• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02.Miss மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
வீட்டிற்கு வந்தவள் தன் அக்கா வேலைக்கு போய் விட்டாள் என்பதை அறிந்து கொண்டவள் தன் அறைக்குள் சென்று லேப்டாப்பில் சில குறிப்புகள் எடுப்பதில் மூழ்கினாள்....

மாளிகைக்கு ஒத்த வீட்டில் காலையிலே பொருட்களை தூக்கி உடைக்கும் சத்தம் எதிரொளித்து கொண்டிருக்க அச் சத்ததில் பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்தான் அகிலன் "டேய்.... என்னடா எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைச்சு வெச்சிருக்க பைத்தியம் பிடிச்சிருச்சா…" என்றவனின் கத்தலில் அந்த ஆறடி ஆணழகன் திரும்பி பார்த்தான் கண்கள் சிவந்து கோவத்தின் உச்சியில் இருந்தான் அவன்....

"இப்போ எதுக்கு உனக்கு இவளோ கோவம்...."

"என் கோவத்துக்கு காரணம் யாருன்னு தெரியாதா உனக்கு...."

"யாரு நம்ம சம்யுக்தாவா?..."

"அவளே தான் என்னை சாவடிக்கிறா தெரியுமா இங்க இருந்திட்டு.." என்று மனதை தொட்டு காமித்தான் யுவா என்கிற யுவேந்திரன்.....

"டேய் யுவா வற்புறுத்தி எல்லாம் காதலை வர வைக்க முடியாதுடா அவளை பத்தி தெரியும் தானே பணம் இல்லைன்னாலும் யாருக்கிட்டயும் பணிஞ்சு போக மாட்டான்னு அவ வேற டைப் நீ பிசினஸ்லே ஜெயிக்கிற மாதிரி அவக்கிட்ட ஜெயிக்க முடியாது சொல்லிட்டேன்...."

"என்னடா அவளை லவ் பண்ணினது என்ன உலகமகா தப்பாடா ரொம்ப தான் பண்ணுறா நேத்து கூட வேலைக்கு சேர்றத்துக்கு அபாய்மென்ட் லெடர் கூட அனுப்பி வெச்சேன் தெரியுமா ஏன்? அவ என்கூட எப்பவும் இருக்கனும் நெனச்சு தான் ஆனா அதுக்கு கூட எந்த ரிப்ளையும் இல்லை தெரியுமா? என்றான் அதே கோவத்தவதோடு..."

"மச்சி அதை விடு இப்போ அப்பா ஆபிஸ் போக ரெடியாகி உன்ன பார்த்திட்டு இருக்காரு இப்போ நீ கீழ இறங்கி வரயில்லைன்னா அவரு டென்ஸனாகிடுவாரு..." என்று அவனுடைய அப்பாவின் பெயரை சொல்ல கோபம் தணிந்தவனாய் "சரிவா போலாம்.." என்றவன் தன் காரில் தனது நண்பனையும் தந்தையும் ஏற்றி கொண்டு தான் கட்டி ஆளும் சாம்ராஜ்யம் Vs. A Motors என்று அழைக்கப்படும் பல வித வாகனங்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் கம்பனியின் முன் வந்து நிறுத்தினான் சண்முகவேல் நீலவள்ளி என்பவர்களுக்கு மகனாக பிறந்தவன் தான் யுவேந்திரன் படிப்பு முடிந்ததும் தன் தந்தை தொடங்கிய சிறிய பிஸ்னஸ்யை இன்று இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறான் தான் நினைக்க எந்த எல்லைக்கும் செல்லும் பிடிவாதகாரனின் கண்ணில் பட்ட பூவையவள் தான் சம்யுக்தா‌ எளிமையான ஆர்பாட்டம் இல்லாத அவள் அழகையும் தைரியத்தையும் கண்டு காதலில் விழுந்தவன் தான் இன்று அதில் கரை சேர முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான்.


ஆபிஸிற்கு நுழைந்தவன் தனக்கான அறைக்குள் சென்று வேலைகளை கவனித்தான் மற்றையதை எல்லாம் ஒதுக்கி விட்டு முக்கியமாக அவள் நினைவுகளை ஒதுக்கி விட்டு....

இங்கு சன்முகவேல் அகிலனை பிடித்து கொண்டார் "டேய் நில்லுடா ஆமா அவன் ரூம்லே மார்னிங் ஓரே சத்தமா இருந்திச்சு அதோட அவன் முகமும் ஏதோ சரியில்லை என்னடா நடக்குது எனக்கு தெரியாமே...." என்றார் அதட்டும் குரலில்.

"அய்யோ... அப்பாவும் மகனுக்கும் இடையிலே சிக்கி தவிக்க வேண்டியிருக்க சொன்னா அவன் அடிப்பான் சொல்லாட்டி இவரு அடிப்பாரு இப்போ எப்பிடி தப்பிக்கிறது..." என விழி பிதுங்கி நின்றான் அகிலன்.

"என்னடா யோசனை பலமாயிருக்கு எப்பிடி என்கிட்ட சொல்லாம தப்பிக்கலாம்ன்னா..." என்று அவனை முறைப்பாக பார்க்க.....

"கண்டுப்பிடிச்சிட்டாரே... அது எல்லாம் ஒன்னுமில்ல அன்கிள் அவன் ஏதோ மீட்டிங் விஷயமா தான் கொஞ்சம் டென்சனாயிருந்தான் மத்தப்படி எதுவும் இல்லை நீங்க எதையும் போட்டு டென்சன் ஆகாமே இருங்க.." என்றவன் அங்கிருந்து எஸ் ஆகினான்....


இங்கு தனக்கு வந்த லெடரை தூக்கி மேஜையில் போட்டு விட்டு வெளியே வர அவளுக்கு காபியை நீட்டினார் கனகா....

அதை பருகியவாறே ஹாலில் அமர்ந்தபடி யாருடனோ சீரியஸாக ஃபோன்னில் பேசிக் கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்த கனகா அவள் பேசி முடியும் வரை காத்திருந்தார்...

"என்னம்மா எதாவது சொல்லனுமா ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...."

"அது... சம்யுக்தா நம்ம மோனிகா காதலிச்ச பையன் கொஞ்சநாளா இவக்கூட சரியா பேசுறது இல்ல...."

"ஓஹ் அதுக்கு தான் நைட் உக்கார்ந்து அழுதிட்டு இருந்தாளா நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன் ஏதோ யோசனைலே சுத்திக்கிட்டு இருந்தா..."

"ஆமாடி அவளை பத்தி தான் நல்லாவே தெரியுமே.... அவங்க வீட்டிலே உன் அக்காவே கல்யாணம் பண்ணி தர சொல்லி கேட்டிருக்காரு ஆனா அவங்க குடும்ப கவுரத்துக்காக நகை நட்டோடே சீரும் சிறப்புமா அனுப்பி வைக்க சொல்றாங்க ஆனா நம்மலாலே அதை எல்லாம் பண்ணி அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியுமா?..." என்றார் கவலையோடு ம்ம்.... என்று பெருமூச்சை இழுத்து விட்டவள் "இப்போ என்ன பண்ணுறது..." என்று அவரிடமே யோசனை கேட்டாள்.

"எல்லாத்துக்கும் பணம் தான்டி வேணும் நீதான் கொஞ்சம் மனசு வைக்கனும்..." என்று கெஞ்சாதே குறையாக கேட்டவரை எதுவும் பேசாமல் அமைதியாக எல்லாத்தையும் யோசித்து கண்களை மூடிக் கொண்டிருந்தவளை
அழைத்தான் ரிஷி.


"சம்மூ கொஞ்சம் வெளியே போய் வரலாமா?.." என்று அவளது மனநிலையை லேசாக்குவதற்காக அவளை அழைத்தான் அவளுக்கும் தேவை என்பதாலோ "சரிண்ணா நான் இதோ வரேன்..." என்று சொல்லிக் கொண்டு அவனுடன் கிளம்பிப் போனாள் "அண்ணா நானும் கேக்கலே நீங்களும் சொல்லயில்லை ஆமா நாம எங்க போறோம்.." என பைக்கில் போய்க் கொண்டிருக்கும் போது கேட்டவளிடம்...

"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் இதை வீட்டிலே வெச்சு பேச முடியாதுல்லே அதான் கூட்டிட்டு போறேன்.." என்றவன் ஒரு ரெஸ்டுரென்ட்டுக்கு கூட்டிச் சென்றான்....

இருவருக்கும் சேர்த்து ஐஸ்கிரீம் வாங்கியவன் அதை மெதுவாக வாயில் திணித்தபடியே "சம்மூ நீ ஆசப்பட்ட மாதிரி நடக்கனும்ன்னா அதுக்கு நிறைய பணம் வேணும் ஒரு கம்பெனியே உருவாக்கி தொழில் நடத்தனும்ன்னா அது எப்பிடி எப்பிடி இருக்கனும்ன்னு என்னை விட உனக்கு நல்லாவே தெரியும் ஆனா நீயே ஏதாவது ஐடியா வெச்சிருப்பலே...."

"ஹ்ம்ம்.. ஆமாண்ணா எனக்கு இப்போதைக்கு ஒரு முப்பது லட்ச ரூபா வேணும் அதை வெச்சி எப்பிடியாவது எல்லாத்தையும் ஏற்ப்பாடு பண்ணிப்பேன்..."

"அவ்வளோ பணமா? என்னோட பைக் அதை விற்றா ஒரு 3 லட்சம் தேரும் ஏதாவது நகை காணி என்று அடுக்கி கொண்டு போனவனை அண்ணா அண்ணா அப்பிடி எல்லாம் செய்ய வேணாம் மொதல்ல நாம ஏதாவது பேன்க்லே லோன் எடுக்கலாம் இந்த விசயத்துலே பெரியப்பா கூட உதவ முடியும்...."

"அட ஆமால்லே நான் இதை யோசிக்கலே சரி அப்பாக்கிட்ட விசாரிச்சு பார்க்கலாம் ஒரு வேளை அவரு மனசு வெச்சா கூட நமக்கு ஏதாவது கிடைக்கலாம்..."

"சரிண்ணா கிளம்பலாமா? என்று வெளியே வந்தவள் அவனுடன் பைக்கில் ஏறிக்கொண்டதும் அவளை கூட்டிக் கொண்டு "சம்மூ அடுத்த தெருவுலே தான் என்னோட ப்ரென்ட் இருக்கான் அவன்கிட்ட ஒரு பைல் இருக்கு அதை வாங்கிட்டு கிளம்பலாமா?..."

"சரிண்ணா போற வழியிலே தானே வேலையை முடிச்சிட்ட கிளம்பலாம்..." என்று அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்தவாற வர அவனோ வீதியோரமாகவே சென்று பைக்கை நிறுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்... அவனுடைய நண்பனை இவளுக்கும் நன்றாக பழக்கம் என்பதாள் சிரித்த முகத்துடனே பேசினாள்....

இதை வேலையை முடித்துக் கொண்டு காரோட்டி வந்த யுவா கண்டு விட்டான் அவனிற்கு மூக்கினால் புகை வராத குறையாக குமுறிக் கொண்டிருந்தான்...

"யார்டா அவன் என் ஆளுக்கூட பைக்லே அதுவும் இவளோ நெருக்கமா..." என்று அருகில் இருந்த அகிலிடம் கேட்க அவனோ கையை விரித்தான் எனக்கு தெரியாது... என்ற தோரணையில்...

"மச்சான் நீ அவளை பார்த்துகிட்டு மட்டும் தான் இருந்த லவ் கூட அவக்கிட்ட சொல்லயில்லை அந்த கேப்லே யாராவது கரெக்ட் பண்ணிட்டானோ என்னவோ..." என்று ஒரு யூகத்தில் சொன்னவனை கண்டு‌ எரிச்சலானாவன்....

"அப்பிடி மட்டும் நடந்தா அவனை தூக்கி வீசிட்டு என்னோட தேவதையை தூக்கிட்டு வந்திடுவேன்..." என்றவன் செய்யவும் தயங்க மாட்டான் என்பது அகிலிற்கு நன்றாகவே தெரியும்.


"டேய் டேய் கொஞ்சம் ஓவரா தான் போற காலேஜ்லயே லவ்வே சொல்லியிருந்தா இந்த பிரச்சினை வந்திருக்குமா? பேசாம கார் எடு போலாம்..." என்று அவனை திசை திருப்பினாலும் அவன் மனம் வெகுவாக பாதித்தது அங்கிருந்து கிளம்பினாலும் அவளின் உருவம் மறையும் வரை கண்ணாடி வழியாக பார்த்தப்படியே வந்தான் இதை பார்த்த அகிலிற்கு அய்யோ... என்று இருந்தது....

இங்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் தன் அண்ணனுக்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு அவனுடனே பின் தன் பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்.... அங்கு வந்து இளைப்பாறிக் கொண்டிருந்த தன் பெரியப்பா அருகில் போய் அமர்ந்தாள்....

"என்னடா கண்ணு ஒரு மாதிரியிருக்க.." என்று அன்போடு கேட்டார் அவள் முகத்தை ஆராய்ந்தவாறே...

"பெரியப்பா... எனக்கு கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணி கொடுப்பீங்களா?..."

"என்னடி சம்யுக்தா இப்பிடி கேக்குற பெரியப்பாங்கிற உரிமையிலே கேட்டுட்டு இருக்காம பணத்தை எடுத்திட்டு நான் இதை எடுத்திட்டேன்னு சொல்லு.." என்று வந்தார் திலகா....

அதை கேட்டு லேசாக புன்னகைக்கே "சொல்லுடா குட்டி நீ ஏதோ சும்மா கேக்குற மாதிரி தெரியலே அதுக்கு பின்னுக்கு ஏதோ காரணம் இருக்கிற மாதிரி தெரியிதே...." என்றார் உதய் எதையோ யூகித்ததை போல்...

"ஆமாம் பெரியப்பா நான் கம்பெனி ஆரம்பிச்சு சொந்த கால்லே நிக்கனும்ன்னு நெனக்கிறேன் அதுக்கு தான் பணம் வேணும்...."

"ஏன்டி இது நம்ம குடும்பத்துக்கு சரிபட்டு வருமா பிசினஸ் பண்ணுறதுன்னா லேசான வேலையா அதுவும் நீ பொட்டப்புள்ளை..." என்றார் திலகா ஊர் உலகத்தின் வாயிற்கு பயந்து.

"ஏய் திலகா... கொஞ்சம் உன் பழைய பஞ்சாங்கத்தை ஆரம்பிக்காத நீ சம்யுக்தாவை அவ்வளோ லேசா எடப்போட்டுறாதே..." என்றவர் அவள் புறம் திரும்பி "சரிம்மா நீ சொல்லு உனக்கு நான் எப்பிடி ஏற்பாடு பண்ணனும்..."

"அப்பா எனக்கு நீங்க வொர்க் பண்ணுற பேங்க்லே லோன் கிடைக்க ஏற்பாடு பண்ணிக் கொடுக்குறீங்களா?..."

"ஹ்ம்ம்.... உனக்கு எவ்ளோ பணம் வேணும்ன்னு எதிர்ப்பாக்குறே…"

"அது... ஒரு முப்பது லட்சருவா பெரியப்பா…" என்று சிறு தயக்கத்துடன் சொல்ல...

"ஆமா யார் பேர்லே எடுக்கப்போற…"

"இது என்ன பெரியப்பா கேள்வி என்னோட பேர்லே தான் ஏன்னா எனக்கு இன்னொருத்தரை என்னோட விஷயங்களுக்கு இன்வோல் ஆக வெச்சி கஷ்டப்படுத்த விருப்பம் இல்லை…"

"நல்லா தான் பேசுற ஆனா லோன் எடுக்க சில ரூல்ஸ் இருக்கு ஆனா அதுக்கு நீ தயாராவா இருக்க…" என்றார் அவளை நோட்டமிட்ட படி.

"அப்பிடி என்ன வேணும் எதுவாயிருந்தாலும் பண்ணிடலாம்.." என்றால் நம்பிக்கையோடு....

அதற்கு சிரித்துக் கொண்டே "விளையாட்டு பிள்ளையா இருக்கியே கண்ணு.... நீ லோன் எடுக்கனும்ன்னா மொதல்ல அவங்களுக்கு நம்பிக்கை வரனும் அவங்க பணத்தை நீ கட்டுவியான்னு அப்பிடி நம்பிக்கையா கட்ட உன்கிட்ட எதாவது வேலையிருக்கனும் அப்பிடி என்ன வேலைக்கு போற என்று கேட்டவர் இரண்டாவது உனக்கு சொந்தமான ஏதாவது ப்ராபர்ட்டியே காட்டனும் எல்லாத்தை விட சாட்சி கையெழுத்து வேணும் அதை நான் போட்டாலும் நீ 30 லட்சம் பேங்லே எடுத்தா அதுக்கு வட்டியே 10 லட்சம் வரும் இதை எல்லாம் மேனேஜ் பண்ணிப்பியா...." என்று குண்டை தூக்கி போட்டார் உதய்.

இதை கேட்டு கொண்டிருந்த ரிஷியின் புருவம் முடிச்சிட மனமும் வலித்தது தன் தங்கையை நினைத்து....



"நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும் விமர்சனம் தாண்டி
உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கி விடும்....."
 
Top