• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01. சித்திரமே சொல்லடி....

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
838
28
93
Jaffna
அந்த நீளமான கட்டடத்தின் உற்புறமெங்கும் கண்ணாடியிலான தடுப்புக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தடுப்புக்களுக்கும் நடுவே கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த நிறுவணத்தில் பணி புரிவோர்.


பூவிக்காவிற்கு வேலை எங்கே ஓடியது? முன் தடுப்பில் அமர்ந்து, கண்ணும் கருத்துமாக வேலையில் மூழ்கிப்போனவனது ஒவ்வொரு அசைவையும், தாடைக்கு முண்டு கொடுத்து ரசித்துக்கொண்டிருந்தவள் கேபின் போன் ஒலித்ததும் தான், திருக்கிட்டு சித்தம் தெளிந்தவள்,


"ஹலோ...." என்றாள்.


(.........)
"இதோ வரோம் ஸார்." என மிகப்பணிவாகவே கூறிவிட்டு போனை அதற்குரிய இடத்தில் வைத்தவளுக்கு, சந்தோஷப்படுவதா? பயப்படுவதா என்றே தெரியவில்லை.


காரணம் அவளையும், சற்று முன்னர் தாடைக்கு முண்டு கொடுத்து ரசித்திருந்தவனையும், அந்த நிறுவனத்தின் எம்.டி தன் அறைக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தார்.


"எங்க ரெண்டு பேரையும் ஏன் இப்போ கூப்பிடுறாரு..? ஒரு வேளை நான் அவனையே பார்த்திட்டிருந்ததை கேமெராவில பார்த்திருப்பாரோ....?" என கேமெராவை நிமிர்ந்து பார்த்தவளுக்கு உள்ளே பயம் கூடிப்போனது.


அவன் கேபின் முன் போய் நின்று "நிமல்" என தாயக்கமாக அழைத்தாள்.


எப்போதும் அந்த நிறுவனத்தில் அடாவடியாய் பேசுவதிலிருந்து, அடியாட்கள கொண்ட குழுவை தன்னகத்தே வைத்திருப்பவள், இன்று சத்தமே வெளியே கேட்காத அளவிற்கு அழைத்தாள் என்றால் வேலையில் மூழ்கியிருந்தவன் காதில் விழுமா?


புருவங்கள் இரண்டும் போர் தொடுக்க, தன் முன்பிருந்த கம்பியூட்டரை ஒரு வழி பண்ணிவிடும் நோக்கில், அதில் எதையோ தீவிரமாக செய்து கொண்டிருந்தவன், தன்னை கவனிக்கவில்லை என்றதும், ஒழிந்திருந்த ரௌடித்தனம் மீண்டும் வந்து ஒட்டிக்காெண்டது அவளுள்.


"எரும கூப்பிட்டுட்டே இருக்கேன்ல.. அங்க என்னத்தை நோண்டிட்டு இருக்க?" என்றாள் ஆத்திரத்தை அடக்க முற்பட்டு தோற்றுப் போனவளாய்.
அவள் அவ்வாறு குரலை உயர்த்தி பேசியதும், தான் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தவன்,


உதட்டில் மெல்லிய கோடான புன்னகையினை தவளவிட்டு மறுநொடிகே அதை உள்ளே இழுத்து கொண்டவன், என்ன வேலையில் இருந்தானோ! மீண்டும் கம்பியூட்டரில் விழிகளை ஓடவிட்டு,


"சொல்லு பூவி... எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு." என்றான் கண்டிக்கும் தொணியில்.


"ஓ.... ஸாருக்கு எங்கள பார்த்தா என்ன தெரியுது? ஆஃபீஸ்க்கு வெட்டியா கதை அளர்ந்திட்டிருக்க வரோம்ன்னா...?" என்றாள் இதுவரை அதைத்தான் செய்துகாெண்டிருந்தோம் என்பதை மறைத்து.


"ஸ்சப்பா......" என அலுத்துக்கொண்டவனோ, கையிலிருந்த வேலையினை அப்படியே போட்டுவிட்டு அவளை நிமிர்ந்து ஏறிட்டவன்.


அம்மா தாயே..... தெரியாம சொல்லிட்டேன். இன்னைக்கு உன் வம்புக்கு நான் தான் கிடைச்சேனா..? ஆனா எனக்கு கொஞ்சம் கூட டைம் இல்லை. நாளைக்கு சேனல்ல போடுறதுக்கு நிறைய வீடியோ எடிட் பண்ணுற வேலைய, என் தலையில பொறிச்சிட்டாங்க. சாயந்தரத்துக்குள்ள முடிக்கணும். அதனால உன்னோ பஞ்சாயத்தை வேற யாரு கூடன்னாலும் வைச்சுக்கோ, இன்னைக்கு என்னை விட்டிடு..." என கையெடுத்து கும்பிட,


"ஆமா இவரு பெரிய இவரு..! இவருகிட்ட பஞ்சாயத்து நான் பண்ண போறேன். உன்கூட தேவையில்லாம பேசிட்டு இருக்க நான் ஒண்ணும் உன்கிட்ட வரல,
உன்னை அழைச்சிட்டு எம்.டி தன்னோட ரூம்க்கு வரசொன்னாரு." என்றாள் அவளும் உதட்டை சுழித்து.


"எம்டியா...?" என புருவ நெரிவின் மத்தியில் வினவியவன்,
"ஏன்னு ஏதாவது சொன்னாரா..?"


"இல்லை...." என கைகளை கட்டி திமிராகவே உதடு வளைத்தாள்.


"உன்கிட்ட கேட்டேன் பாரு.." என இருக்கையிலிருந்து எழுந்து அவர் அறை நோக்கி நடந்தவன் பின்னால் ஓடினாள் அவள்.
பூவிக்கா பேச்சை கேட்டு வந்தவனை வாசலிலேயே மறித்து வைத்தார் பீயோன்.


"தம்பி உள்ள போகாதிங்க. ஸார் யாருகூடவோ போன்ல பேசிட்டிருக்காரு, யாரையும் நான் சொல்லும் வரைக்கும் விடவேண்டாம்ன்னு சொன்னாரு" என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் திரும்பி பூவிகாவை முறைத்தவன்,


"எவ்ளோ வேலை இருக்குன்னு சொல்லியும், விளையாடுறியா நீ?" கோபமாய் கேட்க,


"ஆமாடா நீ என் முறை பையன் பாரு, அந்த முகத்தை எப்பவாச்சும் சிரிச்சு வைச்சிருக்கியா?" என பதிலடி கொடுக்க, அதே முறைப்போடு அங்கிருந்த இருக்கையில் தொம் என்று அமர்ந்தான்.


'க்ஹூம்.... பயந்துடுவோமா..?" என்றவாறு அருகிலிருந்த இருக்கையில் அவளும் அமர்ந்து கொண்டாள்.
கிட்டத்தட்ட அந்த அறை வாசலில தவமிருக்க ஆரம்பித்து அரைமணி நேரம் தாண்டிற்று. கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவன்,


"பச்..." என்று சினத்தை வெளிப்படுத்தி விட்டு, திரும்பியவன் கண்களில், பூவிகா எதையோ பார்த்து, கையசைவில், தனக்குள்ளேயே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதை கண்டவன், அவள் பார்வை சென்ற இடத்தில் தன் விழிகளால் வலைவிரித்தான்.


அங்கிருந்த இன்னொரு அறை வாசலில் அவர்கள் சேனலின் லோகோ படத்துடன், தமிழ் ஊற்று என்று எழுதி இருப்பதை பார்த்துத்தான் தனக்குள் பேசிக்கொண்டிருப்பதை கண்டவன்,


"பூவி...." என்றான்.
அவன் அழைத்ததும் திரும்பி பாராமலே, "ஏன் நிமல், நான் நீர் ஊற்று கேள்வி பட்டிருக்கேன், அது என்ன தமிழ் ஊற்று. அதுவும் மண்ணில இருந்து தான் வருமா..?" என்றவள் கேள்வியில் சிரிப்பதற்கு பஞ்சம் கொட்டும் நிமலனே பக்கென சிரித்துவிட்டான்.


"உண்மைய சொல்லு பூவி, நீ பணம் குடுத்து தானே பாஸ் மார்க் வாங்கின?" என்றதும் அவன் தன்னை கேவலமாக பேசியதை கூட பொருட்படுத்தாது, அவனது புன்னகையினை ரசித்தவளோ,


"யாரு நானா..? அப்பிடியே இருக்கட்டும், ஆமா ஏன் பாஸ் நம்மள கூப்பிடாரு..? ஒருவேளை நம்ம மாட்டர் அவருக்கு தெரிஞ்சிருக்குமோ..?"


"புரியல.., நம்ம மாட்டன்னா என்ன...? நமக்குள்ள என்ன இருக்கு?" என்று எப்போதும் போல் கேள்விகள் எழும்போது புருவங்களை நெரித்து அவன் வினாவ,


"உனக்கில்ல.., எனக்கிருக்கே....," என தலையினை சரித்து தனக்குள் முணுமுணுத்தவள்,


"அவரு அப்பிடி ஏதாவது நினைச்சிருக்கலாம்ல.?" அதை சொன்னேன்.


"ஓ.... அப்பிடில்லாம் விவஸ்த கெட்ட தனமா ஸார் யோசிக்க மாட்டாரு, எனக்கு மட்டமான டேஸ்ட் இல்லன்னு ஸாருக்கு நல்லாவே தெரியும்." என்றவனை கொலை வெறியோடு அவள் பார்க்கும் நேரம்.


"தம்பி ஸார் கூப்பிடுறாரு... போங்க." என்றான் பீயோன்.
உள்ளே சென்ற இருவரையும் மாறி மாறி பார்த்தவர், எதிரிருந்த இருக்கையை காண்பித்து,


"ரெண்டு பேருமே உக்காருங்க, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." என்றார்.


தனியாக அழைத்து பேசும் அளவிற்கு என்னவென தெரியாது அமர்ந்தவர்களை புன்னகை முகமாக ஏறிட்டவர்,


"உங்க ரெண்டு பேரையும் ஏன் திடீர்ன்னு கூப்பிட்டேன்னு யோசனையா இருக்கா....?
ஓக்கே ரொம்ப நீட்டி முழங்காம நேர விஷயத்துக்கு வரேன்.
இந்த ஆண்டோட வாழ்நாள் சாதனையாளர் விருது, நம்ம தமிழ் நாட்டில இருந்து ஒரு லேடிக்கு கிடைக்க போறதா நம்பத்தகுந்த இடத்தில இருந்து ஒரு நியூஸ் வந்திருக்கு நிமலன்."


"சூப்பர் ஸார்...! அப்பிடின்னா சேனலுக்கு ஒரு நியூஸ் கிடைச்சிருக்குன்னு சொல்லுங்க. இன்னைக்கே நியூச போட்டிடலாமா ஸார்..?"என்றான் ஆர்வமிகுதியில்.


"போடணும் நிமலன். ஆனா இதை உறுதிப்படுத்தாம போடுறது சட்டப்படி குற்றம். அப்புறம் யார் மூலம் தகவல் போயிருக்குன்னு என்னால தகவல் தந்தவங்களுக்கு பிரச்சினை ஆகிடும்." என்றார் கவலையாய்.


"அப்போ.... நியூஸ் தெரிஞ்சும் மத்த சேனல் காரங்க மாதிரி, விருது வழங்கிற வரைக்கும் அமைதியாவா இருக்கணும் ஸார்? இதுக்கு இந்த நியூஸ் தெரிஞ்சுக்காமலே இருந்திருக்கலாமே.." என சோர்ந்து போனிடம்,


"இல்லை நிமலன்... அங்க தான் நம்ம இடத்தை தக்க வைச்சுக்கணும். நான் சொன்னனே அந்த லேடின்னு. அவங்க பேரு சாதனா. அவங்க சமூக தொண்டுகள் நிறைய செய்வாங்களே தவிர, இதுவரைக்கும் அவங்களை யாரும் பேட்டி கண்டதே இல்லை. அவங்க, யாரு, எப்பிடி இருக்காங்கன்னு யாருக்குமே தெரியாது.


மீடியாவை தன் பக்கத்திலயே நெருங்க விட்டதில்லை அந்த அம்மா.. தனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்ககிட்டத் தான் பேசுவாங்க. மத்தம்படி யாரையும் பக்கத்தில வைச்சுக்க மாட்டாங்களாம்.

ரொம்பவே கறாரான லேடின்னு கேள்விப்பட்டேன். இதெல்லாம் ஜஸ்ட் நான் கேள்வி பட்டது தான். இது உண்மையாவும் இருக்கலாம், இல்ல பொய்யாவும் இருக்கலாம்.
இதுல எது உண்மைன்னு தெரிஞ்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு." என அவர்கள் மேல் பாரத்தை தூக்கிப்போட்டார்.


"ஆனா ஸார் அவங்க மீடியாவையே பக்கத்தில சேர்த்ததில்லன்னு சொல்லுறீங்க, அப்புறம் நாங்க எப்படி?"


"அதுக்காகத்தான் நிமலன் உங்க ரெண்டு பேரையும் அனுப்புறேன். அவங்கள பத்தி தெரிஞ்சிட்டு வரது உங்க திறமை." என மறு பேச்சுக்கு இடமில்லை என்பது போல் கையினை விரித்தவரை பூவிகா பாவமாக பார்த்தாள்.



"எனிவே நாளைக்கு காலையில உங்களை அழைச்சிட்டு போக வண்டிவரும், எல்லாத்துக்கும் தயாரா இருங்க. முக்கியமான விஷயம், அந்த லேடிய பேட்டி காணப்போறீங்கன்னு நம்ம மூணு பேரையும் தவிர, வேற யாருக்கும் தெரியக்கூடாது.

சின்ன தகவல் வெளிய கசிஞ்சாலும், நம்மள முந்திடுவாங்க போட்டி சேனல்ஸ். ரொம்ப ஜாக்கிருதை" என எச்சரித்து அனுப்பி வைத்தார் அவர்.


அந்த அறைமை விட்டு வெளியே வந்தவனுக்கு இதை எப்படி கையாழ்வது என்ற குழப்பத்தோடு வந்தவன் முதுகினை சுறண்டியவள்,


"ஏன்டா.... இந்தாளுக்கு என்ன நட்டு கழண்டுடிச்சா? அந்தம்மா பேட்டி குடுக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும், எப்பிடிடா அவங்களை குழாப்ஸ் பண்றது? இவரு சொல்லுறதை எல்லாம் வைச்சுப்பார்த்தா, கிழவி ரொம்ப திமிர் பிடிச்சவங்களாட்டம் இருப்பாங்க போல." என்றாள்.


அவனுக்குமே அதே எண்ணம் தான். ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பை தங்களை நம்பி தந்த எம்டியின் நம்பிக்கையினை பொய்யாக்க முடியாதே!


"நாளைக்கு போய் கேட்டு பார்ப்போம் பூவி...., முடியாதுன்னா வேற வழியே இல்லை. வந்திடலாம். " என நாளைய விடியலை நினைக்க பயமாக இருந்தாலும், ஏதோ ஓர் தைரியத்தில் அதை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் ஸ்டார்டிங் சகி ♥️♥️♥️♥️♥️♥️
நிமலன் 🌹🌹🌹 பூவிக்கா 🌷🌷🌷
பெயர் தேர்வு அருமை சகி.
இருந்தாலும் இப்படி ஒரு ரவுடி பேபியா ஹீரோயின் ஆ போட்டு தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருக்குற நிமலன் ஹீரோவை கஷ்டப்பட வைக்க போரீங்கலே ஏன் ஏன் ஏன் 😄😄😄😄😄😄😄😄
 
  • Love
Reactions: Balatharsha

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
838
28
93
Jaffna
சூப்பர் சூப்பர் ஸ்டார்டிங் சகி ♥️♥️♥️♥️♥️♥️
நிமலன் 🌹🌹🌹 பூவிக்கா 🌷🌷🌷
பெயர் தேர்வு அருமை சகி.
இருந்தாலும் இப்படி ஒரு ரவுடி பேபியா ஹீரோயின் ஆ போட்டு தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருக்குற நிமலன் ஹீரோவை கஷ்டப்பட வைக்க போரீங்கலே ஏன் ஏன் ஏன் 😄😄😄😄😄😄😄😄
வந்துடிச்சு வந்திடிச்சு..... ரொம்ப நன்றி சிஸ்