• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _10

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
வேனிற் பூக்கள் _10

கரியன் சொன்ன சாதியொழிப்புக்கு
சொன்ன ஐடியா கேட்டு தான் எடுத்த முடிவு சரியா தப்பானு அம்மாவிடம் பேசும்போதுதான் அம்மாவைப்பற்றிய
உண்மை தெரிய வந்தது.

அந்த நிம்மதியிலேயே உறங்கப்போனான் கோபி.

விடிந்து எழுந்து புதிய மனிதனாய் கல்லூரிக்குப் போனான்.

"என்ன மச்சான் இவ்வளவு பிரஷ்ஷாக எதையோ சாதிச்ச மாதிரி இருக்க ?"

"உண்மை மச்சான் நைட் பல உண்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன் "

"என்ன உண்மைடா ?"

"உனக்கு நேரம் வரும்போது சொல்றேன் .சரி இன்னிக்கு என்ன புரோகிராமிங்"

"நீதான் சொல்லணும் ஈவினிங் பீச் போலாமா ?"

"ஓ தாராளமா ?"

"பட் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்"

"சரிடா எப்ப பாரு வீடு வீடுனு
அப்படி என்ன தாண்டா வச்சிருக்க ?"

"அதான்டா என் உலகம் அது உனக்கு புரியாது"

"டேய் நான் புரியாமல் பேசல டா நீதான் புரியாம பேசுற?"

"குடும்பம் முக்கியம்தான் உலக அனுபவம் அதைவிட ரொம்ப முக்கியம்"

"சரி சரி லெக்சர் வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரோபசர் பண்ணுவாரு "என்றதும் கோபி சிரித்தான்.

*********



கரியன் கோபி மற்றும் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து பீச்சுக்குப்போனார்கள்.

"மச்சான் என்னடா இன்னிக்கு கூட்டம் இப்படி இருக்கு?"

"தெரியலையேடா ஏதாவது விசேசமா இருக்குமா ? "

"அதான் தெரியல இரு கேட்போம்" என்று
அவ்வழிபோன ஒருவரை நிறுத்தி "அண்ணா இங்க என்ன இவ்வளவு கூட்டம்?" என்று கேட்க‌.

"இன்னிக்கு மினிஸ்டர் வர்றாரு இங்க மீட்டிங் அதான் "என்றதும்

"நன்றி அண்ணா" என்றுசொல்லிவிட்டு அவர் போனதும் "சரி அப்போ நாம. ரொம்ப நேரம் நிக்க வேணாம்
கட்சிக்காரங்க அலப்பறை தாங்க முடியாது"

"அதுவும் சரிதான் சரி நடங்க" என்று கோபி சொல்ல நால்வரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

எதிரில் வந்த இருவர் இவர்கள் மீது மோத சாரி கேட்டான் கோபி .

"டேய் பாத்துப்போங்கடா சாவுக்கிராக்கிகளா" என்றான் அதில் ஒருவன்.

உடனே கரியன் அவர்களோடு சண்டைக்குப்போக .. "வேண்டாம் விடு கரியா "என்று தடுத்து ...

"சரிண்ணா நீங்க போங்க" என்று சொன்னான் கோபி.

"டேய் என்னடா முறைக்கிற போ போ" என்று கிண்டல் செய்துவிட்டு அவர்கள் நகர..

"எதுக்குடா என்னைத் தடுத்த ?"

"டேய் இன்னிக்கு கட்சி மீட்டிங் அதுவுமில்லாம அவங்க தோள்ல போட்டுருந்த துண்டை பார்த்தியா ?"

"ஆமா அதுக்கென்ன இப்ப நாம ஏதும் கேட்கப்போய் பிரச்சனை வந்தா நீ கலெக்டர் எப்படி ஆவ ?"

"அதுக்காக அவனுகள விடுமோ திமிரெடுத்தவனுக "என்று சொன்னான் கரியன்

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க போனவர்களில் ஒருவன் வந்து கரியனைப் பளார் என்று ஒரு அறைவிட்டான்


கோபி அந்தாளு கூட சண்டைக்குப் போனான்.

"என்னடா என்னைச் சொல்லிட்டு நீ சண்டைக்குப்போற "என்றான் கரியன்

"நீதான் சண்டை போடக்கூடாது சொன்னேன் அதுக்காக அடிவாங்கிட்டு வரணும்னு சொல்லல "

"இப்ப என்னடா சொல்ல வர்ற ?"

"அவனை அடிடா "என்று சொன்னான் கோபி.

கோபி சொன்னதும் தன்னை அடித்தவனை ஓங்கி ஒரு குத்து விட்டான் அவனது மூக்குடைந்து ரத்தம் பொலபொலவென கொட்ட கூட இருந்தவன் சண்டைக்கு வந்தான்

அங்கே கைக்கலப்பு வர கட்சிக்காரர் ஒருவர் " தலைவர் வர்ற நேரத்தில் இங்கென்னடா சண்டை அவனை பின்னாடி பார்த்துக்கொள்வோம்" என்று சொல்லி இழுத்துப்போனார்கள்.

அப்போதுதான் அவன் கவனித்தான் தான் அடித்தது கரியனின் சாதிக்காரன் என்று,உடனே கோபியை அங்கிருந்து கிளம்பச்சொன்னான்.

"ஏன்டா மச்சான் என்னடா பயமா ?"

"இல்லை மச்சான் நாம் சண்டை போட்டது வெறும் கட்சிக்காரன் மட்டுமில்ல எங்க சாதிக்காரன்
நீ தேவர்னு தெரிஞ்சா பிரச்சனையைப் பெருசாக்கிடுவானுங்க "

"நாம் இங்கு நிற்க வேண்டாம் "என்று நால்வரும் கிளம்பிப்போனார்கள்.

"எதுக்குடா உன் சாதிக்காரன்னா தப்பு பண்ணினா கேட்கக்கூடாதா ?"

"இல்லை மச்சான் நீ புரியாம பேசுற ?
இங்க தப்பு பண்றவன் மேல் இருந்தா பிரச்சனை இல்லை
கீழ் உள்ளவனாக இருந்தால் சாதியை நுழைத்து அரசியல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க அத்தோடு சாதியை இழிவா பேசினதா வழக்கும் போடுவாங்க."

"ம்ம் அதுக்காக உண்மையை மறைக்க முடியுமா ?"

"அதான் இல்லை இங்க நம்ம பக்க நியாயத்தைப் பேச மாட்டாங்க..
நமக்கு வாய்ப்பும் கொடுக்க மாட்டாங்க .அதான் இங்க எழுதப்படாத சட்டம்."

"சரி கரியா அதுக்காக உங்க ஆளுங்க செய்றது சரியா ?" என்றான் கூடவந்தவன்.

"நான் எப்படா சரி சொன்னேன்.நமக்கு கொடுக்குற வாய்ப்பைத் தப்பா பயன்படுத்துறதுலதான் இங்கு பிரச்சனை அதிகமாகுது."

"எவனும் இங்க சாதியை ஒழிக்கப் போராடல அதைவச்சு காசு சம்பாதிக்கப் பார்க்கிறானுக."

"அதுவும் சரிதான் இதுக்கு என்ன தான் தீர்வு.?"

"நம்மள மாதிரி இளைஞர்கள்தான் இதைப்புரிய வைக்கணும்."

"எங்கடா புரிய வைக்கிறது ?"
".ஆரம்பிச்சாலே அடிதடி தான் நடக்குது."

"அதுக்காக தான் நாம் அதிகாரத்துக்கு வரணும்னு சொன்னேன் ."

"சரிடா அதான் நீ கலெக்டர் ஆகப்போறல ஏதாவது பார்த்துப்பண்ணு "

"இப்படி ஆளாளுக்கு ஒதுங்கிப்போனா
யார்தான் பண்றது ?"

"சும்மா சொன்னேன்டா இந்த நிலை மாறும் நம்புவோம் ."

"சரிடா நான் கிளம்புறேன் "என்று கரியன் சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்ட்டை நோக்கி நடக்க எங்கிருந்தோ வந்த வேன் அவனை அடித்துத் தூக்கியது.

நான்கைந்து அடிக்கு அப்பால் போய் விழுந்தான் கரியன்

மூவரும் கரியனை நோக்கி ஓடினார்கள்.


தொடரும்