• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _14

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
"சார் நிசமாகத் தான் சொல்றீங்களா ?"

"தம்பி உன்கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும் ?"

"உங்க பையனுக்கும் கரியனுக்கும் ஏற்பட்ட பிரச்சினைக்காகப் பழி தீர்க்கக் தானே வந்துருக்கீங்க ?"

"ஹாஹா "

"எதுக்கு சார் சிரிக்கிறீங்க ?"

"பின்ன என்ன தம்பி நீ சினிமா பார்ப்பியோ ? இப்படி கற்பனை பண்ணி பேசுற "

"பின்ன எதுக்கு கரியனைத் தேடி வந்திருக்கீங்க ?"

"அந்த பையனைத் தேடி வந்ததுதான் உன் பிரச்சனையா ?"

"ஆமா கேரளாவில் இருந்து தேவையில்லாமல் ஏன் சார் பார்க்க வரணும் ?"

"தம்பி உன் பிரண்ட் மேல் உனக்கு இருக்கிற அன்பைவிட எனக்கு இருக்கிறது?"

"என்ன சார் அவன் என் பிரண்ட் நீங்க யாரோ அவன்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கறை ?"

"தம்பி நான் இன்னிக்கு உயிரோடு இருக்க காரணமே கரியன்தான் "

"என்ன சார் சொல்றீங்க?"

"ஆமா தம்பி கேரளாவுக்கு போட்டிக்கு வந்த உன் பிரண்ட் தான் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினான்
அதற்கு நன்றி சொல்லத்தான் நான் அவனைப் பார்க்க அவன் ஊருக்கு வந்தேன் "

"அங்கேயும் ?"

"அங்கேயும் என்னைக் கொல்ல சதி நடந்தது "

"ஆமா எதுக்கு சார் உங்களை கொல்ல முயற்சி பண்றாங்க ?"

"தம்பி நான் கேரளாவில் சுயேட்சை எம்.எல்.ஏ எனது ஒரு ஓட்டால் ஒரு ஆட்சி கவிழ்ந்து விட்டது அதற்கு பழிவாங்க நடந்த முயற்சியில் கரியன்
வந்து காப்பாற்றி விட்டான் அதுல கொஞ்சம் அடிபட்டுடுச்சு மீண்டும் வந்ததும் அவனைத் தேடி வந்தேன் அங்கேயும் என்னை கார் ஆக்ஸிடென்ட் பண்ணிட்டாங்க அப்ப கரியன் அந்த இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்டதைக் கேட்டு மயக்கப்பட்டதுபோல கிடந்தேன் ."

"அதுல கரியனைத் தீர்த்துக்கட்ட இன்ஸ்பெக்டர் முயற்சி பண்ணுனது தெரிஞ்சு எனக்கு தெரிந்த எஸ்.பி.மூலமா தப்பிச்சிட்டேன்.அவரோட பார்வை என்பக்கம் திரும்பியதால் கரியன் தப்பிச்சிட்டான்."

"இப்ப நடந்த ஆக்ஸிடென்ட்டும் இன்ஸ்பெக்டர் செய்த பிளான் தான் "

"என்ன சார் சொல்றீங்க ? ஒரே குழப்பமா இருக்கு யார் சொல்றதை நம்புவது?"

"தம்பி நடந்த சம்பவத்தை யோசி எனக்கு குழந்தையே இல்லை குழந்தை இருப்பதாக ஏன் அவரு சொல்லணும் ?"

"அதைவிட எனக்கு கல்யாணம் ஆகலைனு அவருக்கு தெரியாதது துரதிர்ஷ்டம்"

"அப்போ இதுக்கு யார் காரணம் ?
வேற யாரு அந்த இன்ஸ்பெக்டர் தான் "

"அவர் ஏன் இப்படி பண்ணணும் சார் ?"

"ஏன்னா அவர் பையனுக்கு கிடைக்க வேண்டிய சீட் இப்ப கரியனுக்கு கிடைச்சிருக்கு .

"நல்லா படிச்சா அவங்க அவங்க சீட் கிடைக்காதா சார் ? "

"இல்லை தம்பி கரியன் தாழ்த்தப்பட்ட கோட்டால வந்துட்டான் "

"இன்ஸ்பெக்டர் பையன் உயர்சாதினு கிடைக்கல "

"சார் இது தெரியாம இன்ஸ்பெக்டர்கிட்ட நீங்க வந்துருக்கீங்கனு சொல்லிட்டேனே சாரி சார்."

"நீ எதுக்கு தம்பி சாரி கேட்கிற நல்லது தான் பண்ணியிருக்க "

"என்ன சார் சொல்றீங்க எனக்கு புரியல ?"

"இன்னும் கொஞ்சநேரத்தில் தெரிஞ்சுடும் "என்று புன்னகை செய்தார்.

"சரி தம்பி நான் கொஞ்சம் மறைஞ்சுக்கறேன் அவர் வந்து கேட்டா
நான் இங்க வரலனு சொல்லிடு
உடனே அவர் கரியன் ரூமுக்குப் போவார் நீ அவர்கூட போ மத்தது தானா நடக்கும்" என்று சொல்ல தலையை ஆட்டினான் கோபி.

கேரளாக்காரர் அங்கிருந்து நகர .... இன்ஸ்பெக்டர் பதறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.

"எங்க எங்க அந்த ஆளு ?"

"யாரு சார் ?"

"அதான் அந்த கேரளாக்காரன் "

"அவர் இங்க வரல சார் அப்படியே போயிட்டாருனு நினைக்கிறேன்"

"நல்லா தெரியுமா கொரியன் ரூமுக்கு யாராவது வந்தார்களா ?"

"இல்லை சார் "

"சரி இங்கேயே இரு நான் பார்த்துட்டு வாரேன் "

"நானும் கூட வாரேன் சார் "

"நீ இங்கேயே இருனு சொல்றேன்ல யாராவது வந்தா தகவல் கொடு" என்றார் இன்ஸ்பெக்டர்

அந்த கேரளா காரர் சொன்னபடி இன்ஸ்பெக்டர் செயலில் வித்தியாசம் தெரிந்தது .

கோபி சரியெனத் தலையாட்ட இன்ஸ்பெக்டர் குரூரச் சிரிப்புடன் உள்ளே நுழைந்து கரியனின் ஆக்ஸிஜன் மாஸ்க்கை கழற்ற திரை மறைவிலிருந்து கேமிராக்களின் வெளிச்சம் விடாது வெளிவந்தது

இன்ஸ்பெக்டர் திரும்பிப்பார்க்க எஸ்.பி.கேரளாக்காரருடன் நின்றிருந்தார்.