• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 13

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 13 (வாணிலா அழகன்)



கமலியின் கன்னத்தை நனைத்த கண்ணீர்த் துளிகளுக்குப் பதிலின்றித் தவித்தான் ஆதவன்.



அவளின் பூவிதழ் சிவந்து தொடர் அழுகையில் விம்மியவள், மூச்சு விடச் சற்றே திணற, அவளின் மனவலிக்குக் கண்ணீர் துளியே மருந்தென அழ விட்டவன், அவளின் திணறலைக் கண்டு வேகமாக எழுந்து அருகில் இருந்த தண்ணீரை எடுத்து, அவளைத் தன் மார்பில் சாய்த்து, "இதைக் குடி" எனப் புகட்டினான்.



மெல்ல அவளின் முதுகினை வருடி ஆசுவாசப் படுத்தினான்.



அவளின் இதயமும் வலிக்கான ஆதரவைத் தேடியது தான்.



அவனின் கதகதப்பில் சுருண்டு இருந்தவளைத் தட்டி,



"சரி சரி, இந்த மாமன் மனசு மட்டுமல்ல, இந்த நெஞ்சாங்கூடும் உனக்கானது. நம்ம ரொமான்ஸை அப்புறம் வச்சுக்கலாம். முதல்ல வயிற்றை இப்படி வருத்தப்பட வைக்கக் கூடாது, என் செல்லப் பொண்டாட்டி" என்றதும் தான் தன்னை மறந்து ஆறுதல் தேடியிருக்கிறோம் என உணர்ந்தவள்,



உதட்டைப் பிதுக்கி, கண்ணைச் சுருக்கி "ஹாங்" என நகர்ந்து எழுந்தவளின், கைகளைப் பற்றி அவளை இழுத்து இறுக்கி அணைத்து விடுவித்தவன்,



அப்படியே இரு கைகளையும் மேல தூக்கி நெட்டி முறித்து, நாக்கினை கன்னத்தினுள் சொருகியபடி.



"இப்படி ஒரு தேவதையை ஹக் பண்ணுறது கூட ஒரு மஜாவா தான் இருக்கு" எனக் கண்ணடித்தவனின் மீது ஏனோ கோபம் வரத் தவறியது கமலிக்கு.



அவளை மெத்தையில் அமர வைத்து உணவை ஊட்ட, அடம் பிடித்தவளின் வாயில் உணவைத் திணிக்க வேறு வழியின்றி விழுங்கியவளுக்குப் பொறை ஏறியது. தலையில் தட்டியபடி தண்ணீரைக் குடிக்கத் தந்து விட்டு,



"டேய் எவண்டா அவன், நான் இருக்கும் போது என் செல்லத்தை நினைக்கிறது? வந்தேன் மூளையைத் திருகி ஊமத்தன் செடிக்கு உரமாக்கிடுவேன் ஜாக்கிரதை" என்றவனைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்க முயன்று தோற்றுப் போனாள் கமலி.



இங்கு,



மீரா மாதவனோடு வீட்டிற்குச் செல்லும் வரை இருவரும் வழியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.



மீரா வந்ததில் குடும்பத்திற்கு அப்படி ஓர் சந்தோஷம்.



"என்னடாம்மா" என்று தலையில் இருந்த காயத்தை மெல்ல வருடிய பாட்டியின் மடியில் படுத்தவள்,



"ஒண்ணுமில்ல பாட்டி மனசு சரியில்ல" என்றாள்.



"வேறு என்ன செய்வா? நம்பி அழைத்து வந்த தோழி, செய்த துரோகத்துல என் மருமகள் மனசு ஒடஞ்சி போயிட்டா, எல்லாரும் அவ கிட்ட எதுவும் கேட்க வேணாம். போடா தங்கம் போய் ரெஸ்ட் எடு, எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்லி நகர்ந்து சென்றார் சுந்தர ராஜன்.



மீரா எழுந்து போய் ரூம் கதவைத் தாழிட்டு மெத்தையில் விழுந்தவளுக்கு, ஆதுவின் செயல்கள், திரில்லர் பிலிம் போல மனதைக் கலங்கடித்தது.



பின் வந்த நாட்களில் மீராவின் குறும்புத் தனம் பறிபோய் இருந்தது. வழமைக்குச் சற்றும் சம்மந்தம் இன்றியே அவளின் செயல்கள் இருந்தன.



அதிக நேரம் அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். அவளின் அமைதி, முகத்தில் சுற்றிய பயம், இவைகளை எல்லாம் கவனித்த மேடி அவளைப் பிடிவாதமாக பீச்சுக்கு அழைத்துச் சென்றான்.



காரைப் பார்க் செய்து விட்டு, இருவரும் மணலில் இறங்கிச் சிறிது நேரம் நடந்து சென்றனர். அப்படியே மணலில் அமர்ந்து, கைகளால் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் முன், துரத்தி விளையாடும் அலைகளைக் கண்டதும், தானும் துள்ளிக் குதித்து ஓடி நீரோடு விளையாடினாள்.



குழந்தை போல் விளையாடும் அவள் அழகினை ரசித்த மாதவனிடம், சுண்டல் வாங்கச் சொல்லி நச்சரித்த பையனிடம் சண்டை போடலானான் மேடி.



அலைகளுக்குப் பயந்து சிரித்தபடி ஓடி வந்தவள், எதிரில் யாரோ நிற்பது தெரியாமல் மோதிச் சாய்ந்தவளைத் தாங்கிப் பிடித்த கரம்,



அவளின் காதோரம் வந்து, "இந்த ஈரத் துணியில் உன் அழகு கொல்லுதுடி மாமனை. மாமன் மீது பயம் போயிட்டு போல" என்றவனின் குரலில் ஆடிப் போனவள், சுதாரிப்பதற்குள் கையில் இருந்து தவறி மீண்டும் அலைகளினுள் புதைந்து, வேகமாக எழுந்தவள் சுற்றும், முற்றும் பார்வையைத் தீட்ட, ‘ம்ஹூம் அது.. அது.. அவன் தான் ஆது' என்று அவள் நடுங்குவதைக் கண்ட மாதவன்.



"ஏய்! மீரா என்னாச்சு"



"ஒண்ணுமில்ல வா போகலாம் அத்தான்" என அவனின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் அவனை இழுத்துச் சென்றாள்.



காரின் இருக்கையில் அமர்ந்து இருந்தவளின் உதடுகளின் மிக மிக மெதுவான உச்சரிப்பு 'ஆது.. ஆது' மந்திரம் போல் ஓதியது.



மேடி தோளில் சாய்ந்துக் கொண்டவளை வாஞ்சையுடன் வருடியவன்,



"மீரா என்னாச்சு இப்பக் கூட சொல்லக் கூடாதா?" என்றவனிடம்,



"ஒண்ணுமில்ல அத்தான், நீ வீட்டுக்குப் போ" என்றாள்.



'எதுவோ நடந்து இருக்கு, இவ மறைக்கிறா! இனி இவளிடம் பேசி எதுவும் பயனில்ல. ஆதவனிடம் சொல்லிட வேண்டியது தான்' என யோசித்தபடியே காரைத் தார் ரோட்டில் இறக்கி வேகம் பிடித்தான்.



உடைகளைக் கூட மாற்றாமல் ஈரத் துணியுடன் சென்றவளைத் தடுத்த பாட்டியம்மா.



"மாதவா! இவள் ஏன் இப்படி வரா?" என்று மீராவிடம் பார்வை செலுத்தியவர் அவள் முகம் மிரட்சியில் இருப்பது தெரியவே,



"அம்மாடி மீரா, என்னம்மா உனக்குப் பிரச்சினை? எதுவா இருந்தாலும் சொல்லு. ஒண்ணுக்கு இரண்டு அத்தான்கள் இருக்காங்க" என்றபடியே நெருங்கியவரிடம்,



"அத்தான் தான்" எனக் கூறி வேகமாக மாடி ஏறிச் சென்றாள்.



அவள் சொன்ன அத்தான் என்ற வார்த்தையில் குடும்பமே ஆடிப் போனது.



அழகான சந்திர இரவு ஏனோ சுந்தர் ராஜன் குடும்பத்திற்கு மட்டும் சுட்டெரிக்கும் அனலாய் தகித்தது.



மாதவனுக்கு எப்படா பொழுது விடியும் ஆதவனைக் காண்போம் என்று இருந்தது.



ஆதவனின் அறையில் ஜன்னல் திரை வழியே வழியும் நிலவொளியில், மலரும் கமலியின் முகத்தினை ரசித்தபடியே அமர்ந்து இருந்தவனின் செல்பேசி சிணுங்க.



போன் முகப்பைப் பார்த்த ஆதவன், 'இந்தக் கரடித் தலையன் கனவை ரசிக்கக் கூட விட மாட்டான் பா, இவனுக்கு முதலில் கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் நாம பண்ணி இருக்கனும்' என்றபடியே செல்பேசிக்கு உயிர் தந்து காதில் வைத்தவன்,



"ஹலோ என்னடா இந்த நேரத்துல, கால் போட ஆள் இல்லையா" எனச் சிரித்தவனுக்கு மறுமுனைப் பேச்சால் முகம் சட்டென மாறிப் போனது.



"ஒரு நிமிசம் இரு, வரேன்" என வேக வேகமாக பால்கனி கதவைத் திறந்து மெல்லத் தாழிட்டு, உரையாடியவனின் முகம் கறுத்துப் போய் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.



உறக்கம் கலைந்து விழித்த கமலிக்கு, கண்ணாடி வழியே தெரியும் ஆதவனின் பதற்ற முகம் கண்டதும் பயம் மனதைக் கவ்விக் கொண்டது.



அவன் பேசி முடித்து உள்ளே வரும் வரை காத்திருந்தவள் "என்னங்க, இந்த நேரத்தில் யாரு போன்ல?" என்றவளிடம் சிரித்துக் கொண்டே,



"மேடிக்கு தனியா தூக்கம் வரலையாம் அதான் பேசிட்டு இருந்தேன்" என்று கூறியவன் கமலியின் குழப்ப முகம் பார்த்து குறும்புடன், "அதெல்லாம் நீ பயப்படாத பேபி, நான் கண்டிஷனா சொல்லிட்டேன். இனி இந்தக் கைகள் என் மனைவியை மட்டுமே தழுவும் என, அவன் கூப்பிட்டா நான் போவேனா?" எனக் கண்ணடித்து நகைத்தவனிடம்,



"யார் உங்களை இங்க இருக்கச் சொன்னா, தாராளமா போய் உங்க தம்பியைக் கட்டிப் பிடிச்சி தூங்குங்க. எனக்கு என்ன வந்துச்சு" என்றவள் பக்கம் திரும்பி.



"பாருடா, ஒரு வார்த்தைக்கு என் தம்பி தேடுறான்னு சொன்னதுக்கு கூட, என் பொண்டாட்டிக்கு எவ்வளவு கோவம் வருது." என்று சிரித்தவனிடம் எரிந்து விழுந்து, எழுந்து சென்ற கமலிக்குப் புன்னகையை உதிர்த்து விட்டு, பலத்த யோசனையில் மூழ்கிப் போனவன் அப்படியே உறங்கிப் போனான்.



அதிகாலையே காலிங்பெல் அழைக்க, "அட இந்த ரூம்பாயின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லடா" என உடம்பை முறுக்கிக் கைகளை உதறியவன்,



வெறும் வெற்று உடம்புடன் கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான்.



"அடச்சீ, என்னடா இப்படி வர?" என்ற மேடியின் குரல் கேட்டு ஓடிப்போய் துண்டை எடுத்து மேலே போட்டவனிடம்,



"சிவ பூஜையில கரடியா வந்துட்டேனோ?" என்ற மேடிக்கு.



"அதான் வந்துட்டியே, அப்புறம் என்ன சொல்லு?" என்ற ஆதவன் "இரு… இரு, ஒரு செகண்ட்டுல, நான் ரெடியாகி வந்துடுறேன். கீழ போய் பேசிக்கலாம்" என்றவன் படு சுறுசுறுப்பாகக் கிளம்ப,



கமலிக்கு மட்டும் ஏதோ உள் உணர்வு தவறாகத் தோன்றியது. 'இவர்களின் பதற்றத்தை மறைக்க முயலும் முகபாவனை ஏதோ பிரச்சனை என்று காட்டிக் கொடுத்தது.



'என்னவாக இருக்கும்? இதற்கு பதில் மேடியிடம் தான் கிடைக்கும்' என யோசித்தவள்.



மாதவனிடம் சென்று "மேடி! மேடி" என,



"ம் சொல்லு கமலி என்ன?"



"அது வந்து… அது உங்க அண்ணன் நேற்று நைட் உன்னிடமிருந்து போன் வந்ததில் இருந்து ஒரே பதற்றமாகவே இருக்கார். என்னாச்சுனு கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கிறார். நீயாவது மறைக்காமல் சொல்லு. என்ன பிரச்சனை? அந்த துர்கேஷ் எதாவது வம்பு இழுத்தானா? சொல்லு மேடி" என்றவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.



"அய்யோ, அதெல்லாம் ஒண்ணுமில்ல கமலி. அந்த துர்கேஷ் எல்லாம் ஒரு ஆளா? பச்சாப் பயல். முன்னாடி அவங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டுல இருந்ததால பயந்த மாதிரி பாவ்லா செய்தோம். அதை நீ நம்பிட்டியா, நீ ஒரு பச்ச மண்ணு போ" என்றவனின் எண்ண ரேகைகள், 'டேய் ஆதவா, என்னை இங்க கோர்த்து விட்டுட்டு எங்கடா போன? பேய்ப்பயலே' என்ற படியே கமலியைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பினை சிரித்து வைத்தான்.



கமலி விடுவதாக இல்லை. "என்னால உங்க குடும்பத்திற்கு எவ்வளவு பிரச்சனை? போதும் மேடி என் தோழியே என்னை புரிஞ்சிக்காமல் ஒதுக்கிட்டா இனியும், நான் இங்க இருந்து உங்க எல்லாருக்கும் தொந்தரவு தர்றதுல அர்த்தமே இல்ல. நான் போய் பேசிக்கிறேன் என்னால உருவான பிரச்சனைக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என ஆவேசமாகப் பேசிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டவளை தடுத்த மேடி.



"அய்யோ, இந்தப் பிரச்சனைக்கும் உனக்கும் சம்மந்தமில்ல, நீ வேற படுத்தாத. இது எங்க குடும்பப் பிரச்சனை" எனக் கத்தியவனிடம் திரும்பிய கமலி,



"அப்ப நான் உங்க குடும்பம் இல்லையா மேடி" என்ற ஒற்றை வார்த்தையில் பளீர்… பளீர் எனக் கன்னத்தைத் திருப்பிக் காட்டி வாங்கிய அறையை வழங்கியது போல உணர்ந்த மேடி.



"கமலி! கமலி"



"சொல்லு மேடி"



"ஒரு பகையின் பழி வாங்கும் பயணம் இது, கமலி" என்றவனைக் காப்பாற்ற ஆதவன் வருகை தந்தான்.