• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வைகை சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இனிதே ஆரம்பம்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
பொதிகை மலைப் பிறந்த வைகை,

தமிழ்ச் சுவடிகளைத் தாங்கிவந்த வைகை,

ஈசன் திருவிளையாடிய, மதுரையம்பதியில்,
தவழ்ந்து வந்த வைகை,

தன் கரையோரங்களில் ஆதி நாகரீகங்களை புதைத்துக் கொண்ட வைகை,

தன்னிரு மருங்கிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை,

சிலப்பதிகாரத்தில் தன்னை அடையாளம் காட்டிய வைகை,

கண்டறிய முடியாத பல அற்புதங்களை சுமந்து கொண்டு பயணம் செய்யும் வைகை,


காலப் பரிணாமத்தில் தன் குணநலனோடு,
இன்று வைகைத் தளமாய் உங்கள் கண் முன்னே!


ஜீவ நதி பாயும் வைகையின், ஈர மணலில் தோன்றியதே நாகரீகம்!

ஜீவனுள்ள கதைகளால் வைகைத் தளத்தில் தோன்றப் போகிறதே குதூகலம்!

கங்கை சூடியவனும் வைகையின் மண்ணைச் சுமந்ததான்,

நதிகளின் பெயர்களைச் சூடிய நங்கைகளே!

வைகை பாயும் மண்ணைச் சுற்றி களம் அமைத்து,

அழகிய கதை வடிக்க வாருங்களேன்!

அழகிய நதிகளின் சங்கமம் வைகைத் தளத்தில்...

சங்கமித்த நதிகள் கரை கடந்து கலக்கப்போவது வாசகர்களின் உள்ளக் கடலில்.

வைகை நதி கலக்கும் இடத்தில் தூர தேசத்து கப்பல்கள் வந்ததாம்...

வைகை தளமும் தேசம் விட்டு பாசம் கொண்டாடும் பறவைகளை தன்னுள்ளே கொண்ட சரணாலயமாம்.

வைகை பாயும்,மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி சூடுவதோ வேப்பம்பூ மாலை,

வைகை தளத்தில் தங்கள் எழுத்தால் ஆட்சி செய்யப்போகும் எழுத்தாளர்கள் சூடப் போவதோ வாகை மாலை!

‘ வை… கை!‘ என்றதால் வற்றாமல் பெருகிய வைகை நதி போல்,

‘ வைகை ‘ தளத்திலே எழுத வரும் எழுத்தாளர்களே!

உங்கள் எழுத்துக்கள் வெள்ளமென பாய்ந்தோடட்டும்! எட்டுத்திக்கும் பரவட்டும்!

🤩🤩🤩

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மக்களே..

வைகை சித்திரை ‘மை’ திருவிழா இன்று முதல் இனிதாக ஆரம்பித்துவிட்டது நம் வைகைத் தளத்தில்.

மொத்தம் நாற்பத்தி இரண்டு ஆறுகள் என்ற பெயரில் மறைந்திருக்கும் எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் தங்கள் அடையாளத்தை மறைத்துப் பங்கேற்கப் போகிறார்கள். அவர்கள் உங்களுக்குப் பிரியமான எழுத்தாளராகக்கூட இருக்கலாம். வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஆறுகளுக்குள் மறைந்திருக்கும் எழுத்தாளர்களை கண்டுபிடியுங்கள், உற்சாகப்படுத்துங்கள்.

நாளை முதல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வரை டீசர் திருவிழா. எழுத்தாளர்கள் அவர்கள் கதைகளின் டீசர்களை பகிருவார்கள். அதன்பிறகு 14ம் தேதி (சித்திரை-1) அன்றிலிருந்து கதையின் பதிவுகள் தளத்தில் பதிவிடப்படும்.

வைகையின் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்..

நன்றி
வைகை குழு..