• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _7

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
பூக்கள் -6


கரியன் மரிக்கொழுந்துவை நினைத்துப் சிரிக்க அம்மா மாதங்கி "என்னப்பா அப்படி வாய்க்குள்ளேயே சிரிக்கிற ?" என்று கேட்டாள்

"ஒன்னுமில்லை மா இந்த பொண்ணுங்க லவ் பண்ணும்போது லவ்வர் சண்டைக்காரனா இருக்கணும்னு நினைக்கிறாங்க இதே கல்யாணம் ஆனா அதைச் செய்யாதீங்க இதைச்செய்யாதீங்கனு சண்டை போடுறாங்க "என்றான்

"அது உனக்கு புரியாது கரியா, எல்லா பொண்டாட்டியும் புருஷன் வீரனா இருக்கத்தான் நினைப்பாங்க ஆனால் எதிலும் சிக்கிக்க கூடாதுனு நினைப்பாங்க ,அது அவங்க வாழ்க்கை பத்தின பயம்."

"சரிதான் நீயும் பெண்தானே அதான் அவளுக்கு சப்போர்ட் பண்ற "என்று சொல்ல...

"நீயே புரிஞ்சுப்ப கரியா ஒருநாள்"

"நான் எல்லாம் என் புருஷனை தடுக்கவே மாட்டேன்" என்று சொல்லியபடி கடைக்குட்டி வர்ற.. அவள் காதைத் திருகி "உனக்கு முன்னால் இருக்கவங்களுக்கே கல்யாணம் ஆகல அதுக்குள்ள கல்யாணம் கேட்குதோ " என்றுதிட்ட..."

"விடுங்க மா அவ சின்ன பொண்ணு ஏதோ விளையாட்டுக்கு பேசுறா"

"இவளா சின்ன பொண்ணு வயசுக்குமீறிய பேச்சு நீ அவளுக்கு ஓவரா செல்லம் குடுத்து கெடுக்காதே
அப்புறம் நாம தான் கஷ்டப்படணும்"

"சரி விடுங்க மா" என்று சொல்ல
"அண்ணன்னா அண்ணன்தா" என்று கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டு ஓடினாள் .

கரியனை முத்தத்தால் நனைத்த கடைக்குட்டியைப் பிடித்து "போதும்போதும் ரொம்ப ஐஸ் வைக்காதே ..உருகிடப்போறேன்" என்றான்

"போ'ணா எப்ப பாரு கிண்டல் பண்ற "

"சரி கோபப்படாதே சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்று சொல்ல ..

"அவல் கடலை எடுத்து வரவா?" என்று உள்ளே போனாள்.

இப்படியாக தன்மீது பாசம் வைத்திருக்கும் தங்கைகள் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அம்மா அப்பா என்ன செய்ய போகிறேனோ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

"என்னப்பா யோசனை" என்று அம்மா தன்னை உலுக்க ..

"ஒன்..னு..ஒன்னுமில்லை மா"

"என்னாச்சு பா சும்மா சொல்லு."

"இல்லைமா இந்த மூனு தங்கச்சிங்களை கரைசேர்க்கணும் நான் ஆசைபட்ட படிப்பை முடிக்கணும் "

"நம்ம சாதிசனத்தைக் கொஞ்சமாவது முன்னுக்குக் கொண்டு வரணும் "

"சரிப்பா அதுக்கு ஏன் இப்பவே குழம்புற உன்னால் முடியும்
அவளுங்க எல்லாம் சின்னப்புள்ளைங்கதானே இப்ப ஏன் கல்யாணத்துக்கு அவசரம் ?"

"நீ படிச்சு முடி, மத்தது அதுவா நடக்கும் "

ம்ம் என்று தலையாட்டி விட்டு கடைக்குட்டி கொண்டு வந்த அவல் கடலையை அவளிடமே கொடுத்து தின்னுனு எழுந்து போனான்.

"என்ன அண்ணே கேட்டுட்டு திங்காம போற ?"

"நீ தின்னுமா கொஞ்சம் வேலை இருக்கு" என்று ஃபோனை எடுத்து கோபிக்கு கால் பண்ணினான்.

***********

*******************

கரியனின் ஃபோன் கண்டதும் கோபி "சொல்லு மச்சான் என்ன திடீர்னு கால் ?" என்று கேட்டான்.

"ஏன்டா நான் பண்ணக்கூடாதா ?"

"காரணம் இல்லாம பண்ண மாட்டியே ?"

"ஒரு சந்தேகம் டா "

"கேளு தெரிஞ்சா சொல்றேன்"

"சாதி பத்தி என்னடா நினைக்கிற ?"

"என்னடா நீயும் சாதி பத்தியெல்லாம் பேசுற ?"

"கேட்டால் சொல்லு"

"உனக்கு எப்படினு எனக்கு எப்படிடா தெரியும்?"

"டேய் பொதுவா கேட்டேன் டா பிளேடு போடாம சொல்லி தொலை"

"கூல் மச்சான் இப்ப எதுக்கு கோவப்படுற ?"
"சிலருக்கு சாதிங்கிறது மேல் போடுகிற துண்டு மாதிரி ,சிலருக்கு அவங்க ஆடை மாதிரி."

"அப்படினா ?"

"துண்டை தேவைக்கு போட்டுக்கலாம்
ஆடையைத் தேவையோடு போடணும்"

"புரியலடா "

"சிம்பிளா சொல்லணும்னா
நாம எப்படி பயன்படுத்தணும்னு நாம
தான் முடிவு செய்யணும்."

"ம்ம் .."

"ஏன்டா திடீர்னு ?"

"இல்லை எனக்கும் உனக்கும் சாதி பிடிக்காது ஆனால் அன்னைக்கு பிரச்சனைக்கு அந்த சாதி கட்சிக்காரன்தான் வந்தான் ."

"இப்போ சாதி வேணுமா வேணாமா என்று குழப்பம்"

"இதுல என்ன குழப்பம் அன்னைக்கு உன்னோட தேவைக்கு அது உதவுச்சு .
அதைத் தேவைக்கு வச்சிகிட்டு மத்ததைப் பார்க்க வேண்டியது தானே "

"அது தப்பு இல்லையா ?"

"தப்புதான் , ஆனால் சாதி எதுக்கு வந்தது ?
நமது தேவைக்குத்தானே "

"ம்ம் "

"பிறகேன் குழம்பணும் அதைத் தூக்கிப்போட்டு வேலையைப்பாரு
ஆமா ஐ.ஏ.எஸ் எக்ஸாம் எப்போ ?"
என்று பேச்சை மாற்றினான்.

"அடுத்த மாதம் பதினான்காம் தேதி "

"சரி நல்லா படி ஆல் த பெஸ்ட் நான் வைக்கட்டுமா ?" என்று சொல்ல....

"டேய் இருடா இன்னும் ஒரு கேள்வி"

"என்னடா பிரச்சனை உனக்கு ?"

"இல்லடா தெளியத்தான் கேட்கிறேன்."

"சரி கேளு "

"கலப்பு மணம் பத்தி என்னை நினைக்கிற ?"

"உனக்கும் கலப்பு மணத்துக்கும் என்ன சம்பந்தம் ?
நீ லவ் பண்றது உன் அத்தை மக மரிக்கொழுந்தை ,
நீயேன் அதைப்பத்தி யோசிக்கிற ?"

"இல்ல மச்சான்..."

"டேய் டேய் தண்ணி ஏதும் சாப்பிட்டியா ?
இப்படி உளறுற "

"இல்லடா "

"பிறகேன்டா இப்படி எல்லாம் ?"

"நீ சொல்லு "

"உனக்கு பிடிவாதம் டா
சரி கேளு .."
"கலப்பு மணம் எதற்காக பண்றாங்க ?"

"சாதி ஒழியணும்னு "

"ஹாஹா" என்று சிரித்தான் கோபி

"எதுக்குடா சிரிக்கிற ?"

"பின்ன என்னடா ஒரு ஐ ஏ எஸ் ஆகப்போறவன் இப்படி அடிப்படையே தெரியாம இருக்க ..."

"ஏன்டா நான் சொன்னது என்ன தப்பு ?"

"தப்புதான் டா பேசிக்கா புரிதல் இல்லாதவங்க சொல்ற மொட்ட சமாதானம் இது "

"என்னடா சொல்ற ?"

"ஆமாண்டா கலப்பு மணம் என்பது தாழ்ந்த சாதிக்காரங்க உயர்ந்த சாதியைக் கட்டுவது இல்லை
உயர்ந்த சாதினு சொல்றவங்க தனக்கு கீழ் உள்ளவர்களை கட்டுவது "

"இரண்டும் ஒன்னுதானேடா "

"அட அறிவு அது எப்படி ஒன்றாகும் ?"

"ஒரு உயர்சாதின்னு சொல்ற ஆண் தனக்கு கீழ் உள்ள பெண்ணைக் கட்டுவதுதான் கலப்பு மணம்
அப்போதுதான் சாதி என்பது மறையுமே தவிர ..."

"கீழே உள்ள ஆண் உயர்சாதில இருக்கிற பெண்ணை கட்டினால் அவளும் கீழேதானே வருவா "

"அதெப்படி?"

"நமது சமூகத்தின் உண்மைநிலை.
ஆண்களின் சாதிதான் பட்டியலில் இடம் பெறும் அது தெரியாதா ?
பிறகெப்படி சாதி மாறும் ?"

"இங்கே சாதியும் ஒழியாது சங்கடமும் ஒழியாது .ஒருத்தரை ஒருத்தர் சகோதரத்துவ உணர்வோடு
பார்க்காதவரை இது சாத்தியமே இல்லை."

"அப்ப என்னதான் செய்யுறது ?"

"ஒன்னுமே செய்ய வேண்டாம் ."
நாம் வாழ்வதற்கான வழியை மட்டும் செய்வோம் ."

"சரிடா நீ அப்படி கலப்பு மணம் பண்ணுவியா ?"

"ஏன்டா, நான் லவ் பண்ணலையே அதுபோக எங்க ஆளுங்களைப்பத்தித் தெரியும்ல காட்டானுங்க "

"எதையாவது செஞ்சு குழப்பம் செய்வாணுங்க இதுல எங்க காதல் ?"

"ஒருவேளை செய்யணும்னு நினைச்சா கண்டிப்பா உனக்காக எனக்கு கீழ் இருக்கிற பொண்ணைக் கட்டிக்கறேன் போதுமா "என்றான்

"நிசமாவா டா சொல்றான்?"

"நிசமாத்தான் மச்சான் இது சத்தியம்."

"தேங்க்ஸ் டா "

"எதுக்கு டா தேங்க்ஸ் நீ போய் நிம்மதியா இரு" என்றான்.


எழுத்தாளர் நாகா