• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
மருத்துவமனையை விட்டு, வெளியே வந்தார் அந்த பெண் மருத்துவர் பாலா! 56 வயதில் இருந்தாலும் இன்னமும் யாரும் அந்த வயதென்று குறிப்பிட்டு விடமுடியாத அளவுக்கு இன்னும் அழகாகவும், இளமையாவும் தான் தோன்றினார்!

அவரது மனது கடந்த காலத்திற்கு போக எத்தனித்தது! அதை தவிர்க்க,சாலையில் வலுக்கட்டாயமாக கவனத்தை திசை திருப்ப முயன்ற போது அவர்கள் கண்ணில் பட்டார்கள்!

ரகுவாசன்,அந்த இளம் பெண்ணுடன் காரில் சென்று கொண்டிருந்தான்! அவள் யாரோ அறியாத பெண் என்றானே அண்ணன்காரன்! இவன் என்னவென்றால்,அவளை உடன் அழைத்துக் கொண்டு போகிறானே! சிறு சந்தேகம் உண்டாயிற்று! உடனடியாக அவன் அறியாமல் காரில் பின் தொடர்ந்தார் பாலா! சொல்லப் போனால் அது அவரது வீட்டிற்கு செல்லும் பாதை தான்!

ரகுவின் கார்,பிரதான சாலையில் இருந்து கிளைவழிப் பாதையில் திரும்பியது! சற்று தூரம் சென்று அந்த கார் நின்றுவிட, அந்தப் பெண் இறங்கிக் கொண்டு, ஏதோ சொன்னாள்! அதன் பிறகு அவள் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நோக்கிப் போனாள்! அதைக் கிளப்பிக் கொண்டு அவள் டாக்டர் பாலாவின் காரை கடந்து சென்று விட்டாள்!

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் பாலா தன் காரை திருப்பிக் கொண்டு பிரதான சாலைக்கு சென்று தன் வீடு இருந்த கொட்டிவாக்கத்திற்கு சென்றார்!

வீட்டை அடையும் வரையிலும் அவரது நினைவு யாவும் கடந்து போன காலத்தில் தான் உழன்று கொண்டிருந்தது! அவரால் அதை தடுக்க முடியவில்லை! ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்து போன அவரது இளமைக்கால வாழ்க்கையை நினைத்து அவர் என்றும் வருந்தியது இல்லை! ஆனால் அதன் விளைவாக உண்டான மனக்காயம் ஆறவே இல்லை!

மருத்துவம் படித்த காலத்தில்,அவர் நினைத்தது ஒன்றே ஒன்று தான்! அது எளிய மக்களுக்கு தன்னால் ஆன சேவை செய்ய வேண்டும் என்பது! இன்று அது நிறைவேறிவிட்டாலும், ஆரம்பத்தில் அதற்கு தடைக் கல்லாக நிகழ்ந்து போன சம்பவங்களும், அதனால் அடைந்த மன வேதனைகளும் இன்று நினைத்தாலும் தாள முடியவில்லை! அதை எல்லாம் புறக்கணித்து, கால ஓட்டத்தில் மறந்து, நிகழ்கால வாழ்வில் முயன்று வெற்றி கண்டு விட்டதாக பெருமிதம் கொண்டது எல்லாம் பொய்
என்று ரிஷிகேசவனை பார்த்தபின் தான் புரிந்தது!

தந்தையின் சாயலில், இன்னும் கூடுதல் உயரத்தில் கம்பீரமாக இருந்த ரிஷியைப் பார்த்ததில் இருந்து,மனம் ஒரு நிலையில் இல்லை! தன் இழப்பின் அளவை உணர்ந்து கண்கள் வேறு கலங்கிக் கொண்டிருந்தது! அதை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை!

கார் ஹாரன் கேட்டு, மதில் கதவை திறந்துவிட்ட வாட்ச்மேன், வியப்புடன் பார்த்து நின்றான்!

"ஒரு நாளும் இல்லாம இந்த நேரத்துல அம்மா வந்திருக்காங்களே? உடம்புக்கு ஏதும் முடியலையோ? அப்படி இருந்தால் அவரே வண்டியை எப்படி ஓட்டி வருவார்? வேறு என்னவோ? என்று யோசித்துவிட்டு தன் இடத்தில் அமர்ந்துவிட்டார்!

அதே வியப்புத்தான், வீட்டிலிருந்த பணிப்பெண் நதியாவுக்கு! ஆனால் அவரது முகமும் கண்களும் சிவந்திருப்பதை பார்த்துவிட்டு,ஒன்றும் பேசாமல் அவருக்கு குடிக்க குளிர் நீரை கொணர்ந்து கொடுத்தாள்!

"நதியா, தலை வலியா இருக்கு, நான் கொஞ்சம் படுக்கிறேன்! நானா எழுந்து வர்றவரைக்கும் தொந்தரவு செய்யாதே! சமையல் முடிஞ்சுதுன்னா நீங்க சாப்பிடுங்க!"என்று தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டார்!

இதுவும் கூட புது பழக்கம் தான்! அவர் அழைக்காமல் யாரும் அவரது அறைக்குள் செல்ல மாட்டார்கள், அவரது பேரன் தவிர!

நதியா மௌமாக தன் வேலையை பார்க்க சென்றாள்!

பாலா ஆடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்துவிட்டார்! கண்ணீர் வழிந்தபடி இருந்தது! தன் இழப்பை நினைத்து அவர் மனம் மிகுந்த துயர் அடைந்தது!

25 வருடங்களுக்கு முன்பு... நிகழ்ந்தவை யாவும் அவரது நினைவில் படமாக வலம் வந்தது!

🩷🩷🩷

நிறுவனத்திற்கு சென்ற ரிஷி, அன்றைக்கு ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கை நல்லபடியாக முடித்துவிட்டு, தம்பிக்கு போன் செய்தான்!

"என்னடா, அந்தப் பொண்ணை அவள் வீட்டில் பத்திரமாக விட்டுவிட்டாய்தானே?"

"இல்லை, அண்ணா! அவள் தன்னோட வண்டியில் வீட்டுக்குப் போயிட்டா! அட்ரஸ், போன் நம்பர் வாங்கிட்டேன்!"

"ச்சு.. அதெல்லாம் நமக்கு எதுக்குடா? அவள்தான் நல்லபடியாக போய்விட்டாளே! அத்தோடு விடாமல் இப்ப அவள் வீட்டுக்கு வேற ஏன்டா?"

"அட அண்ணா, எதுக்கு பதறிட்டு இருக்கிறே? அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர், அவள் ரொம்ப வீக்காக இருக்கிறதா, சொன்னாங்க! சரியா சாப்பிடாததால தான் மயக்கம் வந்துட்டதாம்! அதனால அவளுக்கு சத்தான சாப்பாடு கொடுக்கணும்னு சொன்னாங்க! அதுக்கு தான், ஒரு வாரத்துக்கு தேவையான பழம், காய்கறி, டாக்டர் எழுதிக் கொடுத்த டானிக், மருந்து எல்லாம் வாங்கிட்டுப் போயிட்டு இருக்கிறேன், சரி அண்ணா, அவள் வீடு வந்துட்டுது நான் அப்புறமா வீட்டுக்கு வந்து பேசுறேன்!" என்றவன் தமையனின் பதிலை எதிர்பாராமல் தொடர்பை துண்டித்தான் ரகுநந்தன்!

ரிஷி ஒருகணம் திகைத்துப் போனான்! என்ன இவன் ஏதோ சொந்தம் போல பேசிட்டுப் போறான்? இவன் ரூட்டே புரியலையே? ஒரே பார்வையில் பயல் அந்த பெண்ணிடம் லாக் ஆகிவிட்டானா என்ன? வரட்டும் பார்க்கலாம்"என்று எண்ணும் போதே உதட்டில் புன்னகை உதயமாயிற்று! அப்போது அவனது மனக்கண்ணில் அந்த முகம் வந்து போனது!

சிலகணங்கள், ஸ்தம்பித்துப் போனவனாக அப்படியே அமர்ந்து விட்டான்! கண்களை மூடி மீண்டும் அந்த முகத்தை நினைவுக்கு கொண்டு வர முயன்றான்! ஆனால் முடியவில்லை!

வெகு நேரம் முயன்றும் அவனது நினைவுக்கு எதுவும் வரவில்லை! கடந்த சில மாதங்களாக அவனுக்கு கனவில் ஒரு முகம் வந்து போகிறது! ஆனால் அது தெளிவற்றே இருக்கிறது! அவனுக்கு காரணம் தெரியவில்லை. யோசிக்க யோசிக்க, தலையை வலிக்க ஆரம்பித்தது! தலையை பிடித்தபடி அமர்ந்திருந்த வேளையில்..

உள்ளிடப்பேசியில் அழைப்பு வர எடுத்தான்!

மறுமுனையில், அவனது உதவியாளன் கங்கா,"சார், உங்களைப் பார்க்க உங்கள் நண்பர் ஒருத்தர் வந்திருக்கார்!"

"யார்?"

"வசந்தன்" என்று சொன்னார்!"

"என் நண்பன் தான், சரி உள்ளே வரச் சொல்லு! அப்படியே கூல் ட்ரிங்ஸ் அனுப்பி வை!" என்று பேசியை வைத்தான் ரிஷி!

சில கணங்களில் உள்ளே வந்தான் வசந்தன்!

"வா,வா.. வசந்தா! என்று எதிர்கொண்டு அழைத்து அணைத்துக் கொண்டான் ரிஷி!

இருவரும் சிலகணங்கள் ஒருவர் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு நின்றனர்!

முதலில் சுதாரித்த ரிஷி," வந்து உட்கார்டா! ஆமா திடீர்னு எங்கேடா காணாமல் போயிட்டே? உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சுடா?"

"ம்ம், நாலு வருசம் இருக்கும்டா!"

"இல்லைடா, தப்பா சொல்றே! நான் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் போது நீ வேலை கிடைச்சுட்டுனு வெளிநாட்டுக்கு போயிட்டே! அப்புறமாக நாம அதிகமாக சந்திக்கவில்லைடா! உன் கல்யாணத்திற்குக்கூட நான் வரமுடியாமல் போயிற்று! அப்புறம் போன்ல தான் பேசிக்குவோம்! அதுவும்கூட பிறகு நின்னுடுச்சு"

வசந்தன், சிலகணங்கள் நண்பனை மௌனமாக பார்த்திருந்தான்! ரிஷிக்கு அவன் பார்வையில் இருந்த பாவனை புரியவில்லை!

"என்னடா? ஏன் அப்படி பார்க்கிறே?என்றதும் தன்னை சுதாரித்துக் கொண்டவன், "ஆமாடா, நான்தான் ஏதோ ஞாபகத்தில் அப்படி சொல்லிட்டேன்! இப்ப உனக்கு ஏதும் வேலை இருக்கா? அப்படின்னா நான் கிளம்பறேன்! சாயந்திரம் சந்திக்கலாம்!"

"பல வருஷம் கழிச்சு வந்திருக்கிறே! எவ்வளவு விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு! எது இருந்தாலும், கேன்சல் பண்ணிடலாம்டா! ஒன்றும் பிரச்சினை இல்லை! " என்றவன் உள்ளிடப் பேசியில் அவனது உதவியாளருக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு எழுந்து கொண்டான் ரிஷி.
Picsart_24-07-11_20-30-11-380.jpg


வசந்தன் ஏன் அப்படிச் சொன்னான்? ரிஷி வாழ்வில் இருக்கும் மர்மம் என்ன?
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
சூப்பர் சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵ரிஷி வாழ்க்கைல தான் ஏதோ விஷயம் இருக்கும்னு நினைச்சா அவன் அப்பா ஆனந்துக்கும் டாக்டர் பாலாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போலவே 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சூப்பர் சூப்பர் அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵ரிஷி வாழ்க்கைல தான் ஏதோ விஷயம் இருக்கும்னு நினைச்சா அவன் அப்பா ஆனந்துக்கும் டாக்டர் பாலாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போலவே 🤔🤔🤔🤔🤔🤔🤔
நன்றி மா 😉