• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 2

மோகனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
87
38
18
Guduvanchery
வேவாள் 2

அன்றைய இரவு சில திட்டங்களுடன் உறங்கிய மமதி.. அதிகாலை 4 மணிக்கு விழித்து கொண்டாள்… இது அவளின் அன்றாட வழக்கம்… 7 வயதில் ஆரம்பித்து இன்றும் தொடர்ந்தது பழக்கமாக…

அவர்கள் இருந்த அவுட் ஹவுஸ் பேச்சுலர்கள் தங்கும் மேன்ஷன் போல இருந்தது… நல்லசாமியுடன் தங்கியது அவளுக்கு வித்தியாசமாக தெரியவில்லை போல… வேண்டாம் எதுவும் நினைக்க வேண்டாம் அவளுக்கு அவளே கூறிக்கொண்டே மொட்டை மாடியில் தன் உடற்பயிற்சியை தொடங்கினாள்..

சரியாக 5 மணிக்கு நல்லசாமியுடன் வேலைக்கு தயாராகி சென்றாள்… அதே நேரம் மாறனும் அவன் அறைக்கு பக்கத்தில் இருந்த தன்னுடைய பிரத்தியேக ஜிம்மிற்கு கிளம்பினான்…

அவனுக்கு உடலை பேணிக்காப்பதில் ஒரு ஆர்வம்… சில நேரம் பிடித்த உணவை கூட தியாகம் செய்து வெறும் காய்கறி தின்பான்…

"மாரிம்மா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தம்பிக்கு இந்த க்ரீன் டீ குடுத்துட்டு வாம்மா.. எனக்கு மேல ஏற முடியல… மூச்சு வாங்குது… " எவ்வளவோ சமாதானம் கூறி அவளிடம் கொடுத்து அனுப்பினார்…

"சார் டீ…" திறந்து இருந்த அறையின் வாயிலின் நடுவில் நின்று சாதாரணமான குரலில் மாறனை அழைத்தாள் மாரி…

"கொண்டு வாங்க மாரி…" மாறன்

ஆர்ச்சர்யமாக அவனை நேராக ஒரு கணம் நோக்கினாள்… பின் பார்வையை மாற்றி கொண்டு சென்று அவன் சுட்டி காட்டிய டீபாயில் வைத்துவிட்டு வேறு பேச்சு பேசாமல் அவனையும் காணாமல் திரும்பினாள்…

"தேங்க்ஸ் பார் தி டீ…. "போகும் அவளை நிறுத்தும் விதமாக கூறினான்..

"இது என்னோட வேலை சார்…" உன்னோட தேங்க்ஸ் தேவை இல்லாத பேச்சு எனும் எண்ணம் இவளிடம்..

அவனோ இதை தன்னடக்கம் என எடுத்துக்கொண்டான் போல… "எல்லாருக்கும் சொல்றது தான் மாரி… தப்பா ஒன்னும் இல்ல…"

"ஓகே சார்… "என கூறி கீழே வந்து தன் வேளையில் மூழ்கினாள்..

அவனோ இவளை பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினான்…

"என்ன பா சொல்ற? "நீலன்

"நான் என்ன சார் சொல்றது… என்னோட மேலிடம் எனக்கு என்ன ஆர்டர் போடறாங்களோ அதை தான் நான் செய்யணும்.. தப்பா எடுத்துக்காதீங்க சார்… "

"உன்னோட ஆபிசர் கிட்ட நானே பேசவா தம்பி… "

"ஐயையோ வேண்டாம் சார் என்னோட வேலையே போய்டும்.. நீங்க வேற வழில முயற்சி செய்ங்க சார்… "

"சரிப்பா "என தொங்கிய முகத்துடன் விஸா பெரும் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் நீலன்…

அவருக்கு தலை வேதனையாக இருந்தது… எத்தனை பேரிடம் பேசி கெஞ்சி லஞ்சம் குடுத்து… காரியம் முடியும் தருவாயில் இப்படி ஆனதில் மனிதர் மிகவும் சோர்ந்து போனார்…

அடுத்து என்ன? மகனிடம் எப்படி இதை கூறுவது? என்ன ஆர்ப்பாட்டம் செய்வானோ என தலையை பிடித்துக்கொண்டு காரில் சாய்ந்து அமர்ந்து விட்டார்..

மமதி தன் வேலையை செவ்வனே செய்து முடித்து இருந்தாள்…

ஆம் ரகுமானுக்கு இன்று கிடைப்பதாக இருந்த வீசாவை அவனின் குற்ற பின்னணியை எடுத்து கூறி கேன்சல் செய்து இருந்தாள்…

வீட்டிற்கு வரும் நீலனின் முகத்தையும், ரகுமானின் சீற்றத்தையும் காண ஆவலாக புது வகை இனிப்புடன் மதிய உணவு தயார் செய்து இருந்தாள் மாரி…

அவளுக்கு இந்த விஷயம்லாம் ஒரு பொருட்டே அல்ல… ரகுமானின் முகத்திரையை வீட்டில் உள்ள அனைவர் முன்னிலையில் கிழிப்பதே அவள் முதல் நோக்கம்…

பிற்பாடு தான் அவனுக்கு சேர வேண்டிய தண்டனையை சட்டத்தின் மூலமும் தன் மூலமும் நிறைவேற்றுவது எல்லாம்…

அதற்கு அவள் இன்னும் நிறைய படிகளை கடக்க வேண்டி இருக்கும்… அது அவளுக்கும் தெரியும்… வீட்டில் ரகுமானை தவிர மற்ற அனைவரும் நல்லவர்களே என அவள் அறிவாள்…

முக்கியமாக மாறனை பற்றி அவள் நிறைய விஷயம் சேகரித்து வைத்து இருந்தாள்..
அவனிடம் கூறினால் அவனே அனைத்தையும் செய்து முடிப்பான்…

ஆனால், ஆனால் இது தன் வேலை, முக்கியமாக இது தான் மட்டுமே செய்து முடிக்க வேண்டிய கடமை என உணர்ந்தே இதில் முழுமையாக இறங்கி இருக்கிறாள்…

நல்ல சாமியை கூட முதலில் மிரட்டி தான் உள் நுழைய இருந்தாள்… ஆனால் அவரை பார்த்ததும் ஏதோ ஒரு நல் உணர்வு அவளிடம்… அதனாலேயே கூற வேண்டிய சிறு சிறு உண்மைகளை மட்டுமே கூறி அவரை சம்மதிக்க வைத்து இருந்தாள்…

ஏதோ யோசனையில் இருந்தவளை அவளின் காதில் உள்ள கருவி தட்டி எழுப்பியது… ஆம் நீலன் வீட்டிற்கு வந்து ரகுமானிடம் மெல்ல பேச ஆரம்பித்து இருந்தார்…

"விஸா கைக்கு வர்ற நேரத்துல யாரோ என்னமோ சொன்னாங்கனு எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க டா ரகு… நான் வேற ஏதாவது சோர்ஸ் ல உன்னை வெளிநாடு அனுப்ப பாக்குறேன் டா… "

"உங்களால முடியாது டாட்… வேண்டாம் விட்டுடுங்க… நானே பாத்துக்கறேன் இனி… இந்த ரூம் விட்டு வெளிய போனாலே போதும்னு இருக்கு இப்போல்லாம்…

வெளிநாடு போக என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்… " நிதானம் இழந்து கத்திக்கொண்டு இருந்தான் ரகுமான்

"டேய் எதுவும் தப்பா செஞ்சி வச்சிடாத டா… ஏற்கனவே செஞ்சதுக்கெல்லாம் என்ன ஆகும்னு தெரியாம கிடக்கேன்…" அவன் கட்டாயம் தவறாக தான் செய்வான் என தெரிந்தே கெஞ்சினார்

"இதுவே நான் சேதுவோட பையனா இருந்து இருந்தா இந்நேரம் இந்த கேஸெல்லாம் இல்லாம செஞ்சி இருப்பாரு…"

பெரியப்பாவின் நன்மதிப்பு அவருக்கான சமூக அந்தஸ்தை கொடுத்து இருந்தது இவனுக்கு அவர் குடும்பத்தின் பேரில் பொறாமை எண்ணம் ஏற்கனவே இருக்கிறது….

"முட்டாள் என் அண்ணன் உன்னை கொன்னு புதைச்சிட்டு தான் மறுவேலை பாப்பாரு… நானா இருக்க போய் நீ இன்னும் உயிரோட இருக்க…

என் அண்ணன் நேர்மை பத்தி உனக்கு என்னடா தெரியும்… ஒழுங்கா கொடுக்கறத சாப்டு உயிரோடவாவது இரு…"

"அப்படிலாம் நான் உயிர் வாழணும்னு அவசியம் இல்ல.. நான் முடிவு செஞ்சிட்டேன்… இனி நீங்க எதுலயும் தலை இடாதீங்க டாட்.. அவ்ளோதான் சொல்லிட்டேன்…

இவ்ளோ காசு பணம் இருந்தும் ஒன்னும் செய்ய முடியல உங்களால வந்துட்டாரு சமாதானம் செய்ய… "

"பட்டு தான் திருத்தணும்னு விதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்… " நீலனுக்கு மகனின் மீது இருந்த அதிருப்தி கோவமாக மாறியது..

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மாரிக்கு உதட்டோரம் ஒரு புன் சிரிப்பு அதையும் யாராலும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு தான்…

'ஹ்ம்ம் பதுங்கிய நரி வெளியே வர போகுதா… இனி தான் என்னோட திட்டம் ஒவ்வொண்ணா நிறை வேற போகுது… பரவாயில்ல டா உனக்கு ரோசம்லாம் வேற இருக்குதா? என் அண்ணன் டா அவன்.. குழந்தை மனசு டா அவனுக்கு, அவனை போய்… பெரிய தப்பு செஞ்சிட்ட ரகுமான்.. '

இப்பொழுது அவள் முகத்தில் வஞ்சம் கொண்ட பெண் சிங்கத்தின் பாவனை அதிலும் ஒரு புன்னகை… நல்லசாமியிடம் வெளியில் செல்வதாக கூறி கிளம்பி விட்டாள்…

அவளின் எண்ணங்கள் தன் அண்ணனை பற்றி சுழன்றது… அதே நேரம் இவளை பற்றி அறிய மாறனும் ஒரு தனியார் துப்பறியும் அலுவலகத்தை அடைந்து இருந்தான்…

மும்பையின் படோபகரங்கள் எதுவும் நுழையாத பகுதி அது..
ரோட்டில் போகும் மக்கள் கொஞ்சம் பாலத்தினை எட்டி பார்த்தால் ஒழிய அந்த பகுதி இருப்பது வெளி மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை…

4 வயது சிறுமி தன் 7 வயது அண்ணனை அதட்டி கொண்டு இருந்தாள்… "டேய் அண்ணா அவன் அடிச்சா வாங்கிட்டு வருவியா? உனக்கும் ரெண்டு கை தான திருப்பி அடிக்க வேண்டியது தான.?!

"குட்டி அப்டிலாம் யாரையும் அடிக்க கூடாது அம்மா சொல்லி இருக்காங்க மா…"

"அம்மாவுக்கா இப்போ வலிக்குது உனக்கு தானே வலிக்குது… ரொம்ப வலிக்குதா அண்ணா? "

"இல்லடா மம்மு வலிக்களை… வா வீட்டுக்கு போவோம்… ஆமா நீ என்ன செய்ற இங்க? "

"நான் ரோஸ் கூட விலான்டுகிட்டு இருந்தேன்… அந்த அரை டவுசர் தான் வந்து சொன்னான்.."

"ஒருத்தரையும் மரியாதை குடுத்து பேசிடாத… "

"ஹீஹீஹீ வாடா அண்ணா வீட்டுக்கு போலாம்… "

சர்ர்ர்ர்ர்… வேகமாக வந்து கொண்டு இருந்த கார் போட்ட பிரேக் சத்தத்தில் தன் எண்ணங்கள் களைந்தாள் மமதி…

எதிரே இருவர் ஒருவனை வெட்ட துரத்தி வரும் வேளையில் காரில் மோத போனவனை சடன் பிரேக் போட்டு காப்பாற்றி இருந்தான் டிரைவர்…

மமதிக்கு இங்கிருந்தே தெரிந்தது அது யார் என்று… மின்னல் வேகத்தில் அவன் முன்பு சென்று நின்றிந்தாள்…

அவனுக்கு இவள் யார் என்று தெரியவில்லை… ஏன் ஆணா பெண்ணா என்பது கூட தெரியவில்லை..

"துரத்தி வந்தவர்கள் டேய் ஒதுங்கி போ இல்லனா உன்னையும் போட வேண்டி இருக்கும்" என எச்சரித்த நொடி அவனை பலமாக வயிற்றில் தாக்கி இருந்தாள்…

அவன் இனி என்ன சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகுமா என்பதே கேள்விக்குறி தான்…

அடுத்தவன் மூக்கில் ஒரு குத்து தான்… மூக்கு தண்டுவடம் உடைந்து போனது…

அவர்களும் திடகாத்திரமான ரவுடிகள் தான்..தாக்க சமயம் கொடுத்தால் தானே தாக்க முடியும்.. அந்த நேரத்தை எல்லாம் மமதியிடம் எதிரி எதிர் பார்த்து இருக்க கூடாது…

அனைத்தையும் காரில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த மாறன் கூறிக்கொண்டான் தனக்குள்ளே இப்படி பட்ட தைரியமான பெண் தான் என்னவள்… அங்கே சென்றாள் தான் அவளை நேராக காண முடியும் என நினைத்து நடந்தான்...

காப்பாற்ற பட்டவனான விஸா ஆபிஸ் ஆபிசர் கை கூப்பி வணங்கிய சமயம் அதி வேகமாக வந்த காளன் ஒன்று இம்மூவரையும் ஒட்டுமொத்தமாக இடித்து தூக்கி வீச லாரி உருவில் வந்து கொண்டு இருந்தது…

பூமி அதிரும் அதிர்விலேயே வரும் ஆபத்தை கணிக்கும் விலங்குகள் போல மமதி கண்டுகொண்டாள்…

சினிமாவில் வரும் ஹீரோயின் போல ஹீரோவை தள்ளி விட்டு தான் சென்று லாரியில் விழவில்லை…

வீசா ஆபிசர் மாறன் இருவரையும் அவர்களின் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு சாலையோர புதரில் விழுந்தாள் மமதி…

மாறனுக்கு தலையில் கல் பட்டு மயங்கிக்கொண்டு இருந்தான்… ஆபிசர் ஏற்கனவே மயங்கி இருந்தான்…

மமதிக்கு கைகளில் மட்டும் அடி பட்டு ரத்தம் வந்து கொண்டு இருந்தது… அவளுக்கு அது எதுவும் வலி கொடுக்கவில்லை போல…

அந்த லாரியின் பதிவு எண்ணையும் லாரியில் யாராவது எட்டி பார்க்கிறார்களா என பார்த்துக்கொண்டு இருந்தாள்… ஆனால் மாறன் அவளையும் அவளின் ரத்தத்தையும் மட்டுமே பார்த்துக்கொண்டே முழுதாக மயங்கினான்…

சட்டென்று துரிதமாக செயல்பட்டு இருவருக்கும் அவசர கால மருத்துவ வாகனத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு அந்த இடத்தை விட்டு மறைந்து நின்று கொண்டாள்…

அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்த பின்னரே அங்கிருந்து சென்றாள்…

மனம் முழுவதும் ரகுமானின் இத்தகைய இழி செயலை நினைத்து கொதித்துக் கொண்டு இருந்தது…

சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல எத்தனை நேரம் ஆகும் எனக்கு… இல்லை அவன் அப்படி எல்லாம் உடனே சாக கூடாது….இச்செயலுக்கு அவன் வருந்தியே ஆக வேண்டும் என முடிவு செய்து விட்டாள்…

மனதின் இன்னொரு மூலையில் மாறன் கண் விழித்து இருப்பானா எனவும் ஓடியது மேலும் தன்னை அடையாளம் கண்டு கொண்டு இருப்பான் இனி தான் என்ன செய்ய வேண்டும் என மனதிற்குள் கேட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்…

அந்நேரம் வீடு கலேபரமாக இருந்தது… இவள் வீட்டின் பின் பக்கம் வழியாக உள் நுழைந்ததால் யாரும் கவனிக்க வில்லை…

மாறன் மருத்துவமனை வசம் சென்றது அறிந்ததில் சேதுவும் லதாவும் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டு இருந்தனர்…

அப்பொழுது தான் அறையில் இருந்து வெளியே வந்த ரகுமான் இச்செய்தி கேட்டு உள்ளுக்குள் ஆனந்தம் கொண்டான் ஆனால் அதை மறைத்து வெளியே
"ஐயோ அண்ணாக்கு என்ன ஆச்சு? என்கிட்ட யாருமே சொல்லலயே? எனக்கு உள்ளுக்குள்ள சொல்லிட்டே இருந்துச்சு ஏதோ தப்பா நடக்க போகுது நீ இப்டி இருக்க கூடாது எழுந்து வெளிய போன்னு…."

"ரகு, கண்ணா, தம்பி" என வீட்டில் இருந்த அனைவரும் அவனை ஆர்ச்சர்யமாகவும் சந்தோசமாகவும் அழைத்தனர்…

"கண்ணா உனக்கு சரியாகிடுச்சா? கடவுளே உங்களுக்கு நன்றி...எங்க பிள்ளையை எங்ககிட்ட முழுசா குடுத்துட்ட" என மனமார மகிழ்ச்சியுடன் ரகுமானை தழுவிகொண்டார் லதா…

தொடரும்..
 

மோகனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
87
38
18
Guduvanchery
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ரகுமான் ஏதோ பெரிய வில்லத்தனம் பண்ணிருப்பான் போல 🤔🤔🤔🤔🤔🤔
ஹ்ம்ம்... ஆமா பா... விடுங்க மமதி பாத்துப்பா 😍😍😍😍😍