• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 16

கதவை தட்டும் சத்தம் கேட்கவே "இந்தா வாரேன்!" என்ற குரலோடு வந்து கதவை திறந்தாள் கல்யாணி.

"ஹாய்!" என்றபடி அவள் தோள்களைப் பிடித்து அவளை உள்ளே நகர்த்தி தானும் உள்ளே வந்தவன் கதவை அடைத்து விட்டான்.

"நீங்க என்ன இங்க?" கண்களை சுருக்கி சந்தேகமாய் கல்யாணி கேட்க,

"ஃபார் யூவர் கைண்ட் இன்ஃபார்மேஷன்.. இது என் ரூம்.. கல்யாணம் ஆகிட்டதால நம்ம ரூம்" என்றான் ப்ரணித்.

"அப்பத்தா?" என்றபடி மூடிய கதவை அவள் பார்க்க,

"அப்பத்தாவை ஸ்ரே பார்த்துக்குவான்.. அம்மாகிட்ட சொல்லிட்டேன்.. சும்மா பயந்துட்டு இருக்காத" என்றவன் பாத்ரூம் அறைக்குள் நுழைந்து கதவடைத்து விட அவன் வருகைக்காக அப்படியே நின்றாள் கல்யாணி.

கதவை திறக்கும் சத்தம் கேட்கவுமே, "நான் எதுக்கு பயப்படனும்? எனக்குலாம் எந்த பயமும் இல்ல.." என்றவளை தான் எப்போது அப்படி கூறினோம் என்று புரியாமல் பார்த்தான் ப்ரணித்.

"உங்க ரூமு தான்.. அப்பத்தாக்கு தெரிஞ்சா வையும் அதுக்கு தான் கேட்டேன்.. " என்றாள் மீண்டும்.

"அய்யோ கல்யாணி! என்ன நீ எல்லாத்தையும் நான் சிங்க்லேயே புரிஞ்சிக்குற.. நானும் ஜாதகம், ஜோசியம்னு எல்லாத்தையும் நம்புறவன் தான் மா" என்றதும் அவள் அவனை நம்பாமல் பார்க்க,

"முதல்ல இந்த லுக்க மாத்திடு.. எப்ப பாரு சந்தேகத்தோடயே பார்க்குற மாதிரி இருக்கு.. முதல் நாளே உன் வீட்டுல உன் ரூம்க்கு வர்றதை ஆச்சி தான் ஆப்பு வச்சுச்சி.. அதான் அவங்களை ஸ்ரே வச்சு கரெக்ட் பண்ணினேன்.. வேற ஒன்னும் இல்ல.." என்றவனை இன்னும் அவள் குழப்பமாய் பார்க்க,

"அட யார்டா இவ!" என்றவன்,

"உனக்கு என்னை தெரியாது.. எனக்கு உன்னை தெரியாது.. என்னென்னவோ நினச்சு எப்படி எப்படியோ இந்த மேரேஜ் முடிஞ்சிருச்சு.. சோ! வெரி ஃபர்ஸ்ட் உனக்கு என்னை தெரியணும்.. எனக்கு உன்னை தெரியணும்.. அதுக்கு முதல்ல நாம பேசிக்கணும்.. பிரண்ட்ஸ் ஆகணும்னு எவ்வளவோ இருக்கு.. சடங்குன்னு சொல்லிட்டு என்னவோ உன்னை பார்த்ததும் உன் மேல நான் பாயுற மாதிரி ஆளாளுக்கு முறச்சு பாக்கறங்க.. கிராமம்ன்றதால தான் நானும் சைலேண்ட்டா இருந்துட்டேன்.." என்று அவன் பேச பேச கேட்டுக் கொண்டே நின்றாள் கல்யாணி.

"என் வீட்டுல... சாரி சாரி! நம்ம வீட்டுல அப்படி எல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. இந்த ப்ரணி எப்படின்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.. சோ நோ ப்ரோப்லேம்.. பகல்ல நியூ கப்புல்னு பார்க்க யாராச்சும் வந்துட்டே இருப்பாங்க.. அப்ப பேச நேரம் இருக்காது.. அதான் இப்போ வந்தேன்" என்று கூறி முடித்து அவளைப் பார்க்க,

"இப்ப என்னத்த சொல்ல வாரிங்க?" என்றாள்.

"இன்னுமா புரியல? சும்மா பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்னு சொன்னேன்" என்றான் மலைத்து.

"அதத்தான் இம்புட்டு பெருசா பேசினிங்களாக்கும்!" என்றவளை வெட்டவா குத்தவா என பார்த்தான் ப்ரணித்.

"இங்கன தான இருக்கேன்.. பொறவு பேசுனா ஆவாதாங்கும்.." என்று கூறி போர்வையை அவள் உதற,

"சுத்தம்!" என்றான் சத்தமாய்.

"என்னது?" அவள் கேட்க,

"என்னோட முதல் ஆசையே வைஃப்கிட்ட பேசி பழகி பிரண்ட் ஆகுறது தான்.. சரியா சொல்லணும்னா லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. இப்ப உனக்கு விளக்கம் சொல்றதுக்கே என்னோட பாதி வயசு போய்டும் போல!" என்று ப்ரணித் கூற,

"புருசன் பொண்டாட்டின்னு ஆன பொறவு என்ன ப்ரண்ட் ஆவுறது? பொண்டாட்டிய பொண்டாட்டியா பாத்தா போதாதா? நானும் தான் எல்லாம் பாக்குதேனே! ப்ரண்டுனு சொல்லுதது பொறவு லவ்வுன்னு சுத்துதது.. கல்யாணத்துக்கு முன்னவே ஊர் ஊரா சுத்தி என்னத்த பேசுத்தோம்னே தெரியாம பேசிக்கிட்டே இருக்குதது.. கடைசில கல்யாணம் முடிஞ்சதும் பேச ஒன்னும் இல்லாம பிரிஞ்சி போயிருதது.." என்றவளை இவன் கண் இமைக்காமல் பார்க்க,

"எனக்கு தெரியாது ஊர்காடு தானனு நினச்சீங்களா? கிராமம்னாலும் ஊர் உலகம் எப்படி இருக்குன்னு தெரியாம ஒன்னும் இல்ல.. கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் தெரிஞ்சிகிட்டு புரிஞ்சிகிட்டு வாழ முடியாதாக்கும்? கல்யாணத்துக்கு முன்னயே பழகி பாக்கேன்னு போனா பொறவு அத்துக்குட்டு தான் போவணும்.." என்று நிறுத்தியவள் சில நொடிகளுக்கு பிறகு அதிகமாய் பேசிவிட்டதாய் தோன்றவும் அமைதியாகிவிட,

"இவ்வளவு இருக்குதா? இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை கல்யாணி!" என்றான் ப்ரணித்.

"எதையோ பேச வந்தீங்க.. நான் என்னத்தைய்யோ சொல்லிக்கிட்டு இருக்கேன்.." என்றாள்.

"இல்ல நீ சொல்றது தான் சரி.. கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சி புரிஞ்சிகிட்டு வாழறது தானே வாழ்க்கை? கரெக்ட்டா தான் சொல்லி இருக்க" என்றவன் அவளை பார்க்கும் விதம் மாறி இருந்தது.

"என்ன இப்படி பாக்கான்!" என்று நினைத்தவள் தன் துணிகளை எடுப்பதை போல பேக்கில் குனிந்து கொள்ள, ப்ரணித் பார்வை அவளிடம் இருந்தாலும் அவள் கூறியதில் நின்றது அவன் மனது.

சில நிமிடங்கள் அமைதியாய் கழிய, "நீ தூங்கணும்னா தூங்கு!" என்றவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

"என்னத்தயோ பேச தான அப்பத்தாவ ஒளிச்சிவுட்டு வந்திருக்கிங்க.. பேசத்தான?" என்றாள் கல்யாணி அவன் அமைதியை நினைத்து.

அவள் கேட்டதில் சிரித்தவன், "இது தான்னு இல்ல.. சும்மா பேசலாம்னு தான் வந்தேன்.. பட் உன் பாயிண்ட்ல பார்க்கும் போது தான் ஏன் நீ சொன்ன மாதிரி மெதுவா தெரிஞ்சிகிட்டா என்னனு தோணுது" என்றான்.

"சரி தான்.. அப்போ நான் தூங்குதேன்" என்று படுக்கைக்கு சென்றவள்,

"ஒன்னு எனக்கு இப்போ கேக்க சொல்லி மனசு சொல்லிகிட்டே இருக்கு.. கேட்டா தப்பா நினச்சுக்குவிங்களோ?" என்று கேட்க,

என்னவாய் இருக்கும் என்ற ஆவல் முகத்தினில் தெரிய "என்ன?" என்றான் ஆர்வமாய்.

"இல்ல! அன்னைக்கு முத நாள் போனப் போட்டேனே! அன்னைக்கு பேசுததுக்கு முன்னாலேயே நீங்க... அது நான்னு தெரிஞ்சி சொன்னிங்களா இல்லனா இது தான் பழக்கமேயா?" என்றாள் மெல்லிய முறைப்பு தெரிய.

அவள் கேட்டதில் சத்தமாய் புன்னகைத்தவன், "இப்படி பேசுறது கூட நல்லா இருக்கு கல்யாணி!" என்றான் புன்னகையுடன்.

"ம்ம்ம்! உனக்கு எப்படி சொல்றது?" என்று யோசித்தவன்,

"நான் உண்மையை சொல்றேன்.. நம்புறது நம்பாதது உன் சாய்ஸ்" என்றுவிட்டு தன் ட்ரீம் கேர்ள் என்று ஆரம்பித்து செஞ்சுரி அடித்தது வரை கூறி முடித்தான்.

"எங்கே, எப்படினு தெரியல.. ஸ்கூல் லாஸ்ட் படிக்கும் போதே லவ் மேரேஜ் தான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்.. காலேஜ் முடிக்குற ஸ்டேஜ்ல ஸ்டார்ட் பண்ணினேன்.. ஜஸ்ட் ஒரு ஒன் மன்ந்த் முன்னாடி தான் ஒரு பிசாசு என்னை யோசிக்க வச்சுச்சு.. சீரியஸ்லி நான் அவளுக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்.." என்று முடிக்க,

"இதுல நான் எங்க வந்தேன்னு சொல்லவே இல்லய?" என்றாள் விடைவேண்டி.

"ஃபுல்லா சொன்னா தானே உனக்கு புரியும்?" என்றவன்,

"ஓகே! நீ தான்னு தெரிஞ்சு தான் சொன்னேன்.. ஆனா உன்னை பார்த்தது இல்ல.. நான் பார்க்காமல் அப்படி எல்லாம் யார்கிட்டயும் சொன்னது இல்ல.. அப்ப ஏன் அப்படி சொன்னேன்னு இப்ப யோசிச்சா..." என்று நிறுத்த,

"நீ சொன்னது தான்.. நாம பேசி பழகி கொஞ்சம் கொஞ்சமாவே தெரிஞ்சிக்கலாம்.. இதை மட்டும் வச்சு நான் இப்படித் தான்னு முடிவு பண்ணிடாத.. அதை அப்படியே விட்டுடு.." என்றான்.

"என்னமோ சொல்லுதிங்க!" என்று அவள் உறங்க செல்ல,

"என்னை பத்தி உன்கிட்ட சொல்லவும் நீ என்ன நினச்ச? நீ என் போட்டோ பார்த்தன்னு கூட அப்பத்தா சொல்லிச்சே" என்றான் விடை தெரிய வேண்டி ஆவலோடு.

வடிவும் அவளும் பேசிக் கொண்டதும், திருமணத்தை நிறுத்த என சதி செய்ததும் அனைத்தும் சொதப்பியதுமாய் நினைத்து அவள் எப்படி சொல்ல என நினைக்க,

"கிராமம் அது இதுன்னு நான் தான் மேரேஜ் வேண்டாம்னு கொஞ்சம் அம்மாகிட்ட ஓவரா பேசிட்டேன்.. நீ எப்படியும் உன் அப்பா கேட்டதும் ஓகே சொல்லி இருப்ப இல்ல.. அதுவும் போட்டோ பார்த்ததும் வேணாம்னு எல்லாம் சொல்லி இருக்க மாட்ட இல்ல?" என்ற அவனின் வார்த்தை அவனை அவனே உயர்த்தி வர, அவ்வளவு தான் அவளை அவனே சீண்டிவிட்டது போல ஆனது.

"ஆமா! இவரு பெரிய இவரு! பாத்த உடனேயே பல்லக் காட்டிட்டோம்.. போயா! நானே கல்யாணத்த நிறுத்த அம்புட்டு வேலைய பாத்தும் ஒண்ணுத்துக்கும் ஆவாம கடனேன்னு இங்க வந்து நிக்கேன்.. என்கிட்ட வந்து உரண்ட பேசுத!" என்று விட, 'பே!' என விழித்தான் அவன்.

"கல்யாணத்தை நிறுத்த பார்த்தியா?" அதிர்ச்சியாய் அவன் கேட்க, ம்ம் என தலையசைத்தாள்.

"ஏன் ஏன் ஏன்? அது.. அதுவும் போட்டோ பார்த்தும்.. எப்படி?" நம்பவே முடியாமல் அவன் கேட்க,

"இங்க பாருங்க.. மறுவடியும் சொல்லுதேன்.. நீங்க என்ன பெரிய இவருன்னு நினப்பா? ஆயிரங் கவலைல இருக்கேன்.. உங்க போட்டோ பாத்து வேண்டாம்னது தான் இப்போ பெருசா போச்சா உங்களுக்கு?" என்று கேட்டாள்.

"கல்யாணி நிஜமா தான் சொல்றியா?"

"பொறவு என்னத்துக்கு நான் உங்களுக்கு போனப் போட்டேன் நினைச்சீங்க? அப்டியே உங்க அழகுல மயங்கிட்டேன்னு நினைப்பாக்கும்?"

"இல்லையா?"

"யோவ்! என்னய பேச வைக்காதிங்க.. சொல்லிப்புட்டேன்"

"அட ஆண்டவா! இது என்ன டா டா ப்ரணிக்கு வந்த சோதனை?" என தலையில் கைவைத்து அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டான் ப்ரணித்.

"நான் வேண்டாம்னு சொன்னதுக்கு ரீசன் இருக்கு.. ஐ ஹாட் அ லோட் ஆப் ட்ரீம்ஸ் அபௌட் மை லைஃப்.. பட்...??" என்றவனுக்கு இன்னும் அதிர்ச்சி தான்.

'என்னை ஒரு பெண்.. அதுவும் கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்... என்னைப் பார்த்தும் வேண்டாம் என திருமணத்திற்கு மறுப்பதா?' அவள் என்ன காரணம் கூறினாலும் தன்னை மறுத்ததை ஏற்று கொள்ள முடியும் என தோன்றவில்லை ப்ரணித்திற்கு.

"ஏன் எங்களுக்குலாம் இருக்காதாங்கும்? இந்த ட்ரீம்ஸ்ஸு.. வாழ்க்க.. இது எல்லாம்?" என்ற கல்யாணி,

'இது நான் கல்யாணம் வேண்டாம்னதுக்கு எல்லாம் கவலைப்படல... மன்மத ராசா அழகுல நான் மயங்கலனு தான் வருத்தப்படுது' என அவன் மனதை அவன் வார்த்தைகள் கொண்டு புரிந்திருந்தாள் கல்யாணி.

"நான் பேசுறது அவ்வளவு புரியுதா உனக்கு?" அதற்க்கும் ப்ரணித் ஆச்சர்யம் காட்ட,

"ந்தா பாருங்க.. அவ்ளோ தான் சொல்லிப்புட்டேன்.. இந்த மட்டந்தட்டி பாக்குத வேலை எல்லாம் எனட்ட வேண்டாம்.. என்ன ரொம்ப பேசுதீங்க? நானும் ஸ்கூல முடிச்சிருக்கேன்.. இங்கிலிஷ் என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா? சும்மா எல்லாத்துக்கும் குறயா சொல்லிக்கிட்டு இருக்கீங்க?" என சண்டைக்கு தயாராக,

"மட்ட தட்டி மீன்ஸ்?" என்றான் அவள் பேசுவது புரியாத பாவனையில்..

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
மட்ட தட்டி மீன்ஸ்.....
மாப்ள எனக்கெல்லாம் நீ செட்டே இல்ல.....
மன்மத குஞ்சுன்னு நினைப்பு....
மரியாதை கெட்டுடும் போயிடு அப்படின்னு அர்த்தம் 😂😂😂😂😂...
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
மட்ட தட்டி மீன்ஸ்.....
மாப்ள எனக்கெல்லாம் நீ செட்டே இல்ல.....
மன்மத குஞ்சுன்னு நினைப்பு....
மரியாதை கெட்டுடும் போயிடு அப்படின்னு அர்த்தம் 😂😂😂😂😂...
Adei ulti😂😂😍
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,988
மாட்டிகிட்டான் மாட்டிக்கிட்டான் 😄😄😄😄😄பயபுள்ள செமயா மாட்டிகிட்டான், கல்யாணி 👍👍👍👍அழகுல மாயங்காம இருக்குறது இது தானா 😁😁😁😁😁😁
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
மாட்டிகிட்டான் மாட்டிக்கிட்டான் 😄😄😄😄😄பயபுள்ள செமயா மாட்டிகிட்டான், கல்யாணி 👍👍👍👍அழகுல மாயங்காம இருக்குறது இது தானா 😁😁😁😁😁😁
இதே தான் da
 
Top