• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
143
126
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
காரை செலுத்திக் கொண்டிருந்த ரிஷிக்கு பெற்றோரிடம் அப்படி பேசியது தவறு என்று புரிந்து தான் இருந்தது! ஆனால் அவன் என்ன செய்வான்? அவனுக்கு தன்னைப் பற்றி முழுமையாக தெரியாத நிலையில் ஒரு பெண்ணை அவனது வாழ்க்கையோடு எப்படி பிணைப்பது?

ரிஷி அதை பற்றி அவர்களிடம் உரைக்கவும் முடியாது! ஆகவே இப்படி கடுமையாக பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது! அவன் தன் பழைய எண்ணங்களில் மூழ்கியவனாக, பிரதான சாலையை அடைந்து, வளைவில் திரும்பிய போது, எதிர்புறமாக அந்த இருசக்கர வாகனத்தை கடைசி வினாடியில் கவனித்து தவிர்க்க முயன்று பிரேக் போட்டும், அந்தப் பெண் அவனது வண்டி மீது மோதி, அப்படியே சரிய,அவசரமாக காரை விட்டு இறங்கினான் ரிஷி!

தலையில் அடிபட்டு லேசாக ரத்தம் வந்து கொண்டிருக்க,விரைவாக அவளை தூக்கிப் போய் பின்புறக் கதவை திறந்து கிடத்திவிட்டு, திரும்புமுன் அங்கே சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது,அவர்களில் ஒருவர் அவளது வண்டியை எடுத்து நிறுத்திக் கொண்டிருக்க,அவரிடம் நன்றி சொல்லி, வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு, அவளது பொருட்களை சேகரித்துக் கொண்டு காரில் ஏறி,மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினான்!

என்ன காரியம் செய்து விட்டேன்? யார் வீட்டுப் பெண்ணோ? இன்றைக்கு ஏன் அம்மா கல்யாண பேச்சை எடுத்தார்களோ? அவர்களை வருந்தச் செய்துவிட்ட கழிவிரக்கத்தில், பாதையில் கவனம் வைக்காமல் இப்படி விபத்தை ஏற்படுத்தி விட்டேனே? இன்றைக்கு பணியாளர்களுடன் ஒரு முக்கியமான சந்திப்பு இருக்கிறது! இந்த பெண்ணுக்கு ஏதும் ஆகிவிடாமல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! இல்லாவிட்டால் அவனால் அந்த சந்திப்பை ரத்து பண்ண வேண்டிவரும்! மனம் யோசனையில் இருந்த போதும், அருகிலுள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு விபரம் சொல்லிவிட்டிருந்தான்!

ரிஷி அங்கே சென்ற போது, அவர்கள் தயாராக இருந்தனர்! உடனடியாக அவளை தீவிர சிகிச்சைக்காக அழைத்துப் போய்விட்டனர்!
ரிஷி மணியை பார்த்தான்! ம்ஹூம்..இனியும் தாமதித்தால் சரிவராது என்று எண்ணியவனாக, கைப்பேசியை எடுத்தான்!
🩷🩷🩷
வீட்டில்..
ரகுவாசன் சாப்பிட அமர்ந்திருந்தான்!
"ரகு, அப்பா உன்னை விசாரிச்சார்டா! நீ ஏன்டா இப்படி பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்கிறாய்? என்றவாறு பரிமாறினார் அனிதா!
"ஓ! நோ அம்மா! ப்ளீஸ் காலையில் ஆரம்பிக்காதீங்க, எனக்கு எப்ப பொறுப்பாக இருக்கணும்னு தோனுதோ அப்போ இருந்துக்கிறேன்! இப்போ அந்த வடையை இந்தப் பக்கம் தள்ளுங்க!
இன்னிக்கு என்ன ஸ்வீட் அம்மா? என்றான் சாப்பிடுவதிலேயே கவனமாக

மகனிடம் இதற்கு மேல் பேசினால் பாதி சாப்பாட்டில் எழுந்து போய் விடுவான் என்று தெரிந்து வைத்திருந்த அனிதா, அறிவுரையை கைவிட்டவாராக," உனக்கு பிடிச்ச சக்கரை பொங்கல்," என்று அவனுக்கு ஒரு கிண்ணத்தில் பறிமாறி அருகில் வைத்தார்!

சாப்பிட்டு முடிக்கும் தருவாயில்,அவனது கைப்பேசியில் தகவல் வந்த அறிகுறியாய் ஒலி எழுப்ப, எடுத்துப் பார்த்தவன் முகம் மலர்ந்து,அதை வாசித்தவன்,பதில் அனுப்பிவிட்டு,காத்திருக்க, கைப்பேசி அழைப்பு வந்ததும்"என்ன விஷயம்னு சொல்லு" என்று தொடங்கியவன், மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில், ஒரு கணம் முகம் மாறியவன், உடனடியாக இயல்பாக வைத்துக் கொண்டான்!

"ம்ம்.. அவ்வளவுதானே நீ கவலைப்படாதே! நான் பார்த்துக்கிறேன்! இடம் மட்டும் சொல்லு இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்!"என்று பேசிவிட்டு வைத்தவன், அவசரமாக எழுந்து கையை கழுவிக் கொண்டபடி மாடிக்கு ஓடினான்!

சமையல் அறையில்,மதிய சமையல் பற்றி பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு,மகனுக்கு "இன்னும் கொஞ்சம் பொங்கல் வேண்டுமா" என்று கேட்க வந்த அனிதா, கடைசியாக மகன் பேசியதை கேட்டார்!

அதற்குள்ளாக கீழே வந்த ரகு,"அம்மா,லஞ்ச்சுக்கு நான் வர மாட்டேன்! முக்கியமான வேலையா போறேன்! பை"என்று வாசல் நோக்கி கிட்டத்தட்ட ஓடினான்!
"டேய்..டேய், யாருக்கு என்னாச்சு? சொல்லிட்டுப் போடா?என்றவருக்கு பதிலாக அவனது பைக்கின் உறுமல் சத்தம்தான் கேட்டது!
அனிதாவிற்கு ஏனோ மனது படபடத்தது! கடவுளே யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் காப்பாற்று என்று அவரது மனம் பிரார்த்தித்தது!
🩷🩷🩷
மருத்துவமனை..
ரிஷிகேசவன், கைப்பேசியில் பேசிவிட்டு, மீண்டுமாக அங்கே சென்றபோது, அப்போது தான் அந்த பெண் மருத்துவர் வெளியே வந்திருந்தார்!

"அந்த பெண் உங்களுக்கு உறவா?"

"இல்லை டாக்டர்! நான் காரில் வரும்போது எதிரில் வந்த அவங்களை நான் கவனிக்கவில்லை! நான் ஏதோ யோசனையில்,.. என் தவறுதான்! ஏன் டாக்டர் என்னாச்சு? ஏதும் பிரச்சினையா?"

"அதெல்லாம் பயப்படும்படியாக பெரிதாக ஒன்றுமில்லை!

"தாங்க்யூ டாக்டர்! இவன் என் தம்பி,ரகுவாசன்! இவனிடம் மற்ற விவரங்களை சொல்லிடுங்க, நான் கொஞ்சம் அவசரமாக போக வேண்டும்"என்று ரிஷி அங்கிருந்து கிளம்பி விட்டான்!

அவன் போவதையே பார்த்திருந்த மருத்துவரின் முகத்தில்,நொடியில் பலவிதமாக உணர்வுக் கலவைகள் தோன்றி மறைந்தது!

அதை எதையும் கவனிக்காமல்,தன் கைப்பேசியில் எதையோ ஆர்வமாக பார்த்தபடி நின்றவனிடம்,

"தம்பி, என்னோடு வாங்க, என்று தன் அறை நோக்கி செல்ல,அவரை பின்பற்றிச் சென்றான் ரகுவாசன்!

அவனை உட்கார சொல்லிவிட்டு, தானும் அமர்ந்த பின்,"தம்பி கொஞ்சம் கவனமாக கேளுங்கள் என்று அழுத்தமான குரலில் சொன்னார்!
" ஷ்யூர், டாக்டர்!"என்று நிமிர்ந்து அவரை நோக்கினான்!

தொண்டையை செருமி சரி, செய்துவிட்டு,"அந்த பெண்ணுக்கு அடி பலமில்லை,லேசான காயம் தான், அந்த பெண் சரியாக சாப்பிடுவதில்லை போல.. அதனால் தான் மயங்கி விட்டிருக்கிறாள்! ரொம்ப அனீமிக்காக இருக்கிறாள்! நான் கொஞ்சம் டேப்லட்ஸ் எழுதி கொடுக்கிறேன்! இரண்டு மாசத்துக்கு அதை சாப்பிட சொல்லுங்க! ட்ரிப்ஸ் முடிந்ததும் வீட்டுக்கு போகலாம்! ஆனால் கண்டிப்பாக அவங்க அடுத்த வேளை உணவை எடுத்துக்கணும்!"என்று தான் எழுதிய மருத்துவ சீட்டை அவனிடம் நீட்டினார்!

அதை பெற்றுக் கொண்டவன்,"நீங்க சொன்னபடியே செய்றேன்! தாங்க்யூ டாக்டர்!"என்றவாறு எழுந்தவனிடம்,

"உங்கள் அண்ணனை,நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்னு நினைக்கிறேன்"

"பார்த்திருக்கலாம்,டாக்டர்! Happy Home constructions முதலாளி தான் எங்க அப்பா! அவர்கூட இப்ப அண்ணனும் தொழிலைப் பார்த்துக்கிறான்! அண்ணனும் இப்ப ஒரு செலிபிரட்டி தான்! அதனால நீங்க எங்காவது பார்ட்டியில் பார்த்திருக்கலாம்!"என்று மருந்து சீட்டில் அரை கவனமாக பதிலளித்தான்!

மருத்துவரின் முகம் சட்டென்று ஒருகணம் இறுகி மீண்டது!"ஓ! மேபி அப்படித்தான் பார்த்திருப்பேன் போல!" என்றவர்,நான் சொன்னதை அந்த பெண்ணிடம் மறக்காமல் சொல்லுங்க தம்பி!" என்று அவனுக்கு விடை கொடுத்தார்!

அதன்பின் அவரது மன அமைதி பறிபோயிற்று! கடந்த கால சம்பவங்கள் நினைவில் வந்து அலை மோதியது! அவரால் அன்று தொடர்ந்து பணி செய்ய இயலும் போல தோன்றவில்லை! ஆனாலும் கடமை என்று ஏற்றிவிட்டு இடையில் செல்வது சரியில்லை என்று நினைத்து,நர்ஸை அழைத்தார்!

"ரித்து, இன்னிக்கு வேற ஏதும் முக்கியமான அப்பாயின்மெண்ட் இருக்கா?"

"இன்னிக்கு அப்படி ஏதும் இல்லை டாக்டர்! ஒருவேளை இனிமேல் வரலாம்!"என்றாள் நர்ஸ்!

"ஓகே! அப்போ ஒன்னு செய், இன்னிக்கு யாருக்கும் கொடுக்க வேண்டாம்! எனக்கு கொஞ்சம் ஹெல்த் சரியில்லை!" என்றவர் மளமளவென்று விடுப்பு கடிதம் எழுதி நர்ஸிடம் தந்துவிட்டு,"நான் வீட்டுக்கு கிளம்பறேன்!" என்று தன் ஓய்வு அறைக்கு சென்றார்!

அந்த நர்ஸ் வியப்போடு அவர் போவதையே பார்த்திருந்தாள்! கடந்த மூன்று வருடங்களாக அவரை பார்த்துக் கொண்டிருக்கிறாள்! வேலையில் இருக்கும் போது அவர் பாதியில் விடுப்பு எடுத்து போனதை அவள் பார்த்ததே இல்லை! Sincere Bala (பாலா கடமை தவறாதவர்) என்று அவருக்கு பெயரே உண்டு! அப்படிப்பட்டவர் இன்று உடம்புக்கு முடியவில்லை என்று போவது ஆச்சர்யமாக இருக்கும் தானே?
அந்த மருத்துவர் யார்? ஏன் அவருக்கு மனநிலை தடுமாறுகிறது?
🩷🩷🩷

Picsart_24-05-04_15-06-13-739.jpg
 
Last edited:

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
அருமை சிஸ், ஆனா எழுத்து மிகவும் சிறியதாக இருக்கிறது, அதோடு ஒவ்வொரு பத்திக்கும் இடைவெளியும் இல்லை, அதை மட்டும் சரி செய்யுங்கள் சிஸ்
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
143
126
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அருமை சிஸ், ஆனா எழுத்து மிகவும் சிறியதாக இருக்கிறது, அதோடு ஒவ்வொரு பத்திக்கும் இடைவெளியும் இல்லை, அதை மட்டும் சரி செய்யுங்கள் சிஸ்
நன்றி மா. நிச்சயமாக சரி பண்றேன்
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,135
679
113
Ariyalur
சூப்பர் சூப்பர் அம்மா 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷டாக்டர்க்கே மனசு குழப்பம் ஆகுதுன்னா ரிஷி பத்தி ஏதோ இருக்கு இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு 🤔🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
143
126
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சூப்பர் சூப்பர் அம்மா 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷டாக்டர்க்கே மனசு குழப்பம் ஆகுதுன்னா ரிஷி பத்தி ஏதோ இருக்கு இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு 🤔🤔🤔🤔🤔
நன்றி மா 😁