• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வெஜ் புலாவ்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
வெஜ் புலாவ்

1628570305961.png




பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -


பாஸ்மதி அரிசி - 1 கப்

பிரஷ் பட்டாணி - 50 கிராம்

காலிபிளவர் - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 3

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

மல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க -


எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

நெய் - 2 மேஜைக்கரண்டி

பட்டை - 1 இன்ச் அளவு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - 1

செய்முறை -

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். காலிபிளவர், கேரட், பீன்ஸ், தக்காளி எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் பட்டாணி, நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தேங்காய் பால், 2 கப் தண்ணீர், மற்றும் உப்பு, சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடவும்.
நீராவி வந்ததும் வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சுவையான வெஜ் புலாவ் ரெடி.