• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _12

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
கேரளாக் காரனைக் கண்டதும் சந்தேகம் வர உடனே இன்ஸ்பெக்டருக்குப் ஃபோன் போட்டான் கோபி

"சொல்லு கோபி எனிதிங் ஸ்பெஷல் ?"

"சம்திங் ராங் சார் இங்க பிராப்ளம் தான் சார் கூடுது"

"நீ எதைச்சொல்ற கோபி என்னாச்சு அங்க?"

"சார் அந்த ஆக்ஸிடென்ட் ஆன கேரளாகாரர் வந்திருக்கார் சார்."

"என்னது கேரளா காரரா நல்லா பார்த்தியா ?"

"ஆமா சார் அதே ஆளுமாதிரி தான் இருக்கு ."

"நிசமாவா ?"

"ஆமா சார் நீங்க சீக்கிரம் வாங்க "என்று சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் கிளம்பி இருந்தார்.

கேரளாகாரர் கரியனை விசாரித்தபடி வந்து கொண்டு இருக்க ....கோபி முன்னால் வந்து நின்றான்.

"தம்பி இங்க கரியன்னு ஆகாஸிடென்ட் ஆன பையன் அட்மிட் ஆகிருக்கறதா கேள்விப்பட்டேன்
உங்களுக்கு தெரியுமா?"
"
"அது இருக்கட்டும் சார் நீங்க.?
கரியனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.?

"முக்கியமான விசயம் பேசணும் அவங்க அம்மா அப்பா கிட்ட கூட்டிப்போங்க "என்றார்

"நீங்க முதலில் யாரு அதைச் சொல்லுங்க " என்று கோபப்பட்டு அவரின் சட்டையைப்பிடிக்கத்
"தம்பி நீ தேவையில்லாம பிரச்சனை பண்ணாதே."

"நான் இங்கு வந்ததே கரியனைக் காப்பாற்றத்தான்"

"இதுயென்ன புதுக்கதையா இருக்கு?"

"யாருன்னே தெரியாத நீங்க கரியனைக் காப்பாத்துறேனு சொல்றது நகைச்சுவையா இருக்கு "

"உனக்கு அப்படித்தான் தெரியும்
விசயம் தெரிஞ்சா இப்படி பேச மாட்ட"

"போதும் இந்த கதையெல்லாம் கேட்க ஆளு இல்லை மரியாதையா இங்கிருந்து போய்விடுங்க இல்லை மரியாதை கெட்டுடும்."

"தம்..பி...சொல்றதைக் கேளு கரியனின் உயிருக்கே ஆபத்து .புரிஞ்சுக்கோ"
என்று கத்த கோபி ஆடிப்போனான்.

மெதுவாக கேராளக்காரன் சொல்லச்சொல்ல கோபிக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.