வேனிற் பூக்கள் _8
கரியனுக்கு மனதில் தோன்றியது என்ன என்று தெரியாமல் கோபி தனக்கு கீழே உள்ள பெண்ணைக் கட்டிக் கொள்வதாக வாக்கு கொடுத்தான்
கரியனுக்கு அவனது வாக்கு நிம்மதியைத் தந்தது .
தான் நினைத்தபடி நடக்கும் என்ற எண்ணமும் மேலோங்கியது . அந்த மகிழ்ச்சியிலேயே தூங்கப்போனான்
கோபிக்கு கரியனின் செயல் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை நிறையவே இருக்கிறது அதனால் தான் மாற்றத்தைத் தேடுகிறான் என்பது மட்டும் அவனுக்கு புலப்பட்டது
எப்படியோ அவன் நிம்மதியாக இருந்தால் சரி என்று நினைத்தான்.
கோபியின் அம்மா வசந்தி" என்னப்பா ஒரு மாதிரி இருக்க ?"
"ஒன்னும் இல்லைமா"
"ஏதோ திருதிருனு முழிக்கிற ? அதுவுமில்லாம அத்தனை தடவை கூப்பிட்டும் உனக்கு கேட்கல "
"எப்பம்மா கூப்பிட்ட நீ "
"அப்ப நீ கனவுலயா இருக்க ?"
"இல்லையே எனக்கு கேட்கல "
"நீ ஒரு யோசனையில் இருந்தால்தானே ,சரி என்ன பிரச்சினை ?"
"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே"
"பின்ன யாருக்கு பிரச்சனை?"
"என் பிரண்ட் கரியனுக்கு "
"அவனுக்கு என்ன பிரச்சினை?"
"தாழ்வு மனப்பான்மை நிறையவே இருக்கிறது அதான் பிரச்சனையே "
"அதுக்கு நீ என்ன செய்ய முடியும் ?"
"இல்லமா நல்ல பையன் ஆனா ஏனோ குழப்பத்தில் இருக்கான் ஐ.ஏ.எஸ் தான் அவனுக்கு கனவு ."
"சாருக்கு என்ன கனவு ?"
"நமக்கெல்லாம் அது செட் ஆகாது நமக்கு விவசாயம் தான் "என்றான்.
"சரிதான் இதுக்கு தான் சாரை இவ்வளவு பணம் கட்டிப் படிக்க வைக்கிறதோ?"
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?"
"பின்ன என்ன ? படிச்சிட்டு வேலைக்கு போவீனு பார்த்தா விவசாயம் பண்ணப்போறனு சொல்ற அதுக்கு படிக்காம நீ பார்க்கலாமே ?"
"சரிதான், படிக்கமா இந்த காலத்தில் விவசாயமும் பண்ண முடியாதுமா "
"என்னமோ போ ஒரே பிள்ளைனு படிக்க வச்சா நல்லா ஆடுற ..."
"சரி அதைவிடு இப்ப என்ன சொல்றான் ?"
"சாதியை ஒழிக்கனும்னு சொல்றான் "
"சரி இரண்டு பேரும் இரண்டு ரப்பர் எடுத்துட்டுப்போய் அழிச்சிட்டு வரலாம்ல"
"என்னம்மா விளையாடுறியா ?"
"பின்ன என்னபா படிக்காதவங்க தான் லூசு மாதிரி பேசுவாங்கனா நீங்க பேசுறது கொஞ்சமாச்சும் சரியா இருக்கா "
"ஏன்மா என்ன தப்பு ?"
"தப்பு ஒன்னுமில்ல ஆனால் நடைமுறை சாத்தியமாகுமா யோசி"
"ஏன் ஆகாது ?"
"உங்க தாத்தா வீரபாகுத் தேவர் தெரியுமா?"
"தெரியும் ஏன் கேட்கிறீங்க ?"
"நமக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா ?"
"கணக்கு தெரியாது ஆனால் நிறைய இருக்கு"
"அதெல்லாம் எப்படி வந்தது தெரியுமா ?"
"நம்ம முன்னோர்கள் சேர்த்து வச்சது தானே "
"அதான் இல்லை , உங்க தாத்தா வீரபாகு
பர்மாவில் இருந்து கஷ்டப்பட்டு உழைச்சு சேர்த்தது அத்தனையும் "
"என்னமா சொல்ற உண்மையா?"
"உண்மையா தான் சொல்றேன்
அவரு யாரையும் அடிச்சோ பறிச்சோ ஏமாத்தியோ சம்பாதிக்கல ..
உனக்கும் இந்த குணம் எப்படி வந்தது தெரியுமா ?"
"தெரியாது "
"உங்கள் தாத்தா சாதி பாக்கமாட்டாரு ஆனால் அவரை யாரும் பேசும்படி நடக்கமாட்டாரு."
"ம்ம் ..."
"அப்புறம் சாகும்வரை உழைச்சிட்டு தான் இருந்தார்."
"அதான் உனக்கும் விவசாயத்துமேல இப்படி விருப்பம் ."
"ஓ அப்படியா?
சரிமா ஏன் சாதியை ஒழிக்க முடியாது சொன்ன ?"
"ஒரு வெள்ளை பேப்பர் பென்சில் இரப்பர் எடுத்து வா "
"எதுக்குமா இப்ப பேப்பர் பென்சில் இரப்பர் ?"
"சொல்றேன் எடுத்து வா "
எதற்காக அம்மா இப்ப இது கேட்கிறாங்கனு யோசனையோடு எடுத்து வந்தான் கோபி.
"சாதினு அதுல லைட்டா எழுது "
"எதுக்குமா ?"
"சொல்றதைச்செய்"
எழுதி முடித்து அவளிடம் காண்பித்தான்
"சரி இப்ப இதை அழி" என்றதும் அழித்தான் .
"சரி இப்ப பக்கத்திலேயே இன்னொரு தடவை சாதினு எழுதி அதன்மேல் இரண்டு மூன்று தடவை திருத்து "
"ம்ம் "என்று எழுதி முடிக்க..
"சரி இப்ப அழி..."
"ஏன்மா எழுதச்சொல்லி அழிக்க சொல்றீங்க?"
"பர்ஸ்ட் அழி "
"அழிச்சிட்டேன்"
"இப்ப அந்த பேப்பரைப்பாரு "
"அதுல ஒன்னுமே இல்லையே "
"நிசமாவா ?"
"அதான் அழிச்சிட்டேனே."
"நல்லா பாரு "
"அழிச்ச தடம் இருக்கு மா "
"அதை நல்லா கூர்ந்து கவனி "
அம்மாவுக்கு என்ன ஆச்சு நாம் ஒன்னு கேட்டா இப்படி சொல்றாங்க என்றபடி அந்த பேப்பரைப்பார்த்தான்
அப்போதுதான் எதற்காக அம்மா இப்படி செய்யச் சொன்னாள் என்று புரிந்தது .
"இப்ப என்ன தெரியுது?"
"அழிச்ச இடத்துல எழுத்தின் அச்சு ஒரு இடத்துல லைட்டாவும் ஒன்னுல அழுத்தமாவும் தெரியுது"
"இப்ப புரியுதா நம்ம மனசு வெள்ளைப்பேப்பர் மாதிரி லைட்டா எதையாவது வச்சா அது அப்படியே இருக்கும் அழுத்தமா நாம் பண்ணினோம்னா இந்த பேப்பர் மாதிரி கறையாகவும் பதிஞ்சும் காட்சியளிக்கும் ."
"அதுமாதிரி தான் இந்த சமூகத்தில் ஆழமா பதிஞ்சது இந்த சாதி .அதை ஈசியா அழிக்கவும் முடியாது அப்படி செஞ்சாலும் இப்படித்தான் இருக்கும் "
"அப்ப என்னதான் முடிவு .?"
"நீ நடக்கிற பாதையில் முள் இருந்தால் பயணத்தை நிறுத்திக்கொள்வாயா ?"
"அதெப்படி முடியும் ?"
"அதேதான் இந்த சாதியும் கீழே கிடக்கும் முள் நீ அதனை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு நடக்கும் வேலையைப் பார்" என்றாள்
கோபிக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யம் நிறைய இத்தனை தெளிவாய் ஒரு விசயத்தை எப்படி புரியவைக்க முடிந்தது அம்மாவால் ..என்று நினைத்தபடி அம்மா வசந்தியைப் பார்த்தான்.
"என்னப்பா அப்படி பார்க்கிற ?"
"இல்லமா படிச்சவங்களே இவ்வளவு தெளிவாக சொல்லுவாங்களானு தெரியல..."
வசந்தி விடாமல் சிரித்தாள்
"ஏன்மா சிரிக்கிற ?"
"ஒன்னுமில்ல "
"சொல்லுமா நீ என்ன படிச்சிருக்க...?"
"எம்.எஸ்.சி .சைக்காலஜி கோல்ட்மெடல் இன் அமெரிக்கன் யுனிவர்சிட்டி"
என்றாள் வசந்தி.
கோபிக்கு தூக்கிவாரிப்போட்டது.
எழுத்தாளர் நாகா