பறந்து கொண்டிருந்த வாகனத்தில் உள்ளே அமர்ந்திருந்த பூவிகாவிற்கே இதுவரை இல்லாத பதட்டம் தொற்றிக்கொள்ள, கழுத்தில் இருந்த தங்கச்சங்கிளிக்கு அதன் தண்டனையினை தந்தவாறு, சுற்றத்தை வேடிக்கை பார்த்திருந்தவள், சட்டென தன்னருகே இருந்த நிமலனிடம்,
"
இன்னமும் எத்தனை மணிநேரம் ஆகும்டா....? வண்டி போயிட்டே இருக்குதே தவிர, இடம் வந்ததா தெரியல. பயத்தில இதயம் வேற படபடன்னு அடிச்சுக்குது. நேத்து அந்தம்மா பத்தி பீதிய கிளப்பிட்டு, இன்னைக்கு விடிஞ்சதும் விடியாததுமா வண்டி ஏத்து அனுப்பி வைச்சிட்டு அந்தாளு நிம்மதியா உக்காந்துட்டாரு, ஆனா எனக்குத்தான் அந்த கிழவி என்ன சொல்லுமோன்னு பயமா இருக்கு." என்றவளை விசித்திரமாக பார்த்த நிமலன்.
"
பார்ரா..... சொர்ணாக்காவுக்கே பயமாமே?" என்றவன்,
"விடு..... தலையா போகப்போகுது. முடிஞ்ச வரை கெஞ்சி பார்ப்போம், முடியலன்னா திரும்பிடுவோம்." என்றவன் பேச்சில் எந்த இடத்திலும் பிசுறு தட்டவில்லை.
அவ்வளவு ஏன் அவனுக்கு பயம் ஒன்று இருப்பதைப்போல் கூட தெரியாது சுற்றத்தை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
திடீரென கார் சாலையிலிருந்து ஒரு கிராமத்து புழுதிப்பாதையில் நுழைந்தது.
இரு புறமும் வயல்கடுகளும், அதன் செலுமையினை எடுத்தியம்பும் பயிர்கள், தென்னம் தோப்பு. பனைமரக்காடு, என்று இன்னமும் சொல்லிக்கொண்டே இயற்க்கைக்கு எடுத்துக்காட்டான அந்த கிராமத்தினை விழிவிரித்து நோக்கியவள்,
"
நிமல் இது எந்த ஊருடா...? ஒரே பயிரா பச்சை பசேல்ன்னு இருக்கு, வீடுகளை அவ்வளவா காணலையே....!" என்றாள்.
"
ஆமா பூவி....! நானும் அதை தான் பார்க்குறேன். நம்ம நாட்டில இப்பிடி ஒரு செழிப்பான ஊர் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.
உனக்கு ஒண்ணு தெரியுமா...?
பாஸ் இந்த அம்மாவ பேட்டி எடுக்க சொன்னதும், அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கணும்னு அவங்க பெயரை தேடிப்பார்த்தேன். எந்த தகவலும் எனக்கு கிடைக்கல. அப்புறம் எங்க ஊர்ல அன்னை அறக்கட்டளை நடத்திட்டிருக்காருல்ல சிவக்கொழுந்து ஐயா. அவருக்கிட்ட நைட்டு சாதனான்னு ஒரு அம்மா சமூகத்தொண்டு செய்றாங்களே, அவங்கள உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்.
அவருக்கும் அவங்கள தெரியல, ஆனா அவங்க தொண்டுகளை பத்தி கேள்வி பட்டிருக்காராம், இதோ இந்த பூமி எல்லாமே அவங்களது தானம். இதை விட பெரிய பெரிய நிறுவனங்களுக்கு நிறுவி, வேலை வாய்ப்பு இல்லாதவங்களுக்கு வேலை போட்டு குடுக்கிறாங்களம். ஒரு ஆதரவற்றோர் முதியோர் இல்லமும், ஒரு சிறுவர் இல்லமும் நடத்துறாங்க பூவி. அது மட்டும் இல்லை, பெத்தவங்க இருந்தும், படிக்க வசதி இல்லாத குழந்தைங்களுக்கு கல்வி, இளம் பெண்களுக்கு கைதொழில், இப்பிடி நிறைய,
அப்புறம் இவங்க நடந்துறாங்களே அந்த இல்லங்களுக்கு தேவையான பயிர்கள் எல்லாமே இங்க இருந்து தான் போகுது. கிட்டத்தட்ட ஒரு ஊரையே விவசாய நிலமா மாத்தி வைச்சிருக்காங்கல்ல." என வியந்தவன்,
"
அனேகமா நாம அவங்க வீட்டை நெருங்கிட்டோம் போல தோணுது." என்றான்.
"
என்னடா சொல்லுற....? இந்த ஊர் பூராவே அவங்களதா....? ஆனா நம்பவே முடியலடா...." என வியந்தவளை கண்டு உதடு வளைந்தவன்,
"
சமூக தொண்டு என்ற பெயரில, அரசாங்கத்த கைக்குள்ள வைச்சிட்டு, ஊரையே வளைச்சு போட்டதும் இல்லாம, வெளிநாட்டு உதவிங்களையும் தானே திண்ணு இப்பிடி ஏப்பம் விடுற, இவங்கள மாதிரி பணக்கார முதலைங்களை, இந்த அப்பாவி ஜனங்க இன்னமும் நம்பிட்டிருக்காங்க என்கிறது தான் வேதனையா இருக்கு, அதுவும் ஒரு பொம்பள கிட்ட ஏமாறுறாங்களே....!
என்ன மாதிரி சுயநல உலகம் பார்த்தியா.....? இதுக்கு விருது வேற," என்றான் விரக்தியாய்.
"
தப்பா பேசாத நிமல்... அவங்கள பத்தி சரியா தெரியாம, கேவலமா பேசுறது தப்பு. ஒரு வேளை அவங்க உண்மையாவே சமூகத்துக்கு தொண்டு செய்யலாம்ல. எதுக்கு தேவையில்லாம கோபப்படனும். ஈஸியா விடு. இப்போ தான் தெரிஞ்சுக்க போறோமே, நீ சொல்லுறது மாதிரி ஏதாவது இருந்திச்சு, நம்ம சேனல்லயே ஒரு மாசத்துக்கு போட்டு அந்தம்மாவ நாறடிச்சிடுவோம்." என்றாள்.
அதிலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் நீட்டித்த அவர்கள் பயணமானது, அத்தோடு முடிவடைய,
"
இடம் வந்திடிச்சு இறங்குங்க." என்ற டிரைவரை தொடர்ந்து இறங்கிய பூவிகா அந்த இடத்தை ஆராய்ந்தாள்.
சுற்றிலும் குடிகளற்ற வயலின் மையப்பகுதினை பிரிப்பதுபோல் ஓர் மண்சாலை.
மண்சாலையின் வலது புறத்தில் நீண்டதொரு தென்னங்காடும், இன்னும் சில பயன்தரு மரங்களும் நிறைந்திருந்தது. தொன்னங்காட்டினை சுற்றி குச்சிகள் கொண்டு அடைக்கப்பட்ட வேலி. நடுவே பனை ஓலையினால் வேயப்பட்ட ஒரு மண்குடில். விழி அசையும் திசை எங்கும் பச்சை பசேல் என்ற இயற்கை அழகினை பருகிக்கொள்ளும் ஓர் அழகிய சுழல்.
அவற்றையே விழிவிரித்து பார்த்து நின்றவளுக்கு சட்டென தாம் வந்ததன் நோக்கம் நினைவு வர, கூடவே சந்தேகமும் வந்து ஒட்டிக்காெண்டது.
"
நிமல்...... நம்மள அந்த சாதனா மேடத்தை பேட்டி எடுக்கத்தானே அனுப்பி வைச்சாங்க? ஆனா இந்த டிரைவர் அழைச்சிட்டு வந்திருக்க இடத்தை பார்த்தா...... அந்த மாதிரி தெரியலையேடா...? ஒருவேளை நம்ம பாஸ் நமக்கு தெரியாம ஏதாவது பிளான் பண்றாரா...?" என்றாள்.
"
எனக்கும் அதே தான் தோணுது பூவி." என இன்னமும் அந்த இயற்க்கையின் சொழிப்பினை அளந்து கொண்டிருந்தவன்,
"
ஒரு ஊருக்கு சொந்தக்காரி, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு எம்டி. ரெண்டு ஆசரமத்தோட நிர்வாகி, இப்பிடியான இடத்தில இருக்க வாய்ப்பில்லை."
"
ஆமாடா வா நாம போயிடலாம்." என திரும்பிய நேரம், செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த முதியவர், அங்கு வந்து நின்ற காரினை கண்டதும், சாரத்தை இறக்கிவிட்டு, தலையிலிருந்த துண்டினை அவிழ்த்து தோளில் போட்டுக்கொண்டு அந்த குச்சியிலான கேட்டினை இழுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.
"
யாரு தம்பி நீங்கல்லாம்...? இங்க என்ன பண்றீங்க...?"
அவர் அப்படி திடீனெ கேட்டதும் சிறு நொடி தடுமாறியவர்கள்,
"
அது.... இங்க..... ஒரு அம்மாவ பார்க்க வந்தோம்." என்க.
"
அம்மாவா...." என்றவாறு தோளிலிருந்த துண்டினை எடுத்து, கையில் ஒட்டியிருந்த சேற்றினை அழுத்தி துடைத்தவாறு வினவ,
"
ஆமா ஐய்யா..... இங்க சாதனா அம்மா......" என மீண்டும் தடுமாற,
"
இங்க அம்மா..... நீங்க அவங்கள எதுக்கு பார்க்கோணும்....?"
"
இல்லை.... நாங்க ஒரு நியூஸ் சேனல்ல இருந்து வரோம்......"
"
நியூஸ் சேனலா..? முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. அப்பிடி இங்க யாருமில்லை." என விரட்டியவர் செயலும், பதட்டமும் சந்தேகத்தை வர வைத்தது.
"
எதுக்கு ஐய்யா விரட்டுறீங்க..? சாதனா அம்மா வீடு இதான்னு தானே கேட்டோம். அதுக்கு ஏன் அடிச்சு விரட்டுறீங்க..?" என்றான் நிமல் ஒரு தீர்மானத்தோடு.
"
இத பாரு தம்பி... அவங்கள நீங்க பார்க்க முடியாது. நின்னு நேரத்தை மினக்கடுத்தாம போங்க தம்பி.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு."
"
நீங்க வேலைய பாருங்க ஐய்யா.. நான் அம்மாவ தான் பார்க்கணும். "
"
ஒரு வாட்டி சொன்னா புரியாதா...?" என்றான் கோபத்தில் குரலை உயர்த்தி.
"
புரியுது.... ஆனா நாங்க சொல்லுறதையும் காது குடுத்து கேளுங்கையா....."
"
அதுக்கு எனக்கு நேரமில்லை. இடத்தை காலி பண்ணுங்க." என்றார் அதே கெடுபிடியோடு.
பூவிகா நிமலை பாவமாக திரும்பி பார்க்க, பொறுமையாக காக்கும் படி கண்களை மூடி திறந்தவன்,
"
ஐய்யா.. ப்ளீஸ்......" என கெஞ்ச வாயெடுக்கும் சமயம்.
"
ராமண்ணா...... அங்க என்ன சத்தம்...?" என்றதொரு கம்பிரமான பெண்ணின் குரல் காற்றில் தவள்ந்து வந்தது.
"
யாரோ ரெண்டு பேரும்மா.... சாதனாம்மாவை பார்த்தே ஆகணும்ன்னு நிக்கிறாங்கம்மா...." என்றார் அவர்.
சிறிது நேரம் எந்த குரலுக் கேட்கவில்லை. குடிசையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள் ஒர் இளம் பெண்.
இளம் பெண்தான் அவள், ஆனால் வெளித்தோற்றத்திற்கும் அவள் வயதிற்கும் சற்றுமே சம்மந்தமில்லை.
சாதாரண வெள்ளை நிறத்து காட்டன் புடவையில், அதன் இரு கரைகளிலும் கறுப்பு நிறத்திலான, சற்று அகலமான கோடு, அதே கறுப்பு கலரில் காலர் வைத்த ஜாக்கெட், உச்சி வகிடெடுத்து, ஒற்றை பின்னலிட்டிருந்தவள் மேனியோ சிறு காற்றுக்கு கூட ஒடிந்து விழுந்துவிடும் போல் இருந்தது. அவர்களை நோக்கி வருபவளையே பார்த்திருந்த பூவிகா,
"
நிமல் இவங்க யாருடா? பார்க்க அழகா இருக்காங்க, ஏன் இந்த சாமியார் வேஷம்? ஒருவேளை சாதனா மேடத்தோட மகளா இருப்பாங்களோ.....?" என கேட்டுக்காண்டிருந்தவளை நெருங்கியவள்,
"
எஸ்..... நீங்க?" என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி.
"
நா.... நாங்க.... அது.... தமிழ் ஊற்று சேனல்ல இருந்து வந்திருக்கோம் மேடம். நாங்க சாதனா மேடத்த பார்க்கணும்." என்றான் நிமல் முதலில் தடுமாறித் தெளிந்தவனாய்.
அவன் சேனல் என்றதும் அவளால் ராமண்ணா என அழைக்கப்பட்டவனை திரும்பி கேள்வியாய் பார்க்க,
"
நான் எவ்ளோ சொன்னேன்ம்மா... அவங்க தான்...." என்றவரை கண்ணசைவில் பரவாயில்லை என்பதாக செய்கை செய்தாள்.
எங்கு சாதனாவை பார்க்க முடியாது என்று அந்த பெண் கூறிவிடுவாளோ என அவர்கள் பயந்தவாறு அவளையே பார்த்திருக்க,
"
உள்ள வாங்க..." என சினேகப் புன்னகையுடன் உள்ளே அழைத்து சென்றாள் அவள்.
உள்ளே எந்தவித அடிப்படை வசதியும் அற்ற அடுப்படியுடன் கூடிய ஓர் மண்குடிசை.
மூலையின் ஓரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாயினை எடுத்து விரித்தவள்,
"உக்காருங்க" என்றாள்.
அவர்களோ சங்கடத்துடன் அந்த பாயில் அமர்ந்தவர்கள் விழியானது அந்த குடிலில் தாங்கள் தேடி வந்த நபர் கண்களில் படுகிறாரா என்றே ஆராய்ந்தவள்களுக்கு ஏமாற்றமாகிப்போக,
"
இங்க உங்களை தவிர வேற யாரும் இருக்க மாதிரி தெரியலையே.." என மீண்டும் அந்த இடத்தை நோட்டமிட்டவாறு கேட்டான் நிமலன்.
அதே நேரம் ஒரு மர இருக்கையினை அவர்கள் முன் கொண்டு வந்து போட்ட ராம்.
"நீங்க இதில உக்காருங்கம்மா... தரையில எல்லாம் உக்காந்து சிரமப்படாதிங்க." என அங்கிருந்த ஒரே ஒரு இருக்கையினை காட்டியவரை நோக்கி அதே சினேகப் புன்னகை உதிர்த்தவள்,
"அது நாகரீகமா இருக்காது அண்ணா. அது எங்க இருந்திச்சோ அங்கேயே கொண்டு போய் வைச்சிடுங்க. நானும் தரையிலேயே உக்காருறேன்." என்றாள்.
"ஆனாம்மா நீங்க தரையில..... வேண்டாம்மா..... நீங்க சொன்னா அவங்க புரிஞ்சுப்பாங்க." என்றார் அக்கறையோடு.
"இல்ல ராம் அண்ணா. வேண்டாம். நீங்க இவங்களுக்கு குடிக்கிறதுக்கு நல்ல செவ்விளநீரா ரெண்டு பறிச்சிட்டு வந்திடுங்க, அது போதும்" என அனுப்பி வைத்தவள்,
"நீங்க என்ன கேட்டிங்க...? என அவர்களிடம் திரும்பினாள்.
தொடரும்.....