• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

விழி 5

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
726
537
93
Chennai
அத்தியாயம் 5

"அவன் கூடவே இருக்க எங்களுக்கே இப்ப ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் நியூஸ் தெரியும்.. ஒரு வாரம் லீவ்ல இருந்த உனக்கு எங்கிருந்து தான் நியூஸ் வருதோ!" விவேக் கூற,

"லீவ்ல போனா அப்படியே போய்டுவாங்களா? ஆபீஸ்ல லேட்டஸ்ட் மசாலா நியூஸ் என்னனு தெரிஞ்சு வச்சுக்க வேணாம்?" என்ற மது,

"நீங்க எல்லாம் என்ன டா பிரண்ட்டு? இந்நேரம் அவனை கூட்டிட்டு வெளில போயிருக்க வேண்டாம்? நீ வா ப்ரணி நாம போலாம்" என்று கேட்க,

"ப்ச்! நாட் இன்ட்ரெஸ்ட் மது.." என்றான் ப்ரணித் சலிப்பாய்.

எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன் இவ்வளவு சலிப்பாயும் இருந்ததில்லை.

"ஹே! என்ன நீ? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க? அவ வேண்டாம்னு சொன்னா வேற பொண்ணா இல்ல?" அருண் கேட்க,

"அவ வேண்டாம்னு சொன்னது மட்டர் இல்ல.. இவன மட்டேர்..." என்ற மதுவை,

"மது!" என்ற அழைப்பிலும் கண்டிப்பான பார்வையிலும் அடக்கி இருந்தான் ப்ரணித்.

மதுவின் பாதி வார்த்தையிலேயே நண்பர்கள் புரிந்து கொண்டனர். அதிலும் விவேக் நன்றாய் புரிந்து கொண்டான்.

காதலித்து திருமணம்.. மனம் ஒன்றிய வாழ்வு என்று இருப்பவனை போய் இப்படி கேட்டு வைத்திருக்கிறாளே! அதுவும் இவனுக்கு பிடித்திருக்க போய் தான் அவளிடம் இவன் பேச சென்றதே! இல்லை என்றால் திரும்பிப் பார்ப்பானா?

மறுத்திருந்தால் விலகி சென்றிருப்பான்.. தான் தேர்வு செய்தது தனக்கு கிடைக்கவில்லை என்பதை விட, தன் தேர்வு தவறு என்பதில் அவன் மூளை தேங்கி இருந்தது.

"அந்த பொண்ணா அப்படி கேட்டது?" வாயை திறந்து பார்த்திருந்தான் அருண்.

"இங்கே வர்றதுல மாடர்ன் ட்ரெஸ் எல்லாம் கெட்டதும் இல்ல, ஹோம்லி லுக் எல்லாம் நல்லதும் இல்ல" என்றாள் மது அருண் வார்த்தை புரிந்து.

"ப்ச்! அதை விடு! எங்கேஜ்மெண்ட் எப்படி போச்சு? பியன்ஸே என்ன சொல்லறார்?" ப்ரணித் அனைவரின் மனநிலை புரிந்தவனாய் பேச்சை மாற்ற,

"அடி தூள்! செம்ம ஸ்வீட் தெரியுமா? அதுவும் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் ஸ்டேஜ்ல என்கூட தொட்டதெல்லாம் தூள் பறக்கும் மம்பட்டியான் சாங்க்கு ஆடினான் பாரு! சான்ஸ்லெஸ்.. எனக்கு சரியான சாய்ஸ்னா அவன் தான்" என தான் திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை பற்றி பேச,

"சோ குட் மது! காங்கிரட்ஸ்!" என்ற பிரணித் எண்ணம் தனக்கும் இதுபோல தான் தேடும் ஒருத்தி கிடைத்திடுவாளா என்பதில் நின்றது.

நேற்று ஹரிணியிடம் சறுக்கியதில் வேறு இன்னும் கொஞ்சம் பயம் திருமணத்தின் பின் ஆன வாழ்க்கை குறித்து.

அவள் டேட்டிங் அழைத்த பின்பும் கூட அவளின் அழகிலும் தன் கண்களுக்கு தெரிந்த உடை நேர்த்தியிலும் என அவன் உபயோகிக்கும் காதல் என்ற வார்த்தையை அவளிடம் கூறி இருக்க, கேட்டவளோ கேட்க கூடாததை கேட்டதைப் போல முகம் சுழித்து பின் எள்ளலாய் அவனைப் பார்த்து சிரித்தவள்,

"ஓஹ்! நீ அந்த மாதிரி டைப்பா?" என்று கேட்க, தான் கேட்க கூடாத ஒருவளிடம் தன் வார்த்தையை விட்டிருந்தது புரிந்தது ப்ரணித்திற்கு.

"ஓகே மிஸ் ஆர் மிசஸ் ஹரிணி! நீங்க கிளம்பலாம்" கால் மேல் காலிட்டு கூறியவன் கோல்டு காபியை உறிய,

"எக்ஸ்க்யூஸ் மீ! திஸ் இஸ் பப்ளிக் பிளேஸ்.. நீ என்ன என்னை போக சொல்றது?" என்று ஹரிணி கேட்க, வெளியில் கோபத்தைக் காட்டாத முகத்துடன்,

"ஓகே! தென் நீ என்கிட்ட கேட்ட க்வெஸ்டினை இந்த பப்ளிக் பிளேஸ்ல பப்ளிக்கிட்ட கேளேன்!" என்று கூற,

"ஏய்! என்ன பேசற நீ?" என்றவள் கோபமாய் எழுந்தவள் அவன் முன் குனிந்திருக்க,

"முடியாது? சோ கெட் அவுட் ஆப் மை வே!" என்றவன் தன் சத்தம் அருகில் இருக்கும் டேபிளிர்க்கு கூட கேட்காத அளவிற்கு கர்ஜித்திருந்தான்.

முகம் கறுக்க நின்றவளும் உடனே அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தாள்.

சில மணி நேரங்களுக்கு பின்பே அங்கிருந்து எழுந்திருந்தான் ப்ரணித்.

இப்படி யார் ஒருவரும் அவன்முன் கேட்டது இல்லை. அப்படிப்பட்ட பெண்களை இவன் கண்களால் பார்ப்பது கூட இல்லை.

இவன் தேர்வு, இவனை தேர்வு செய்து வந்த பெண்கள் என அனைத்துமே இவன் எதிர்பார்த்த ரகமாய் இருக்க, முதல் சறுக்கல் நூறாவது பெண்ணிடம்.

அதிலும் அதை கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த அன்னையும் அருகில் இல்லை என்பதில் இன்னும் அழுத்தமாய் உணர்ந்திருந்தான்.

இந்த அழுத்தம் அத்தோடு நில்லாமல் அடுத்தடுத்து என்று தன் வாழ்வின் முக்கியக் கட்டத்திற்கான கேள்வி என்ற சிந்தனையும் தோன்ற அடுத்து என்ற கேள்வியோடு எந்த பெண்ணையும் நம்பவும் பயம் என்ற நிலை தான் அவனுடையது.

"என்ன டா டீப் திங்கிங்?" மது கேட்க,

"ஹ்ம்! நத்திங்.. மேரேஜ் எப்போ?" என்றான் ப்ரணித்.

"நெக்ஸ்ட் வெட்னெஸ்டே.. இன்வைட் பண்றேன் அம்மா அப்பா எல்லாரும் வரணும்" என்றாள் மது.

"ம்மா! அண்ணா ஏதோ அப்செட் போல.. சரியாவே பேசலை.." ஸ்ரேயாஸ் அன்னையிடம் கூற,

"மார்னிங் ஊருக்கு போய் பேசிக்கலாம் ஸ்ரே! யார்கிட்ட அந்த உதவாத வார்த்தையை சொன்னானோ! எல்லாரும் ஒரே மாதிரியா இருப்பாங்க.. நாம வேற இங்கே இருக்கோம்.. அதான்.." என்று உடனே கண்டு கொண்டவர் போய் அவனை சமாதானப்படுத்தும் விதத்தையும் யோசித்துக் கொண்டிருந்தார்.

"எனக்கு கல்யாணியை ரொம்ப புடிச்சிருக்கு.. ஆனா ஒன்னு மட்டும் புரியல ராணி! ப்ரணி எதிர்பாக்குற பொண்ணு சென்னைலேயே இருக்கலாம் இல்ல? இப்படி கிராமத்துக்கு வந்து பார்த்து அவனுக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு யோசிச்சிட்டு இருக்க வேண்டாம்ல.. நாம பாக்கற பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருந்தா அவனே சரினு சொல்ல போறான்" சரவணன் கூற,

"அது தெரியாமலா இவ்வளவு தூரம் பொண்ணு தேடி வந்திருக்கோம்? ஏன் கல்யாணிக்கு அழகுல என்ன குறைய பார்த்தீங்க? இயற்கையான அழகுன்னா அது கல்யாணி தான்.. சென்னைல பொண்ணு கிடைப்பாங்க தான் ஆனா அவன் எதிர்பார்க்குற அந்த நேச்சுர் தான்.. அது கல்யாணிகிட்ட இருக்கு.. ப்ரணியும் புரிஞ்சிப்பான்.. டைம் ஆகலாம்.. ஆனா நிச்சயம் புரிஞ்சிப்பான்" என்று கூற,

"எல்லாம் சரி தான்.. அவன் அழகோட அவனுக்கு இக்குவலா எல்லாம் பாக்குறான்" சரவணன் நியாபகப்படுத்த,

"கல்யாணியால முடியாதுன்றிங்களா?" என்ற ஒற்றை கேள்வியில் அவர் அமைதியாக,

"அவளுக்கு எங்க எப்படி நடந்துக்கணும்னு நல்லாவே தெரியும்" என்றார்.

"ப்பா! அண்ணி போல்ட்னு சொன்னாங்க.. அப்படி ஒன்னும் அண்ணா கையை காலை கட்டி கல்யாணம் பண்ண போறது இல்லையே.. அண்ணாவும் பேசட்டும்.. நிச்சயம் புடிக்கும் ரெண்டு பேருக்குமே" என்றான் ஸ்ரேயாஸ்.

"நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா? அவன் ட்ரீம் என்னனு கேட்டா அழகான பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்றது தான்னு சொல்லுவான்.. அப்படிப்பட்டவன்கிட்ட கல்யாணியை ஏன் மாட்டி விடறீங்கனு கேட்குறேன்.." என்று சரவணனும் மகனுக்காக பேச,

"அது தான் பிரச்சனைனு நான் சொல்றேன் உங்களுக்கு புரியுதா? அழகான பொண்ணு வேணும்னா ஆயிரம் கிடைக்கலாம்.. அவன் காலம் முழுக்க வாழ அழகு மட்டும் போதுமா? அவனும் அழகை மட்டுமா எதிர்பார்த்து தேடிட்டு இருக்கான்? அவனோட மனைவிக்குன்னு அவன்கிட்ட சில எதிர்பார்ப்புக்கள் இருக்கு இல்லைனு சொல்லல.. அந்த எதிர்பார்ப்புகள் ஏன் கல்யாணிகிட்ட இருக்கறதை நீங்க பார்க்க மாட்டுறிங்க? அவன் போற பாதை தப்பா இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது.. அப்படி எதுவும் நடந்தா ப்ரணி வாழ்க்கை?" என்று பதட்டமாகி இருந்தார் ராணி.

"ம்மா! என்ன நீங்க? அப்பா சாதாரணமா கேட்டதுக்கு இவ்ளோ எமோஷன் ஆகுறீங்க?" என்றவன் நீரை எடுத்துக் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினான்.

"என்ன ராணி நீ? ஏன் இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுத்துக்குற? உன் முடிவு எப்பவும் தப்பாகாது எனக்கு தெரியும்.. ப்ரணி என்ன நினைக்குறானோனு தான் நான் கேட்டேன்" என்றவர் மனைவி முடிவில் சந்தேகம் எல்லாம் கொள்ளவில்லை.

"அவன் சம்மதம் சொல்லுவான்" என்று கூற அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டனர்.

பவனிடம் சொல்லிக் கொண்டு சரவணன் குடும்பம் சென்னை கிளம்பிவிட, அரசனும் அடுத்த வாரத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வருவதாய் பவனிடம் சொல்லி இருந்தார்.

"நான் என்னத்த பண்ணுவேன்.. வாய் கொள்ளாம எதையோ சொல்லி வச்சுட்டேன்.. என் தங்கம்ல அப்பத்தாட்ட பேசுத்தா" என கல்யாணியிடம் கொண்டிருந்தார் வடிவு.

"பெரியவுக எவ்வளவு நேரமா கெஞ்சுதாவ.. அப்படி என்ன டி உனக்கு வீம்பு.. என்னனு தான் கேட்டு வையென்" என அன்னமும் கூற,

"உன் வேலைய பாருத்தா.. என் வாயை கிளறாத" என்றதோடு அமைதியாகி விட்டாள் கல்யாணி.

"எம் த்த.. அவ தான் நடிச்சிகிட்டு அலையுதான்னா நீங்களும் கெஞ்சிகிட்டு கிடக்கிய.. போயி ஆவுற வேலைய பாக்கலாம்ல?" என வடிவிடம் கூற,

"ந்தா பாரு! பேத்திக்கு எனக்கும் நடுவுல நாட்டாம பண்ணுத வேல வச்சுக்கிடாத. புள்ளைக்கு அசாலூர் வேண்டாம்னு புருசன்கிட்ட சொல்ல தெரியல.. எனட்ட நாட்டாமைக்கு வார.." என்று வடிவு கூற,

"புள்ளைகிட்ட சொல்ல முடிஞ்சதா கிழவி உனக்கு? அதை போயி திட்டிகிட்டு திரியுத.. ஆவுற வேல ஒன்ன பாக்க முடிஞ்சிதா உனக்கு? என்னய பேச வைக்காத.. அந்த வீணா போனவன் நம்பர எப்படி யாருட்ட வாங்கனுமுன்னு எனக்கு தெரியும்" என்றவள் எழுந்து செல்ல,

"எம்த்தா! எம்த்தா!" என்று அழைத்த வடிவை கண்டு கொள்ளவில்லை அவள்.

"குட் மார்னிங் ப்ரணி பா!" என அருகில் அமர்ந்து தலை கோதிய தாயைக் கண்டதும் முகம் மலர்ந்து விட்டது ப்ரணித்திற்கு.

"ம்மா!" என்று எழுந்து அமர்ந்து அணைத்துக் கொண்டவன்,

"மிஸ் யூ சோ மச் ம்மா.." என்றான்.

"ஆபீஸ் போலையா? இன்னும் தூங்கிட்டு இருக்க?" என சரவணன் கேட்க,

"லீவ் ப்பா.." என்றவன், ஸ்ரேயாஸைப் பார்த்து புன்னகையுடன் கையசைக்க, அவனும் கையசைத்துவிட்டு அவனறைக்கு சென்றுவிட்டான்.

"ஏன் ம்மா இவ்ளோ கேப்? இனி இப்படி தனியா விட்டுட்டு போங்க.. அப்புறம் பேசிக்குறேன்" முறைத்தபடி ப்ரணித் கூற,

"விடு டா! இனி இப்படி லாங்கா போனா உனக்கு கம்பெனிக்கு ஒரு ஆளை ரெடி பண்ணிடறோம்" என்றார் சரவணன். அதில் சிரித்தவன்,

"ம்மா! நிறைய பேசணும்.. ரெடியா இருங்க.. ஃபர்ஸ்ட் உங்க ஸ்பெஷல் காபி" என்றவன் எழுந்து குளியலறைக்கு செல்ல, ராணியும் மகனுக்கு காபி எடுத்து வர சென்றார்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,372
577
113
44
Ariyalur
பிரணித் மவராசன அவன் அம்மா ராணி நல்லா புரிச்சு வச்சிருக்காங்க 😄😄😄😄😄மவனே உனக்கு கல்யாணி கன்போர்ம் 😀😀😀😀😀😀
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
726
537
93
Chennai
பிரணித் மவராசன அவன் அம்மா ராணி நல்லா புரிச்சு வச்சிருக்காங்க 😄😄😄😄😄மவனே உனக்கு கல்யாணி கன்போர்ம் 😀😀😀😀😀😀
கல்யாணி ராகம் 🤣🤣