அத்தியாயம் 7
"ஹெலோ!" என்றவன் குரலைக் கேட்டதும் கல்யாணியின் குரல் வெளிவருவேனா என ஆட்டம் காட்ட அதனை சமன்செய்யவே சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு.
"ஹெலோ!" என்ற கல்யாணி குரலில் யார் என்ற சிந்தனையோடு புருவம் சுருக்கிய ப்ரணித் நண்பர்கள் பக்கம் பார்வையை திருப்ப, அவர்கள் தங்களுக்குள் எதையோ பேசியபடி இருந்தனர்.
யாஹ்! ஹூ இஸ் திஸ்?" என ப்ரணித் கேட்க,
"நான் கல்யாணி" என்றாள்.
"ஹே! ஹாய் கல்யாணி.." அன்னை கூறிய பெயர் உடனே நியாபகம் வரவும் அவன் சாதாரணமாய் நியாபகம் வந்தவனாய் அதே சமயம் உற்சாகமாய் அழைத்து வைக்க ஏற்கனவே நடுங்கிய கைகளில் மொபைலை பிடித்திருந்தவளுக்கு இப்பொழுது வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.
'இவன் என்ன இப்படி பேசுறான்?' மூளை குறுக்கே புகுந்து அவளிடமே கேள்வி கேட்க,
"ஹெலோ! கல்யாணி! ஆர் யூ தேர்?" என கிட்டத்தட்ட கத்தியிருந்தான்.
அதில் அவன் நண்பர்களுமே அவன் பக்கம் திரும்பி இருந்தனர்.
"கல்யாணியா? அது யாரு டா புதுசா நமக்கு தெரியாம?" அருண் விவேக்கிடம் கேட்க,
"ஜாக்கிங்ல புடிச்சானோ வாக்கிங்ல புடிச்சானோ யாருக்கு தெரியும்" என்றான் விவேக்.
"நீ பேசுறது சரியா கேட்கல கல்யாணி!" ப்ரணித் கூற,
'என்ன கூடவே வளந்த மாதிரி உரிமையா கூப்புடுறான்.. நான் தான் பேசவே இல்லையே டா' என மனம் தான் பேசியது கல்யாணிக்கு.
"நான் வேணா கட் பண்ணிட்டு கூப்பிடவா?" ப்ரணித் கேட்க,
"இல்ல இல்ல! இருக்கேன் இருக்கேன்!" என்றாள் வேகமாய்.
"இல்லையா இல்ல இருக்கியா?" சிரித்தபடி அவன் கேட்க, அவன் கிண்டல் இங்கே கல்யாணிக்கு கடுப்பானது.
பெண் பார்த்து போனது வரை அவனுக்கு அனைத்தும் தெரியும் என நினைத்தவளுக்கு அவன் சம்மதம் என்பது போலவே நேர்கோட்டில் பயணித்ததில் மூளை தாருமாறாய் வேலை செய்தது.
'கல்யாணி இவன விடாத!' மனது கூற, 'இன்னைக்கு அவனா நானா பாத்துடுதேன்' என நினைத்து முடிப்பதற்குள் 'நீ நினைக்க மட்டும் தான் முடியும்' என நிரூபித்து இருந்தான் ப்ரணித்.
"ஹெலோ!" மீண்டும் அவன் ஸ்டைலாய் அழைக்க, நேராய் விஷயத்திற்கு வந்தாள் கல்யாணி.
"நம்ம கல்யாணத்த பேச தான் கூப்ட்டேன்" என்று கூற,
"ஓஹ் எஸ்! பண்ணிக்கலாமே! ஐ லவ் யூ!" என்று கூறி அவளை வாயடைக்க வைத்திருந்தான் ப்ரணித்.
"சொல்லிட்டான் டா! அவ்ளோ தான் ஆப்போசிட் சைட் காலி" விவேக் கூற,
"ஹெலோ! ஹெலோ!" என எதிர்முனை தூண்டித்ததைக் கூட அறியாமல் அழைத்துப் பார்த்தவன் பின் மொபைலை காதில் இருந்து எடுத்துப் பார்த்துவிட்டு அழைக்கலாமா என யோசித்தான்.
பின் தோள்களை குலுக்கியவன் அழைக்காமல் விட்டுவிட நண்பர்கள் அவனைப் பார்த்தபடி நின்றனர்.
"நம்ம கல்யாணத்த பேச தான் கூப்ட்டேன்" என்று கல்யாணி கூறும் பொழுது சரியாய் அங்கே வந்திருந்தார் வடிவு.
"ஆத்தே! என்ன வார்த்தை பேசிகிட்டு கிடக்கா" என வடிவு போனைப் பறித்து கட் செய்வதற்குள் ப்ரணித்தின் வார்த்தைகள் கல்யாணியின் செவிக்குள் நுழைந்திருந்தது.
என்னது? என்று மூளை அவன் வார்த்தையையே இவளின் காதுகளில் ஓதிக் கொண்டு இருக்க,
"வேண்டாம்ன்னுட்டு சொல்ல போறவ இப்டியாடி சொல்லி போடுவா? பேசுத பக்குவம் தெரியாமத் தான் நம்பர வாங்க பறந்தியாக்கும்.. கல்யாணத்த பேச கூப்பிட்டேன்னா அவேன் உனக்கு அவன புடிச்சி பேசுதனு நினைக்க மாட்டானாக்கும்" என்று வடிவு கூற,
சட்டென அவன் கூறிய ஐ லவ் யூவில் திகைத்திருந்தவள் வடிவின் கடைசி வாக்கியங்களில் தான் தெளிந்தாள்.
"ஓஹ்! இப்டியும் இருக்குல்ல" என்ற கல்யாணி வெறித்த பார்வையில் தான் அமர்ந்திருந்தாள்.
"நீ உன் அப்பன் என்னைய ஊறுகா போடுதத பாக்க முடிவு பண்ணிட்டுத்தேன் என் போன எடுத்தாந்திருக்க ன்ன?" என்று கேட்க, அப்போதும் அவன் பேச்சிலேயே சுழன்றிருந்தாள் கல்யாணி.
"ஏட்டி உனட்ட தான் கேட்குதேன்" வடிவு உலுக்க,
"கிழவி! எல்லாம் போச்சு.. எல்லாம் போச்சு" என்று கல்யாணி குதிக்க,
"என்னத்த சொன்னான் அந்த பாவிபய" என்றார் வடிவு.
"சொன்னான் நல்லா! சென்னையில கிடக்கான்.. சம்பளம் வாங்குதான்னு உன் புள்ள வக்கனையா வசனம் பேசுனுது.. இங்க அவன் என்னைய பாத்து என்னத்த சொன்னான் தெரியுமா" என்று பற்களை கடிக்க,
"என்னத்த சொன்னான்னு சொல்லி தொலையன் டி.. நீ சொல்லுததுக்குள்ள போய் சேந்துருவேன் போல" என கல்யாணி தோள்களில் இடித்தார்.
"பட்டணம் நாகரிகம்னு வசனம் எல்லாம் பேசுனீங்க.. அங்க அவன் காஞ்சி போயி கிடக்கான் போல.. இல்லனா முன்னபின்ன பாக்காம கல்யாணம்னோனே வா பண்ணிக்குவோம்.. ஐ லவ் யூ ம்பானா?" என்று வடிவிடம் பொருமியவள்,
"ஆஹான் இனிமேட்டு அவ்வளவு தான்.. கல்யாணி! உன்னைய அறுக்க போற ஆட்ட மாதிரி தண்ணிய தெளிச்சி அனுப்பிவுட தான் போறாவ.. இனிம பண்ணுததுக்கு ஒன்னும் இல்ல.. நீ அவ்வளவு தான்" என புலம்பி தள்ளினாள்.
"உன்னைய பாத்தா அப்படி சொன்னான்?" என்று வாயைப் பிளந்த வடிவிற்கு ஏன் இந்த திருமணம் நடக்க கூடாது என்று மீண்டும் தோன்ற,
"அப்போ அவனுக்கும் உன்னைய புடிச்சு போச்சு போல தான்த்தா.. அவே போட்டாவ இங்க கொண்டாந்த மாதி உன் போட்டாவ உன் அப்பனும் அங்க குடுத்துருப்பான்ல.. அத பாத்துட்டு தான் அவே பேசி இருப்பான்.." என்று வடிவு கூற,
"கிட்ட வந்துருராத அப்பன பெத்தவனு பக்கமாட்டே நான் என்ன செய்யுவேன்னு எனக்கு தெரியாது.. உனட்ட இப்போ நான் கேட்டானா? இப்போ என்னத்துக்கு உள்ள வந்து போனப் புடுங்கின? அவன நல்லா நாலு கேள்வி கேட்டு வுட்ருப்பேன்.. அதுவும் போச்சு.. திரும்ப போன போட்டா நீ சொன்ன மாதி அவன புடிச்சி பன்னுதேன்ணு அவே வசனம் பேச ஆரம்பிச்சுட்டா உன் மவன் கூட என்னால மல்லுகட்ட முடியாது"
"அம்புட்டு அழகா இருக்கவேன் வாயில இருந்து உன்னிய புடிச்சிருக்குன்னு வார்த்தை வந்தா உனக்கு கசக்குது ஆக்கும்?" வடிவு நொடித்துக் கொள்ள,
"லூசா நீ? அவனுக்கு சென்னைல இல்லாத பொம்பள புள்ளைங்களா? என்னைய பாத்து வழியுதாம்னா என்ன அர்த்தம்? மர மண்டைக்கு உரைக்குதா இல்லையா?" என கல்யாணி கத்திவிட,
"அதுவும் சரித்தேம்" என்ற வடிவிற்கு மீண்டும் இரண்டு மனநிலை.. வாயை திறக்க தான் முடியவில்லை.
"என்ன ரெண்டு பேரும் கம்முன்னு அதுவும் ஒரே இடத்துல இருந்தும் கம்முன்னு இருக்கிய?" என பிறவாசல் பக்கம் வந்த அன்னம் கேட்க,
"எங்க உன் புருசன?" என்றார் வடிவு.
"உங்க மவன் வர்ற நேரம் தான்.. வந்ததும் பொறத்தால அனுப்பி வைக்குதேன்" என்ற வடிவு,
"பாராட்டி தள்ளனும்னா என் மவன் என் மவன்ங்க வேண்டியது வையனும்னா மட்டும் என்ற புருசனாம்" என முணுமுணுத்துச் சென்றார்.
"உன் ஆத்தாக்கு கொழுப்ப பாரு!" என கல்யாணி காதை வடிவு கடிக்க,
"இப்போ அவரை கண்டு புடிச்சி என்னத்த செய்ய போற?" என்றாள் அப்பத்தாவிடம்.
"அதாம் அந்த பட்டணத்துக் காரனப் பத்தி தெரியுது இல்ல.. சொல்லுவோம்" என்ற வடிவை முறைத்தவள்,
"என் அப்பேன் என்ன செவுள்ள விடணும் அதுக்கு தான? லூசு அப்பத்தா! இத சொன்னா நீ எதுக்கு போனப் போட்டன்னு கேட்க மாட்டாரு?" என்றதும்,
"ஆமால்ல" என்றார் திருட்டு முழியுடன்.
"இப்டி முழிச்சே என்னைய சாவடிச்சுரு.. ஒழுங்கா அந்த ராணி அம்மாட்டயே பேசி இருந்துருக்கலாம்.. நல்ல மாதியா தெரிஞ்சுது.. உன் பேச்சக் கேட்ட எனக்கு இதுவும் வேணும் இன்னுமு வேணும்" என்றவள் தன் கன்னத்திலேயே அடித்துக் கொண்டாள்.
"நான் வேணுமுன்னா.... சென்னைக்கு போயி... அந்த... புள்ளைட்ட பேசி...." என்று வடிவு இழுக்க,
"நீ எந்த ஆணியையும் கழட்ட வேண்டாம்.. என்னால ஆனத நான் பாத்துகிடுதேன்.. கடைசியா அங்க வந்து எதையாவது பண்ண முடியுதா பாக்கேன்.. இல்லனா என் விதிப்படி போவட்டும்.." என்றவள் பாவமாய் முகம் வைத்து நின்ற வடிவை முடிந்த மட்டும் முறைத்து சென்றாள்.
புது மாப்பிள்ளைக்கு ரிப்பப்பரே
நல்ல யோகமடா
ரிப்பப்பரே
அந்த மணமகள் தான்
ரிப்பப்பரே
வந்த நேரமடா
ப்ரணித் வீடு வந்து சேரும் பொழுது இரவு ஏழு மணியை நெருங்கி இருந்தது.
ஸ்ரேயாஸ் டிவியில் ஓடிக் கொண்டிருந்த பாடலை பாடியபடி இருக்க, ராணியும் சரவணனும் பேசிக் கொண்டிருந்தனர்.
"ம்மா ம்மா! அண்ணா வந்தாச்சு.. கேளுங்க கேளுங்க!" ஸ்ரேயாஸ் அவசரம் காட்ட,
"இரு டா.. அவனா சொல்றானா பாக்கலாம்" என்றார் தந்தை.
"சொல்லிட்டாலும்.. கேட்டாலே பதில் வராது.. அம்மா கேட்டா தான் சொல்வாங்க.. கேளுங்க மா" என்றான்.
"உனக்கு என்ன டா?" ராணி கேட்க,
"எல்லாம் ஒரு க்யூரியாசிட்டி தான்" என்றவன் கண்ணைக் காட்ட உள்ளே வந்திருந்தான் ப்ரணி.
"என்ன அதிசயமா எல்லாரும் ஒன்னா இருக்கீங்க?" என்று வந்தவன் அன்னை மடியினில் படுத்துக் கொண்டு டிவி ரிமோட்டைக் கையில் எடுக்க,
"ண்ணா! உனக்கு போன் எதாவது வந்துச்சு?" என்று கேட்டேவிட்டான் ஸ்ரேயாஸ்.
"யாரு டா?" என்றவன் கண்கள் டிவியில் இருக்க, கண்களில் கண்டிப்புடன் தலையை ஆட்டிய அன்னையைப் பார்த்து ஸ்ரேயாஸ் மௌனம் ஆக,
"ம்மா! அந்த பொண்ணு.. அதான் கல்யாணி கால் பண்ணுச்சு மா.. ஸ்லாங் கொஞ்சம் டிப்பிரென்ட்டா இருந்துச்சு.. பேசுறதுக்குள்ளயே கட் பண்ணிடுச்சு.. யாரு மா அது?" என்றான் தம்பி கேட்டதை விடுத்து.
"நான் சொல்ல வர்றதை கேட்காம போன தானே? இப்ப கேட்குற யாருன்னு!" என்றவர்,
"ஆமா கட் பண்றதுக்கு முன்ன நீ என்ன பேசின?" சரியாய் அன்னைக் கேட்க, நிமிர்ந்து அன்னையைப் பார்த்தவன்,
"சாரி மா.. கல்யாணம்னு பேசவும் ஏதோ ஒரு தாட்ல..." என்றவன் அனைவரையும் பார்த்துவிட்டு
"சொல்லிட்டேன்!" என்றவன் மீண்டும் டிவியைப் பார்க்க, ராணியோடு ஸ்ரேயாஸும் தலையில் கைவைத்துவிட்டனர்.
"உன்னை என்ன தான் டா பண்றது.. பேசாத.. எழுந்து போ!" என மாடியில் இருந்து விரட்ட,
"ம்மா! ம்மா!" என சிரித்தவன்,
"ஏன் டென்ஷன்? என்னவோ தோணுச்சு சொல்லிட்டேன்.. அவ்வளவு தான்.. வேணும்னா திரும்ப கால் பண்ணி சாரி கேட்டுடுறேன்.. போதுமா? ஆமா எனக்கு எப்ப பொண்ணு பார்த்தீங்க? என்கிட்ட சொல்லவே இல்ல? கல்யாணி... ம்ம் பேர் கூட கொஞ்சம் ஓல்ட் போல இருக்கு.. யார் சஜ்ஜெஷன் மா?" என்று கேட்க,
"சஜ்ஜெஷனா?" என சிரித்த ஸ்ரேயாஸ் வாயை மூடிக் கொண்டான்.
தொடரும்..