அத்தியாயம் 2
ராசு என்பவர் ஊரின் பெரிய மனிதர். ஊரில் எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் துக்கத்திற்கும் என அவரின் முன்பே பேசப்படுவது வழக்கம்.
அவர்முன் சென்று பவனும் அரசனும் சனிக்கிழமை பெண் பார்ப்பதைப் பற்றி பேசி அவர் ஒப்புதல் பேரில் அரசன் அந்த தகவலையும் வீட்டில் கூறிவிட்டார்.
வீட்டின் நடுவில் இருந்த மர ஊஞ்சலில் போட்டோவை வைத்துவிட்டு தரையில் முட்டியிட்டு ஊஞ்சலைப் பிடித்தபடி அதை ஆட்டிக் கொண்டே போட்டோவை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் கல்யாணி.
"எம்புட்டு நேரம் தான் பாத்துகிட்டு கிடப்ப.. காலு நோவலையாக்கும்.." ஆவலாய் கேட்டார் வடிவு.
"கிழவி! நேத்து முழுக்க என்கூட ஆடுன.. இன்னைக்கு உன் மவன் கூட ஆடுதியாக்கும்.. ஆடுத கால என்ன செய்யுவேன்னு பாத்துக்கோ" என்றவள் கண்கள் போட்டோவிலேயே இருந்தது.
"அந்த புள்ள மூஞ்ச உனக்கு பாத்த மாதி இல்ல?" வடிவு பேத்தி பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் அடுத்த கேள்விக்கு தாவ,
"இல்ல!" என்றாள் ஒரே வார்த்தையில்.
"போன மாசம் டிவில பாக்கும் போது சொன்னியே யாவம் (நியாபகம்) இருக்கா.. வாழ்ந்தா சூரியா சோதிகா மாதி வாழனும்னு.. என் கண்ணுக்கு இந்த போட்டோ பாக்கயில அவன் தான் தெரியுதான்.. உனக்கேத்த சோடி பொருத்தம்னு தோணுதுத்தா.. சரினு உங்கப்பன்கிட்ட சொல்லிறேன்.." வடிவுக்கு அவ்வளவு ஆசை வந்துவிட்டது அந்த புகைப்படத்தை பார்த்ததில் இருந்து.
அரசன் புகைப்படத்தை தாயின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட,
"போட்டா ஒன்னு தான் தேவையாட்டும் இருக்கு" என்று முனகியபடி கவரைப் பிரித்து பார்த்த வடிவின் திறந்த வாய் மூடவே இல்லை.
"என்னத்த இப்படி பாக்குதிய?" என்ற அன்னமும் வடிவின் அருகே வந்து பார்த்தவருக்கு வந்த புன்னகையில் கல்யாணிக்கு புரிந்தாலும் போட்டோவைப் பார்க்காமல் இருக்க,
"ஏட்டி ஏட்டி! இங்கப் பாரு டி" என அவளருகே துள்ளி குதித்து ஓடி வந்திருந்தார் வடிவு.
"வாய மூடு! போட்டோ நனைஞ்சுட போது" என்றபடி அந்த போட்டோவைப் பார்க்க ஆரம்பித்தவள் தான் விதவிதமாய் அதை சுற்றி சுற்றி பார்த்தாள்.. பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இவன போயி சூர்யா கூட சேக்குதிய.. எந்த பக்கமாட்டு பாத்தாலும் முகரகட்டய பாக்க முடியல.." என்றாள் அவ்வளவு நேரமும் பார்த்துவிட்டு.
ஆசையாய் தான் பார்க்கிறாளோ என்று வடிவு நினைத்துக் கொண்டிருக்க அவள் வாய் வார்த்தையில் இவர் முகம் புஸ்ஸென்று ஆனது.
"ம்ம்க்கும்.. உங்க பேத்தியாக்கு சீமைல இருந்து வந்தது பத்தாதாட்டம் இருக்கு.. அம்புட்டும் திமிரு.. இவக என்னத்த சொல்லுதது நாம என்னத்த கேக்குத்ததுங்க புத்தி.." அன்னம் மகளை வசைபாட,
"நீ சும்மா இரு இவளே.. பாத்த உடனே புடிச்சி போய்டணுமாக்கும்.. எம் மவன் என்ன உன்னைய பாத்த உடனேயா கல்யாணத்துக்கு சரின்னு சொன்னான்?" வடிவு மருமகளை தாக்க,
'ஆமா நான் மட்டும் இவரு இல்லைனா உசுர வுட்ருவேன்னு ஒத்த காலுல நின்ன மாட்டுக்கு தான்' அன்னம் முணுமுணுக்க,
"என்னத்த டி வாய்க்குள்ள அரைக்க?" என்றார் வடிவு.
"எனக்கு கேட்டுது அப்பத்தா" குறும்புப் புன்னகையோடு கல்யாணி கூற,
"வாய வச்சுக்குட்டு சும்மா இரு டி" என்ற அன்னம் உள்ளே சென்றுவிட்டார்.
"புருசனுக்கு இவ்வளவு ஏண்டு பேசுதியே.. பையன்ட்ட வீட்டாளுக பத்தி பேசுன உன் புருசன் ஒரு வார்த்தை பையன பத்தி பேசுனானா? வாழப் போறவ அத தான தெரிஞ்சி வச்சுக்கணும்?" வடிவு குரலை உயர்த்தி அன்னத்திடம் கேட்க,
"கேளு கிழவி! நல்லா கேளு! என் ஆத்தாவ மட்டும் கேக்கிய.. அது யாரு வாசப்படில இருந்தா தூக்கிட்டு வந்த? நீ பெத்ததுக்கிட்ட அது வீட்டுல இருக்கும் போது கேக்கத விட்டுட்டு சிவனேனு வீட்டுல கிடக்க அம்மைய ஏசுத.." என தாய்க்கு ஆதரவு கொடி பிடித்தாள் கல்யாணி.
"ஏட்டி உனக்காவ பேசுனா நீ என்னையவே பேசுத?" வடிவு பாவமாய் கேட்டதும்,
"பெரியவங்கன்னு மரியாதையா பேசுதியா டி நீ?" என கரண்டியுடன் வந்தார் அன்னம்.
"அவ கிடக்கா.. நீ சொல்லு த்தா.. என்னத்த பண்ணனும்.. உனக்கு வேண்டாம்னா எனட்ட சொல்லு.. உசுர குடுத்தாவது கல்யாணத்த நிறுத்தி புடுதேன்" வடிவு பேத்தியிடம் கூற,
"நல்ல வார்த்த ஒண்ணாவது வருதா பாரு.. இவளும் அவகள பாத்து தான் கெட்டு போகுதா" மாமியாரை தாளித்துக் கொண்டே குழம்பிற்கும் தாளித்தார் அன்னம்.
"நீ உசுர குடுத்தா வேணா கல்யாணம் நிக்கும்.. வேற ஒண்ணுத்துக்கும் உன் மவன் அசறுத மாதி இல்ல" கல்யாணி கூறவும் திருதிரு என வடிவு விழிக்க,
"தேவையா? அவகிட்ட வாயக் குடுக்கணுமா?" உள்ளிருந்து கூறிக் கொண்டாள் அன்னம்.
"பயப்படாத அத எல்லாம் கேக்க மாட்டேன்.. அதான் வாறாம்ல பொண்ணு பாக்க.. வரட்டும்.. அவன குடுக்கதுல அசலூர்காரன் எவனும் வரக் கூடாது இந்த பக்கமா" கல்யாணி முடிவு செய்தவளாய் கூற,
"அது தாம் சரித்தா!" என ஒத்து ஊதினார் வடிவு.
"இன்னும் யாரும் வரலையா?" வீட்டிற்கு வந்த ப்ரணித் சமையல் வேலை செய்யும் அங்கையிடம் கேட்க,
"இல்ல தம்பி.. விஷேசம் ஒன்னு இருக்கு.. முடிச்சிட்டு வர நாலு நாள் ஆகும்னு சொன்னாங்க.. உங்களுக்கு போன் போகலையாம்" என்று அங்கை கூற, அவருக்கு பதில் அளிக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான் ப்ரணித்.
"ம்மா! இன்னும் அந்த பட்டிக்காட்டுல என்ன பண்றீங்க?" எடுத்ததும் கோபமாய் முகத்தை வைத்து வீடியோ காலில் ப்ரணித் கேட்க,
"பட்டிக்காடா.. முதல்ல இங்கே வந்து பாரு டா.. அப்புறம் உன் ஒப்பீனியன் சொல்லு.. உனக்கு ஒரு குட் நியூஸ் கொண்டு வரலாம்னு தான் பார்த்துட்டு இருக்கோம்" என்றார் சிரித்த முகமாய் ராணி.
"எனக்கு குட் நியூஸ்? அதுவும் அந்த ஊர்ல இருந்து?" நக்கலாய் அவன் கேட்க,
"ண்ணா! செம்ம வில்லேஜ்ண்ணா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க!" என்று தான் சுற்றிப் பார்த்த வயல்வெளி முதற்கொண்டு ப்ரணித் தம்பி ஸ்ரேயாஸ் இடையில் வந்தான்.
"ஆமா பெரிய யூரோப்பை சுத்தி பார்த்துட்டு இருக்காங்க.. எப்படா கிளம்புறிங்க?" என்று எரிச்சலாய் கூறி சோபாவில் விழுந்தான்.
ஊருக்கு கிளம்பும் பொழுதே அவனையும் அழைத்து செல்வது தான் முடிவு. அவர்கள் செல்லும் இடத்தை கேட்டவன், 'வில்லேஜ் வந்து நான் என்ன செய்ய? நான் வர்ல' என்றுவிட ராணியும் அவனை வற்புறுத்தவில்லை.
"ப்ரணித்! அம்மா உனக்கு...." என்று சரவணன் கூற வர,
"ப்பா!" என்று ஸ்ரேயாஸ் தடுப்பதற்குள் கணவனின் கால்களில் மிதித்து தன் எதிப்பை வன்மையாய் காட்டி இருந்தார் ராணி.
ஆனால் முகத்தில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சாந்தமாய் எப்போதும் குடியிருக்கும் புன்னகை இருக்க, ஆ.. என்று அலறி இருந்தார் சரவணன்.
"வாட் ப்பா?" சோபாவில் விழுந்தவன் பதறி எழுந்து அமர,
"இடுப்பு புடிச்சிருக்கும்.. அதை விடு.. நான் வந்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்.. நாங்க வர இன்னும் டூ டேஸ் ஆகும்.. அதுவரை மேனேஜ் பண்ணிக்கோ" என்று கட் செய்துவிட்டார் ராணி.
"ம்மா.. ம்மா.. ம்மா!" டூ டேஸ்? என்று இழுத்து நினைத்து ப்ரணித் கேட்பதற்குள் ராணி வைத்துவிட அந்த குட் நியூஸ் அவன் நியாபகத்திலேயே இல்லை.
"எத்தனை நாள் வன்மம் டி உனக்கு?" என்று கால்களைப் பிடித்தபடியே சரவணன் கேட்க,
"இதெல்லாம் கம்மி ப்பா உங்களுக்கு.. நீங்க மட்டும் சொல்லி இருந்திங்க.. அம்மா உங்களை என்ன வேனா பண்ணி இருப்பாங்க.. பென் தேடுற மாதிரி ஊரு முழுக்க பொண்ணு தேடிட்டு இருக்கான்.. பத்தாததுக்கு என் காலேஜ் வித்யாகிட்ட கூட ஐ லவ் யூ சொல்லி வச்சிருக்கான்.." ஸ்ரேயாஸ் கூட கொந்தளிக்க,
"சரி தான் டா.. அதுக்காக பொண்ணு பார்க்க போறதை கூடவா சொல்லக் கூடாது?" என்றார் சரவணன்.
"சொன்னா இங்கேருந்து பார்சல் கட்டி மூணு பேரையும் தூக்கிடுவான்.. இல்லம்மா?" என்று ஸ்ரேயாஸ் சிரிக்கவும்,
"நான் முடிவு பண்ணிட்டேன்.. அவனுக்கு கல்யாணி கூட மேரேஜ் பண்ணி வச்சுட்டு தான் எனக்கு அடுத்த வேலையே! எப்ப பாரு எந்த பொண்ணை பாரு ஐ லவ் யூ.. பக்கத்து வீட்டுக்காரங்க முகத்துல முழிக்க முடியலை" ராணியும் முடிவாய் கூறினார்.
"கையை கட்டி கல்யாணம் பண்ண முடியாது ராணி.. அவன்கிட்ட சொல்லாம பொண்ணு பாக்குறது எப்படி?" கணவன் கேட்க,
"தாலி கட்ட தானே மாப்பிள்ள வேணும்? பொண்ணு பார்க்க நாம போதும்" என்றுவிட்டார்.
"அவனோட எக்ஸ்பேக்டேஷன் தெரிஞ்சே நாம இப்படி பண்றது தப்பு இல்லையா?" - சரவணன்.
"இல்லையே! அவன் எக்ஸ்பேக்டேஷன் தான் ரொம்ப தப்பா இருக்கு.. அவனா எதாவது ஒன்னை புடிச்சி இழுத்துட்டு வர்றதுக்கு முன்னாடி இந்த கல்யாணத்தை முடிக்கனும்" - ராணி.
"அதை பண்ணுங்க ம்மா ஃபர்ஸ்ட்.."
குடும்பமே இப்படி ப்ரணித்திற்கு எதிரியாய் இருக்கும் அளவிற்கு என்ன தான் செய்தான் அவன்?
காதலிப்பது தவறா என்றால் இல்லை தான்.. காதலியை கண்டுபிடிப்பதாய் கூறி அதை மட்டுமே வேலையாய் சுற்றுபவனை என்ன செய்ய இயலும்?
அழகான பெண், மாடர்ன் மங்கை இவை இரண்டும் தான் ப்ரணித் எதிர்பார்க்கும் அதிகபட்ச கனவு. கூடவே காதல். வாழ்க்கை சொர்க்கம் அவ்வளவு தான்.
இவன் போய் கேட்பது.. இவனிடம் வந்து கேட்பது.. இவன் வேண்டாம் என்றது.. அவர்கள் வேண்டாம் என்றது.. என்று ப்ரணித் நண்பர்கள் கூறியது போல நூற்றை தொட இருக்கிறான் ப்ரணித்.
எதற்கும் பெரிதாய் அலட்டிக் கொள்ள மாட்டான். தன்மேல் ஈடுபாடு இல்லை என்றால் காதல் எங்கிருந்து வரும்? என்ற அறிவிருக்கும் அவனுக்கு ஐ லவ் யூ என்ற வார்த்தை மட்டும் காதலை கொண்டு வராது என்பது தெரியவில்லை.
சென்னையின் பிரபல ஐடி பார்க்கில் வேலை செய்பவன் வேலையை தவிர மற்றதை நன்றாய் செய்வான்.
வேலையில் கவனம் செல்லாமல் இருப்பது அவன் தவறு அல்ல.. அங்கிருக்கும் பெண்களின் தவறு என்பது அவன் பொன் புது மொழி.
புதிதாய் பெண் வேலைக்கு சேர்ந்தால் அனைவரின் கண்களும் முதலில் பார்ப்பது ப்ரணித்தை தான்.
வேண்டாம் என்றான பின் நீ யாரோ நான் யாரோ என்பதை போல திரும்பிப் பார்க்காவிட்டாலும் இந்த ஐ லவ் யூவை அவன் கொண்டு சேர்க்கும் இடங்கள் எல்லாம் அழகைக் கொண்டு என்பதே பெரும் வருத்தம்.
அதுவும் அவன் நினைத்த மாதிரியாய் இருந்தால் மட்டுமே அவன் கண்களும் அந்த புறமாய் திரும்பும்.
வாழ்க்கை வாழத் தானே என்பதை மிக சரியாய் தவறாய் புரிந்து வைத்திருப்பவன் தான் ப்ரணித்.
தொடரும்..