விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை!!
அத்தியாயம் -3
ஜஹான்
பதில் அனுப்ப வேண்டிய ஈமெயில்களையும், ஹாஸ்பிடல் கட்டுமான பணிக்கான தகவல்கள் பற்றியும் பார்த்த மது வர்ஷன், அடுத்த பல மணித்தியாலங்கள் வேலையில் மூழ்கிப் போனான்.
எம்.வி குரூப் ஆஃப் கம்பனி. கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றைக் கட்டுவதில் சம்பந்தப்பட்ட ஐந்து நட்சத்திர இலங்கையின் மிகப்பெரிய வணிக நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகும்.
இப்போது புதிதாக புதிய மைதானத்தை (stadium) உருவாக்கும் முயற்யிலும் ஈடுபட்டுள்ளனர் எம்.வி குரூப் ஆஃப் கம்பனியினர்.இது வரையிலும் ஹாஸ்ப்பிடல், சூப்பர் மார்கட்ஸ்,பெரிய கட்டிடங்கள்,பாலங்கள் போன்ற கட்டுமானத்தில் ஆர்வம் காட்டியவர்கள்.. கடந்த இரு வருடங்களாக, ஸ்டேடியம் அமைப்பதில் அதிகம் காட்டி வருகின்றனர்..அதற்கு காரணம்.. மது வர்ஷனே!
ஆம்! இவன் ஸ்போர்ட்ஸில் அதிகம் ஆர்வம் கொண்டவன்.. பாம்பு கேம் மட்டுமல்ல.. பய பால் கேமும் நன்றாகவே விளையாடுவான். இலங்கையில் அதிக ரசிகர்கள் இருப்பது கிரிக்கட்டுக்கே என்றாலும், இவனுக்கு பிடித்தது என்னவோ பூட் பால் தான்.
அதனாலயே என்னவோ, மற்ற நாடுகளில் இருப்பது போல், பெரிய பூட் பால் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்பது இவன் லட்சியங்களில் ஒன்று.
(அப்போ வேற
லட்சியங்கள் என்னன்னு நீங்க கேக்கலாம்.... பயபுள்ள ஆத்தர் கிட்டயே ஆட்டம் காட்டிட்டான். என்கிட்ட அந்த ஒன்னு தான் சொன்னான்.)
முதலில் வர்ஷனின் மைதானம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்த அவன் தந்தை சிவராமன், பின் அவன் ஆர்வத்தை பார்த்து ஒத்துக் கொண்டார். சாத்தியமில்லை என அவர் சொல்லியும், சாத்தியமற்ற ஒரு செயலை சாத்தியம் ஆக்குகிறேன் என தந்தையிடம் சவால் விட்டிருந்தான்.
நாளைய ஏற்பாட்டை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டவன், பல மணி நேரமாக குனிந்திருந்ததால் வலித்த கழுத்தை, பின்னுக்கு சாய்த்து வலது கையால் பிடரியை தேய்த்து விட்டுக் கொண்டான்.
பின் அமர்ந்த வாக்கிலே, நிமிர்ந்து கைகள் இரண்டையும் மேலே
உயர்த்தி, சோம்பல் முறித்துக் கொண்டவன், இடது கை பெருவிரலால் மற்றை நான்கு விரல்களிலும் சொடுக்கு எடுத்தபடி, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை நோக்கினான்.
நேரம் எட்டை தாண்டி... ஒன்பதுக்கு பத்து நிமிடங்கள் அடிக்க இருந்தது.
"நல்லையல்லை.... நல்லையல்லை....
ரொம்ப நேரம் வேலை பார்த்தது நல்லதில்லை"என நல்லையல்லை பாடலை முணுமுணுப்புடன் மாற்றி பாடியவாறு எழுந்து கொண்டான்.
மது வர்ஷனுக்கு இருக்கும் பழக்கங்களில் ஒன்று இவ்வாறு பாடுவது. அவன் பாடும் பாடல்களில் சுறுதியோ, ராகமோ எதுவும் இருக்காது.
ஆனால் திரைப்பட பாடல்களில் உள்ள மெட்டில் இருக்கும் அவன் பாடும் பாடல்கள்.
அவனது சிறு வயது பழக்கம் இது.
இன்றைக்கு வரை மாற வில்லை. அவனும் மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதுவே உண்மை!
லாப்டாப் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டவன், ஆட்களின்றி வெறிச்சோடி போயிருந்த ஆஃபீஸை, கண்களால் அலசியபடி, பேஸ்மெண்ட் நோக்கி சென்றான்.
அவன் இதழ்கள் என்னவோ இப்போதும் பாடலை பாடியவாறே இருந்தது.
காரில் ஒலித்த ரேடியோவோடு, தானும் பாடிக் கொண்டே சாலையில் கவனம் வைத்திருந்தவனுக்கு, அதை தொடர்ந்து வந்த பாடல் வரிகள். ஒரு நிமிடம் அவன் கைகளில் காரை தடுமாறச் செய்தது..
"அம்முகுட்டியே..!
அடியே உன்னை எண்ணி
கலஞ்சேன்டி.... குட்டி குட்டியா.. கவித.... சொல்லி காட்டு கொலஞ்சேன்டி.."என பிரதீப்குமார் பாடும் போதே, பாடலை இடை வெட்டி அடுத்த சேனலுக்கு மாற்றி இருந்தான்.
முகம் தெரியாத அமுதா எனும் அம்முவின் நினைவு இப்போது அவனிடத்தே..
அம்மு எனும் பெயரே, அவன் கைகளில் காரை தடுமாறச் செய்ய காரணம் ஆகியது.
அகரன், அமுதா பற்றி இவனிடம் சொல்லிச் சென்றது எதுவோ, ஆழமாக அவன் இதயத்தில் இடம்பிடித்திருந்ததோ..?
"நீ அம்மு அம்மு சொல்லையில பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி!"
அவன் மாற்றியிருந்த மற்ற ரேடியோ சேனலும் அவனுக்கு எதிராக சதி செய்தது.
கடுப்புடன் பல்லைக் கடித்தவன், வேறு ஒரு அலைவரிசைக்கு மாற்றினான்.
"அமுதென்பதா.. விஷமென்பதா..? உனை அமுதவிஷமென்பதா..?"
சூரியன் எஃப் எம் இல் உருகிக் கொண்டிருந்தார் எஸ்பிபி..!
சலிப்புடன் தலையாட்டியவாறு, பட்டென்று ரேடியோவை அணைத்தவனின் உதட்டின் விளிம்பில், அவனே அறியா ஒரு புன்னகை உதித்தது.
"இதுகளும் சதி செய்யுதே!"என வடிவேல் பாணியில் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
பெரு மூச்சொன்றை வெளியிட்டவன், "எனிபடி.... ஆர் எனிதிங் காண்ட் டிஸ்டிராக்ட் மை மைண்ட்!"என தனக்கு தானே கர்வமாக சொல்லிக் கொண்டான்.
கர்வாமக சொல்லிக் கொண்டவனின் காலை வாரினான். காலாற காத்திருந்த கரன்.... அகரன்.
பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த அகரன் அருகே காரை நிறுத்தினான் மது வர்ஷன்.
தன் பக்கத்தில் வந்து நின்ற முதலாளியின் காரை பார்த்து, உள்ளுக்குள் ஜெர்க்காகினாலும், மறைத்துக் கொண்டான்.
காரின் கண்ணாடியை இறக்கிய மதுவர்ஷன், அகரனை ஆழ்ந்து பார்த்தான்.
அவன் பார்வையிலிந்து கேள்வியை புரிந்து கொண்ட அகரன்,
"பஸ்ஸை மிஸ் செய்துட்டேன் சார்!"என்றான்.
"அப்போ வா...! நான் ட்ராப் செய்யறேன் அகரா!"
"இல்ல.. அடுத்த பஸ்..!"என பேசிக் கொண்டிருந்தவனின், பேச்சு வர்ஷனின் பார்வையில் நின்று போனது.
'இவரோட..' என சன்னமாக முனகிக் கொண்டவன் காரின் பின் கதவை திறந்தான்.
"டேய்!! நான் என்ன உனக்கு டிரைவரா..?" கோபக்குரல் வெளிப்படுவதற்கு பதிலாக, வாயை பொத்துக் கொண்டு சிரிப்பு முந்திக் கொண்டது வர்ஷனுக்கு.
'இவர் கோப்படறார..? இல்ல என்னை கலாய்க்கறாரா?' எனும் யோசனையில் அகரன்.
"அகரா!! இப்படியே நிக்கறது தான் தங்கள் திட்டமா?" அடக்கப்பட்ட சிரிப்புடன் நக்கலாக கேட்டான் அவன். அவனுக்கு தான், அகரனை குழப்புவதில் ஆலாதி ஆனந்த மாயிற்றே!
போதாதற்கு செந்தமிழ் வேறு!
அவன் நக்கலில் முகத்தை சுருக்கிய அகரன், முன்னால் வந்து ஏறிக் கொண்டான்.
சிரிப்புடன் அவன் பக்கம் திரும்பிய மதுவர்ஷனின் கண்ணில் பட்டது, பாலித்தீன் கவரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம் சிவப்பு பஞ்சு மிட்டாய்.
ஒற்றை கையால் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு நிமிர்ந்த அகரன், கார் நகராமல் நின்ற இடத்திலேயே இருக்கவும், வர்ஷனை நிமிர்ந்து நோக்கினான்.
அவன் பார்வை பஞ்சு மிட்டாயில் பதிவதை பார்த்தவன், அதை பாதுகாக்கும் முயற்சியில்,
"சா....ர்..ர்! பஞ்சு மிட்டாயை பஞ்சர் பண்ற பார்வை எல்லாம் பார்க்காதீங்க.இது உங்களுக்கு கொடுக்க மாட்டேன்!"என்றவன் வலது கையில் இருந்த பஞ்சு மிட்டாயை இடது கைக்கு மாற்றிக் கொண்டான்.
அவன் செயலை பார்த்து பல்லைக் கடித்தான் வர்ஷன்.
'இந்த அவமானம் உனக்கு தேவையா..?' என எள்ளி நகையாடியது அவனின் மனசாட்சி.
காரை ஓட்டிக் கொண்டே, "என்னை பார்த்தா பஞ்சு மிட்டாயை பறிச்சு சாப்பிடறவன் மாதிரியா இருக்கு..?"என பொறுமினான்.
"ஹி.. ஹி.. அப்படி இல்ல சார்..!"என இழுத்தான்.
"அப்போ..? என்னை பார்த்தா சின்ன பாப்பா மாதிரி தெரியுதா..?" கடுப்புக் குறையவில்லை அவனிடத்தில்.
'பாம்பு கேம் விளையாடறவர் பாப்பா இல்லையா..?' மனதுள் தான் எண்ணிக் கொண்டான்.
"நான் பாப்பா இல்ல.. நீ தான் கியூட் பாப்பா!"அகரன் மனதில் நினைத்தற்கு பதில் தந்தான் இவன்.
"எதே..!"அதிர்ச்சியும், அலறலும் அகரன் குரலில்.
"க்கும்.." என தொண்டையை செருமிக் கொண்ட வர்ஷன்,
"அது.. அது.. நீ கிட்ட வாப்பான்னு கூப்பிட்டேன்..!"என திணறி,
"ஆமா..! நீ எப்போதுலருந்து என்கிட்ட கேள்வியெல்லாம் கேக்க ஆரம்பிச்ச..?" சமாளித்தான்.
"சாரி சார்..!"
"ம்ம்..இருக்கட்டும்,இருக்கட்டும்..ஆமா பஞ்சு மிட்டாய் யாருக்கு..?"
"அது அமு.. அம்முக்கு சார்..!"
"ஓஹோ..!"
"அது அவளுக்கு பஞ்சு மிட்டாய்ன்னா, ரொம்ப பிடிக்கும் சார்..!"என தோழியை நினைத்து முறுவலித்தானம்
"நேத்து ராத்திரி மாதுளம்பழம்!இன்னிக்கி பஞ்சு மிட்டாயா..?"
"சார்,உங்க கிட்ட இன்னைக்கு காலேல சொன்னது தான்.. அவ என் ஃப்ரெண்ட் மட்டும் தான்.
நீங்க மறுபடியும், மறுபடியும் இப்படி சொல்றதை என்னால அனுமதிக்க முடியாது.
நீங்க என் முதலாளியா இருந்தாலும் சரி!"அழுத்தம் திருத்தமாக சொன்னான்.
"டேய் அகரா..! நான் அப்படி மீன் செய்யல டா..?"
"….."பதில் சொல்லாமல் சாலையை வெறித்தான் அவன்.
'கியூட் பாப்பாவே இப்படி கோபப்படறான்னா.. அந்த அம்மு கும்பதலக்கடி கும்மாவா இருப்பா போலயே..!!!' புள்ளிங்கோ போல் புல் மேய்ந்தது வர்ஷனின் மனசாட்சி.
"டேய் அகரா..! நான் சொன்னதுக்கான அர்த்தம், நீ நினைக்கற மாதிரி இல்லடா..!உன் பாஸ் நான் இருக்கேனே.. என்னைகாவது ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கி தந்துருக்கியாடா…?
விடு,விடு இந்த வர்ஷனுக்கு கொடுத்து வெச்சது அவ்ளவுதான்!!"
"எங்கே செல்லும் இந்த பாதை..!"இதில் சிடுவேஷன் சாங் வேறு சாருக்கு!
"சாரி சார்..!"தயக்கத்துடன் மன்னிப்பு வேண்டினான்.
"எனக்கு உன் சாரி எல்லாம் வேணாம்.. ஆனா,நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லனும்.. என்ன?
'ஒரு வேளை பஞ்சு மிட்டாயை கேக்க போறாரோ..?
சே.. சே..இருக்காது. சார் ரொம்ப நல்லவரு! பார்க்க தான் பயங்கரமா இருக்காரு! ஆனா பாசக்காரன்!'
தன் முதலாளியை புகழ்வதாக நினைத்து, கலாய்த்து தள்ளியது அகரனின் அகம்!
"டேய்..அங்க என்னடா சைலண்ட்டு!!கள்ளிப்பால் கிழவி மாதிரியே மனசுக்குள்ள கழுவி ஊத்துறியாடா?"சிரித்துக் கொண்டே அதட்டல் போட்டான்.
"இல்ல.. அது… அது.. ஆமா!"
"டேய்..!!!!"
"சாரி சார்!"
"சாரி வேணாம்!! ஆமா... இவ்வளவு விட்டுக் கொடுக்காம, உன் ஃப்ரெண்ட் அம்மு பத்தி சொல்றியே.., உன் அம்மு என்ன என்னை விட உசத்தி சொல்லு பார்க்கலாம்..?"
காலையில் இவன் அமுதா பற்றி சொன்னது. இப்போதும் தன்னிடம் அவளை விட்டுக் கொடுக்காமல் அகரன் பேசியதை கேட்டவனுக்கு, ஏனோ அமுதா பற்றி அறிய ஆவல் எழுந்தது.
ஆனால் அதை அவனுக்கு காட்டாமல் இருக்க, மறைத்துக் கொண்டவன் வெளியில், கெத்துக் குறையாமல் கேட்டான்.
அதே போல் தன் நண்பியை குறைத்து எடை போடுவது பிடிக்காமல்.
காலையில் அவளை பற்றி மற்றவர்களிடம் பேசக்கூடாது என கொள்கை கொண்டதை மறந்து, அமுதா பற்றி பேசத் தொடங்கினான்.
"சின்ன வயசுல எனக்குன்னு யாரும் இல்லாம இருக்கும் போது, தேவதை மாதிரி வந்து, எனக்குனு உறவானவ தான் சார் என் அம்மு!
எந்த இடத்துலயும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டா?
எம் மேல பாசம் காட்ட உலகத்தில ஒருத்தி இருக்கானா, அது என் அம்மு தான் சார்!
எனக்கு அம்மா அவ!"என நெகிழ்ந்து கூறியவனின், கண்களை ஆனந்த கண்ணீர் மறைத்தது.
வர்ஷனும் அவன் சொல்வதை கேட்டு சிரித்துக் கொண்டான்.
"ம்ம்.. ஒத்துக்கறேன், உன் அம்மு என்னை விட ஒசத்தின்னு.. அது சரி இந்த பஞ்சு மிட்டாயை, அவ வீட்டுக்கு கொடுக்க போறியா என்ன..?
சொல்லு நானே அவ வீட்ல ட்ராப் செய்யறேன்!"
"எதே..!!"அதே அலறல் அகரனிடம்!! ஆனால் அல்ட்ரா சவுண்டில்!
"இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி சவுண்டு விடற..? உன்னை அவ வீட்ல ட்ராப் செய்ய தானே கேட்டேன்!" என தோள்களை குலுக்கினான்.
"சார் விளையாடறிங்களா என்ன?"
"நான் பாம்பு கேம் மட்டும் தான் விளையாடுவேன் அகரா!"
"சார்…!!!"அவன் காமெடியை கேட்டு காண்டானான் அகரன்.
"இந்த நேரத்துல அங்க போக முடியாது சார்! அவங்க சித்தி சரியான கறார் பேர்வழி!"
"அப்போ பஞ்சு மிட்டாய்..?" சிரிப்புடன் கேலியாக இழுத்தான் வர்ஷன்.
"ஐயோ!! உங்களுக்கு இந்த பஞ்சு மிட்டாய் மேல தான் கண்ணு!" என சலித்துக் கொண்டவன், வர்ஷன் முறைப்பதையும் பொருட்படுத்தாது,
"நான் நாளைக்கு காலேல கொடுத்துப்பேன் சார்..! இப்போ மணி ஒன்பதரை ஆகிடுச்சு!" என்றான்.
அவனுக்கு புரிய வைத்திடும் நோக்கில்.
"ம்ம்.. இன்னைக்கு காலேல சார் சுவத்துல தொங்கிட்டு இருந்தீங்களே! அந்த மாதிரியா..?நாளைக்கு காலைலனா..பஞ்சு மிட்டாய் கரைஞ்சிடுமே டா..?"
"பரவால்ல சார், நான் கொடுத்துப்பேன்!"
"உனக்கே பஞ்சு மிட்டாய் பத்தி கவலை இல்லன்னு இருக்கும் போது, எனக்கென்ன வந்தது..?உன் வீட்டுக் வழிய சொல்லு!" பேச்சில் மட்டுமன்றி உடல் மொழியிலும் அலட்சியம் காட்டினான்.
பின் காலையில் அகரன் தொங்கிக் கொண்டிருந்த மதிலும்., அந்த சாலையும் நினைவிற்கு வர,
"கொட்ச்சா!!" எனும் முணு முணுத்தலுடன் அகரன் வீட்டுக்கு செல்வதற்கு பிரதான சாலையிலிருந்து கிளைப் பாதையில், கார் ஸ்டியரிங்கை வளைத்து திரும்பினான் வர்ஷன்.
ஒரு வழியாக அகரன் வீட்டை அடைய, இவன் காரை நிறுத்தும் முன்.. அதன் மேல் மோதுவது போல் வந்து நின்ற உருவத்தை பார்த்து, சடன் ப்ரேக் போட்டான் மதுவர்ஷன்.
அத்தோடு எதிர்பாராமல் ஏற்பட்ட காரின் குலுக்கலினால், டெஸ்க் போர்டில் மோதச் சென்று இறுதி நொடியில் சுதாகரித்தான் அகரன்.
"ஆர் யூ ஆல் ரைட் அகரா?" என அகரனை பார்த்து மென்மையாக கேட்டவனுக்கு, திடீரென கார் முன்னால் வந்து நின்ற உருவத்தின் மீது கட்டுக்கடங்கா கோபம் வந்தது.
பதறி நிமிர்ந்து சாலையை பார்த்த அகரனின் கண்கள் விரிந்து கொள்ள.. உதடுகள் முணு முணுத்தது.
"அமுதா…!!"
அகரனின் முணுமுணுத்தலை கவனித்த வர்ஷனின் கோபம், சிறிது குறைந்தது என்னவோ உண்மை! அவளை பற்றி அறிந்திருந்ததாலோ..?
"அமுதாவா..?" எனும் வர்ஷனின் கேள்வியை கவனிக்காமல் காரிலிருந்து அவசரமாக இறங்கினான் அகரன்.
"நீ இங்க என்ன செய்யற அமுதா?அதுவும் இந்த நேரத்துல??" காரிலிருந்து இறங்கியவுடன் அவளை பார்த்து பொரியத்தொடங்கினான் அவன்.
"அ..அகரா..!" நடுங்கிய குரலுடன் நண்பனை அழைத்தால் அவள்.
அப்போது தான் அவளை கவனித்தான் அகரன். பயத்தில் உடல் நடுங்க.. ஏறி இறங்கும் தொண்டைக் குழியுடன், கண்களில் மிச்சமிருந்த கண்ணீருடன் நின்றிருந்தாள் அவள்.
அவள் நிலமையை பார்த்து பதறியவன்,
"ஏ அமுதா!! ஒன்னுமில்லைடி! நீ பயப்படாதே..!"என இடது கையால் அவளை அணைத்துக் கொண்டான். தாயுமானவனாக.
இவர்கள் இருவரின் பிணைப்பை காரிலிருந்தவாறு கண்கொட்டாமல் பார்த்திருந்தான் வர்ஷன்.அவர்களை பாசத்தை பார்த்தவனின் முகத்தில் மெல்லிய கோடான புன்னகை!
"என்னடி அமுதா நடந்துச்சு..??இந்த நேரத்துல பொதுவா வீட்ட விட்டு வர மாட்டியே நீ?"அவள் தலை வருடி கேட்டான் அகரன்.
தொண்டை அடைத்து வர பார்த்த அழுகையை விழுங்கிக் கொண்டவள்,
"அகரா சித்தி.." என கரகரத்த குரலில் பேசும் அவள் பேச்சு நின்று போனது,.
அவர்கள் இருவரின் பின்னால் இருந்து கேட்ட கம்பீரக் குரலினால்.
"உன் ப்ரெண்ட்டை எனக்கு இன்ட்ரோ செய்ய மாட்டியா அகரா..?" எனும் வர்ஷனின் கேள்வியில் தான், அவனை மறந்திருந்தது நினைவிற்கு வந்தது அகரனுக்கு.
அமுதாவின் பயத்தை பார்த்தவன், வர்ஷனை மறந்திருந்தான்.
"என்ன அகரா, அமைதியா இருக்க? நீ உன் ப்ரெண்ட்டுக்கு வாங்கன பஞ்சு மிட்டாயை கூட மறந்துட்ட..!"என சொல்லி, அகரன் பதட்டத்தில் கார் இருக்கையிலே விட்டு வந்த பஞ்சு மிட்டாயை அமுதாவை நோக்கி நீட்டினான்.
"சாரி சார்..! இது அமுதா என் பேஸ்ட் ஃப்ரெண்ட்.. எனக்கிருக்கற உலகம்" என வர்ஷனிடம் அறிமுகம் செய்தவன், அவள் கண்களை நோக்கி, ஆறுதல் பார்வையுடன்,
"இவர் என் முதலாளி அமுதா..!அவங்க கிட்ட தான் வேலை செய்யறேன்." என அவளிடம் வர்ஷனை அறிமுகம் செய்தான் அகரன்.
"வணக்கம் சா..சார்!" திணறினாள் அவள்.
"இந்தா வாங்கிக்க..!"முகம் மென்மையுற பஞ்சு மிட்டாயை நீட்டியபடி அவன்.
"ம்ம்..வாங்கிக்க அமுதா..!"என ஊக்கினான் அகரன்.
நடுங்கிய கைகளை மறைக்க முடியாமல், அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டாள்.
தன் முன் நீண்டிருந்த கைகளை பார்த்து திகைத்தான் மது வர்ஷன். அந்த குறுகிய சாலையில் அவ்வளவாக வெளிச்சம் தென்படவில்லை. ஓரளவு தான் அமுதாவின் முகமும் தெரிந்தது.
வர்ஷனின் காரின் ஹெட் லைட் ஒளியும் அதோடு அவர்களுக்கு சற்று தூரம் தள்ளியிருந்த போஸ்ட் கம்பத்தில் மாட்டப்படிருந்த, மின் குமிழின் ஒளியுமே அந்த இடத்தை இருட்டிலிருந்து வெளிச்சமாக்கி இருந்தது.
பஞ்சு மிட்டாயை பற்றி இருந்து அவள் கைகளை பிடித்திழுத்திருந்தான் அவன்.
வலது புறங் கையின் சுண்டு விரலில் இருந்து மணிக்கட்டு வரை சூடு வைத்த காயம் இருந்தது. அதைப் பார்த்து திகைத்த மது வர்ஷன், தான் அவள் அனுமதியின்றி கையை பற்றியிருந்தான்.
"ஸ்…" என வலியுடன் முனகினாள்.
"சார் என்ன செய்யறீங்க..? அவ கையை விடுங்க சார்..!" என எகிறினான் அகரன்.
அகரனை பார்த்து முறைத்த வர்ஷன், அவன் பேச்சை பொருட்படுத்தாமல், அவள் முகத்தை நோக்கினான்.
இருட்டில் தெளிவாக தெரியாத அவள் முகத்தை பார்ப்பதற்கு, கார் வெளிச்சத்தை மறைத்தபடி நின்றிருந்த வர்ஷன், சற்று நகர, அவ் வெளிச்சம் இப்போது அமுதாவின் முகத்தில் முழுதாக வந்து மோதியது.
அவள் முகத்தை பார்த்து இம்முறை வர்ஷனுடன் சேர்ந்து அகரனும் திகைத்தான்.
அவள் வலது பக்க கன்னத்தில்ு கன்றி.. சிவந்து.. பதிந்திருந்தது ஐவிரல் அடையாளம்.
அமுதாவின் சிவந்த முகத்தை பார்த்த மது வர்ஷனின் கண்களும் சிவந்தது கோபத்தால்..
அவனே அறியாமல் மெதுவாக தன் வலது கையை, அவள் கன்னத்தில் வைக்க செல்ல... கண்ணீர் பளபளத்த மிரண்ட விழிகளுடன் தலையை பின்னால் சாய்த்தாள் அவள்.
"அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?" திறந்து வைத்திருந்த காரின் கதவின் வழியே, கார் குலுக்கலில் தானாகவே திறந்து கொண்ட வானொலி பீ.சுசீலாவின் குரலை காற்றில் பரப்பியது.
அப்பாடலிலும், அது தந்த இனிமையிலும் வர்ஷனின் இதழ்கள் புன்னகையில் விரிய முயன்றாலும்..
அழுத்தமாக அதரங்களை மடித்தவன், கையை கீழறக்கியபடி,
அதே அழுத்தத்துடன் அமுதாவை நோக்கினான்.
"யார் உன்னை அடிச்சது..?" இறுகிய குரலில் இரும்பாய் அவன்.
"அமுதா,சித்தியா உன்னை அடிச்சாங்க..?" திகைப்பிலிருந்து வெளிவந்த அகரனும் கேட்டான்.
வர்ஷனின் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவிக்கப் போராடியபடி ஆம் என தலை அசைத்தாள் அவள்.
ஷோபனாவை நினைத்து வெளிப்படையாகவே கோபத்தில் பற்களை நறநறத்தான் அகரன்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அகரனிடம் மட்டுமே பார்வை பதித்திருந்தவளை பார்த்து அவன் இயல்பான திமிரும் கோபமும் தலை தூக்கியது. தன் கையில் இருந்த நழுவ முயன்ற அவள் கையை வலியின்றி இறுகப்பற்றிய வர்ஷன்,
"ஏன் உன்னை அடிச்சாங்க சொல்லு..?"என அழுத்தமாக கேட்டான்
அவன் கேள்வியை அலட்சிய படுத்தியவாரு கண்களால் நண்பனை துணைக்கழைப்பவளை பார்த்து மேலும் கோபம் கொண்டவன், "அகரா..!அவளை என்ன நடந்ததுன்னு சொல்ல சொல்லு..!"என்றான் கடினமாக.
"சார்!! முதல்ல அவளை விடுங்க சார்!"என காய்ந்தான்.
அகரன் சொல்லியது கேட்டு அவள் கையை விளக்கிக் கொண்டவன்,"நீயே அவ கையை பாரு அகரா!"என்றபடி மார்புக்கு குறுக்காக கையை கட்டிக் கொண்டான்.
அப்போது தான் அவள் கையில் இருந்த சூட்டுக் காயத்தை கவனித்தான் அகரன்.பின் தான் வர்ஷன் அவள் கையை பற்றி இருந்ததுக்கான அர்த்தம் புரிந்தது அவனுக்கு.
"சாரி சார்!"என தலை குனிந்தவனை பொருட்படுத்தாதவன்,
"சொல்லு..!"என்றான்.குரலில் அழுத்ததை மாற்றாமல்.
இருவரையும் நிமிர்ந்து பார்ப்பதை தவிர்த்த அமுதா,
"அது..அது..இன்னைக்கி திடீர்னு சித்தி வந்து 'கல்யாணம் பண்ணிக்க உனக்கு மாப்பிளை பார்க்கறோம்!!நாங்க காட்டுற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுறன்னு' மிரட்டினாங்க..
நா..நான் முடியாதுன்னு சொன்னேன், என்னை அடிச்சிட்டாங்க!"என மூச்சை அடக்கி சொல்லி முடித்தவளின் கண்களில் இருந்து பொங்கி வழிந்தது கண்ணீர்.
தொடரும்..