"ஹேய்..... சைலு நீயா...! நீ எப்படி இங்க?" என்றார் விழிகளிலும் குரலிலும் ஆர்ச்ரியம் காட்டி தன் ஒரே தோழியான சாலினி என்ற சைலுவிடம் வினாவினாள்.
"என்ன மேடம்! நான் கேட்க வேண்டிய கேள்விய நீங்க கேக்கிறீங்க.?
அது சரி! அப்படி என்ன பலமான யோசனை? கூப்பிடுறது கூட கேக்காம முழியை உறுட்டிட்டு நின்னிங்களே!
நான் கூட யாரையோ தான் மாறி கூப்பிட்டு, அடி வாங்க போறேனோன்னே பயந்திட்டேன்.
ஆமா..! எங்க இந்த பக்கம்" என்றாள்.
"என்ன செய்ய..? எல்லாம் விதி இங்க வரவேண்டி இருக்கு." என்றாள் பொய்யாக அலுப்புக்காட்டி.
"ஆமாமா... மேடம் ரொம்ப அலுத்துகிறத பாத்தா........... சம்திங்க் போலயே.." என்றாள் தோழிகளுக்கு இருக்கும் அதே கிண்டல் தொணியில்.
"நீ வேற போடி...! எப்ப பாரு இது தான் நினைப்பு. நமக்கு தான் அதெல்லாம் செட்டே ஆகாதே." என்றாள் துஷா உதட்டை பிதுக்கி.
" ஏய்.. இரு! எதுக்கு நமக்கு என்டு என்னையும் சேர்க்குற? நீ என்டு உன்னை மட்டும் சொல்லிக்கோ. என்னை உன்னோட கூட்டு சேர்க்காத... ஆமா அம்மணிக்கு செட்டே ஆகாதா? இல்ல... நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்களா?"
"ஏய்! என்ன பேச்சு பேசுற வாயாடி..."
"சரிங்க மேடம்! இப்பவாச்சும் சொல்லுறிங்களா? இங்க எங்க வந்த...? யாருக்காக வெயிட்டிங்? எங்க போகணும்?" என்றாள் சீரியஸாக.
"தெரியலடி..! எங்க போறதென்றே புரியல." என துஷா முகத்தை சோகமாக வைக்க.
"என்னடி! இப்பிடி ஒரு பதிலா?
சரி யாரை பார்க்கோணும் என்டு இந்த ஊருக்கு வந்த?"
"எல்லாம் என்னோட சொந்தங்களை தான். அவங்க யாரு? என்ன பண்றாங்க? எப்பிடி இருப்பாங்க என்டு கூட தெரியாது." என்றாள் அலுத்தவாறு .
"அப்போ எதுக்குடி வந்த? எதுவுமே தெரியாத உன்னை, எதுக்கு தனியா அனுப்பினாங்க அம்மாவும் அப்பாவும். போனை போட்டு கேளு! விலாசமாவது தெரிய வேண்டாமா?" என்றாள் தோழியின் தவிப்பை உணர்ந்து.
சைலு அவ்வாறு கூறியதும், திரு திரு வென முழித்தவள், அது அவங்கள எப்பிடி என்னால கேக்க முடியும்? அவங்க தான் ஊரிலையே இல்லையே!"
"என்னடி சொல்லுற?"
"பின்ன என்னடி சொல்ல?" என்று அலுத்து கொண்டவள்,
"என்னை இங்க போக சொல்லி அனுப்பிட்டு, அவங்க திடீர்னு வெளிகிட்டு கிளம்பிடாங்க.
நானும் என்ர சொந்தங்கள பார்க்கப் போறன் என்ட அவசரத்தில எதுவுமே கேக்காம வந்திட்டன்.. இப்ப அவங்க மேல் நாட்டில இருப்பாங்க. அவங்களாகவே என்னோட கதைக்க நினைச்சாத்தான் கதைக்க முடியும்" என்றாள் பாவமாக முகத்தை வைத்து.
"என்னடி புதுசு புதுசா கதையெல்லாம் அவுத்து விடுற?" என்று கோபமாக பொழித்தவள், துஷாவின் சோக முகத்தை பார்த்து.
"ஓவரா நடிக்காதடி! சகிக்கல." என்றாள்.
அவள் கூறிய விதத்தில் சிரித்தவள்,
"லூசு அத அப்புறம் பேசிக்கலாம், இப்ப எனக்கு வழி சொல்லேன்" என்றாள் துஷா.
"வழி தானே! இதோ இப்பிடிக்கா போய்கோ!" என்று றோட்டை காட்டினாள்.
"என்ன ஜோக் பண்றதா நினைப்போ.? விளையாடாம நான் தங்க ஏதாவது இடம் தெரிஞ்சா சொல்லேன்" என்றாள்.
நாடியில் கைவைத்து யோசிப்பதை போல் பாவனை செய்தவள்,
"எனக்கு ஒருதங்கள தெரியும் ஆனா........" என்று அவள் இழுக்க,
"என்னடி ஆனா! வாடகை கூடவா கேப்பாங்களா? இல்ல ஏதாச்சும் பிரச்சினையான இடமா?"
"அப்படி எல்லாம ஒன்டுமில்ல....... ஏற்கனவே அங்க ஒருதங்க தங்கி இருக்காங்க. உனக்கு பிரச்சினை இல்லை என்டா நீயும் தங்கலாம்."
எனக்கென்னடி பிரச்சினை? தங்க இடம் கிடைச்சா போதும். எங்னோட தங்கி இருக்கிறவ பிரச்சினை பண்ணாடி சரி தான்." என்றாள் அவளும்.
"அவங்க கட்டாயம் பிரச்சினை பண்ணுவாங்க."
"என்ன சைலு சொல்லுற! இப்ப என்ன செய்யிறது.?"
"பின்ன... நான் உங்கிட்ட பிரச்சினை பண்ணாம இருப்பேனா?" என்றாள் கண்ணை உடுட்டி.
"ஏய் மாடு! எங்க தங்க இடம் கிடைக்காம போயிடுமோ என்டு பயந்திட்டேன்.
சரி இந்த ஊரில நீ என்ன செய்யிற என்டு சொல்லவே இல்லையே!" என இடம் கிடைத்ததும் துஷா இயல்புக்கு மாற,
"மேடம் என்ன! இங்கையே நின்டு பேட்டி எடுக்கிறதா நினைப்போ? இங்கேயே பேசி முடிச்சுட்டா.... அறைக்கு போயி என்ன பேசுறாதாம் ?" என்றாள் சைலு.
"உத்தரவு மகாராணி!" என்று சிரித்தவாறு தனது பெட்டிகளை தூக்கியவள், இளநீர் விற்றுக் கொண்டிருந்த முதியவரிடம் சென்று,
"போயிட்டு வாறேன் தாத்தா" என்றாள்.
"சரிம்மா! பாத்து பத்திராமா போயிட்டு வா!" என்று சைலுவிடம் திரும்பியவர்,
"நீ தான் அவளோட தோழியா ? ஏம்மா.. உனக்கு அறிவு வேண்டாம். எவ்வளவு நேரந்தான் ஒரு பெண்ணு பஸ் ஸ்டாண்டில தனியாவே நிக்கிறது.? நேரத்தோட வர வேணும் என்டே யோசிக்கவே மாட்டிங்களா ? இனிமேலாவது இப்பிடி நடந்துக்காத"
என்று கோவமாக பேசியவரது கோபம் எதற்கு என்று அறியாதவளாய், துஷாவை திரும்பிப் பார்த்தாள்.
அவளோ பாவியைப்போல் சைலுவை பரிதாபமாக பார்க்க. இவளால் தான் ஏதோ ஒன்று என்று உள்ளுணர்வு எடுத்துரைக்க,
"கிளம்புற நேரம் சின்ன வேலை வந்திட்டுது தாத்தா! அது தான் வர கொஞ்சம் பிந்திட்டுது மன்னிச்சிடுங்க." என்றவள் துஷாவிடம் திரும்பி, பற்களை கடித்தவாறு,
"உனக்கு இருக்குடி!" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு அமைதியானாள்.
அதே நேரம் அவர்கள் செல்லும் பஸ் வந்துவிட, பெட்டியுடன் ஏறியவர்கள் ஓரமாக இருந்த சீட்டில் அமர்ந்தனர்.
சிறிது நேரம் சென்றிருக்க,
"அந்தாளிட்ட என்ன சொல்லி வைச்ச? அந்த கொதி கொதிக்கிறாரு.
என்னா...? பேத்தி மேல அவ்வளவு பாசமாமோ.!" என்றாள் தெரியாத ஒருவர் தன்னை காரணமே அறியாது ஏசிவிட்டார் என்ற கோபத்தின் கடுப்பில்.
நடந்ததை கூறியவள்,
"சரி விடுடி! அவரு அந்த காலத்து மனுஷன். பெண் பிள்ளைங்க மேல அக்கறையும், நாட்டு நடப்பையும் பார்த்து அப்பிடி தான் நடந்துப்பாங்க." என்றவள், பேச்சை மாற்றும் பொருட்டு,
"சரி.... இப்போ நாம எங்க போகிறோம்?" என்றாள்.
"ஆ.... உன் மாமியார் வீட்டுக்கு" என்றாள் ஆத்திரமாக.
இருக்கும் தானே! உதவி செய்யப்போனவளையே, எவனோ ஒருவன் திட்டுவதா?
"அந்தாளுட்ட பேச்சை வாங்கி தந்திட்டு, கேள்விய பாரு!" என்று அருகில் இருந்தவளுங்கு கேட்குமாறே முணு முணுத்தாள்.
"சரி விடுடி! இதுவும் கடந்து போகும்." என்று மீண்டும் ஆரம்பித்தவளை முறைத்தவள்,
"நல்லா வருது வாயில.. பேசாம வா!" என்றாள் சைலு.
அவளது கோபத்தில் மூடியிருந்த உதட்டை காதுவரை இழுத்து சிரித்து வைத்தவள் மனமோ,
'இதுக்கு மேல பேசினா நிச்சயம் ஏதாவது அசிங்கமா பேசிடுவாள்' என்று தெரிந்து கொண்டவள் வாயை மூடிக்கொண்டே வந்தாள்.
நகரத்தில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தை, இருபது நிமிடங்களில் அடைந்தது அந்த பேரூந்து.
வீட்டின் முன்பு வந்ததும் " இது தான் துஷா நாங்க தங்கிட்டிருக்கிற வீடு" என்றாள்.
என்னது நாங்களா? அப்படி என்டா இங்க நீ மட்டும் தங்கேலயா? உன்கூட வேற யாரு தங்கிறாங்க?" என்று சந்தேகமாக வினவியவள் விழிகளோ சைலுவின் கழுத்து, நெற்றி என்று ஏறிட்டது.
அவளது பார்வையின் பொருள் புரிந்தவளோ....
"நிறுத்துங்க நிறுத்துங்க மேடம்.... என்ன கற்பனை கடந்திட்டே போகுது.
நாங்க என்டா கழுத்து நெற்றி சம்பந்த பட்டவங்க மட்டுந்தான் இருப்பாங்களா என்ன? என்கூட படிக்கிறவங்கடி லூசு! இங்க அஞ்சு அறை இருக்கு... ஒவ்வொரு அறையிலயும் குறைஞ்சது மூன்டு பேர் இருப்பாங்க.
என்னோட அறையில் கூட இருந்தாங்க.. நான் அவங்க குரூப் எடுக்காததனால அவங்க பாடம் எடுக்கிறவங்களோட அறையில தங்கி படிக்கிறதா சொல்லி வீடு மாறிட்டாங்க." என்றாள்.
"என்னது நீ படிக்கிறியா?" என்றாள் மீண்டும் அதிர்ந்தவளாய்.
"இவ ஒருத்தி தொட்டதுகெல்லாம் கேள்வி கேட்கிறா.. இல்ல என்டா சாக் ஆகுறா.... ஏன்டி நான் படிக்க கூடாத?" என்றார் சினந்தவாறு.
"இன்னுமா நீ படிக்கிறதை விடல?"
"ஏன்..! படிக்கிறதுக்கு வயதிருக்கா என்னா?"
"அது சரி தான்! ஆனா.... என்ன படிக்கிற?"
"அடியே கேள்விக்கு பிறந்தவளே! உள்ள போயி பேசுவோமா? வாசல்ல வைச்சு மினக்கடுத்திட்டு... உள்ள வாடி!" என்று உள்ளே சென்று தனது அறையினை திறந்து விட்டவள்,
"இது தான் இனி நம்ம சொர்காபுரி" என்றாள் சைலு.
"என்ன சைலு! இவ்வளவு அழகா அறைய வச்சிருக்க...? இதுக்கு முன்னல்லாம் நீ இப்பிடி இல்லையே!" என்னாள் துஷாந்தினி ஆச்சரியமாக.
"மாற்றம் ஒன்றே மாறாதது." என்றவாறு டவலையும் மாற்றுடையையம் எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள் சைலு.
துஷா சைலு வரவை எதிர் பார்த்தவண்ணம் அறையை அளந்தவள், சுவற்றில் மாட்டபட்ட புகைப்படங்களை ரசிக்கலானாள்.
முகத்தை அழுத்தி துடைத்தவாறு வந்த சைலு,
"என்ன மேடம் கண்காட்சி முடிஞ்சுதா?
இரவு வெளிகிட்டிருப்ப... குளிச்சிருக்க மாட்ட.. குளிச்சிட்டு வா! வெளியே போய் வரலாம்." என்றாள்.
சரியென்ற தலையசைப்புடன் தனது பெட்டியிலிருந்த டவலையும் மாற்றுடையை எடு்த்து கொண்டு குளியலறை புகுந்தாள் துஷா.
அவள் சென்றதும் அவளது பெட்டியில் இருந்த பொருட்களை தன்னுடைய அலுமாரியில் வைத்து பூட்டி விட்டு, வெற்று பெட்டியை அலுமாரியின் மேற்பகுதியில் போட்டவள்,
துஷா குளித்து வருவதற்குள் தயாரனாள்.
அவள் தயாரகவும் துஷா குளித்து வரவும் சரியாக இருந்தது.
தலை குளித்து வந்தவளை, மேல் இருந்து கீழ் வரை பார்த்த சைலுவோ,
"செம பிகர்டி நீ..
யாருக்கு குடுத்து வைச்சிருக்கோ......" என்றாள் பெருமூச்சொன்றை வெளியேற்றி..
"ஏய் எரும! என்ன பேசுற...? உனக்கு என்ன குறையாம்?"
"உன்னளவுக்கு அழகில்லையேம்மா..!" என்று அவள் அருகில் வந்தவள்,
"உழுத்தி போட்ட நாவல் பழம் போல பாக்கிறவங்களை அப்பிடியே மயக்குற கண்ணு...
எப்படா என்ன டேஸ் பண்ணி பாக்க போற என்கிற ஆரேஞ்சு சுழை உதடு..
அமெரிக்கன் அப்பிளை ரெண்டா வெட்டி கவுத்து போட்டா எப்பிடி இருக்குமோ அப்பிடியே கடிச்சி திங்கணும் போல இருக்கிற உப்பின கன்னம்.
அப்புறம்.........." என்று இழுத்தவள்,
"அந்த இடுப்பை மறந்திட்டனே... நீ நடக்கேக்க அங்க போயி.. இங்க வரும் பாரு... அப்போ அது என்ன சொல்லும் தெரியுமா?" என விழி விரித்து கேட்டாள்.
"என் இடுப்பு உன்னட்ட பேசிச்சு... அப்பிடி என்ன சொல்லிச்சாம்......" என்றாள் அவள் வர்ணனையில் வெட்கம் தோன்றினாலும் அதை அவளுக்கு காட்டாது சலிப்போடு கேட்பதைப்போல் கேட்டாள்.
"என்னவனே...! நீ எங்க இருக்கிறாய்? எப்போ உன்னுடைய கரம் கொண்டு, என்னை சிறைபிடிக்க போகிறாய் என்டு அது ஏங்கிப் புலம்புறது எனக்கு கேட்டிச்சு" என்றாள் அவளை சீண்டுவது போல் அவள் இடையினை கிள்ளி.
"ஏய் சீசீ...! தள்ளி நில்லடி! எனக்கென்னமோ நீ வரவர சரியில்லையோனு தோனுது.." என்றவள், அவளை விட்டு சற்று ஒதுங்கி வந்து,
"அவனா நீ?" என்றாள்.
"உண்மையை சொன்னா நம்ப மாட்டிங்களே!" என்றவள் அப்போது தான் அவள் முடியினையே பார்த்தாள்.
அது இடுப்பை தாண்டி நீளமாக இருக்க,
"இந்த முடி தான் கொஞ்சம் கூடிட்டுதோ என்று தோனுது. ரெண்டுக்கு ஏத்தா மாதிரி வெட்டினா அழகா இருக்கும்" என்றாள்.
கண்ணாடி முன் நின்று தலை துவட்டிக்கொண்டிருந்தவள், அதன் வழியே அவளை பார்த்தவள்,
"சைலு சமையலறை எங்க இருக்குடி" என்றாள் சம்மந்தமே இல்லாது.
'நான் என்ன சொல்லுறேன் இவ என்ன சம்பந்தம் இல்லாம பேசுறா..' என்ற பாவனையில் துஷாவை பார்த்தவள்,
"எதுக்கு இப்போ உனக்கு சமையல் அறை?" என்றாள் சைலு.
"இல்ல.. இங்க எங்கயோ புகையிற வாடை வருதே! உனக்கும் அந்த வாடை வருதா என்ன?" என்றாள் கேலிபோல் துஷா.
இருவரும் தோழியர் ஆகிய காலத்திலிருந்து ,துஷா முடியில் சைலுக்கு நீண்ட நாள் பொறாமை
அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்ட சைலு,
"ஆமாடி... எனக்கு வயிறு புகையிது தான். புகையாம என்னவாம்..?
நானும் என்னல்லாம் செய்து பாத்திட்டன்.. இதோ இந்த எலி வாலை தவிர, ஒரு இஞ்ச் அதிகமா வளருதில்ல... உனக்கு மட்டும் எப்பிடி இப்பிடி வரையற இல்லாம வளருது" என்றாள் ஆதங்கமாக.
அவள் கேட்ட விதத்திலும், தனது முடியை எலி வால் என்று கூறியதிலும் பெரிதாக சிரித்தவள்,
"இது பரம்பரை ஜீன் டி! நான் என்ன உரமா போட்டு வளர்க்கிறேன்." என்றாள்.
"என்ன பெரிய பரம்பரை ஜீனோ! என்னோட பரம்பரை, எலி பரம்பரை போல" என்றவாறு தயாராகி வெளியே வந்தனர் தோழியர்.
"சரி சைலு இப்போ எங்கே போறம்?"
"எப்பவும் நான் வெளிய தான்டி சாப்பிடுவன், அப்பிடி இல்லையா... எங்க வீட்டுக்கு பக்கமா ஒரு ஆன்ட்டி இருக்காங்க, அவங்க கிட்ட முன்னாடியே சாப்பாட்டுக்கு சொல்லனும்.
டவுன் சைட் போனதால அங்கையே சாப்பிட்டுடலாம் என்டு நினைச்சேன்...
இடையில உன்னை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்து உன்னையும் கூட்டிட்டு வந்தாச்சு.
இனி சமைக்க முடியாது...
வெளிய பக்கம் தான் சாப்பாட்டு கடை இருக்கு. சாப்பிட்டு வரேக்க இரவு சமைக்கிறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்திடலாம் சரியா" என்றாள்.
அவளுக்கும் அது சரியாகவே பட்டது.
ஆனால் இப்படி கடையில் சாப்பிட்டால் வீண் சிலவாகி விடும். வரும் போது எடுத்து வந்த பணமும் இப்படியே செலவானால், மீதி காலத்தை எப்படி ஓட்டுவது.
கூடிய விரைவில் ஏதாவது வேலை தேடியாக வேண்டும். என்ற யோசனையில் அவள் வர,
"என்ன மேடம்! அடிக்கடி ஏதோ பலத்த சிந்தனையுள் சென்று விடுகிறீர்களே! எந்த கோட்டையை பிடிப்பதற்காக என்ன திட்டம் தீட்டுகிறீர்கள்?" என்று கேலி போல் அவள் மனனிலை அறிவதற்கு சைலு.
"ஆமாம் ஆமாம்..! தாங்கள் தங்கியுள்ள கோட்டையை எந்த படை கொண்டு பிடிப்பதென்ற சிந்தனை தான் தோழியரே." என்றாள் அவள் பாணியிலே.
"நீ செய்தாலும் செய்வ... ஆச்சரிய படுறதுகில்லை. இங்கேயே நின்று இப்படியே நீ என் கோட்டையை பிடிக்க திட்டம் தீட்டு.... இங்கயும் சாப்பாடு முடிஞ்சா... எந்த கோட்டைகை்குள்ள புகுந்து, எப்படி சாப்பாட்டை அபகரிப்பதென்று அதற்கும் திட்டம் தீட்டவேண்டி வரபோகின்றது." என்றவாறு அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றனர்.
அங்கு மதிய உணவை முடித்து விட்டு,
இரவு உணவிற்காக அருகில் இருந்த கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு நடந்தார்கள்.
"அது சரி சைலு! இதையெல்லாம் வாங்கியாச்சு.. எங்க சமைக்கிறது.?
நீ தங்கி இருக்கிறது வீடு தான்.
ஆனா அந்த அறையில சமைக்கிற வசதி இருக்கிற போல நான் காணலையே.!"
"ஆமா பன்னி.. தங்கவே அந்த அறை பத்தல... இதில எங்க சமைக்கிறது?
அந்த வீட்டிலயே பொதுவா ஒரு சமையலறை இருக்கு... படிக்கிற பிஸில யாரும் பெருசா சமையல் அறைய பாவிக்க மாட்டாங்க." என்றவள், திடீர் என்று துஷா புறம் திரும்பி
"உனக்கு சமைக்க வரும்ல?" என்றாள்.
இவள் ஏன் திடீர் என்று இப்படி கேட்கிறாள் என்ற எண்ணம் தோன்றி மறைய,
"எதுக்கு இந்த கேள்வி?" என்றாள் இமைகளை சுருக்கி.
"இல்ல.. எனக்கு சரியா சமையக்க வராது...." என்று இழுக்கும் போதே துஷா அறிந்து கொண்டாள் இவளுக்கு சமையலே வராது என்று.
அவளை பார்த்து புன்னகைத்து "கவலையே படாத.. எனக்கு நல்லா சமைக்க வரும்" என்றாள்.
பேசிக்கெண்டே தமது அறை வந்தவர்கள். கொண்டு வந்த பொருட்க்களை மேசையில் வைத்து விட்டு
"துஷா எனக்கு உண்ட மயக்கம்டி நான் தூங்க போறேன்.. உனக்கும் அலைச்சலால உடம்பு அசதியாக இருக்கும்.. தூங்கலாமே.!" என்றாள்.
அவளுக்கும் அவ்வாறே இருக்க, தூங்கினால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அந்த அறையில் இரண்டு கட்டில்கள் இருந்தும் இருவரும் ஒரே கட்டிலில் தூங்கலானர்.
தூக்கம் கலைந்து முதலில் விழித்தது துஷா தான்.
எழுந்து முகம் அலசி வந்தவள், கட்டிலின் விழிம்பில் படுத்திருந்த தன் தோழியை கண்டு, அவள் படுத்திருந்த விதம் சிரிப்பை வரவளைக்கு
'நல்ல வேளை டாப்பும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.. அதுவும் வெளியில் சென்று வந்து, அப்படியே உறங்கியதால்... இல்லை என்றால் அவள் இப்போது தூங்கும் நிலைக்கு, இரவு உடை அணிந்திருந்தால்' நினைத்து பார்த்தவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பலமாகவே சிரித்து விட்டாள்.
அவள் சிரிப்பின் சத்தத்தில் விழித்தவள், அரண்டு போய் எதுவும் புரியாமல் திரு திரு வென முழித்து விட்டு.
"எதுக்குடி இப்போ கக்க பக்க என்டு பல்ல காட்டுற?" என்று தூக்கம் கலைந்த எரிச்சலில் கேட்டாள்.
மீண்டும் அவளை ஏற இறங்க பார்த்தவளால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
எழுந்த உடன் முழித்த முளியும் அவள் தலைமுடி வேறு அங்கொன்றும் இங்கொன்றுமாக மாடு சப்பி மீதம் விட்ட பனம்பழம் போல் இருக்க, அவள் கேள்வி இன்னும் சிரிப்பை அதிக படுத்தியது.
"கேட்டுடே இருகிறன் நீ பாட்டுக்கு இலிசிட்டே இருக்கிற?" என்றாள் கோபமாக.
"அது சரி! நீ எப்பவுமே இப்பிடி தான் தூங்குவியா?" என்றாள் சிரிப்பின் நடுவே.
"ஏன் நான் தூங்குறத்துக்கு என்ன?" என்று தன்னைஆராய்ந்தவள், அப்பொழுது தான் தன் நிலையினை கவனித்தாள்.
உடனே சரி செய்து கொண்டு, டாப் தானே போட்டிருந்தன், அது தான் எப்பிடி தூங்கனா என்ன?" எனறு மிடுக்காக கேட்டு வைத்தாள்.
"இருக்கட்டும்.." என்று கூறிக்கெண்டே, அவள் தோள் பற்றி அழைத்து கண்ணாடி முன் நிறுத்தினாள்.
கண்ணாடியில் தன் பிம்பத்தை கண்ட சைலுவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"உன்னோட வருங்கால நிலை தான் பாவம்... காலையில எழுந்து, பேய் என்டு நினைச்சு ஓடபோறாரு" என்றாள் கேலியாக.
"யாரு தூங்கி எழுந்தாலும் இப்படி தான் இருப்பாங்க." என்று குளியலறை புகுந்தாள்.