• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் -6

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
பூக்கள் _6
*********

இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஃபோனில். பேசியவரை வரச்சொல்லி விட்டு அவசரப்பட்டுவிட்டோமா என்றும் யோசித்தார்.

இந்த ஒரு மாத காலமாக நடப்பதெல்லாம் சரியில்லை என்று தோன்ற..பேசாம ஒரு வாரம் லீவ் போட்டுட்டு குலதெய்வம் கோவிலுக்கு போய்வரலாமோ என்று தோன்ற ..அட எது எதுக்கெல்லாம் பயப்பட வேண்டி இருக்கு என்று அவர் மீதே அவருக்கு எரிச்சல் வந்தது .

சரி நடப்பது நடக்கட்டும் என்று சேரில் சாய அப்படியே தூங்கிப் போனார்.

*********

கரியன் "மரிக்கொழுந்து தன்மீது இத்தனை காதலை வைத்திருக்கிறாள்
யார் எது சொன்னாலும் எதைப் பற்றியும் யோசிக்காமல் சண்டைக்குப் போய் விடுகிறாள்
ஒருவேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவள் என்ன செய்வாள்" என்று யோசித்தான்.

முதலில் அவளின் மனநிலையை மாற்ற வேண்டும் , அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் ஒடுக்கப்பட்ட இந்த சமூகத்தில் ஒருவனாவது மீண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் உத்வேகத்தை கொடுக்க கட்டிலில் அமர்ந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்

"என்ன மாமா காலையிலேயே அவ்வளவு மும்முரமா படிச்சிட்டு இருக்க?"

"வா மரிக்கொழுந்து , எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கேன்."

"யாரு நீயா ? எதையோ யோசிச்சிட்டு இருக்கிற மாதிரி இருந்தது கேட்டா படிக்கிறேன் சீனா போடுற " என்றாள்.

"அது சரி நான் யோசனைல தான் இருந்தேன் அதுவும் உன்ன பத்தித்தான் யோசிச்சிட்டு இருந்தேன்"

"நெஜமாவா மாமா, என்னையைவா யோசிச்ச ?"
"உடனே இன்னைக்கு மழை வருமே, அத்தை இங்க பாருங்க உங்க பையன் என்ன நினைச்சுட்டு இருந்தாங்களாம் என்னமா கதை விடுறாங்க" என்றாள் கேலியாக...

"நெஜமாத்தாண்டி சொல்றேன், உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பாக்கணும்னு யோசிச்சிட்டு இருந்தேன் "என்றதும் அவள் முகம் வாட ..
"என்ன மாமா சொன்ன ?"
மாப்பிள்ளை பார்க்க போறியா யாருக்கு, எனக்கா அப்ப நீ யாரு ?"

"நான் உன் மாமா"

"தெரியுதுல அப்புறம் மாப்பிள்ளை பார்க்க போறேன்னு சொல்லுற?"

"ஆமாண்டி எத்தனை காலம்தான் இங்கேயே சுத்திட்டு இருப்ப, சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணி குழந்தை குட்டியென்று நீ நன்றாக இருக்கிறதைப் பார்க்க வேண்டாமா ?"

"அப்ப என்ன கட்டிக்கோ அத விட்டுட்டு எவனையோ கட்டி வைக்கலாம்னு பார்க்கிறியோ"

"அவ்வளவு தொல்லையாகிட்டேனா ?" "இங்க பாரு மாமா கட்டுனா உன்ன தான் கட்டுவேன் அப்படி இல்லன்னா பொணமா தான் போவேன் என்று கோபமாக வந்த வழியே திரும்பி போனாள் மரிக்கொழுந்து

"ஏ நில்லுடி நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் இதுக்கு போய் கோவிச்சுக்குவியா இங்க வா" என்றான்

"க்கூம். போதும் போதும் விளையாட்டு என்கூட பேசாதே " என்று அவள் போக "என்னப்பா கரியா மரிக்கொழுந்து வந்தாள் அப்படியே போயிட்டா நீ எதுவும் சொன்னியா ?"

"இல்லம்மா, சும்மா கிண்டலுக்கு சொன்னேன் அவ கோவிச்சுட்டு போறா"

" அவளை பத்தி தான் உனக்கு தெரியும்ல, அவகிட்ட ரொம்ப விளையாடாதே , அவ உன்மேல உயிரா இருக்கா, நீ படிச்சு முடிச்சதும் அவளைக் கட்டி வைக்கணும் தான் நாங்களும் இருக்கோம்" என்றாள்.

" இல்ல அம்மா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்" என்று சொல்லி விட்டு மீண்டும் அவளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்

சற்று நேரத்தில் மரிக்கொழுந்து வீட்டில் இருந்து ஐயோ அம்மா என்று யாரோ கத்துவது கேட்க கரியன் ஓடிப்போய் பார்த்தான்.

மரிக்கொழுந்து அம்மா அழுது கொண்டிருந்தாள். என்னாச்சு அத்தை என்றதும்
"இங்க பாரு கரியா நீ ஏதோ சொல்லிட்டனு வீட்டுக்குள்ள போயிக கதவை அடைச்சுக்கிட்டா, நானும் எவ்வளவோ கத்துறேன் திறக்க மாட்டேங்குற ,என்னாச்சுன்னு தெரியல" என்று அவள் சொல்ல கதவை உடைத்து உள்ளே போனான் கரியன் .
அவள் ஃபேனில் தூக்குமாட்டி கொண்டிருந்தாள்.


" என்னடி பண்ற ?"

"நீதான் வேணாம் சொல்லிட்டியே பிறகு ஏன் என்னை காப்பாத்துற?"

"அறிவு கெட்டுப்போச்சா இதான் நீ படிக்கிற லட்சணமா ? நம்ம சமூகத்துல
ஒருத்தர் ஒரு நல்ல இடத்துக்கு வரணும்னு நானே கஷ்டத்துல இருக்கேன் இதுல நீ வேற
கஷ்டப்படுத்துறியா ?"

"அப்படி நான் என்ன‌ பாவம் பண்ணினேன் இந்த சமூகத்தில் பிறந்ததா ?"

"போ போயி செத்துப்போ காலம் பூரா உன்னை நினைச்சு நான் பைத்தியமா அலையுறேன்" என்று வெளியே வர ஓடிவந்து கட்டிப்பிடித்தாள் மரிக்கொழுந்து.

கரியன் கண்களில் நீர்சொரிந்தது..


மரிக்கொழுந்து தனது மாமன் கரியனோடு பெரியய்யயா வீட்டுக்கு போக....கரியனோடு பஸ் ஸ்டாண்ட் வரை வந்துவிட்டு மாமா நான் போயிட்டு வருகிறேன என்று கிளம்பிப் போக கரியன் அரசுப்பேருந்தில் ஏறி கல்லூரிக்கு கிளம்பினான்.

கோபி ஃபோன் செய்ய எடுத்து ஹலோ என்றான்

"என்ன மச்சான் கிளம்பிட்டியா ?"

"பஸ்ல இருக்கேன் "

"சரி சரி வா உன்கிட்ட ஒன்னு பேசணும்"

"என்னடா புதிர் போடுற ?"

"அப்போ விசயம் தெரியாதா ?"

"என்ன விசயம் ?"

"நீ நியூஸ் பார்க்கலையா?"

"என்ன நியூஸ் எங்க இருந்து வந்தது ?"

"அட கொடுமையே உன்னை பத்தி பேப்பர்ல வந்திருக்குடா போட்டோவோட "

"என்ன மச்சான் சொல்ற ?"

"ஆமாண்டா நானும் படிச்சு மிரண்டு போய்விட்டேன்"

"என்ன நியூஸ்டா கொஞ்சம் புரியும்படி சொல்லுடா "

"உங்க ஊர்ல நடந்த ஆக்ஸிடென்ட் பத்தித்தான்"

"அது முடிஞ்சு ரொம்ப நாளாச்சே இப்ப என்ன பிரச்சினை?"

"அதுவும் தெரியாதா ஆக்ஸிடென்ட் ல மாட்டினவரை காணோமாம் அதற்கு போலீஸ்தான் காரணமாம் அதுமட்டுமின்றி உன்கிட்ட வேறு இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகவும் புகார் எழுந்திருக்கு அவர் உன் சட்டையை பிடித்த போட்டோவேறு வந்திருக்கு..."

"அவர்மீது நடவடிக்கை எடுக்க போறாங்களாம் உன்கிட்ட விசாரணை நடத்துவாங்களாம் "

"என்னடா குண்டுக்கு மேல் குண்டுபோடுற பிரச்சனை வேண்டாம் என்று தானே அன்று விலகிப்போனேன் மறுபடியுமா ?"

"மச்சான் அந்த இன்ஸ்பெக்டரை விடாதே சரியா "என்று சொல்ல ...

ம்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு "சரி நான் வந்து பேசுகிறேன் "என்று ஃபோனைத் துண்டித்தான் கரியன்

"இது என்ன புது பிரச்சனை
அந்த ஆக்ஸிடென்ட் ஆனவர் எங்கே போயிருப்பார் . அதுமட்டுமல்லாமல் யார் எங்களை போட்டோ எடுத்திருப்பார்கள் "என்று யோசிக்க ஆரம்பித்தான்.

பஸ் காலேஜ் ஸ்டாப் வர இறங்கி நடந்தான் போகிறவர்கள் எல்லாம் கரியனை ஒரு மாதிரி பார்த்து கொண்டு செல்ல..கரியன் தலைகுனிந்தபடி உள்ளே கல்லூரிக்குள் நுழைந்தான்.

கோபி வந்து நியூஸ் பேப்பரைக் காட்ட
வாங்கி படித்தவனுக்கு சாக் ...
அதில் மரிக்கொழுந்தும் இருந்தாள்.

"இப்ப என்ன செய்வது?" என்று கோபியிடம் கேட்க

"எனக்கும் புரியலடா "என்றான்

இருவரும் பேசிக்கொண்டு இருக்க காலேஜ் பிரின்சிபால் சுந்தரத்திடம் இருந்து அழைப்பு வந்தது.

கரியன் குழப்பத்தோடு பிரின்சிபால் அறைக்குப் போனான் அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர்.

**************



கரியன் பிரின்சிபால் அறைக்குள் நுழைய அங்கே இரண்டு காவலர் இருக்க ..

பிரின்சிபால் கரியனைக் காட்டி "இவருதான் கரியன் லாஸ்ட் இயர் ஸ்டூடண்ட் " ன்று அறிமுகப்படுத்தினார்.

"கரியனிடம், கரியா இவங்க உங்க ஊர்ல நடந்த ஆக்ஸிடென்ட் பத்தித்தான் பேச வந்திருக்காங்க
காலேஜ்ல இன்வெஸ்டிகேஷன் பண்ணக்கூடாதுனு உன்னை அழைச்சிட்டு போக வந்திருக்காங்க"
என்றார்.

"அதுசரி சார் அதுக்கு எங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே படிக்கிற இடத்தில் வருவது சரியா ?" என்றான்

பிரின்சிபால் வாயைத் திறப்பதற்குள்
வந்தவர்களில் ஒருவர் "தம்பி அதுக்கு நான் சொல்றேன் பதில் "என்று உள்நுழைந்தார்.

"சொல்லுங்க சார் அதுவும் யூனிபார்ம்ல வந்துருக்கீங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க ஸ்டூடண்ட்ஸ்."

"புரியுது தம்பி எங்க ட்டூட்டி இது.
அவசரமாக உங்களை இன்ஸ்பெக்டர் கூட்டி வரச்சொன்னார் .
அதுவும் உங்க பெர்மிஷனோட
மத்தபடி நீங்க பயப்படுற மாதிரி ஏதுமில்லை ."

"ஜஸ்ட் விசாரணை தான் நீங்க எங்க கூட வரவேண்டாம்,யாராவது பிரண்ட்ஸ் கூட வாங்க ,அதுவும் நாங்க முன்னாடி போறோம் சரியா " என்றார்.

"சரி சார் நான் ஏன் வரணும் என்ன தப்பு பண்ணினேன்.?"

"தம்பி புரிஞ்சுகோங்க நீங்க தப்பு பண்ணி இருந்தா உங்க அனுமதிக்காக காத்திருப்போமா ?"

"ஏதோ முக்கிய விசயமாக இருக்கலாம்
இன்ஸ்பெக்டர் மரியாதையாக உன்னை அழைத்து வரச்சொன்னார்
உங்க உதவி வேண்டும் தம்பி" என்று சொல்லவும்

"சரி சார் நான் வருகிறேன் நீங்க முன்னாடி போங்க "என்று சொல்லிவிட்டு கோபியின் பைக்கில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனான் கரியன்

இன்ஸ்பெக்டர் கரியனை எழுந்து வரவேற்றார்.





"வா கரியா .."

"வணக்கம் சார் "

"உட்கார் "

"பரவாயில்லை சார் "

"இல்லப்பா உட்கார் உன்கிட்ட பேசணும்"

"சொல்லுங்க சார் என்ன அவசரமா வர சொல்லி இருக்கீங்க
நீங்க வீட்டுக்கே வந்திருக்கலாமே ?"

"இல்லை கரியா அது இன்னும் பிரச்சனையைக் கூட்டத்தான் செய்யும்
அதிலும் உங்க ஆளுங்க கோட்டிப்....."

"ஏன் சார் நிறுத்திட்டீங்க
சொல்லி முடிங்க "

"சாரிப்பா நான் என்ன சொல்ல வர்றேன்னா "

"சாரி சார் நீங்க நினைக்கிற மாதிரி நாங்க கோட்டிப்பயலுகளோ இல்ல ஈனப்பயலுகளோ இல்லை
எங்களுக்கு கிடைக்காத சுதந்திரத்தைத் தான் எதிர்பார்க்கிறோம்."

"அதுமட்டுமின்றி நாங்களாக எங்கும் கொடிப்பிடிக்கல எங்களுக்கு பிரச்சனை வரும்போது சேர்ந்து நிக்கிறோம் அதுக்காக குற்றவாளி ஆக்குவீங்களா ?"

"பொறு கரியா நான் குற்றவாளி ஆக்க
நான் இங்கே கூப்பிடல ,
பிரச்சனை வேறு புரிஞ்சுக்கோ"

"சரி சார் சொல்லுங்க நான் என்ன பண்ணனும் ?"

இன்ஸ்பெக்டர் சொல்லும்முன் தலித் சங்கத்தலைவர் காத்தவராயனிடம் இருந்து ஃபோன் வந்தது கரியனுக்கு,

இன்ஸ்பெக்டரிடம் ஒரு நிமிடம் சார் என்று சொல்லிவிட்டு ஃபோனை
எடுத்து ஹலோ என்றான்

"சொல்லுங்க தலைவரே "

"என்ன கரியா ஏதோ போலீஸ் உன்னை விசாரணைங்கிற பேர்ல புடுச்சிட்டு போனதா சொல்றாங்களே உண்மையா?"

"விசாரணைக்காக வரச்சொல்லி இருந்தாங்க நானாகத்தான் வந்தேன் மத்தபடி பிரச்சனை ஒன்றுமில்லை தலைவரே ."

"எதாவதுனா எனக்கு கால் பண்ணு அப்புறம் ஸ்டேஷன் விட்டு வெளிய வந்ததும் மறக்காம பேசு நான் வச்சிடட்டுமா ?" என்று ஃபோனைத் துண்டித்தார்.

"யார் ஃபோன்ல"

"சங்கத்தலைவர் சார்"

"அவருக்கு யார் தகவல் சொன்னது ?"

"தெரியல சார் ஆனால் ஏதும் பிரச்சினையானு கேட்டார் இல்லை சொல்லிட்டேன் நீங்க சொல்லுங்க சார்"

"சரி விசயத்துக்கு வாரேன்
அன்னிக்கு ஆக்ஸிடென்டான அந்த ஆளு யாருனு உனக்கு தெரியுமா ?"

"எனக்கு எப்படி சார் தெரியும் ?
நீங்க தானே கொண்டு போனீங்க
இப்போ காணலனு வேற பேசிக்கிறாங்க ஒன்னும் புரியல"

"ஆமா கரியா உண்மையில் அதிக ஆளு இறக்கவில்லை அவரை எனக்கே தெரியாம அனுப்பிவிட்டுட்டாரு எஸ்.பி."

"இப்போ யாரோ இதைத்தெரிந்து நியூஸ் போட்டுட்டானுக "

"சரி சார் அதுக்கு நான் என்ன பண்ண முடியும்"

"நீ ஒன்னும் பண்ண முடியாதுனு எனக்கு தெரியும்,,அதை நான் பார்த்துக்கறேன்
ஆனால் நீ ஒரு உதவி பண்ணனும்"

"சொல்லுங்க சார் முடிஞ்சா பண்றேன்"

"உன்னால் முடியும் கரியா அதான் உன்னை கூப்பிட்டேன்"

"புரியல சார் தெளிவா சொல்லுங்க"

"அந்த கேஸ்ல உன் சட்டையைப்பிடித்து நான் அடிச்சதை எவனோ போட்டோ எடுத்து போட்டு விட்டுருக்கானுக "

"ஆமா பார்த்தேன் "

"அது இப்போ பெரிய பிரச்சினையா ஆகுது.அதுக்கு நீ என்னை அடிக்கலைனு எழுதிக் கையெழுத்து போடணும் "

"சார் நீங்க அடிச்சது உண்மைதானே
இப்ப இல்லைனு சொல்ல சொல்றீங்க"

"அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன்
ஆனால் நான் தொலைந்து போன அந்த ஆளை கண்டுபிடிக்கனும் இல்லனா பிரச்சனை திசை திரும்பிவிடும் நீயும் அடிக்கடி விசாரணைக்கு வரவேண்டி இருக்கும்"

"நீ நல்லா படிக்கிற பையன்னு கேள்விப்பட்டேன் இந்த கேஸ்ல உன்னை சேர்க்காம இருக்க நீ விலகிக்கறதுதான் நல்லது
இல்லனா சாதிக்கட்சிகள் உள்ளே நுழைச்சிடுவாங்க"

"சரி சார் எனக்கு பிரச்சனை வராதுனு நீங்கள் உத்திரவாதம் தந்தால் கண்டிப்பாக எழுதித் தாரேன் "

"சரி இதில் எழுதிக் கையெழுத்து போடு "
என்று எழுதி வாங்கிக் கொண்டு
"ரொம்ப நன்றி கரியா.
ஏதாவது உதவினா எனக்கு கால் பண்ணு" என்று அவரது பெர்சனல் ஃபோன் நம்பரை தன் தந்து அனுப்பி வைத்தார்.

கரியன் வெளியே வரவும்
"என்னடா கேட்டாங்க ஏதும் பிரச்சனை இல்லையே?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ பயப்படாதே
மத்ததை அப்புறம் சொல்றேன் யாரோ சாதிச் சங்கத் தலைவருக்கு தகவல் சொல்லிட்டாங்க அவருகிட்ட நான் வந்துட்டேன்னு சொல்லிட்டு வாரேன் இரு "என்று ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான் கரியன்.

******



கரியன் போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டு நேராக வீட்டிற்கு வந்து விட்டான் கரியன் போலீஸ் ஸ்டேஷன் போன விஷயம் கரியனின் அம்மாவிற்கு தெரிய வர "ஏன்பா ராசா உன்ன போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சாமே என்னப்பா ஆச்சு என்னப்பா பிரச்சனை?" என்று கேட்டாள்

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா அந்த இன்ஸ்பெக்டர் விசாரணைனு வரச் சொல்லி இருந்தார்"

"அன்னைக்கே நாம பிரச்சனை வேணாம்னு ஒதுங்கிவிட்டோமே மறுபடி மறுபடி எதுக்கு கொடைச்சல் கொடுக்குறாங்க"

"இல்லம்மா இது வேற பிரச்சனை"

"என்ன பிரச்சனையோ நமக்கு வேணாம்பா நீ படிக்கிற பையன் இதெல்லாம் தூக்கி போட்டுட்டு படிக்கிற வேலையை மட்டும் பாரு"

"அம்மா நான் எதுக்குமா போரேன் பிரச்சினைக்கு ,பிரச்சனை வரக்கூடாதுனு தான் போயிட்டு வந்து இருக்கேன்"

"சரி என்ன ஆச்சு ?"

"அந்த ஆக்சிடென்டான ஆளு இறந்து போயிட்டோம்னு நாம நினைச்சோமில்ல ,அந்த ஆள் இறக்கவில்லையாம் மா"

"அத்தி மகமாயி நல்லதா போச்சு"
என்று கரியனின் அம்மா சொல்ல..

*அதுல தான் பிரச்சனை மா"

*அதுல என்னப்பா பிரச்சனை ?"

"பொழச்ச அந்த ஆளு இப்ப எங்க இருக்கார் என்று தெரியலையாம் அவரை எஸ்பி அனுப்பி விட்டுட்டாராம் இப்ப அந்த இன்ஸ்பெக்டருக்கு பிரச்சினை அதான்
என்ன விசாரணைக்கு கூப்பிட்டார்"

"அவரை எஸ்பி அனுப்பிவிட்டதுக்கு நீ என்னப்பா பண்ணுவ ?"

"அதாம்மா ஏற்கனவே என் சட்டையை புடிச்சு அடிச்சு கேஸ்ல யாரோ நியூஸ் போட்டுட்டாங்களாம் சோ அவருக்கு மேலிடத்தில் பிரஷர் வந்ததுனால நான் அடிக்கவில்லை என்று எழுதி தர சொல்லி என்கிட்ட கேட்டாரு நான் எழுதி கொடுத்துட்டு வந்துட்டேன்" என்றான் கரியன்.

"நல்லதா போச்சுப்பா நமக்கு இந்த பெரிய இடத்து பொல்லாப்பெல்லாம் வேண்டாம் "என்று நிம்மதி பெருமூச்சு விட ....
அதைக் கேட்டுக் கொண்டிருந்த

"என்ன அத்த நீங்க எப்ப பாத்தாலும் மாமாவ பயமுறுத்திக் கொண்டே இருக்கீங்க அந்த போலீஸ்காரன் எவ்வளவு விவரமா மாமாவை ஏமாத்தி கையெழுத்து வாங்கிட்டான் நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா நாம ஒண்ணுமே செய்ய முடியாது" என்றாள்
மரிக்கொழுந்து .

"நீ சும்மா இருடி எரியிற கொள்ளியில எண்ணெயை ஊத்தாம என் பையன் எது செஞ்சாலும் சரியா தான் செய்வான் என்று மரிக்கொழுந்தை திட்ட ..

"சரிமா விடுமா எதுக்கு அவளைப் போய் திட்டுற அவளுக்கு என்ன தெரியும் "என்று சொன்னான்.

" போ மாமா நீயும் உங்க அம்மாவும் இப்படி பயந்து சாகுறீங்க ?" என கேட்டாள்

"மரிக்கொழுந்து எல்லாத்துக்கும் நேரம் காலம் என்று ஒன்று இருக்கிறது எதுலயுமே அவசரப்பட்டு எதையும் சாதிக்க முடியாது உனக்கு சொன்னா புரியாது" என்றான்

"எப்படியோ உனக்கு எந்த பிரச்சினையும் வராமல் இருந்தால் சரி தான் எனக்கு என் மாமா முக்கியம்" என்று பழித்துக் காட்டிவிட்டு வந்த வழியே நடந்தாள் மரிக்கொழுந்து.

"நீ பேசிட்டு போயிட்டே இருக்க...
இங்கே வா" என்றான் கரியன்

" இங்கே அம்மாவும் பிள்ளையும் கதை பேசுவதை கேட்டு நான் இங்கே இருக்கணுமோ போ மாமா என்று நடந்தாள்

கரியன் மரிக்கொழுந்தை நினைத்து சிரித்தான்.