• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் -9

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
என்னமா சொல்ற ?"

"நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன் "

"அது தெரியுது நீ எம்.எஸ்ஸி.கோல்ட்மெடலா ?"

"ஆமாபா அதுக்கென்ன ?"

"இவ்வளவு படிச்சிட்டு எப்படிமா ஒன்னுமே தெரியாம இருக்க ?"

"நான் படிச்சிருக்கேன் படிச்சிருக்கேனு போஸ்டர் போடணுமா ?"

"என்னமா இப்படி பேசுற ?"
"எங்க அம்மா இவ்வளவு படிச்சிருக்காங்கனு சொன்னா எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா ?"

"சரிதான் ,ஆனால் ..."

"என்ன ஆனால் ?"

"உங்க அப்பாவுக்கு பெருமை இல்லையே "

"என்னமா சொல்ற ?
பொண்டாட்டி படிச்சவங்கனு சொல்ல பெருமைதானே.."

"அதான் இல்லை, உங்க அப்பாவுந்தான் எம்.எஸ்ஸி"

"என்னமா புதுசு புதுசா சொல்ற ?"

"உண்மையைத்தான் சொல்றேன்
உங்க அப்பாவும் நானும் ஒன்னா தான் படிச்சோம்"

"நிசமாவா அப்பாவும் எம்.எஸ்ஸியா ?"

"ஆமாபா "

"இரண்டு பேரும் இவ்வளவு படிச்சிட்டு தான் ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கீங்களா ?"

"நாங்க சரியாத்தான் இருக்கோம் நீதான் தெரிஞ்சுக்கல "

"எப்படி தெரிஞ்சுக்கறது எங்கயாவது நீங்க படிச்சதைக் காட்டினா தானே "

"அதுசரி தாத்தா உங்களைக்கட்டி வச்சாரு பாருங்க அவரைச் சொல்லணும் "

"யாரு கட்டி வச்சது ? எங்க கல்யாணமே லவ் அண்ட் அரேஞ்ச்டு தெரியுமா ?"

"அம்மா என்னமா ஏதேதோ சொல்ற ?"

"இதுக்கே இப்படி சாக் ஆகுற ! இதையும் கேளு நாங்க கலப்பு மணம் தெரியுமா ?"

"அம்....மா.....!"

"ஆமாபா அப்பாவும் நானும் ஐந்து வருஷம் லவ் பண்ணித்தான் கட்டிக்கிட்டோம்."

"கலப்பு மணமா? அப்போ நீ ....?"

"ஐயர்..."

"என்னமா சொல்ற ? நீ எப்படி மா இதுக்கு ஓத்துக்கிட்ட...தாத்தா எப்படி ஓகே சொன்னாரு ...?"

"அவரு பழைய ஆளுதானே தவிர லவ்வுக்கோ சாதிக்கோ முக்கியத்துவம் தரமாட்டாருபா"

"இல்லைமா அவரு நீ உயர்ந்த சாதினு ஓகே சொல்லியிருப்பாரு"

"ஹாஹா அதான் இல்லை.உங்க அப்பாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கியதே நான் சொல்றதை உங்க அப்பாகிட்ட சொல்லுங்க அவரு ஒத்துகிட்டா கல்யாணம்னு "

"அதென்ன மா "

"நான் நரிக்குறவர் வீட்டுப்பொண்ணுனு
சொல்லி சம்மதம் வாங்கிட்டு வாங்கனு தான்."

"அவரு உடனே ஒத்துக்கிட்டாரா ?"

"ஆமாம் "

"அப்போ அப்பா நீ யாருன்னு உண்மையைச்சொல்லிக் கேட்டுருப்பாரு "

"இப்படியும் நடக்கும்னு எனக்கு தெரியாதா ?"

"அப்போ உனக்கு எப்படி தெரியும் ?"

"நான் மறைந்து இருந்து கேட்கிறேன் நீங்க கேளுங்கனுதா சொல்லிட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்."

"சரியான ஆளுமா நீ"

"உங்க தாத்தா சொன்னது என்ன தெரியுமா ?"

"நீ எந்த பொண்ணைக் கட்டுவியோ தெரியாது ஆனா இந்த வீட்டுக்கு வந்துட்டா நம்ம வீட்டு பொண்ணு குடும்பத்தைக் கட்டிக் காக்குறவளா இருக்கணும்."

"அதே நேரம் ஏதோ லவ்வு கிவ்வுனு நீயும் புடிக்கலனு விரட்டிவிடக்கூடாது
யோசிச்சு பண்ணுனுதா "

"தாத்தாவா அப்படி ?"

"ஆமாபா அவரு சாகிறதுக்கு கொஞ்சம் முன்னாடி வரை நான் யாருனு அவருக்கு தெரியாது."

"அவரு என்னைத் தன் பொண்ணாத் தான் பார்த்தார்.அதனால் தான் கடைசிவரை நான் யாருனு யாருக்கும் சொல்லல."

"சரிமா உங்க வீட்டுல யாரும் தடுக்கலையா ?"

"எந்த வீட்டில் தான் லவ்வுக்கு உடனே ஓகே சொல்லுவாங்க .எப்போ இந்த உண்மை தெரிந்ததோ அப்பவே எல்லோரும் தலைமுழுகிட்டாங்க."

"எனக்கும் அவங்களை பார்க்கத் தோணலை "

"ஏன்மா ?"

"நான் போயி ஒருவேளை ஏத்துக்கிட்டா நான் ஐயர் வீட்டுப் பொண்ணுன்னு தெரிஞ்சிடும்
பிறகு உங்க தாத்தாவுக்கு நான் கொடுத்த வாக்கு பொய்யாயிடும்."

"அதுக்காக உன் உறவுகளையும் உணர்வையும் இழக்கலாமா ?"

"என்னோட உறவுனா அது நீயும் உங்க அப்பாவுந்தான் உணர்வுனா உங்கள் வாழ்க்கையை உயர்த்துவது தான்."

"நீ படிச்சு படிப்பு ?"

"படிப்புங்கறது நமக்கு நல்ல மகிழ்ச்சியாக இருக்கத்தானே தவிர தலைக்கனத்தைத் தருவதற்கல்ல .
உங்க அப்பா வெளியில் எப்படின்னு தெரியாது ஆனால் என்னை கேட்காமல் ஏதும் செய்ய மாட்டார்
இதைவிட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும் ?"

"ஒரு கௌரவமான வேலைக்கு போயிருக்கலாம்ல"

"போயி என்ன பண்ண ?"

"உன்னை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்ல"

"இப்ப மட்டும் என்ன தெரியாமலா இருக்கேன் .என் உலகமே நீங்கள் தானே.."

"அம்மா நீ கடவுள் மா "

"அடேய் இதுவும் சுயநலம்தான்
என் கணவன் குழந்தைனு."

"யூ ஆர் கிரேட் மா."

"சரி விடு இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லாதே."

"சரிமா."

"இப்ப நிம்மதியா தூங்கு‌"

"உண்மையாவே நான் கொடுத்து வச்சவன் மா ."

"அப்பா அடிக்கடி உன்னைக் குறத்தினு திட்டுவாரு
எனக்கு கோவம் கோவமா வரும் "

"அது திட்டு இல்லடா கிண்டல்
அவருக்கு என்மேல் எப்பவும் மரியாதையும் லவ்வும் அதிகம்"

"ம்ம் சரிமா குட் நைட் "
என்று படுக்கப்போனான் கோபி.