வணக்கம் நேசங்களே!
வந்துவிட்டோம் வைகை தளத்தின் அடுத்த புத்துணர்வான செய்தியோடு! புது புது வண்ணப் பக்கங்களை இந்த எழுத்துலகில் இணைக்க!
வைகை தளம் பெருமையுடன் வழங்கும்,
"வைகையின் சித்திரை 'மை' திருவிழா - 2022"
வைகை தளத்தில் ஆரம்பமாகப் போகும் குறுநாவல் போட்டி!
எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்க, விதவிதமான கற்பனைகளை உருவாக்க, அவர்களை உற்சாகப்படுத்தும் பரிசுகளோடு சித்திரை ஒன்று (ஏப்ரல் 14) முதல் ஆரம்பம் ஆகப் போகிறது.
வைகை தளத்தில் நிகழப் போகும் இந்நிகழ்ச்சிக்கு வைகை நதியே ஆரம்ப துதி! வைகை நதியான இத்தளத்தில் கிளை நதிகளின் பெயர்களை கொண்டு எழுத்தாளர்கள் தங்கள் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல் எழுத போகின்றனர்.
கிளை நதிகளை சார்ந்திருக்கும் மக்களும் ஊரும் கதையின் களமாக இருக்க வேண்டும்.
இதன்மூலம் வித்தியாசமான ஊர்களையும் நதிகளையும் உங்கள் கற்பனையின் மூலம் நாம் கண்டு கொள்ளும் ஓர் முயற்சி.
நதிகள் எப்படி மேடு பள்ளங்களை கடந்து நெளிவு சுளிவாக திரிந்து இறுதியில் கடலை சேர்கிறதோ அதுப்போல், புனைவுடன் கதையை பல பல 'twist & turns' கொண்டு எழுதி இருந்தாலும், இறுதியில் நல்ல சிந்தனையையும் ஆழ்ந்த கருத்து நிறைந்த கதையாக அமைய வேண்டும்.
கதையின் கருவானது எந்த பிரிவை சார்ந்தது என்பது முழுக்க முழுக்க எழுத்தாளர்களின் தேர்வாகும்.
எழுத்தாளர் தங்களின் பெயரை மறைத்துத் தான் எழுத வேண்டும்.
கதையின் களம் கண்டிப்பாக வைகை நதி பாயும் ஊராகவோ அல்லது அதன் கிளை நதி பாயும் ஊராகவோ இருக்க வேண்டும். மற்றும் படி, மீதம் எழுத்தாளர் கற்பனையே.
முழுக்க எழுத்தாளரின் சொந்த முயற்சியில் தான் கதை இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியானதோ, மற்றவரின் படைப்பை சார்ந்தோ இருக்கக் கூடாது.
இது குறுநாவல் போட்டி ஆகையால் உங்களின் கதை 25000 - 30000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை ஒன்றில் இருந்து உங்கள் கதையை நீங்கள் வைகை தளத்தில் பதிவு செய்ய ஆரம்பிக்கலாம். போட்டி முடியும் நாள் மே 31 ஆம் தேதி.
போட்டியில் பங்குபெற விரும்புவோர் ஏப்ரல் 01 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பரிசு தொகையாக,
முதல் பரிசு பெறும் கதைக்கு ரூபாய் 5000,
இரண்டாம் பரிசு பெறும் கதைக்கு ரூபாய் 3000,
மூன்றாம் பரிசு பெறும் கதைக்கு ரூபாய் 2000 வழங்கப்படும்.
புத்தகம் போட விரும்பினால், வைகை பதிப்பகம் சார்பாக உங்களின் கதை புத்தகமாக போடலாம். விருப்பம் இல்லாத பட்சத்தில், பரிசு தொகை மட்டும் வழங்கப்படும்.
இதை தவிர்த்து, நான்கு முதல் பத்தாம் இடத்தைப் பிடித்திருக்கும் கதைகளை குழுக்கள் முறையில் தேர்வு செய்து, அதில் ஐந்து கதைகளை புத்தகமாக
அடுத்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவிற்கு வைகை பதிப்பகம் சார்பாக வெளியிடப்படும். இது முழுக்க முழுக்க எழுத்தாளரின் விரும்பம் மட்டுமே!
கடைசியாக, வாசகர்களுக்கான போட்டி!
சிறந்த விமர்சனம், மீம் மற்றும் கமெண்ட் என்ற மூன்று போட்டிகள் வாசகர்களுக்காக தளத்தில் நடைபெறும்.
தொடர்ந்து அதில் பங்குபெற்று, எழுத்தாளரை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
தொடர்புக்கு..
vaigaitamilnovels@gmail.com (or)
வதனி பிரபு
நன்றி
வைகை தளம்