• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
449
🌺மலர் : 19🌺

சதீஷ் வீட்டிற்கு வந்ததில் இருந்து பவியின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தான்… பவியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது… அவளைப் பார்த்த சதீஷ் பவியிடம் "என்ன பவி டீவி பார்த்தியா? இவன் நல்லவனா இல்லை கெட்டவனானு" யோசிக்கிறியா? " என்று சதீஷ் கேட்க அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பவி…

" என்ன பவி இவன் எப்பிடி கண்டுபிடிச்சான்னு யோசிக்கிறயா? "

" ம்" என்று தலையையாட்டினாள்..

(அதாவது என்ன நடந்ததுனா தொடர்ந்து படிச்சிட்டு இருந்த பவி கொஞ்ச நேரம் டீவி பார்க்கலாம்னு நினைச்சு டீவியை போட்டாள்… அதில் breaking newsa நம்ம வீராவோட accident தான் போய்க்கிட்டு இருந்திச்சு… அதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பவி… அதைத் தொடர்ந்து சதீஷ் மீடியாவுடன் பேசியது ஒளிபரப்பானது… அதைப் பார்த்த பவிக்கு ஒன்றும் புரியவில்லை….. எதுவாக இருந்தாலும் சதீஷ் வந்தவுடனேயே கேட்டுக்கலாம் என்று நினைத்தாள்….)

"இங்க பாரு பவி நான் வீரா சேர்க்கிட்டதான் பி. ஏவா இருக்கிறன்… உன்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்… சேரால உனக்கு எதுவும் நடந்திடக் கூடாது என்றுதான் நான் உன்னை இங்க தங்க வச்சன்… மத்தபடி எந்த தப்பான எண்ணமும் இல்லை… சேர் எனக்கு அண்ணா மாதிரி பவி… அவர்கிட்ட நான் எதையுமே மறைச்சதில்லை… நான் மறைக்கிற ஒரே விசயம் நீ இங்க இருக்கிறதுதான்…"

"எனக்கு என்ன பண்றதுனு தெரியலை…"

" என்மேல நம்பிக்கை இல்லைனா சொல்லு பவி… நீ எங்க போகணும்னு சொல்லு அங்கேயே கொண்டு விடுறன்"

"இல்லை நான் உங்களை நம்புறன்…. நான் எங்கேயும் போகலை…இங்கேயே இருக்கிறன்… எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுவீங்களா? "

பவி தன்னை நம்புகிறாள் என்று சொன்னதும் சதீஷ்க்கு சந்தோசமாக இருந்தது…" சொல்லு பவி உனக்கு என்ன உதவி பண்ணணும்? "

" அதுவந்து நான் சித்து அக்கா கூட பேசணும்… அதுக்கு மட்டும் உதவி பண்ணுங்க"

" பவி சித்து நல்லா இருக்கிறா… ஆனால் உன்னால இப்போ நேர்ல பேசமுடியாது… வேணும்னா போன்ல பேசுமா… சேருக்கு தெரிஞ்சா ஏதாவது பிரச்சனையாகிடும். அது நம்ம மூணுபேருக்குமே நல்லதில்லை…. பிளீஸ் புரிஞ்சிக்கோ… "

" சரி நான் அக்கா கூட போன்லையே பேசிடுறன்… அக்கா போன் நம்பர் கொடுங்க"

" பவி… உன்னோட அக்கா ஒண்ணும் கல்யாணம் பண்ணி அவ புருஷன் வீட்டுக்கு போகலை… அவளை கடத்தி வச்சிருக்கிறாங்க… அவக்கிட்ட எப்பிடி போன் கிடைக்கும்? "

" ஐயோ இப்ப என்னதான்ங்க பண்றது"

" நான் நாளைக்கு காலைல சேரை பார்க்க ஹாஸ்பிடல் போகணும்… அப்புறம் சித்துவை கூட்டிட்டு வீட்டுக்கு போயிடுவன்… அப்போ என்னோட போன்ல இருந்து உனக்கு கால் பண்றன் நீ சித்து கூட பேசு "

" ரொம்ப சந்தோசம் சதீஷ்…. "

" சரி எக்ஸாம்கு ரெடியாயிட்டியா? "

"அதெல்லாம் சூப்பரா ரெடியாகி இருக்கிறன்… "

" சரி இப்பவே ரொம்ப லேட்டாச்சு நீ போய் தூங்கு"

" ஓகே…குட் நைட்"

" குட் நைட் "

………………………………………………………

தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பான செய்தியை ஏதோ கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருந்தனர் தரணிதரன் குடும்பத்தினர்…

தனது மகனை கொலை முயற்சி செய்த சிறு குற்றவுணர்வும் இல்லாமல் தரணிதரன்" நம்மளோட ஆளுங்க ரொம்ப நல்லாதான் வேலையை முடிச்சிருக்கிறாங்க" என்றார்.

"ஆமா அப்பா.. எனக்கு கூட சரியா வேலையை முடிப்பானுகளானு என்று சந்தேகமாக இருந்திச்சு.. ஆனால் நல்லாதான் பண்ணியிருக்கானுக"

"இனிமேல் நம்மளோட கம்பனி தான் முதலிடம்…" என்றார் விஜி…

"இங்க பாருங்க அந்த சதீஷ் மீடியாகூட பேசியிருக்கிறான்… " என்றார் தரணி.. அதைப் பார்த்தனர்..

" என்னப்பா இது… அவனுக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு… சீக்கிரமா உங்ககூட அந்த வீரா பேசுவான்னு இவன் மீடியாக்கு சொல்லியிருக்கிறான். "

" அதுதானே கிரண்… நம்ம ஆளுங்கதான் வீரா உயிர் பிழைக்கவே மாட்டான்னு சொன்னானுங்க"

" அதுதான் ஒண்ணும் புரியலை…."

"கிரண் ஒரு வேளை அவன் அந்த accidetla உயிர் பொழைச்சாலும் அவன் எழுந்து நடமாட எப்பிடியும் ஒரு ஆறுமாசமாவது ஆகும்…. "

" எப்பிடி சொல்ற பிருந்தா? "

" accident ஆன காரை பார்த்தீங்கல… எப்பிடி இருந்திச்சு அது கார்னே சொல்ல முடியாதளவுக்கு இருந்திச்சி… அவன் உயிர் பிழைக்கிறதே கஷ்டம் அப்பிடி உயிர் பிழைச்சாலும் அவன் பழைய நிலைக்கு வர்றதுக்கு ரொம்ப நாளாகும்"

" பிருந்தா சொல்றது சரிதான் கிரண்… அவன் பழையபடி வர்றதுக்கு முதல் அவன் எழ முடியாத படி அடிமேல அடி கொடுத்திட்டே இருக்கணும்… "

" ஆமா அத்தை… "

" சரி நேரமாச்சு போய் தூங்குங்க"

" சரி…. "

……………………………….…………………..

மதன் ஹாஸ்பிடல் இருந்து வீட்டிற்கு வர அவனது அம்மா அவனுக்காக காத்திருந்தார்..

" வாப்பா அந்த தம்பிக்கு எப்படி இருக்கு?"

" கண் முழிச்சிட்டாருமா எங்கூட பேசினாங்க… ஆனால்.. "

" என்னப்பா ஆனால்… "

"அவரால நடக்க முடியாது அம்மா… அடிபட்டதுல காலில் பெரிய அடி அதனால அவரால நடக்க முடியாது அம்மா"

"கடவுளே… ஏன் மதன் வேற டாக்டர்கிட்ட காட்டிப் பார்க்கலாமே"

" அப்பிடித்தான்மா நெனச்சிருக்கிறன்… இந்த டாக்டர் சேர் எழுந்து நடக்க 80% வாய்ப்பே இல்லைனு சொல்றாருமா… பாவம் அம்மா சேர்"

" நம்மளால என்னப்பா பண்ண முடியும்? "

" முடியும் அம்மா…இந்த accident யாரால நடந்திச்சி எதுக்காக நடந்திச்சினு கண்டிபிடிக்கிறன்மா"

" சரி மதன்… எதுக்கும் நீ ரொம்ப கவனமா இரு"

" சரிமா"

" மதன் போய் குளிச்சிட்டு வா.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்"

" சரி அம்மா " என்ற மதன் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றான்….

…………………………………………………

சித்து சாப்பிட்டு முடித்த பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவள் மெதுவாக வீரா அருகில் வந்தாள்.. வீரா கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான்… இவளுக்கு சந்தேகம் வந்தது… இவரு தூங்கிறாரா? இல்லை தூங்கிற மாதிரி நடிக்கிறாரா? என்று யோசித்தவாறு பார்த்துக் கொண்டு இருந்தாள்… ஆரம்பத்தில் சும்மா கண்ணை மூடிக் கொண்டு படுத்த வீரா மாத்திரைகளினால் அவனறியாமலே படுத்து விட்டான்..

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சித்து..

"என்ன சித்து அப்படி பார்க்கிற?" என்றது அவளின் மனசாட்சி…

"ஒண்ணுமில்லை… எப்பிடி ஹூரோ மாதிரி ஜம்முனு இருந்தாரு… இப்போ இப்பிடி படுத்திருக்கிறதை பார்த்தா கஷ்டமாக இருக்கு"

"இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது?"

"என்ன சொல்ற நீ"

"நான் சொல்றது இருக்கட்டும் நீ முதல்ல சொல்லு.. "

" நான் என்ன சொல்லணும்?"

"நீ இவரு அடிபட்டு வந்ததும் எப்படி முடிச்ச தெரியுமா?? டாக்டர்கிட்ட உன்னோட பிளட்டை எடுத்துக்க சொல்லி கெஞ்சின… இதெல்லாம் விட நீ கொஞ்ச நேரம் உன்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியாம உட்கார்ந்து இருந்த…. யாரோ ஒருத்தருக்காக நீ ஏன் துடிச்ச? சொல்லு"

" மௌனம் "

" நீ சொல்ல மாட்ட ஏன்னா உனக்கே தெரியும் நீ அவனை லவ் பண்றது" என்ற சொன்ன மனசாட்சியிடம்..

" ஆமா நான் அவரை லவ் பண்றன்… கடத்திட்டு வந்த ஒருத்தரு மேல காதல் வருமானு எனக்கு தெரியாது… ஆனால் நான் அவரை காதலிக்கிறேன்… இதை என்னால அவர்கிட்ட சொல்ல முடியாது… ஏன்னா அவருக்கு நான் பொருத்தமானவ இல்லை…. அதனால அவர்கிட்ட இல்லை யார்கிட்டையும் சொல்ல மாட்டன்…." என்றாள்.

" என்னவோ பண்ணு… ஆனால் உன்னால ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது…. " என்று சொல்லிவிட்டு மனசாட்சி மறைந்து விட்டது… சித்துவும் வீராவின் கட்டிலில் தலையை சாய்த்து படுத்து விட்டாள்…..

…………………………………………………..

அடுத்த நாள் காலை பவி நேரமாக எழுந்து ரெடியாக சதீஷ் தூங்கிக் கொண்டு இருந்தான்… பவியும் தனக்கும் சதீஷ்க்கும் காப்பி போட்டாள்… சதீஷ் அறைக்கு வெளியே நின்று கதவைத் தட்டினாள்… அவள் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தான் சதீஷ்… முகத்தைமுகத்தை கழுவிக் கொண்டு வந்து கதவைத் திறந்தான்.

"குட் மார்னிங் சதீஷ்"

"குட் மார்னிங் பவி"

"இந்தாங்க காப்பி" என்றபடி அவனிடம் காப்பியை நீட்டினாள்.

"ம்" என்றபடி வாங்கினான்…

"சதீஷ் என்னை காலேஜ்ல விட்டுட்டு போக முடியுமா?"

"கண்டிப்பா பவி போகும் போது காலேஜ்ல விட்டுட்டு போறன் எக்ஸாம் முடிய கால் பண்ணு வந்து கூட்டிட்டு போறன்"

"உங்களுக்கு வேலையா இருக்காதா?? "

" அதை நான் பார்த்துக்கிறன் பவி"

"சதீஷ் எக்ஸாம் முடிஞ்சதும் அக்கா கூட பேசணும் பிளீஸ்.. " என்றாள் கண்கள் கலங்க... அருகில் வந்து அவளது கண்ணீரைத் துடைத்து" கண்டிப்பா பேசலாம் சரியா? இரு நான் குளிச்சிட்டு வர்றன் "

"சரி"

சதீஷ் பவியை அழைத்துக் கொண்டு காலேஜ்க்கு வந்தான்..

……………………………………………………

"பிருந்தா"

" சொல்லுங்க கிரண் "

"இன்னைக்கு பவிக்கு எக்ஸாம் அவ அங்க வருவா...காலேஜ் போனா அவளை பார்த்து கூட்டிட்டு வர முடியும்"

" அவ வருவாளா மாப்பிள்ளை ". என கேட்டார் வேதா.

"கண்டிப்பா வருவா அம்மா... நமக்குதான் தெரியுமே அவள் எப்பவும் படிப்ப விடமாட்டானு... அதோட நேற்று அட்மிஷன் வேற வாங்கிட்டு போயிருக்கா நிச்சயமா வருவா... ஆனா இப்போ போக முடியாது...கம்பனில முக்கியமான வேலை இருக்கு.. அவளோட எக்ஸாம் ஈவினிங் முடிஞ்சது போகலாம்"

"எப்படியோ அவளை கூட்டிட்டு வந்திடு... அவள் வரட்டும் அதுக்கு அப்புறம் இருக்கு அவளுக்கு"

"ஆமா அம்மா"

…………………………………………………….

சதீஷ் பவியை காலேஜில் விட வரும்போது அதை மாலதி பார்த்தாள்..
சதீஷ் பவியின் கைகுலுக்கி" all the best exama நல்லபடியா பண்ணு" என்று சொல்லும் போது தனது போனில் சதீஷ் மற்றும் பவியை போட்டோ எடுத்தாள் மாலதி...

"சரி நீங்க போயிட்டு வாங்க"

"சரி பவிமா" சதீஷ் சென்றதும் examkku நேரம் இருப்பதால் அங்கிருந்த மரத்தடியில் இருந்தாள்... அவளருகில் சற்று தள்ளி மாலதியும் அவளின் தோழிகளும் இருந்தனர்..

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?"

"என்னனு சொன்னாதானேடி தெரியும்"

"இங்க ஒருத்தரு அவங்க வீட்டை விட்டு சொல்லிக்காம வெளியே வந்திட்டாங்க போல"

"ஏய் வெளிய வந்திட்டாங்களா? யாருடி அது? உனக்கு எப்படி தெரியும்?"

"வெளியே வந்திட்டாங்களோ இல்லை யார்கூட வும் போய் இருக்கிறாங்களோ தெரியலை... அவங்க அக்கா தேடி வந்தாங்க" என்றாள் பவிக்கு கேட்கும் வகையில்.....

"ஒரு வேளை அக்கா வந்திருப்பாளோ....கடவுளே இவ வேற என்ன சொன்னானு தெரியலையே?" குழம்பினாள் பவி... அபபோது பரீட்சை தொடங்க இருபதன் அறிகுறியாக மணி அடிக்க வகுப்பிற்குள் சென்றனர்.

……………………………………………………….

காலையில் சித்துக்கு முன் கண்விழித்தான் வீரா … அவனது வலது கை பாரமாக இருக்க என்னவென்று தலையை திருப்பி பார்த்தான்… அங்கே நம்ம சித்து வீராவின் வலது கையில் தனது தலையை வைத்து தூங்கிக் கொண்டு இருந்தாள்… வீரா அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது நர்ஸ் அவனை செக் பண்ண வந்தான்..

சித்து அவனின் கையில் தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவளை எழுப்பச் சென்றார்... அதைத் தடுத்தான் வீரா..

"சேர் உங்களுக்கு ஃப்ரெஷ் அப் ஆக்கணும் அரைமணி நேரத்தில் டாக்டர் வந்திடுவாங்க"

"நீங்க உங்களோட வேலையை பண்ணுங்க அவ தூங்கட்டும் நீங்க தொந்தரவு செய்ய வேண்டாம்"

"சரி" என்றவர் வீராவுக்கு உடம்பு துடைத்து விட்டு கட்டுக்களை மாற்றி புது கட்டு போட்டார் "

"சரி நீங்க போகலாம்"

"சரி சேர்" என்றவர் சென்று விட்டார்....

சிறிது நேரத்தின் பின் அங்கு வந்த சதீஷ்க்கு சிரிப்பு வந்தது........

சதீஷ் சிரிப்பதற்கு காரணம் என்ன?????

மலரும் ……………………………….
 
Divya.sugumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 18, 2023
Messages
47
Sindhuva ah yeppadi ezhuparadhunu Veera teriyama irukkah Satheesh sirikarana ah
 
Malarthiru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
106

அடேய் இரண்டு பேரையும் ஒன்றாக பார்த்து இருப்பான்
 
Top