.."

"ஆமா இத்தனை நாளா நானும் அப்படி தான் இருந்தேன்.. உண்மை எது பொய் எதுன்னு எடுத்து சொல்ல வேண்டிய நீங்களே அவ நமக்கு அடிமை அப்படின்னு சொல்லித்தானே வளர்த்தீங்க.. நீங்க சொன்னது மனசுல பதிஞ்சதுல நானும் சரியா தப்புன்னு உனராம அவளை அவமான படுத்திட்டேன்.. ஆனா இப்போ திருந்திட்டேன்.. இனி அவள் என்னோட அக்கா தான்.. ஒரு தங்கச்சியா என்னோட கடமையை நான் சரியா செய்யனும் இல்லை.. " என்றாள் தீர்மானத்துடன்.

"ஆரா வேணாம் இந்த வாழ்க்கை உனக்கு எந்த சந்தோஷத்தையும் தரப்போறது இல்லை.. அம்மா சொன்னா கேளுடா.." மகளை சமாதானம் செய்ய முயன்றாள்.


ஆனால் அவள் அறியாதது ஆராவின் மனதில் படித்திருந்த அழுக்கை அமுதாவின் பாச மனம் ஜெயித்து விட்டது என்று.

"அம்மா போதும் நல்லதோ கெட்டதோ என் தலைவிதிய நானே எழுதிக்கிறேன்.. என் வாழ்க்கையும் நானே தேர்ந்தெடுத்துக்குறேன்.. விருப்பமிருந்தா இந்த ரெண்டு கல்யாணத்தையும் நடத்தி வைங்க.. இல்லையா உங்களுக்கு ஆராதனான்னு ஒரு மகள் இருந்தான்றதையே மறந்துடுங்க.. உங்களுக்கு தான் அது சுலபமான விடயமில்லை.. ஏற்கனவே பெத்த பெண்ணையே இல்லை வேலைக்காரியா வளர்க்கற குடும்பம் தானே.." இறுதியாய் சொல்லிவிட்டு வெளியேறினாள் ஆரா.


அவள் சொல்லிவிட்டு சென்றதில் இருவரும் அப்படியே சிலையாய் நின்று விட்டனர்.


மன்னிப்பதும் செய்த தவறை மறப்பதும் தான் மனித இயல்பு.. இல்லையேல் மனம் ஒரு குப்பை மேடாய் அல்லவா காட்சியளிக்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.. மனிதி மனத்தின் மாற்றம் காலத்தின் கட்டாயமாகிறது.

மன்னிப்பு என்று ஒன்று உள்ளாதாலே இன்னும் இந்த உலகம் சுழல்கிறது.. இங்கு தவறே செய்யாதவன் ஞானி தான்.. ஆனால் செய்த தவறை நினைத்து வருந்தினால் போதும் அவன் மனதனாகிறான்.

நாம் ஞானியாக இருக்கத் தேவையில்லை.. ஆனால் சாதாரண மனிதனாக இருக்கலாமே.
 
Top