அனைவருக்கும் வணக்கம்!!!
உங்கள் அனைவருடைய ஆதரவுடன் தொடங்கப்பட்ட நமது “வைகை தமிழ் நாவல்” வலைத்தளம் மலர்ந்து, உங்கள் இதயங்களில் மணம் வீசி, வெற்றிகரமாக அதன் 100வது நாளில் அடியெடுத்து வைக்கவிருக்கிறது. இந்தப் பொன்னான நாளை, மேலும் பொன்னாக்க… எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “ஒரு பக்க கதைப் போட்டி” ஒன்றை அறிவிக்க இருக்கிறோம்.
போட்டியில் கலந்துக் கொள்ளும் எழுத்தாளர்கள், ஒரு பக்க கதை எழுத, கொடுக்கப்படும் மூன்று கருப்பொருளினை மையமாகக் கொண்டு எழுத வேண்டும். அதில் ஏதேனும் ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து, எழுத்தாளர்கள் தங்கள் கதையினை எழுதிக் கொள்ளலாம்.
தலைப்பு :
கோவிட்
மழை
சிங்கிள் பேரன்ட் (ஒற்றைப் பெற்றோர்)
போட்டியின் விதிமுறைகள் :-
எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதைகள் 400 முதல் 450 வார்த்தைகளுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அக்டோபர் 10, 2021 (10.10.2021) ஆம் தேதி முதல் எழுத்தாளர்கள் தங்களுடைய கதைகளை
vaigaitamilnovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப ஆரம்பிக்கலாம். போட்டியின் இறுதி நாள் நவம்பர் 3, 2021 (3.11.2021).
மேலே அறிவிக்கப்பட்ட நாளுக்குள், எழுத்தாளர்கள் தங்களுடைய கதைகளை மின்னஞ்சல் முகவரிக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அதன்பிறகு வரும் கதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
போட்டியின் இறுதி முடிவு டிசம்பர் 1, 2021 ஆம் தேதி அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் எழுத்தாளருக்குப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
எங்களோடு சேர்ந்து 100வது நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாட இந்தப் போட்டியில் கலந்து கொண்டு உங்களுடைய திறமைகளை அனைவருக்கும் தெரியப்படுத்த வாருங்கள்!
நன்றி,
இவண்
வைகை குழு.